1

ஒவ்வொரு தருணங்களிலும்
தடைகளைத் தாண்டிய
கொண்டாட்டங்கள்
கொண்டாடப்படுகின்றன
தடைகளுக்கான காரணங்கள்
ஒரு போதும் அசைபோட்டு
பார்க்கப்படவில்லை
விதிமுறைகள் தேவையின்றி
மனஓட்டம் பற்றி வெற்றிக்கான
கொண்டாட்டங்கள் நிகழ்கின்றன
வெற்றி கண்டவன் சித்தனாகவும்
தோல்வி கண்டவன் வேதாந்தியாகவும்
காலம் தோறும் கொண்டாடப்படுகின்றான்
இதில் விடுபட்ட மூன்றாம் வகைமை
மனிதனும் புவியில் சுற்றித் திரிகின்றான்

2

இரண்டு மாதங்களாக
என் அறை
நாள்காட்டியின்
காகிதங்கள்
கிழிக்கப்படாமல்
சுவரில்
அழகுப் பதுமையாக
காட்சியளிக்கிறது
யாருமே
அதன் அருகில்
செல்லாமல் கடந்து
போகின்றனர்
எப்பொழுதாவது
அறைக்குள் நுழையும்
காற்று மட்டுமே
காகிதங்களைத்
தொட்டு
இராசி பலன்களைப்
பார்த்துச் செல்கிறது

More articles by ப.சுடலைமணி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.