அரசு கையகப்படுத்தும் தனிநபர் உரிமைக்குட்பட்ட நிலங்கள் அதிலுள்ள கட்டடங்கள், மரங்கள் முதலிய சொத்துக்களுக்கு, அரசின் வழிகாட்டுதலின்படி நட்ட ஈடு வழங்கப்படுகிறது. ஒரு நிலத்தின் மீதுள்ள மரங்களுக்கு அதன் பொருளாதார மகசூலின் அடிப் படையிலும், கட்டடங்களுக்கு அதன் உறுதித்தன்மை, நிலங்களுக்கு அவற்றின் சந்தை மதிப்பீட்டின் அடிப் படையிலும் நட்ட ஈட்டுத்தொகை மதிப்பிடப்படுகிறது. இதில் கட்டடங்களும், மரங்களும் காலத்தால் அழியக் கூடியவை. ஆனால், நிலம் அழியாத நிலையான சொத்தாகக் கருதப்படுகிறது.

இப்போது மைய அரசு கொண்டுவந்துள்ள நிலம் கையகப்படுத்துவதற்கான புதிய சட்டத்தின்படி, நிலத் தின் தற்போதைய மதிப்பீட்டினைப் போல் 4 மடங்கு கூடுதலாகத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று அறியப்படுகிறது. ஆனால், ஒரு நிலம் 2, 3 தலை முறைக்குமேல் அல்லது 100 ஆண்டுகளுக்குமேல் அதன் உடைமையாளரிடம் இருக்கும்போது, ஒரு 100 ஆண்டுகளில் அதிலிருந்து வேளாண் தொழில் மூலம் கிடைக்கும் மகசூலின் அடிப்படையிலான மதிப்பீட்டுத் தொகையை நட்ட ஈடாக வழங்கப்பட வேண்டும்.

உதாரணமாக ஒரு ஏக்கரில் கத்தரி பயிரிட்டால் அதிலிருந்து 35,000 ரூபாய் வருவாய் ஈட்ட முடியும். 100 ஆண்டுகளுக்கு இந்த மதிப்பீடு 35 இலட்சம் ரூபாய் ஆகும் (மூன்று போகம் பயிருக்கு ரூ.105 இலட்சம் ஆகும்). அதேசமயம் கையகப்படுத்தப்படும் ஒரு ஏக்கர் நிலத்திற்கு அடியிலிருந்து நிலக்கரியோ, இரும்புத்தாது, சுண்ணாம்புத் தாது, மணல் தாது முதலிய கனிமங்களோ இருப்பின், அவற்றின் மதிப் பீட்டுத் தொகைக்கேற்ப, நட்ட ஈடு வழங்கப்பட வேண் டும். ஒரு வேளை, நிலத்தடியிலுள்ள, பூமிக்கடியி லுள்ள செல்வங்கள் யாவும் மய்ய அரசுக்குத்தான் சொந்தமானது என்று சட்டம் இருக்கும் நிலையில், மக்களிடமிருந்து விளைநிலங்களைக் கையகப்படுத் தும் தனியார் நிறுவனங்களோ, அரசோ நிலத்திலுள்ள கனிமங்களின் மதிப்பீட்டுத் தொகைக்கேற்ப நட்ட ஈடு வழங்குகிறதா? இந்த மதிப்பீட்டுத் தொகையில் அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கிறது? என்ற விவரங்கள் அறியப்பட வேண்டும்.

இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களிலிருந்து எத்தனை ஏக்கர் பரப்பளவில், என்னென்ன கனிமங்கள் கிடைத்துள்ளன? அவற்றின் மொத்த மதிப்பீட்டுத் தொகை எவ்வளவு? அதிலிருந்து அரசுக்குக் கிடைத்த வருமானம் அல்லது வருவாய் எவ்வளவு? என்பதற் கான வெள்ளையறிக்கை தேவை. இந்தக் கனிமச் செல்வங்களின் மதிப்பீட்டுத் தொகையில் அரசியல்வாதி கள் மற்றும் ஆட்சியாளர்களின் பங்கு என்ன? என்பதும் மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். இப்போது வெளிவந்துள்ள நிலக்கரிச் சுரங்க ஊழல்களின் உண்மைத் தன்மைகளின்படி நாட்டிலுள்ள இதர கனிமவளங்கள் மூலம் என்னென்ன முறைகேடுகள் நடந்துள்ளன என்பதையும் தெரிந்துகொள்ளத்தான் வேண்டும்.

பூமிக்கடியிலுள்ள கனிமவளங்கள் மிகப்பெரிய அளவில் வருவாய் அளிக்கக்கூடிய செல்வங்களாக இருப்பதால், அவற்றைத் தனியாருக்கு வழங்காமல் அரசே கையாள வேண்டும். இதனால் அரசின் வருவாய் பெருகும். மேலும், நிலம் என்பது வெறும் மண்ணாக மட்டும் இல்லை. அது பல கனிம வளங்களையும் உள்ளடக்கிய ஒரு பெருஞ்செல்வம் ஆகும். அதன் மதிப்பீட்டில் சம்மந்தப்பட்ட நிலவுடைமை யாளர்களுக்கும் பங்குண்டு என்ற உரிமையின் அடிப்படையில் நிலம் கையகப்படுத்துவதற்கான சட்ட திட்டங்களில் அரசுக்கும், மக்களுக்கும் கவனம் தேவை.

ஒரு ஏக்கர் பரப்பளவுக்குட்பட்ட நிலத்திற்கடியில் பல கோடி ரூபாய் மதிப்பிற்கான நிலக்கரி, சுண்ணாம்பு, இரும்பு, எரிவாயு, எரிஎண்ணெய் போன்ற ஏராளமான கனிமங்கள் புதைந்து கிடக்கின்றன. இதிலிருந்து நிலவுடைமையாளருக்கோ அரசுக்கோ கிடைக்க வேண்டிய வருவாயின் தன்மை குறித்து விழிப்புணர்வு கொள்ள வேண்டியது நமது கடமையல்லவா?

Pin It