ambedkar 600

“ரிக்வேத கால ஆரியர்கள் உணவுக் காகப் பசுக்களைக் கொன்றார்கள் என்பதையும், அவற்றின் இறைச்சியை அவர்கள் விரும்பி உண்டார்கள் என்பதையும் ரிக்வேதத்திலிருந்தே தெள்ளத் தெளிவாகக் காண்கிறோம். ரிக் வேதத்தில் (10.86.14) இந்திரன் கூறுகிறான்: “அவர்கள் மொத்தம் பதினைந்து பசுக்களையும் இருபது காளை மாடுகளையும் சமையல் செய்தார்கள்”. அக்கினிக்காக குதிரைகளும், எருதுகளும், காளை மாடுகளும், கன்று ஈனாப்பசுக்களும் ஆட்டுக் கடாக்களும் பலியிடப்பட்டன என்று ரிக்வேதம் (10.91.14) கூறுகிறது. வாள் கொண்டோ அல்லது கோடரி கொண்டோ பசு கொல்லப்பட்டதாக ரிக் வேதத்திலிருந்து (10.72.6) தெரிகிறது.

....விஷ்ணுவுக்குக் குள்ளமான காளைகளையும், விரித்ரனை அழித்த இந்திரனுக்கு கீழ்நோக்கிய கொம்பும் நெற்றியில் வெண்புள்ளியும் கொண்ட எருதும், புஷனுக்கு கறுப்புப் பசுவும், ருத்ரனுக்கு செந்நிறப் பசுவும் பலியிடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. தைத்ரீய பிராமணம் பஞ்சாச்சரதிய - சேவை எனும் மற்றொரு வகையான உயிர்ப்பலியைப் பற்றிக் குறிப்பிடுகிறது. திமிலில்லாத குட்டையான ஐந்து வயது நிரம்பிய பதினேழு எருதுகளையும், அதே எண்ணிக்கையில் மூன்று வயது நிரம்பிய கன்று ஈனாத இளம் பசுக்களையும் பலியிடுவது இதில் மிக முக்கியமான அச்சமாகும்

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி 14)

Pin It