திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலைக் கழகத்தின் 32ஆம் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, துணைவேந்தர் என்.சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

650 மாணவர்களுக்கு ஆளுநர் பட்டம் வழங்குவதன் அடையாளமாக, மாணவர்கள் தங்களின் பட்டத்தை ஆளுநரிடம் கொடுத்து வாங்கிச் சென்றனர்.

அதில் நாகர்கோயிலைச் சேர்ந்த ஜீன் ஜோசப் என்ற மாணவவி மட்டும் தன் பட்டத்தை ஆளுநரிடம் தராமல், துணைவேந்தரிடம் கொடுத்து, பின்னர் பெற்றுச் சென்றார். அவர் சொன்ன காரணம், 'தமிழ்நாட்டுக்கு ஏதும் செய்யாமல் எதிராக இருப்பவரிடம் பட்டம் வாங்க விருப்பமில்லை' என்பதுதான்.

உடனே அந்த மாணவியின் கணவர் தி.மு.கவைச் சேர்ந்தவர், கட்சியில் பெயர் வாங்க, திமுகவினர் அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகங்களுக்கு, கல்வி நிலையங்களயும் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று குதித்து விட்டார் மாஜி பாஜக தலைவர் அண்ணாமலை.

நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட அரசியல் பின்னணியைக் கல்வி நிலையங்களில் வைத்து ஆட்டம் ஆடுவது பாஜக என்பது அண்ணாமலைக்குத் தெரியாதா? மாணவர்களுக்கு அரசியல் சாயம் பூசக்கூடாது என்பதும் அவருக்குத் தெரியாதா?

 ஆடு இலை, தழைகளைத்தான் தின்னும். இந்த ஆடு குப்பைகளைத் தேடுகிறது.

தந்தை பெரியார் பெண்களுக்குக் கொடுத்த சுயமரியாதையின் மற்றுமோர் அடையாளம் ஜீன் ஜோசப். வாழ்த்துவோம் அவரை!

கருஞ்சட்டைத் தமிழர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.