உங்களுக்கு முன்பாகவும்
சில ராஜ விசுவாசிகள்
புகழ் மொழிகளை
வேய்ங்குழல் கொண்டு
இசைத்தபடியே இருந்தார்கள்.
இன்று அவர்களையும்
ஒரு முறை
பார்த்து விடுங்கள்.
பிறகு சாவகாசமாக
கூழைக் கும்பிடுக்கான
புகழ் மொழிகளை
இரவு முழுவதும்
விழித்திருந்து தயாரியுங்கள்.

- ப. சுடலைமணி, திருநெல்வேலி

Pin It