கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

சென்னை ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த சூரஜ் என்ற ஆய்வு மாணவரை மாட்டிறைச்சி உண்ணும் திருவிழாவை நடத்தியதற்காக அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்ற ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பைச் சேர்ந்த மணீஷ் மற்றும் அவனது கும்பலைச் சேர்ந்த பொறுக்கிகளால் மிக மோசமான முறையில் தாக்கப்பட்டிருக்கின்றார். இதனால் அவரது வலது கண்ணில் கடுமையான காயம் ஏற்பட்டு தற்போது அவர் வானகரம் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றார்.

மாட்டுக்கறி சாப்பிட்டது மட்டுமே சூரஜ் மீதான தாக்குதலுக்கான காரணமாக நம்மால் பார்க்க முடியவில்லை. அதையும் தாண்டி இந்தத் தாக்குதலுக்கான மையமான காரணமாக இருப்பது அம்பேத்கர், பெரியார் போன்றவர்களின் சிந்தனைகள் பார்ப்பன அக்ரகாரமான அய்யர் அய்யங்கார் டெக்னாலஜிலேயே வேர்விட்டு வேகமாக பரவுவதுதான். அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் போன்றவர்களின் பெயரை எப்போது எங்கு கேட்டாலும் காவிக் கும்பல் பீதியடைகின்றது. அதுவும் தன்னுடைய அக்ரகாரத்திலேயே அதை எதிர்கொள்ள நேரும் போது பூணூல் கும்பலுக்கு ஆத்திரமும், கோபமும் தலைக்கு ஏறி வெறிபிடித்த சொறிநாயாக பாய்ந்து கடித்து வைக்க தூண்டுகின்றது. ஆனால் இது பெரியார் மண் என்பதும் இங்கு அப்படி கடிக்க முற்படும் வெறிபிடித்த நாய்களின் பல்லை பிடுங்குவதோடு வாலும் ஒட்ட நறுக்கப்படும் என்பதும் இன்னும் அனுபவ பூர்வமாக அந்த அம்பிகளுக்குத் தெரியவில்லை. கூடிய விரைவில் நம் தோழர்கள் அதைச் செய்வார்கள் என நாம் உறுதியாக நம்புகின்றோம். 

IIT 600தமிழ்நாட்டிலே நடந்து கொண்டிருக்கும் பிஜேபியின் அடிமை ஆட்சி தன்னுடைய பதவியையும், பணத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக தன் சொந்த நாட்டு மக்கள் மீதே வன்முறையான வழிகளை பயன்படுத்துவதோடு சுயமரியாதையையும் இழந்து வெட்கக்கேடான முறையில் நடந்து கொண்டிருக்கின்றது. அமைதியான முறையில் மெரினாவிலே நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்திய திருமுருகன் காந்தி உட்பட நாலுபேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து பிஜேபியின் உண்மையான அக்மார்க் கைக்கூலிகள் தாங்கள்தான் என்பதை எடப்பாடி அரசு நிரூபித்துள்ளது. தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டிறைச்சிக்கு மாடுகளை விற்பது தொடர்பான தடைக்கும், ஐஐடி மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதற்கும் எந்தவித கண்டனத்தையும் பதிவு செய்யாமல் கோழைத்தனமாக நடந்து கொள்கின்றது. “அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு தினம் அச்சப்பட்ட கோழைக்கு  இல்லம் எதற்கு” என்ற அவர்களின் தலைவரின் பாடல்வரிகள் தான் நமக்கு நினைவுக்கு வருகின்றது.

என்ன செய்தாலும் நம்மை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள், அப்படி கேள்வி கேட்டால் குண்டர் சட்டத்தையோ இல்லை தேசிய பாதுகாப்பு சட்டத்தையோ பயன்படுத்தி ஒடுக்கிவிடலாம் என அவர்களின் தானைத் தலைவி செய்ததுபோலவே செய்து விடலாம் என அடிமை எடப்பாடி அரசு நினைத்துக் கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் உள்ள முற்போக்குச் சக்திகளின் வலிமையைப் பற்றி மிகக் குறைவாகவே எடப்பாடி அரசு புரிந்து வைத்திருப்பதாக தெரிகின்றது. கிடாவெட்டு தடை சட்டம் கொண்டு வந்து அவர்களின் ஊழல் அம்மா பட்ட பாட்டை வேண்டுமென்றால் மெரினாவிலே போய் ஆவியை எழுப்பி கேட்டுப் பார்க்கட்டும்.

  அந்த உண்மை தெரியாததால் தான் எடப்பாடி அரசு மாட்டிறைச்சி தடைக்கு எதிராக போராடிய அமைப்புகளின் மீது தனது விசுவாச போலீசை வைத்து அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது. கேரளா, திரிபுரா, மேற்கு வங்காளம், புதுச்சேரி அகியவற்றின் முதல்வர்கள் வெளிப்படையாக மோடி அரசின் பார்ப்பன பயங்கரவாத நடவடிக்கைக்குக் கடும் கண்டனங்களை தெரிவிக்கும் போது எடப்பாடி அரசோ இங்கே மாட்டிறைச்சி தடைக்கு எதிராக போராடும் மக்கள் மீது  ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுப் பிஜேபிக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கும் காவடி தூக்கிக் கொண்டு அரோகரா பாடிக் கொண்டு இருக்கின்றது. மாட்டிறைச்சி உண்ணும் திருவிழாவிற்கு அனுமதி மறுக்கும் அரசு காவி பயங்கரவாதிகளின் அடாவடித் தனங்களுக்கு மட்டும் மனமுவந்து அனுமதி கொடுத்து வருகின்றது. அரசு கொடுக்கும் இந்த அபரிவிதமான ஆதரவுதான் எச்சிக்கலை ராஜா, கேடி ராகவன் போன்ற பார்ப்பனப் பொறுக்கிகளை எல்லாம் வாய்க்கொழுப்பாக தமிழர்களை இழிவு செய்யும் வகையில் பேச வைக்கின்றது.

 வட மாநிலங்களில் மாட்டை வைத்து அரசியல் செய்ததுபோல இங்கும் செய்து  இரண்டு சீட் மூன்று சீட் பெற்று விடலாம் என காவி பயங்கரவாதிகள் கணக்குப் போடுகின்றார்கள். ஆனால் இங்கே தமிழக மக்கள் பிஜேபியை ஒரு கொலைகார இந்து பாசிச கட்சியாகத்தான் பார்க்கின்றார்கள். தீவிரமான ஆன்மீகத்தைக் கடைபிடிக்கும் நபர்கள் கூட இந்தக் கொலைகார கூட்டத்தை பொருட்படுத்துவது கிடையாது. தமிழ்நாட்டிலே மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் ரத்தத்திலும் பார்ப்பன எதிர்ப்பு என்பது இரண்டறக் கலந்திருக்கின்றது. என்ன தான் பிஜேபி தன்னை யோக்கியவானாக, புனிதவானாக காட்டிக் கொள்ள முயன்றாலும் அந்த விஷ சந்துவை தமிழக மக்கள் ஒரு பொருட்டாகக்கூட எடுத்துக் கொள்வதில்லை.

 இப்போது மாட்டிறைச்சிக்குத் தடை என்ற அதன் பார்ப்பன பயங்கரவாத அறிவிப்பால் அது மேலும் தமிழக மக்கள் மத்தியில் குறிப்பாக அது வென்றெடுக்க நினைக்கும் ஆதிக்க சாதிகளின் இடையே கடுமையான அதிருப்தியைத் தோற்றுவித்து இருக்கின்றது. தமிழகத்தின் பெரும்பாலும் நிலவுடமையாளர்களாக இருக்கும் ஆதிக்க சாதிகள் தாங்கள் மாட்டுக்கறியைத் தின்பதில்லை என்றாலும் தங்களிடம் உள்ள வயதான மாடுகளையும், காளை மாடுகளையும் இறைச்சிக்காக சந்தையில் விற்று பணம் ஈட்டி வந்தார்கள். ஆனால் தற்போது மோடி அரசின் அறிவிப்பால் சந்தைக்குக் கொண்டு சென்று தங்களிடம் பயன்படாமல் உள்ள மாடுகளை விற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாட்டுக்கறி தின்னாத ஆதிக்க சாதி நிலவுடைமையாளர்கள் கூட மாட்டுக் கறிக்கு ஆதரவாக  வெளிப்படையாக பேசும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிக்கின்றார்கள். அவர்களே சில இடங்களில் மாட்டுக்கறி உண்ணும் நிகழ்வில் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்கின்றார்கள்.

 ஆக மொத்தம் பிஜேபியின் இந்த அறிவிப்பு ஆதிக்க சாதிகளைப் பிஜேபியின் பின்னால் அணிதிரட்டுவதற்குப் பதில் பெரியார், அப்பேத்கர் பின்னால் அணி திரள வைத்திருக்கின்றது. ஏற்கெனவே தமிழக விவசாயிகளை அவமானப்படுத்திய மோடி அரசின் மீதான கோபம் இன்று தமிழக விவசாயிகளைக் காவி பயங்கரவாதிகளுக்கு எதிராக போர்க்கோலம் பூண வைத்திருக்கின்றது. இனியும் இந்துமதம், இந்துத்துவா என பேசிக் கொண்டு பார்ப்பன பயங்கரவாதிகளின் பேச்சைக்கேட்டு அவர்களின் பின்னால் சென்றால் இருப்பதை எல்லாம் இழக்க வைத்து  நம்மை பிச்சைக்காரனாக மாற்றிவிடுவார்கள் என விவசாய மக்கள் உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

 எந்தக் காலத்திலும் தமிழகத்தில் இந்தப் பார்ப்பன கேடிகளாலும் அவர்களிடம் வேசிமகன் (சூத்திரன்) பட்டத்தை வாங்கிக் கொண்டு தன்மானத்தையும், சுயமரியாதையும் விட்டுக் கொடுத்துவிட்டு பொறுக்கித் தின்பதற்காக அவனை ஆதரிக்கும் மானங்கெட்ட ஜென்மங்களாலும் காலூன்ற முடியாது என்பதைத்தான் இன்று தமிழகம் முழுவதும் நடந்து வரும் போராட்டங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. ஒட்டுமொத்த தமிழகமும் காவி பயங்கரவாதிகளுக்கு எதிராக நிற்கின்றது. ஆனால் அதைக்கூட உணர்ந்து கொள்ளத் திராணியற்ற  அர்ஜுன் சம்பத் போன்ற முட்டாள் கூட்டம் பன்றிக்கறி தின்னும் போராட்டத்தை அறிவித்திருக்கின்றது.

மாட்டுக்கறி தின்னும் போராட்டத்தை அறிவித்தால் அதில் ஒரு நான்கு முஸ்லிம்களும் 96 இந்துக்களும் கலந்து கொள்வார்கள். ஆனால் பன்றிக்கறி தின்னும் போராட்டத்தை அறிவித்தால் அதில் 100 இந்துக்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். அதிலும் குறிப்பாக அர்ஜுன் சம்பத்துக்குப் பஞ்சமன் பட்டம் கொடுத்த எவனும் அதில் கலந்து கொள்ள மாட்டான். ஆனால் அதைப் பற்றி அர்ஜுன் சம்பத்துக்குக் கவலையில்லை. காவி பயங்கரவாதிகளிலே அர்ஜுன் சம்பத் ஒரு கேவலமான, மட்டமான, காமெடி காவி பயங்கரவாதி. யாருக்கு எதிராகப் போராடுகின்றோம் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் பன்றிக்கறி தின்னும் போராட்டத்தை அறிவித்து இருக்கின்றார். இதுதான் பார்ப்பனியத்தைத் தன்னுடைய கொள்கையாக ஏற்றுக் கொண்டவனின் அறிவு. தன்னைத் தானே அவமானப்படுத்தி கொண்டு தன்முகத்திலேயே தானே காரித் துப்ப வைத்துக் கொள்ளும் அறிவு.

 அர்ஜுன் சம்பத் பன்றிக்கறி தின்னும் போராட்டம் நடத்தினாலும் சரி, இல்லை பாம்புக்கறி தின்னும் போராட்டம் நடத்தினாலும் சரி அது எந்த வகையிலும் ஒரு சின்ன சலசலப்பைக்கூட தமிழகத்தில் ஏற்படுத்தாது. ஐஐடியில் 87 சதவீத ஆசிரியர்கள் பார்ப்பன மேல்சாதிக்காரர்கள், 11 சதவீதம் இதர பிற்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள், வெறும் 2 சதவீத ஆசிரியர்கள் தான் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர்கள். அங்கு படிக்கும் மாணவர்களில் கூட 80 சதவீதத்திற்கும் மேல் பார்ப்பன மேல்சாதி மாணவர்கள் தான் உள்ளார்கள். அர்ஜூன் சம்பத் போன்ற இந்துக்களின் நலனில் அக்கறை கொண்ட வீர இந்துக்கள் அவர் சார்ந்த சமூக மாணவர்களுக்கு ஐஐடியிலே ஏன் இடம் கிடைக்கவில்லை என்று எப்போதாவது யோசித்து இருப்பார்களா? என்றால் நிச்சயம் யோசித்து இருக்க மாட்டார்கள். பார்ப்பனியத்தையும், பார்ப்பனனையும் நக்கிப் பிழைக்கும் அடிமைகளுக்கு  அதைப் பற்றி எந்த அக்கறையும் எப்போதுமே இருந்தது கிடையாது. அதனால் தான் அர்ஜுன் சம்பத் போன்றவர்கள் தான் சார்ந்த சமூக மக்கள் ஐஐடி நிர்வாகத்தால் நிராகரிக்கப்படுவதைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் பன்றிக்கறி தின்னும் போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.

 மாணவர் சூரஜ் மீதான ஆர்.எஸ்.எஸ் காலிகளின் தாக்குதல் தமிழகத்தில் பிஜேபிக்கு பாடை கட்டும் நேரத்தை விரைவுபடுத்தியிருக்கின்றது. முட்டாள்கள் தனக்குத் தானே குழிபறித்துக் கொள்கின்றார்கள் என்பதைத்தான் மோடி அரசின் இந்த அறிவிப்பும் அதை அடியொற்றி தமிழ்நாட்டில் பார்ப்பன காலிகளும் அவர்களை அண்டிப் பிழைக்கும் கூலிக்கு மாரடிக்கும் கூட்டங்களும் பேசிய பேச்சுகளும் காட்டுகின்றன. ஆனாலும் நாம் தமிழகத்தில் பிஜேபி  என்றுமே ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று ஏமார்ந்து இறுமாப்பில் இருந்து விடக்கூடாது. மயில் கண்ணீரை குடித்து இனப்பெருக்கம் செய்யும் நாள் இந்த பூமியில் உருவாகும் போது தமிழ்நாட்டின்  முதலமைச்சராக  தமிழிசையோ, இல்லை எச்சிக்கலை ராஜாவோ, இல்லை அவரின் அரசியல் வாரிசுகளான குட்டி எச்சிக்கலைளோ ஆகியிருப்பார்கள்.

- செ.கார்கி