நிமிடத்திற்கு நிமிடம்
உங்களுடைய நிறத்தை
மாற்றிக் கொண்டிருங்கள்.
நிமிடத்திற்கு நிமிடம்
உங்களுடைய உடல்மொழியை
மாற்றிக் கொண்டிருங்கள்.
நிமிடத்திற்கு நிமிடம்
உங்களுடைய ஒப்பனையை
மாற்றிக் கொண்டிருங்கள்.
நிமிடத்திற்கு நிமிடம்
உங்களுடைய பேச்சினை
மாற்றிக் கொண்டிருங்கள்.
நிமிடத்திற்கு நிமிடம்
உங்களுடைய பார்வையை
மாற்றிக் கொண்டிருங்கள்.
நான் இப்பொழுதும்
உங்கள் நண்பன்
என்பதையும்
நினைவுப்படுத்திக் கொண்டிருங்கள்.

- ப. சுடலைமணி, கோயம்புத்தூர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.