இந்தாண்டு தொடக்கத்தில் வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகளின் விலை வேறு எப் போதும் இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட, இந்த விலையேற்றத்தினால் சாமானிய மக்கள் மிகவும் திண்டாடிப் போனார்கள்.

அதன் பின்பு படிப்படியாக விலை குறையத் தொடங்கி, இயல்பு நிலைக்கு வரத் தொடங்கினாலும், ஒவ்வொரு ஆண்டும் இப்படி ஒரு நிலை உருவாவதால் இந்த திடீர் விலையேற்றத்திற்கு காரணம் என்ன என்பது பற்றி யோசிக்க வேண்டி யுள்ளது.

மக்கள் தொகை அதிகரிப்ப தாலும், மக்களின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாமல் பற்றாக்குறை ஏற்படுவதாலும், விலையேற்றத்தைத் தவிர்க்க முடியாது என பொதுவாக சொல்லப் படுகிறது.

அரசின் பதிலோ, பருவத்தின் போது, மழை பெய்யவில்லை என்றும், பருவம் தவறி மழை பெய்வதாலும், அல்லது வறட்சியின் தாக்கத்தின் கார ணமாகவும், கடுமையான பனிப் பொழிவு போன்ற பருவ மாற்றங்களின் காரணமாகவும் உற்பத்தி பாதிக்கப்படு கிறது என கூறப்படுகிறது.

இயற்கையின் மாற்றத்தின் கார ணமாக காய்கறிகளின் உற்பத்தி பாதிக்கப்படுவது ஒருபுறம் என்றால், மறுபுறம் மனிதர்கள் செய்யும் தவறு களின் காரணமாகவும் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுகிறது.

சுற்றுசூழலையும், இயற்கை வளத் தையும் பாதுகாப்பதில் நாம் போதிய கவனம் செலுத்தாதன் விளைவாக அதன் பலனை அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம்.

தமிழ் நாட்டிலுள்ள பெரும் நக ரங்கள் மற்றும் நடுத்தர நகரங்களைச் சுற்றி நூற்றுக் கணக்கான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களின் உயிர் நாடியே விவசாயமும், இது சார்ந்த தோட்டப் பயிர்களுமேயாகும். இந்தத் தோட்டப் பயிர்களில், உழவர் கள், கீரை வகைகள் மற்றும் செடி, கொடி களில் விளையும் நாட்டுக் காற்கறிகளை விளைவிக்கிறார்கள். உற்பத்தி செய்த காய்கறிகளை தங்கள் ஊர்களுக்கு அருகாமையில் உள்ள பெரு மற்றும் சிறு நகரப் பகுதிகளில் உள்ள சந்தை வியாபாரிகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வந்தனர்.

எடுத்துக்காட்டாக, கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சுற்றி உள்ள மாவட்டங்களிலிருந்து சென்னை நகரத்தில் உள்ள பூக்கடை, கோயம்பேடு, மாம்பலம், தாம்பரம் போன்ற பகுதிகளுக்குத் தினந்தோறும் 60 விழுக்காட்டிற்கு மேலாக காய் கறிகள் வந்து குவிந்தன. மீதமுள்ள 40 விழுக்காட்டிற்கு குறைவான காய் கறிகள் அண்டை மாநிலமான கர் நாடக, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங் களிலிருந்து வந்தன.

புறநகர் பகுதியான தாம்பரம் அடுத்து பெருங்களத்தூரில் தொடங்கி விழுப்புரம் திருவண்ணாமலை மற்றும் செங்கம் வரை சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பிலும், காஞ்சிபுரம், திரு வள்ளூர் மாவட்டம் தொடங்கி நகரி வரை சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நிலப் பரப்பிலும் உழவர்கள் காய்கறிகளை விளைவித்து வந்தனர்.

இவ்வாறு உற்பத்தி செய்த காய் கறிகள் சென்னை மாநரில் குவிந்தன. இதனால் சென்னை வாசிகளுக்கு காய்கறி தட்டுப்பாடோ பற்றாக் குறையோ ஏற்பட்டதில்லை. விலை யேற்றமின்றி இயல்பாக காய்கறிகள் கிடைத்துவந்தன.

ஆனால் நாளடைவில் பருவ மழை பொய்த்து போனதின் விளை வாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட் டது. அப்போது சென்னை மாநகரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி யது. இதனால் புறநகர் பகுதியில் உள்ள கிணறுகளில் இருந்தும், ஆழ் குழாய் மூலம் பூமியில் துளையிட்டு தண் ணீரை உறிஞ்சி லாரிகளின் மூலமாக மாநகரின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்து வந்தனர். இதனால் நிலத்தடி நீர் 200 அடி, 300 அடி ஆழத் திற்குப் போய்விட்டது. நிலத்தடி நீர் கீழே போனதால் உப்புநீர் புகுந்து நிலத் தின் தன்மையைக் கெடுத்துவிட்டது.

அரசாங்கமும் நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் போதிய அக்கறை செலுத்தவில்லை. உயர்நீதிமன்றம் பொது நல வழக்கு ஒன்றில் தண்ணீர் திருடர்களை எச்சரிக்கை செய்ததுதான் அதிகபட்ச நடவடிக்கையாகும்.

மைய அரசின் நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டம் அமல்படுத்தப் பட்டது. அதாவது கிராமங்களில் உள்ள கால்வாய், குளம், ஏரி போன்ற வற்றில் தூர் எடுப்பது, இந்த வேலைக் குச் சென்று ஒப்புக்கு ஆள் கணக்கு கொடுத்துவிட்டு, சிறிது நேரம் வேலை செய்து, மர நிழலில் ஒதுங்கி விட்டு, மதியம் 1 மணிக்கு வீடு திரும்பி விடு வார்கள். இவர்களுக்கு உழைக்காமலே ஒரு நாள் ஊதியம் கிடைத்து விடு கிறது. இதன் காரணமாகவும் விவசாய வேலைக்கு வருவதில் மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

அப்படியே தப்பி தவறி வேலைக்கு வரும் கூலி தொழிலாளிகள் கூலியுடன் சேர்த்து ‘குவார்ட்டர்’ வாங்கி கொடுத்தால்தான் வேலைக்கு வருவேன் எனக் கறாராக கேட்கிறார் கள். வேறு வழியின்றி அதையும் கொடுத்து, கடன் உடன் வாங்கி, உரம் பூச்சிக் கொல்லி மருந்து இட்டு காய் கறிகளை விளைவித்து சந்தைக்கு எடுத்துச் சென்று விற்கும்போது விவசாயி களுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைப்பதில்லை.

உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது என்ற பழ மொழிக்கு ஏற்றார்போல் விவசாயத் தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் காலப்போக்கில் தோட்டப் பயிர் செய்வதை விவசாயிகள் கைவிடும் நிலைமை ஏற்பட்டது.

அடுத்து, மைய, மாநில அரசுகள் காய்கறி உற்பத்தி செய்யும் உழவர் களை ஊக்குவிக்கும் பயனுள்ள திட் டங்களை அறிமுகப் படுத்தி செயல் படுத்தாமல் மெத்தனமாக இருந்து விட்டன.

சிறு, நடுத்தர விவசாயிகள் தங்கள் பாட்டன், முப்பாட்டன் சம்பாதித்து வைத்துவிட்டுப் போன நிலங்களை ரியல் எஸ்டேட் செய்யும் கும்பலுக்கு விற்றுவிட்டு, வேறு பிழைப்பு தேடி, சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களுக்குச் சென்று தினக் கூலி களாக மாறி வருகிறார்கள். அதாவது தங்கள் பாரம்பரியமான விவசாயத் தைக் கைவிட்டு, வேறு தொழிலுக்கு மாற வேண்டிய நிலையே ஏற்படுகிறது.

இது மட்டுமின்றி புறநகர் பகுதி களில் பன்னாட்டு நிறுவனங்கள் ஏக்கர் கணக்கில் வளைத்துப் போட்டு மிகப் பிரம்மாண்டமான கட்டிடங்களை எழுப்பி, தங்கள் தொழில் நிறுவனங் களை விரிவுபடுத்தி வருகின்றன.

அரசாங்கமும் சிப்காட் போன்ற தொழிற்பேட்டை அமைப்பதற்காக, பல கிராமங்களையும், அப்பகுதி மக் களின் வாழ்வாதாரமான நிலங்களை யும் பிடுங்கி வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது. இதனால் விவ சாயமும், விவசாயிகளின் வாழ்வும் வீழ்ச்சி அடைந்து வருகின்றன.

மேற்கண்ட மோசமான சூழ் நிலையின் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, தமிழ் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து 20 விழுக்காட்டிற்கும் குறைவான காய்கறி களே உற்பத்தியாகி வருகின்றன.

ஆனால் கர்நாடகா, ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து 80 விழுக்காட்டிற்கு மேலாக காய்கறிகள் வந்து குவிகின்றன. எனவே வெளி மாநில வியாபாரிகள் வைத்ததே சட்டம் என்கிற நிலைமை உருவாகி விட்டது. அவர்கள் நிர்ணயிக்கும் விலைக்கே நாம் வாங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

மேலும் வெளி மாநிலங்களி லிருந்து ஏற்றி வரும் சுமையுந்துகளின் வாடகை கட்டணமும் கூடிக் கொண்டே போகிறது. மைய அரசு எப்போதெல்லாம் டீசல் விலையைக் கூட்டுகிறதோ அப்போதெல்லாம் காய்கறிகளின் விலையும் எந்தவித கட்டுப்பாடுமின்றி தாறுமாறாக ஏறிக் கொண்டே போகிறது.

அது மட்டுமின்றி வறட்சியின் தாக்கம் அதிகமானாலும், அளவுக்கு அதிகமான மழைபெய்து விளைச்சலை நாசம் செய்தாலோ, அப்போதும் கேள்வி முறையின்றி காய்கறிகளின் விலை கிடுகிடுவென ஏறிவிடும்.

கோயம்பேடு வணிக வளாகத் தில் நாள் ஒன்றுக்கு சுமார் 15 கோடி முதல் 20 கோடி வரை காய்கறிகளின் விற்பனை நடைபெறுகிறது. இதனால் கர்நாடகா, ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரி களும், விவசாயிகளும் இலாபம் அடை கிறார்கள்.

தமிழக அரசு கட்டுமான கழகத் தின் சார்பில் பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டிய கோயம்பேடு மார்க்கெட், தமிழக விவசாயிகளுக்கோ வியாபாரிகளுக்கோ பலனின்றி இருக் கிறது. இந்த நிலைமையில் நாம் கோரு வது,

* தமிழக அரசு உடனடியாக விளை நிலங்கள் மீது கட்டிடங்களைக் கட்டு வதற்கு தடை விதிக்க வேண்டும். இருக்கின்ற நிலத்தினை மேம்படுத்தி நிலத்தின் நுண்ணுயிர்ப் பெருக்கத் திற்குத் தேவையான அனைத்து செயல் பாடுகளையும் ஊக்குவிக்க வேண்டும்.

* நீராதாரங்களைப் பாதுகாப் பதில், அரசு புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும். அதனைப் பாது காக்கவும், பராமரிக்கவும், அந்தந்த பகுதி மக்களை உள்ளடக்கிய நீராதார பாது காப்புக் குழு அமைத்து செயல் படுத்த வேண்டும். பொது நீர் நிலை களின் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

* சுற்று சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி மறுக்க வேண்டும்.

* சில இன்றியமையாதத் தொழிற்சாலைகள் அமைக்கும் போது, அவற்றின் கழிவுகளை அகற் றும் முறைகளை கறாராக பின்பற்றப்படும் நிலையை உருவாக்க வேண்டும்.

* விளைநிலங்களை பாலை வன மாக்கும் போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டும். சமூகக் காடுகள் என்ற பெயரில் காட்டு கருவேல், பார்த்தீ னியம் போன்ற மரங்கள் மண்ணில் 100 அடிக்கு கீழ் சென்று நீரை உறியும் தன்மை கொண்டவை. இவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். மக் களுக்குப் பயன் தரும் மாற்றுப் பயிர் களைப் பயிரிட வழி வகை காண வேண்டும்.

* வேளாண் துறை வல்லுநர் களிடம் கலந்தாலோசித்து காலத்திற்கு ஏற்ற துல்லிய பண்ணை திட்டத்தின் மூலமாக காய்கறி உற்பத்தியைப் பல மடங்கு பெருக்க வேண்டும்.

* விளைவித்த விவசாயப் பொருட்களைப் பாதுகாக்க குளிர்பதன கிடங்குகளை அரசே தேவையின் அடிப்படையில் கட்டித் தரவேண்டும்.

* அரசின் வேளாண் துறையின் சார்பில் விதை, உரம், பூச்சி கொல்லி மருந்து, விவசாயக் கருவிகளை வரி யின்றி குறைந்த விலைக்கு வழங்க வேண்டும்.

* வளர்ச்சியடைந்த நாடுகளான அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் விவசாயிகளுக்கு 80 முதல் 90 விழுக்காடு வரை மான்யம் அளிக் கப்படுகிறது. அதேப்போல் இங்குள்ள விவசாயிகளுக்கு மான்யம் அளித்து உழவுத் தொழிலை ஊக்குவிக்க வேண்டும்.

காய்கறி விளைச்சலைப் பெருக் கவும், விவசாயிகளைப் பாதுகாக்கவும் மேற்கண்ட பரிந்துரைகளை அரசு, உடனடியாக செயல்படுத்த வேண் டும். இதற்கு அனைத்து தரப்பு மக்க ளும் ஒத்துழைப்பு தரவேண்டும்.

Pin It