மலேசிய மக்கள் கட்சியின் மேனாள் துணைத்தலைவரும் புகழ் பெற்ற சட்டத்தரனியுமான தோழர் அப்துல் ரசாக் அமாட் அவர்கள் தமது 68ஆம் அகவையில் கடந்த ஆகத்து 12இல் பிற்பகல் 1.20 மணிக்கு சொகூர் பாகுவின் சல்தானா அமீனா மருத்துவமனையில் காலமானார். தோழர்க்கு கிந்தான் பிந்தி முகமது அமீன் என்னும் பெயருடைய துணைவியும், சூல்குப்ளி. ஜுஜீயா, பைசால் மற்றும் அஸ்லீனா என்ற நான்கு மக்களும் ஆறு பெயரக் குழந்தைகளும் உள்ளனர். தோழர் ஒரு சாகப்தம் எனும் முறையில் அவரை நினைவு கூரவும் அவருக்கு நாம் செலுத்தும் வீர வணக்கமாகவும் இது அமையட்டும்.

சொகூர் மாநிலத்தின் தலைநகரான சொகூர் பாகுவில் 6. சூன் மாதம் 1939இல் பிறந்த ரசாக். தொடக்க கல்வியையும் உயர் கல்வியையும் சொகூர் பாகுவிலேயே கற்றார். 1969 முதல் 1972 வரை பெல்டா வின் தலைமையகத்தில் செயலராகவும் அவற்றின் சட்ட மதியுரைஞராகவும் கோலாலம்பூல் பணியாற்றியபோது பெல்டா எனப்படும் குடியேற்ற நிலத்திட்டத்திற்கு தலைவராக இருந்தவர் பின்னாளில் மலேசியாவின் துணைப்பிரதமராக விளங்கிய மூசா ஈத்தாம் அவர்களாவார். திரு மூசா அவர்கள் அப்துல் ரசாக்கை தமக்கு அரசியல் செயலாளராக பணிபுய வேண்டியபோது தாம் சொந்த ஊருக்குத் திரும்பி வழக்கறிஞர் பணி செய்ய விரும்புவதாகக் கூறி மூசாவின் விருப்பத்தை மறுத்தார்.

1974ஆம் ஆண்டு சொகூருக்குத் திரும்பியவர் வழக்குரைஞர் & வழக்கறிஞர் பணி தொடங்கினார். அதேபோது இடதுசாரி கட்சியான ''மலேசிய மக்கள் சோசலிச கட்சி:யில் தீபகற்ப தென்மாநிலமான சொகூன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வாண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பூலாய் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தலைத்தேர்தலிலேயே தோல்வியைத் தழுவினார்.

அத் தேர்தலில் வெற்றிபெற்ற அம்னோ என்று சுருங்கக் கூறப்பெரும் யூனைடெட் மலாய் நேசனல் ஆர்கனைசேசன் எனும் மலாய் இனவாத கட்சியின் தலைமையிலமைந்த பாசான் நேசனல் அரசாங்கம் செய்த முதற்பணி சொகூர் பாருவின் புறநகர் பகுதியில் தசேக் உத்தாரா எனுமிடத்தின் புறம்போக்கு நிலத்தில் வீடுகள் கட்டி வாழ்ந்து வந்த ஏழை எளியவர்களின் குடியிருப்புகளை உடைத்து அப்புறப்படுத்தியது தான். பாதிக்கப் பட்ட அடித்தட்டு மக்களுக்கு இரசாக் தலைமையில் இயங்கிய சோசலிச மக்கள் கட்சி செயல்வீரர்களும் மலாயப் பல்கலைக் கழக மாணவர் அமைப்பினரோடு, மலேசிய விவசாய பல்கலைக் கழகத்தின் மாணவர் இயக்க உதவித்தலைவரான தோழர் அசன் கம் மற்றும் அவ்வியக்கத்தினரும், என் ஜி ஓ எனப்படும் அரசு சாரா நிறுவனத்தினரும் முன்வந்து உதவி நின்றனர்.

அன்று பல்கலையிலிருந்து தூக்கியறியப்பட்ட அசன் கம்தான் மக்கள் கட்சியின் இந்நாள் தலைவராவார். இவ்விடத்தில் வதிந்திருந்த நாற்பத்தெட்டு வஞ்சிக்கப்பட்ட நகர்ப்புற குடியேறிகளையும் குடும்பத்தினரையும் வழக்கு மன்றத்தில் பிரதிநிதித்ததோடு தளைசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மக்கள் கட்சித் தோழர்கள் சார்பில் வாதாடிய அப்துல் ரசாக் மீது எல்லையில்லா சினம் கொண்ட அரசாங்கம் கடைசியில் தோழரை ‘'இசா’ எனப்படும் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது.

அடக்குமுறையால் அவரின் போராட்ட உணர்வை. தளராத உறுதியை குலைத்துவிட முடியவில்லை என்பதற்கு ஆதாரமானது சொகூர் மாநிலத்தின் கடற்கரை ஊரான மெர்சிங்கின் சேகாய் எனும் மீன் பிடி கிராமத்தைச் சேர்ந்த இசுமாயில் என்னும் பெயர் கொண்ட மீனவருக்காக நடத்திய சட்டப் போராட்டம். நண்பர் இசுமாயில், தரிசு நிலத்திற்கு மனு செய்து ஆண்டுக் கணக்கில் காத்திருந்தார். ஒரு சமயத்தில் தாம் மனு செய்திருந்த நிலம் மாநில அரசால் நடுவன் மற்றும் மாநில அரசாங்கங்களின் அமைச்சர்களின் பினாமிகளுக்கு வழங்கப்பட்டுவிட்ட செய்தி யறிந்த அந்நண்பர் முறையிடுவதற்கு இடமின்றி தனித்தலைந்து இறுதியில் வழக்கறிஞர் ரசாக் அவர்களின் உதவியினை வேண்டி அணுகியிருந்தார். மாநில அரசை உலுக்கிய அவ்வழக்கில் இறுதி வெற்றி பெற்றவர் அம்மீனவத் தோழரே.

எண்பதுகளின் நடுக்கூறில் அரசாங்கத்தின் பெருந்தலைகள் சம்பந்தப்பட்டிருந்த. மர்மமும் பரபரப்பும் நிறைந்திருந்த ‘பி.எல்.எஃப்’ என்ற வங்கி ஊழல் தொடர்பான விவரங்களை பொதுமக்களுக்குத் தெரிவிக்க தேசிய முன்னணி அரசு மறுத்தது. அதுபோது வழக்கு மன்றம் சென்ற ரசாக். அவ்வைப்பக ஊழல் விசாரணை குறித்த விபரங்களை பொதுமக்களின் பார்வைக்கு உட்படுத்தும் உத்தரவை நீதிமன்றம் பிறபிக்க வேண்டுமென்று கோ சொகூர் பாரு உயர் நீதி மன்றில் மனுவொன்றினை சமர்பித்தார். அவ்வழக்கு விசாரணைக்கு வரும் முன்னரே எதிர்வரும் மார்ச் மாதம் 86இல் நாடாளுமன்றத்தின் வாயிலாக அது குறித்த முழு அறிக்கையை மக்களுக்கு வெளியிட்டு வைப்பதாக அம்னோ தலைமை வகிக்கும் பாசான் நேசனல் (தேசிய முன்னணி) அரசாங்கம் அறிவித்தது.

மலாய்த் தீவக்குறையையும் சிங்கப்பூரா தீவையும் இணைக்கும் இரண்டாவது பாலம் அமைப்பு திட்டம் வெளியிடப்பட்டபோது அதை எதிர்த்துக் களம் கண்டனர் மக்கள் கட்சியினர். அப்போராட்டங்களுக்கு தலைமை தந்த தோழரிடம், ''உங்கள் கட்சியினர் நாட்டு வளர்ச்சியை எதிர்ப்பவர்கள் எனப்படுகின்றதே.’’ என்று முன்வைக்கப்பட்ட கேள்விக்கு, ''நாட்டு முன்னேற்றத்திற்கு எதிரிகள் அல்லர் நாங்கள். மாறாக வளர்ச்சி என்பதின் பேரில் உழைக்கும் அடித்தட்டு மக்களின் இருத்தலுக்கு ஊறு நேரும் வகையில் அவர்களின் பயிர் நிலங்கள் பறிக்கப்படுவதையும் அம்மக்கள் ஒடுக்கப்படுவதையும் கண்டு வாளாவிருக்க மாட்டோம்.’’ என்ற ஆணித்தரமான விடையே பெறப்பட்டது. இதனடிப்படையில் விளக்கக் கூட்டங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடத்தப்பெற்றன. அத்திட்டத்தால் ஏற்படப்போகும் பின் விளைவுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டன.

எதிர்ப்பலைகள் எழும்பியதை கண்ட அரசாங்கம் நில மீட்பு சட்டப்பிவின் கீழ் வேளாண் நிலங்களை கையகப்படுத்தி யூ ஈ எம் மற்றும் ரெனோங் என்ற இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு தந்ததோடு நில உரிமையாளர்களுக்கு குறைந்த இழப்பீட்டு தொகையையே வழங்கியது. மாநில அரசின் கைங்கார்யம் அது. அரசாங்க பெரும்புள்ளிகளின் கட்டுப்பாட்டிலிருந்த யூ ஈ எம் நிறுவனம் ஆளும் அம்னோவுடன் நெருக்க பிணைப்பை கொண்டதாகும். இன்றைக்கு பலகோடி வெள்ளி மதிப்பில் அரேபிய முதலீட்டாளர்களை குறிவைத்து திட்டமிடப்பட்டு வரும் 'இஸ்கந்தார் வளர்ச்சி வளையத்திற்காக பலநூறு ஏக்கர் நிலத்தை பகிர்ந்து கொண்டதின் விளைவில் யூ ஈ எம்மினர் செல்வமழையில் கொழிக்க, ஒரு காலத்தில் அவ்விளை நிலங்களுக்கு உமையாளர்களாக இருந்தவர்கள் பழையபடி ஏழை மீனர்கள் ஆனதுதான் அமைப்பின் அவல வரலாறு. Second Link எனப்படும் பால நிர்மானிப்பிற்குப் பின்னர் கடலுயிகளின் இடப் பெயர்வால் மீன் பிடித் தொழில் பெரிதும் நசிந்தது.

எண்பதுகளின் நடுக்கூறில் குறைந்த வருவாய் கொண்ட நடுத்தர மக்கள் மாலை வேளைகளில் காலார நடந்து வரவும். காற்றாடவும் உலாவவும் தெப்ராவ் நீணைக்கரையில். ''கோத்தா தெரப்போங்’’ எனும் கரையிலும் நீலுமாக மிதவைக்கோட்டை கட்டும் திட்டமொன்றினை மாநில அரசாங்கம் தொடங்கியது. அமைச்சுப் பிரதானிகள் மற்றும் அவர்களின் கைப்பாவைகளின் கட்டுமான திட்டமது. அப்துல் ரசாக் அமாட். தலைவராயிருந்த சோசலிச மக்கள் கட்சி. எவ்வித வளர்ச்சித் திட்டங்களுமின்றி வீணே கிடக்கும் புறநகர் பகுதிகள் ஏராளாமாயிருக்க சுற்றுச் சூழலை மாசுபடுத்தும். மக்கள் பணத்தை விரயமாக்கும் இத்தகைய திட்டம் ஏன் எனக்கேட்டுக் களமிறங்கியது. மாநில அரசாங்கத்திற்கு அறைகூவல் விடுத்து வழக்காடு மன்றம் சென்றார் தலைவர் இரசாக். தாம் வ கட்டுபவர் என்ற வாதம் முன்வைக்கப்பட்ட போதும். Local stand இல்லையென்றும். பிரச்சினைகளை உண்டு பண்ணுகின்றவர் என்ற தோரணையிலும் தீர்ப்பளிக்கப்பட்டு தோல்வியடைந்தார். அவ்வழக்கிற்கான செலவினையும் தோழரே ஏற்க நேர்ந்ததுதான் மலேசிய நாட்டு நீதிமன்றங்கள் அரசு அலுவலகமாய் மாறிப்போவதை வெளிச்சமிட்டுக் காட்டிய தருணங்களானது. இவைபோன்றவைகளிலிருந்து மக்கள் பெற்ற பாடம் தான் என்ன? என்ற வினாவுக்கான விடை அமைப்பின் அவலம் என்பதைத் தவிர வேறு எதுவாய் இருக்க முடியும்!

பொது நலனுக்காக அவர் எதிர்க்கொண்ட இன்னல்கள். இழந்த வாய்ப்புகள் நீளும் பட்டியலாகும். இருபதாம் நூற்றாண்டின்
92ஆம் ஆண்டில் நடைபெற்ற கடுமையான சாலை விபத்திலிருந்து மீண்டு வந்த முன்று வார இடைவெளியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மிதவை கோட்டை திட்ட எதிர்ப்பு நிகழ்வுதான் அவர் தலைமையில் நான் பங்கு பற்றிய கடைசி மக்கள் போராட்டமாகும். வாய்ப்பு கிடைக்குமானால் போய்ப் பாருங்களேன்! ஒரு சாதாரண விற்பனைக்கூடத்தில் ஒரு சில கடைகளோடு செயல்பட்டுக்கொண்டிருக்கும் அப்பூதாகாரத் திட்டத்தின் இற்றை நிலையைõ அதற்கு அடுத்தடுத்து கட்டடத் தொகுதிகள் நிர்மானிப்பிற்காகக் கற்பாறையில் ஊன்றப்பட்டு. துருப்பிடித்துக் காட்சியளிக்கும் இரும்புக்கம்பிகள். அவர் அன்று சொன்ன 'மக்கள் பணம் சூதாடப்படுகின்றது. பாழ்ப்படுத்தப்படுகின்றது’ என்பன போன்ற வார்த்தைகளை எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன. எதிரே உள்ள அரண்மனையை ஒட்டிய பகுதிகளிலிருந்து ஒன்று மில்லாமல் போன துரநோக்கமற்ற திட்டத்தின் விளைவை நன்கு அவதானிக்கலாம்.

நாடாளுமன்ற ஒப்போலை தேர்தலில் 1974 துவங்கி 1978 தேர்தல் தவிர 2004 வரை நடந்தேறிய அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட்டிருந்தபோதிலும் வெற்றி என்பது என்னவோ இரசாக்கிற்கு எட்டாக் கனியாகவே இருந்தது. மத அடிப்படை வாதம். சீன இனவாதம். அச்சுறுத்தல் என்பவைகளை கருவிகளாக கையிலெடுக்கும் ஆளும் கட்சிகள் ஐம்பத்தேழிலிருந்து ஆட்சி பீடத்தை அலங்கத்து வருகின்றன. அவைகளுக்குச் சிறிதும் சளைத்தவர்கள் இல்லை எனும் முகத்தான் ஆளும் கட்சிகளுக்குப் போட்டியாக முன்சொன்ன வாதங்களை ஆயுதமாய் ஏந்தும் எதிர்க்கட்சிகளும் சட்டமன்ற. நாடாளுமன்ற கதிரைகள் சிலவற்றை கைப்பற்றி வருகின்றன. சீழ்பிடித்த கருத்தாக்கங்களை அருவருப்பாய் நோக்கி. சுரண்டலற்ற. பாகுபாடற்ற ஓர் சமனிலை மலேசியா என்ற குறிக்கோளை முழக்கமாக்கி வரும் மலேசிய மக்கள் கட்சியினர் எவரும் 1969ஆம் ஆண்டிற்குப் பின் சட்ட/ நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்தலில் வென்றதில்லை.

வெற்றி வாய்ப்பு நெருங்கி வந்த ஒரு சமயம் உண்டென்றால் அது தஞ்சோங் புத்தி இடைத்தேர்தல்தான். எண்பத்தாறாம் ஆண்டின் பொதுத் தேர்தலில் சட்டமன்ற வேட்புமனு தாக்கல் நாள் தொடங்கி வாக்குப்பதிவு அன்று வரை நடந்தேறிய ஒழுங்கு மீறல்கள். முறைகேடுகள் குறித்த குற்றப்பத்திக்கையை தோழர் இரசாக். வழக்கு மன்றத்தில் சார்வுச் செய்ததின் விளைவு வழக்காடு மன்ற நடுவர் விசாரணைக்குப்பின் ஆளுங்கட்சியின் தேர்தல் வெற்றி செல்லாது என்றுத் தீர்ப்பு வழங்கி மறுதேர்தலுக்கு உத்தரவிட்டார். அப்படி நடைபெற்ற தஞ்சோங் புத்தி இடைத்தேர்தலில் போட்டியிட்ட இரசாக் 31 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்தார்.

தேர்தல் தோல்விக்குப் பின்னர் உற்சாகமற்று, ஊக்கமிழந்து, குறைந்த பட்சம் அடுத்து வரும் சில நாட்களுக்காவது வெளியே தலைக்காட்டா மலிருப்பது தோல்வியடையும் வேட்பாளர்களின் இயல்பாகும். அத்தோல்வியோடு நம்பிக்கையிழந்து ஓட்டுப்பெட்டி அரசியல் பாதையிலிருந்து விலகிக்கொள்பவர்களும் உண்டு. ஆனால் படு தோல்விக்குப் பின்னும் தேம்பியழும் சக தோழர்களுக்கும் தொண்டர் களுக்கும் ஆறுதல் கூறி அடுத்த நாளே சட்டத்தரனி தொழிலையும் கட்சிப்பணியையும் ஒருசேரத் தொடங்கிவிடும் தோழரை மலேசிய அரசியலில் எங்களைப் போல் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து வரும் அரசியலர்களுக்கு கலங்கரை விளக்கமாய் ஒளி கூட்டிய போராளியை இப்போது இழந்து நிற்கின்றோம். காரசாரமாய் வீசப்படும் கேள்விகளுக்கும் கலவரமில்லாமல் தேரவாத பிக்குவைப்போல் விடை தந்த பாங்கினை எப்படி விவரிப்பது.

கையூட்டு. ஒழுங்கின்மை, வரம்பு மீறல், நேர்மையின்மை என்று வியாபித்துள்ள அரசியலரங்கில் விலைக்கு வாங்க முடியாத அபூர்வங்களாய் திகழ்ந்தவர்களின் பட்டியல் விருப்பு வெறுப்பின்றி தொகுக்கப்படுமாயின் அப்துல் ரசாக் அகமது எனும் பெயர் அவ்வசையில் கட்டாயம் இடம்பெறும். அவருடன் பயணித்த காலத்தில் எந்த நிலையிலும் கடுஞ்சொற்கள் உதிர்ந்ததைப் பார்த்ததில்லை,கேட்டதில்லை. அம்னோவின் கோட்டையாகத் திகழ்ந்த பகுதிகளிலும்கூட தனியொருவராகத் துணிந்து சென்றவரவர். அரசியல் வைகள்கூட அவன் ஈகையுணர்வை மதித்துப் போற்றியதைப் பற்பல இடங்களில் கண்டதுண்டு.

இன மத வேறுபாடின்றி மீனவர், வேளாளர், தொழிலாளி, அற்றைக் கூலி மற்றும் அரசின் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் என்ற குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் (நகர்ப்புற குடியேறிகள்) என்று குமுக அடித்தட்டு உழைக்கும் மக்களுக்கு இவர் ஆற்றிய பணிகள் சொல்லி முடிபவை அல்ல. சக தோழர்களின் சிறுபணியினைக்கூட விலாவயாக விவரிப்பவன் பெரும்பணிகளை ஏனைய தோழர்கள் கதைக்கத் துவங்கும்போது அவ்விடம் விட்டு வெளிக்கிடுவது அவன் இயல்பாயிருந்தது. வேறு எவருடனும் இல்லாத அளவிற்கு அப்பழுக்கற்ற தோழரோடு நான் நெருங்கி நின்றதற்குப் பின்வரும் சம்பவமும் காரணமாக இருந்திருக்குமோ என்று இப்போது எண்ணத் தோன்றுகின்றது.

பதின்ம வயதிலேயே பாலஸ்தீன மக்களின் விடுலையை ஆதரித்தவன் என்பதன் அடிப்படையில் வளர்ந்த நிலையில் விமர்சனங்கள் இருந்தபோதும் போராளி யாசர் அரபாத்து அவர்களின் தலைமையை ஆதரித்து ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டின் விடுதலைப் போரை முழங்கி நின்றவர்களின் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்தேன். முகுந்தன் எனப்பட்ட உமா மகேசுவரனின் புளொட் தாக்கம் கூடுதலாயிருந்த காலமது. தோழர் யாசன், கோலலம்பூர் முழக்கத்தைத் தொலைக்காட்சியில் கண்டும் கேட்டும் மகிழ்ந்தவனுக்கு அல் பாத்தாவை ஆதப்பவர்களைப் பிடித்திருந்தது. அவ்வகையில். அப்துல் ரசாக் அமாட் என்ற வழக்கறிஞன் பெயரும் பார்ட்டி சோசியலிஸ ராக்யாட் மலேசிய எனும் அரசியல் கட்சியின் பெயரும் அறிமுகமாயிருந்தது.

எண்பதுகளின் பிற்கூறில் சிங்கப்பூரா தீவு வாழ்க்கை ஏற்பட்டபோது பந்திங் அல்லது செலாடாங் எனப்படும் காட்டெருமை தலையைச் சின்னமாகக் கொண்டிருந்த மலேசிய மக்கள் சோசலிச கட்சியினரோடு தோழமை துளிர்த்தது. அப்பொழுதெல்லாம் அங்கத்துவம் பெறுவதற்கு முன்னர் குறைந்தபட்ச கட்சிப்பணி ஆற்றியிருக்க வேண்டுமென்பது எழுதப்படா விதியாய் இருந்தது. மாநிலச் செயலாளராயிருந்த தோழர் முகமது சாலே அகமது உடனான நெருக்கம் கட்சிப்பணியில் ஈடுபாடு கொண்டதற்கும் அதன் வழி உறுப்பின ரானதற்கும் வழிவகுத்தது. தடை மீண்டு ''மிம்பார் சோசியலிஸ்’’ (சோசலிசத் தோழன்) என்ற கட்சி ஏடு வெளிவந்து கொண்டிருந்த காலகட்டமது. தடைக்குள்ளான சோசலிசத் தோழனைப் படித்து உள்நாட்டு அரசியல் நிலைமைகளை அறிந்துகொண்டதும் தொடர்புகளை பெருக்கிக் கொண்டதும் தனி அத்தியாயங்கள். டாக்டர் மகாதீன் இரும்புப் பிடி ஆட்சிக் காலமது.

1986ஆம் ஆண்டுவாக்கில் இஸ்ரேல் நாட்டின் அதிபர் சியாம் எர்ஷேக் என்பார் சிங்கைத்தீவிற்கு சுற்றுச் செலவினை மேற்கொண்டிருந்ததை எதிர்த்து போராட்டம் ஒன்று பி ஆர் எம் எனப்படும் மக்கள் கட்சியினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மலேசியாவிலிருந்து சிங்கப்பூராவிற்கு சரக்குகள் ஏற்றிச் செல்லும் புகையிரதத்தைத் தடுத்து நிறுத்த வேண்டி ரயில் தண்டவாளத்தில் படுத்தவர் மறுநாள் இருநாடுகளை இணைக்கும் பாலத்தில் படுத்தார். தொடர்ந்து வந்த சிலநாட்களுக்கு சொகூர் மாநிலமும் சிங்கப்பூர் தீவும் களேபரம் மிகுந்திருந்தது. தீவின் குடிமக்கள் தீபகற்ப மலேசியாவிற்குள் நுழைவதற்கு அஞ்சினர். மலைநாட்டு தலைநகரத்தில் அன்றைக்கிருந்த பாலஸ்தீனத்தின் தூதர் திரு அகமது அல் பார்ரா அவர்கள் சொகூர் பாகுவில் நடத்தப்பட்ட யூத-இசுரேல் எதிர்ப்புத் தொடர் ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்திருந்தார்.

இவ்விடத்தில் இன்னொன்றையும் நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். சுற்றியுள்ள முசுலிம் நாடுகளின் உணர்விற்கு மதிப்பளிக்கும் முகத்தான் சால்மன் ருஸ்டியின் ''சாத்தானின் வேதம்’’ நூலினை தடைசெய்வதாக அறிவித்திருந்த சிங்கப்பூன் மக்கள் செயல் கட்சி அரசாங்கம். பாசிச இசுரேல் அதிபருக்கு அழைப்பு விடுத்த போதும். அவரை வரவேற்க தயாரானபோதும். ஏன் அக்கம் பக்கத்தான் உணர்வினைக் கருத்தில் கொள்ளவில்லை? இதுபோன்ற சட்டாம் பிள்ளை போக்கினால்தான் பெரும்பான்மை தென்கிழக்காசிய நாடுகளுடனான சிங்கப்பூன் உறவில் முறுகல் நிலை தொடருகின்றது. பாலசுத்தீன மக்களின் மண் மீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக மேற்கொண்ட போராட்டங்களினால் முன் சொன்ன தஞ்சோங் புத்தி இடைத்தேர்தலில் சீன வமிசாவளி வாக்காளர்களின் ஓட்டுகள் சிதறி போட்டியில் தோல்வியைத் தழுவ நேர்ந்தது.

இரசாக்கிற்கு சார்பாக தேர்தல் பரப்புரைத்த. வாக்குகள் சேகத்த. சுவரொட்டிகள் ஒட்டிய. மின் கம்பங்களில் ஏறி பதாகைகள் மற்றும் செலாடாங் கொடிகள் கட்டிய பழைய நாட்களை நினைத்துப் பார்க்கின்றேன். ஆளுயர மேடைகளில் அல்ல அவர் சொல்லாடியது. சாலையோரங்களில். ஆனால் போக்குவரத்திற்கு இடர் ஏற்படுத்தாத வகையில். அவருடையது அடுக்குமொழி பேச்சல்ல. ஆனால் இனவாதம், மத அடிப்படைவாதம், வெறித்தனம் கிஞ்சிற்றுமில்லாத, உழைக்கும் மக்களின் துயரை எடுத்துரைத்த, இருக்கும் நிலையினை மாற்றுவதற்கு வழி கோலும் அருமையான பேச்சு. தம்மை எதிர்த்து போட்டியிட்டவர் களைக்கூட திட்டித்தீர்க்காத கன்னியம் மிக்க உரைகள் அவர் ஆற்றியவை. ஓம். அப்படித்தான் பிறரை வென்றெடுத்தார். ஒருமுறை அவரை எதிர்த்து வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட்ட வழக்கறிஞர் சோங் சிங் சிவீதான் மக்கள் கட்சியின் இன்றைய பொதுச்செயலாளர். எங்களை அவர் வழி நடத்திய விதம் போற்றுதற்குயது என்பது மிகைப்புகழ்ச்சி அல்ல என்பதனை அவரை அறிந்தவர்கள் நன்கறிவர்.

விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்திற்காக கண்ட களங்களினால் அவர் அடைந்த இழப்புகள். அளித்த விலைகள் அவரை நன்கு அறிந்தவர்களோடும். இணைந்து பாடாற்றியவர்களோடும் சேர்ந்து தொகுக்கும்போது மட்டுமே சொல்லி முடிக்க கூடியதாக இருக்கும். பிழைப்புவாதிகள் இறைந்து கிடக்கும் மலேசிய அரசியல் அரங்கில் வழக்கறிஞர் அப்துல் ரசாக் அமாட் போல் மானுடத்தை முதன்மைப் படுத்தி அவற்றை முன்னெடுத்தவர்கள் அருகிக் கொண்டிருக் கின்றார்கள். சுரண்டப்படும் மக்களின்பால் அவர் கொண்டிருந்த பற்றுதான் மாந்தநேயர்கள் அவன் தலைமையில் அணிவகுக்க கரணியமானது என்பது சொல்லாமலே வெளிப்படும் உண்மையாகும்.

ஒரு முறை தோழர் லியோன் ட்ராஸ்கி. எழுதிய ''லிவிங் தோட்ஸ் ஆப்ஸ் கார்ல் மார்க்ஸ்’’ என்ற புத்தகத்தை இரவல் பெற்றேன். சிங்கப்பூர் பல்கலையில் 3.6.63 இல் பயின்றபோது விலைக்கு வாங்கிய நூல் அதுவென்று குறிப்பின் வழி அறிய வந்தது. அவற்றை இரண்டொரு முறை படித்து முடித்த பின்னரும் திருப்பித் தர இயலவில்லை. நான் வடபகுதிக்குக் குடிப்பெயர்ந்து விட்டதும். அவன் அரசியல்மேடை வேறாகிப்போனதும் சந்திப்பிற்கான வாய்ப்பு இல்லாமல் போனதற்கான காரணிகள். அப்புத்தகம் இப்போதும் எம்மிடத்தில்தான் உள்ளது. ஒப்படைக்க விருப்பம் இருந்தாலும் பெற்றுக்கொள்ள அவர் இல்லையேõ ஒவ்வோர் உயிரும் இறப்பை நுகரும் எனும் மொழி இவலும் மெய்யாகிவிட்டதேõ எமக்கு அவர் விட்டுச் சென்ற எச்சம் அதுவெனக் கொள்வது சயாகுமா?

பொறுப்பற்ற சிலன் செயலால் மறைவுச் செய்தி வேண்டுமென்றே காலங்கடத்தப்பட்ட காரணத்தால் இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கொள்ள இயலாமல் போனது. அண்மையில் செய்யப்பட்ட அறுவையினால். தோழர்கள் கூட்டமைப்பால் ஆகத்து 27இல் சொகூர் பாருவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுக்கும் வாய்ப்பும் நழுவிச்சென்றது. இப்படியே ஒவ்வொன்றும் கண்முன்னே நடந்து கொண்டுள்ளது. இடதுசாரி அரசியலில் எம்மைக் கைப்பிடித்து அழைத்துச் சென்ற ஒவ்வொருவரும் உதிர்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

இன்றைக்கு பேரங்காடிகள் முளைத்துள்ள சொகூர் பாருவின் நடுநாயகமாய் விளங்கும் பகுதியில்தான் அன்றைய பெரிய மார்க்கெட் இருந்தது. கழிவு நீரும் வீச்சமும் பஞ்சமின்றி இருந்த அங்காடிக்கருகில் 1989ஆம் ஆண்டுவாக்கில் அறிக்கைகள் விநியோகித்துக் கொண்டிருந்தோம். அருகிலிருந்தவர் எம்மை நோக்கி “சவுடாரா. தேர்தல் தோற்கலாம். வெல்லவே முடியாமல் போகலாம். ஆனால் வெகு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இத்தகைய கற்பிப்பு பணிகளை நாம் ஒருபோதும் தவிர்க்கக் கூடாது.’’ என்றார். பதினெட்டு ஆண்டு களுக்கு முன்னர் அவர் சொன்னவை நேற்றைக்கு உரைத்ததைப் போல் ஒலிக்கின்றதேõ வழிநடத்திய தோழனை. தலைவனை இழந்து விட்டோம். களமும்.. கருவிகளும் இங்குதான் உள்ளன. அவர் விட்டுச் சென்றவைகளை தொடர்ந்து முன்னெடுப்பதே அவரோடு பணியாற்றிய. அவரையறிந்து நாம் செய்ய வேண்டுவதாகின்றது. வாருங்கள் தோழர்களே. அவன் கனவை நனவாக்க நிலவும் அமைப்பை மாற்றிட அணி திரள்வோம்.
Pin It