தங்க நிற மீன்களை கண்ணாடிக்குளத்தில்
சுமந்தலைகிறாள் சஹானா
அலையடிக்காத அதன் கரைகளில்
மோதி உடைகின்றன நீர்க்குமிழிகள்
உள்ளுக்குள் வேர்விட்ட மரம்
கிளைவெடித்த குளம் நிறைக்கிறது

சுற்றும் சக்கரத்தின் முனைகளில்
பெருக்கெடுக்கின்றன
நதியோடு எதிர்முனைப்பில் நீந்திய காலங்கள்
கடலாகிறது குடுவை நதியாடுகின்றன மீன்கள்
வீசியெறியும் உணவின் ஈர்ப்பில்
கரையுடைக்கின்றன

கரங்களை உயர்த்தி ரட்சிப்பின்
மீட்சியை அவற்றுக்கும் தருகிறாள் சஹானா

- கென்

Pin It