லேம்: ஐஸ்லேண்ட் படம்

‘மனித வளர்ச்சியானது கருத்தரிப்பின் போதே தொடங்குகிறது’. விந்தணுவானது சினை முட்டையினுடைய சவ்வினுள் வெற்றிகரமாக உள்ளே செல்வது கருவுறுதல். விந்தணு மற்றும் முட்டை இரண்டினுடைய மரபணு பொருட்கள் சேர்ந்து ஒரே செல்லாக மாறுகிறது.

மூலவுருவுக்கப்புறமான திசுக்களாக வளர்ச்சியடைகிறது. இறுதியில், உருப்பெற்றக் கருவினுடைய சவ்வும் மற்றும் நஞ்சுக்கொடியும் உருவாகிறது. அந்த நஞ்சுக்கொடியும் உருவமும் மனித உருவத்தோடு ஒத்து வருகையில் சகஜமாக நடமாடுகிறது. இல்லாத போது அந்நியப்பட்டுப் போகிறது.

அப்படித்தான் அடா என்கிற உயிரும் அந்நியமாகிறது. ஐஸ்லேண்ட் என்கிறபோது பனி பிரதேசங்களும் மலைகளும் ஆறுகளும் தான் ஞாபகம் வரும் அப்படியான பிரதேசத்தில் நடக்கும் ஒரு கதை இதில் வருகிற ஒரு ஆட்டுக்குட்டிக்கு அடா என்ற பெயர் இருக்கிறது. லிவிலியத்திலுள்ள ஒரு முக்கியமான பெயர், அடா என்ற கதாபாத்திரம் விவிலியத்தில் வருகிறது அதேபோல ஆட்டுக்குட்டியும் மனித தலையும் இணைந்த உயிர் கிரேக்க தொன்மக் கதைகளில் இடம் பெறுகிற விஷயமாகும்.

இவை இரண்டையும் இந்த படத்தில் பார்க்கிறோம் மனித உடம்பும் ஆட்டுத் தலையும் கொண்ட ஒரு உயிர் பலருக்கு இங்கே ஆறுதலாக இருக்கிறது. சிலருக்கு இங்கே சிரமமாக இருக்கிறது. பனியும் மலைகளும் நிரம்பிய பகுதியில் ஆடு மேய்ப்பது அவற்றை விற்பதும் என்று மரியாவும் அவரின் கணவரும் வேலையாக ஈடுபட்டு வருகிறார்கள். ஆடுகளுக்கு பிரசவம் பார்ப்பது என்பது அவர்களுக்கு அன்பின் வெளிப்பாடாக இருக்கிறது. ஒரு பிரசவத்தில் அப்படித்தான் அவர்கள் அவ்வளவு கருணையுடனும் அன்புடனும் அந்த ஆட்டை கவனத்தில் கொண்டாலும் பிறக்கின்ற ஒரு ஆட்டுக்குட்டியின் தலையுடனான உருவம் ட மனித உடம்பும் ஆக இருக்கிறது. அதை மரியா தன் குழந்தை போலவே வளர்க்கிறார்.

ஆனால் எப்படி இப்படி ஆனது என்று ஒரு வருத்தம் அவருக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. இறந்த போன குழந்தை ஆவின் ரூபத்தில் வந்திருப்பதாக அவர் நினைக்கிறார். அதுவே அவருக்கு ஆறுதலாக இருக்கிறது. ஆனால் அவனைப் பெற்றெடுத்த அந்த தாய் ஆட்டுக்குட்டி மரியா வுடன் அது வளர்வதையும் தன்னிலிருந்து தனிமைப்பட்டு இருப்பதையும் பார்த்து திரும்பத் திரும்ப கத்துகிறது. வீட்டை சுற்றி சுற்றி வருகிறது. இது மரியாவுக்கு சில சமயங்களில் எரிச்சலாக இருக்கிறது.

எனவே அந்த தாய் ஆட்டை அவள் சுட்டுக் கொன்று விடுகிறாள். அடா பெரும் ஆறுதலாக அளித்து கொண்டு இருக்கிறாள். தாய் ஆட்டை சுடுவதை பார்க்கிற மரியாவின் கணவனின் தம்பி அவளைப் பல விதங்களில் தொல்லைப்படுத்திக் கொண்டே இருக்கிறான் பாலியல் ரீதியாக கூட அவளை பயன்படுத்த நினைக்கிறான். ஆனால் அவள் அதில் இருந்தால் தப்பித்துக் கொண்டே இருக்கிறா. ள் கடைசியில் அவனை எப்படியோ ஊருக்கு அனுப்பி வைத்து விடுகிறாள் திடீரென்று அவர்களின் வளர்ப்பு நாய் கொல்லப்படுகிறது. இது மரியா மற்றும் அவள் கணவனின் மத்தியில் பயத்தை கிளப்புகிறது.

ஒரு நாள் அவன் கணவனும் காணாமல் போகிறான். அந்த மலைப் பரதேசத்தில் பனி அடர்ந்த பகுதிகளில் தன் கணவனைத் தேடி அலைகிறாள் மரியா கடைசியில் கணவன் கொல்லப்பட்டு இருப்பது தெரிகிறது. அவனை கொன்றது யார் என்று அவளுக்கு விளங்கவில்லை பாதி மிருகம் பாதி மனிதனாகவும் இருக்கிற அடாவின் தந்தை என்று அதே வகையில் இருக்கும் ஒருவன் தான் அந்த கொலையைச் செய்கிறான் அவனுக்கு மனித உருவம் இருக்கிறது தலையில் யானையின் தலை இருக்கிறது. அவன் கொலையுண்டது பற்றி மரியாவிற்கு தெரியவில்லை ஆனால் இப்போது தன்னுடைய வளர்ப்பு நாயும் தன் கணவரும் இழந்து போக அவள் அங்கேயே தனிமைப் படுத்தப்படுகிறார் மரியா.

உயர்ந்த மலைப்பகுதிகளும் புல்வெளிகளும் பனியடர்ந்த இடங்களும் அவளுக்கு துணையாக இருக்கின்றன. அந்த பிரதேசத்தை முழுமையாக படத்தில் கொண்டு வருவதில் இயக்குனரின் திறமை வெளிப்பட்டு இருக்கிறது. அதேபோல தங்களை யார் என்று அடையாளம் காட்டிக் கொள்வதில் பலரும் வந்து போகிறார்கள். கணவரின் சகோதரர் அதில் முன்னணியில் இருக்கிறார் அவர் ரூபம் என்னவாக இருந்தாலும் மரியாவை கவர்ந்து கொள்வது முக்கியமாக இருக்கிறது. அதைக் கடந்து மரியா தனித்து நிற்கிறாள்.

அவளுக்கும் அவள் குடும்பத்திற்கும் பயனுள்ளதாக இருந்த வீட்டு நாயும் இறந்து போய் விடுகிறது அடாவை இப்போது அபகரித்துக் கொண்டு போய் விடுகிறார்கள். தந்தை என்று சொல்லப்படுகிற அந்த உருவம். இந்த வகையில் மரியா தான் கொலை செய்த அந்த ஆட்டை குற்ற உணர்வுடன் நினைத்துக் கொள்கிறாள். அவள் எவ்வளவோ பிரசவங்களை பார்த்திருக்கிறாள் ஆனால் இந்த மிருகமும் மனிதனும் ஆன அடாவை பெற்றெடுத்த போது அவள் அடைந்த சிரமங்களும் மன சித்திரவதைகளும் அதிகம்தான்.

பெண்ணை அபகரித்துக் கொள்ளுதல், பாதி மிருகம் பாதி மனித உருவங்கள் அவற்றின் ஆக்கிரமிப்பு என இவற்றையெல்லாம் கிரேக்க நாடகங்களும் தொன்மஙகளும் விவிலியமும் கலந்து இந்த கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வகையில் பல தன்மைகளில் கூட்டு சேர்க்கையாக இருக்கிற போதும் மனிதன் தனிமைப்பட்டு தான் நிற்கிறான் அப்படித்தான் மரியாவும் தனிமைப்பட்டுப் போகிறாள். ஆனால் இயற்கை அவளுக்கு ஆறுதலாக இருக்கிறது. ஐஸ்லேண்டின் இசைக்குறிப்புகளை இப்படத்தில் காணக் கிடைப்பது அபூர்வமான விசயம் என்று நண்பர்கள் குறிப்பிட்டார்கள்.

இப்போஅது அந்நாட்டில் பிரபலமாகியுள்ள ப்ளுஸ்ராக் இசைக்குழு பற்றி பல தகவல்கள் கிடைத்தன. காலியோ என்ற இசைச் சேனலில் ஐஸ்லேண்டின் இசைக்குறிப்புகளைக் காணலாம். காலியோ என்றால் அவர்களின் மொழியில் குரல் என்று அர்த்தமாம். கிராமி விருதின் இறுதிப் பட்டியலில் இடம் பிடித்து இது சாதனை படைத்துள்ளது. ஐஸ்லாந்தின் நவீன இசையின் அடையாளமாகத் திகழ்கிறது காலியோ. இந்த இசை வீடியோக்கள் 110 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை சந்தாதாரர்களாகக் கொண்டுள்ளது.

ஆல்பா

Pin It