சமூக மேம்பாட்டில் கல்வி ஆற்றும்பணி அளவிடற்கரியது. மனித குலத்தின் பொருள் மற்றும் கருத்து ரீதியான உற்பத்திக்கு உறுதுணையாக இருப்பது மட்டுமின்றி ஏறக்குறைய தன்டித்தளமாகவும் இருப்பது கல்வி. மனித குலத்தின் நாகரிகம், மனிதனின் ரசனை, வனது கலாச்சார வாழ்வின் ழகுணர்வு, மேம்பாடு ஆகிய னைத்திலும் முக்கிய பங்காற்றுவது கல்வி. இத்தகைய கல்வி ஒரு காலத்தில் முழுக்க முழுக்க மதங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. மதங்கள் போதித்த கல்வியின் நோக்கமும் செயற்பரப்பும் மிகமிகக் குறுகியவையாக இருந்தன. கல்வி பெறுவோர் எண்ணிக்கையும் க்காலத்தில் சமூக உற்பத்தியின் தேவையை யொட்டி மிகுந்த வரம்பிற்குட்பட்டதாக இருந்தது.

அனைவருக்கும் கல்வி என்ற கண்ணோட்டத்தின் உதயம்

எந்திர தொழில் உற்பத்திமுறை தோன்றி வளர்ந்த காலத்தில் நிலவுடமை வர்க்கத்தை முதலாளிவர்க்கம் சமூக உற்பத்தியிலிருந்து இடம் பெயர்த்த வேளையில் அந்த புது உற்பத்தி முறையின் வளர்ச்சிக்கும், தன் ஒருங் கிணைப்பிற்கும் ஏதுவான பல செயல்கள் சமூகத்தின் மேல்கட்டுமானத்தில் நிகழ்த்தப்பட்டன. மிகக் குறுகிய வட்டத்தினருக்கே என்று நிலவுடைமைப் பொருளுற்பத்தி முறையில் இருந்த கல்வியின் வரம்பு எந்திர தொழில் உற்பத்தி முறையின் தேவை காரணமாக தகர்க்கப்பட்டு அது பரந்த அளவில் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.

மதச்சார்பற்ற கல்வியும் மறுமலர்ச்சியும் வடிவத்தில் மட்டுமல்ல தன் உள்ளடக்கத்திலும் கல்வியில் மகத்தான மாற்றங்கள் ஏற்பட்டன. மத நூல்களை கற்பது மட்டுமே கல்வி என்ற அடிப்படையில் இருந்த கல்வியின் உள்ளடக்கம் தலைகீழ் மாற்றம் கண்டது. கல்வியின் புதுப்பார்வை மற்றும் போக்கில் மதக்கருத்துக்களும், மதக் கோட்பாடுகளும் கேள்விக்குரியவையாக்கப்பட்டன. மதத்தை கல்வியிலிருந்து பிரிப்பது மிகவும் அத்தியாவசிய தேவையாயிற்று. எதையும் பகுத்தாய்வின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டுமே தவிர நம்பிக்கை அடிப்படையில் முடிவு செய்யக்கூடாது என்ற உணர்வு மேலோங்கியது.

நமது நாட்டில் மிகத் தாமதமாக அன்னியரால் எந்திரத் தொழிலுற்பத்தி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதனையொட்டி றிமுகமான மேலை நாட்டுக் கல்விமுறை நமது நாட்டின் சமூக வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் மாபெரும் மறுமலர்ச்சியை தோற்றுவித்தது. நம்மை ஆண்ட வெள்ளயர் அவர்களின் தேவைகளுக்காக அவர்களது நாடுகளில் ஏற்கனவே றிமுகமாகி நிலைபெற்றுவிட்ட இந்தக் கல்வி முறையை ஒரு சிறிய அளவு நமது நாட்டிலும் அமல் செய்ய விரும்பினர். ஆனால் அவர்கள் விரும்பியதற்கு விரோதமாக இந்திய சமூகத்தின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் கருதிய நமது நாட்டின் சான்றோர்களின் விருப்பம் இருந்தது.

மேலை நாட்டுக் கல்வியைப் பெற்ற அவர்கள் சமூக வளர்ச்சியில் தன் பங்கையும் நன்கு உணர்ந்தனர். அதனால் அதன் மிகவேகமான பரவலுக்கு எதையெல்லாம் செய்யமுடியுமோ தையெல்லாம் செய்யத்தொடங்கினர். இன்றிருப்பது போல் கல்வி அது சார்ந்த கல்வித் துறையால் மட்டும் பரப்பப்படக்கூடிய ஒன்று என்ற நிலை அன்று இருக்கவில்லை. மாறாக அது ஒரு மகத்தான சமூக இயக்கமாக அன்று மலர்ந்தது. சுவை புதிது, சொல் புதிது, பொருள்புதிது என்ற போக்கு எங்கும் பரவி அனைத்து பொருள் மற்றும் கருத்து உற்பத்தி துறைகளிலும் மக்களின் அக, புற வாழ்க்கையிலும் ஒரு மகத்தான மறுமலர்ச்சியை அது கொண்டு வந்தது.

எந்தவொரு சமூகம் இத்தகைய போக்கினை கல்வி விஷயத்தில் கொண்டிருக்கவில்லையோ அந்த சமூகம் தேங்கிய குட்டையைப் போல் நிச்சயமாக ஆகிவிடும். எந்த சமூக மைப்புகளும், இயக்கங்களும் இத்தகைய போக்கிற்கு உதவியாகவும், உறுதுணையாகவும் இருக்க திராணியற்றவைகளாக உள்ளனவோ அவை வடிவத்தில் பெரியவையாக, வலிமை பொருந்தியனவாக தோன்றினாலும் அவற்றின் உள்ளடக்கத்தில் செல்லரிக்கும் போக்கு தலைதூக்கிவிடும்.

இந்த விஷயங்களயெல்லாம் சிந்திப்பதும், சீர்தூக்கிப்பார்ப்பதும் நமக்கு இன்று வசியமாகி இருப்பதற்கான காரணம், இத்தகைய கல்வியை புகட்டுவதில் ஒரு மகத்தான பாரம்பரியத்தையும், கீர்த்திமிக்க வரலாற்றையும் கொண்ட மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஏற்பட்டுள்ள வருந்தற்குரிய நிகழ்ச்சிகளும் வைகுறித்த சமூக இயக்கங்களின் சிரத்தையற்ற போக்குமேயாகும்.
வகுப்பறைக்கல்வி மட்டுமே கல்வியல்ல இன்று க்கல்லூரியில் வழக்கமாக நடைபெறும் வகுப்பறைக் கல்வி கற்பித்தல், மேலோட்டமாக நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் றிவியல் கருத்தரங்குகள், கலாச்சார நிகழ்வுகள் போன்றவை அறவே முடங்கிப் போயுள்ளன.

கல்வி வளர்ச்சியில் வகுப்பறைக் கல்வியோடு மிக முக்கிய பங்கினை ஆற்றக்கூடிய இந்நிகழ்வுகள் முடங்கியிருப் பதற்குக் காரணம், இவற்றிற்கான நிதியினை எவ்வாறு பெறுவது, நிதி வழங்கும் திகாரம் யார் கையில் உள்ளது; மதுரை திருமண்டிலப் பேராயர் ஆசிரின் ஆசீர்வாதம் பெற்ற பொருளாளரிடம் உள்ளதா அல்லது கல்லூரி முதல்வரால் நியகமிக்கப்பட்ட பொருளாளரிடம் உள்ளதா என்ற குழப்பமும், கேள்வியும் கல்விப் பணியினை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு முடக்கிப் போட்டுள்ளது.

அத்துடன் அக்கல்லூரியின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு காவல்துறை வளாகத்திற்குள் நுழைந்து மாணவர்களை டிக்கும், துன்புறுத்தும் வலநிலை ஏற்பட்டுள்ளது. காவல்துறையின் உதவியுடன் முதல்வர் லுவலகத்தின் பூட்டுகள் உடைக்கப்படுகின்றன. வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய சக்திகள் பதவி நாற்காலிகளில் மரவைக்கப்படுகின்றனர். இவர்களுடைய செயல்களுக்கு மாணவர், ஆசிரியர் ஒத்துழைப்பு இல்லாததால் காலவரையின்றி கல்லூரி மூடப்படுகின்றது. அறிவு வலம் வரவேண்டிய இடத்தில் ஆயுதம் தாங்கிய குண்டர்கள் வலம் வருகின்றனர். கல்வி நடமாடவேண்டிய இடத்தில் காவல் துறையினர் காலிகளுக்கு ஆதரவாக நடமாடிக் கொண்டுள்ளனர்.

அறிவு அனுமதிவேண்டி கல்லூரி வளாகத்தின் வாயிற்கதவருகில் நிற்க வைக்கப்படுகிறது. காலித்தனம் கல்லூரி வளாகத்திற்குள் பீடு நடை போடுகிறது. அங்கிகள் அயோக்கியர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவையாக ஆகிவிட்டால் என்ன நடக்குமோ அவை அனைத்தும் தங்கு தடையின்றி நடைபெற்றுக் கொண்டுள்ளன.

ஆசிரியர், மாணவர், அரசியல் அமைப்புகளின் பாராமுகம்

பரந்த அளவில் மதுரையின் சாதாரண மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வும், கவலையும் இல்லாதிருந்தால் அதனை வரும் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில் சாதாரண மக்களிடம் இத்தகைய விழிப்புணர்வை எதிர்பார்க்க முடியாது. ஆனால் கல்விப் பணியில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும், அவர்களது மைப்புகளுக்குமேகூட இது குறித்த விழிப்புணர்வும், கவலையும் இல்லையென்றால் அதை என்னவென்று சொல்வது? அடுத்து கல்வியினால் பலன் முழுவதையும் பெறக்கூடியவர்கள் மாணவர்கள். அவர்களுக்கும் உரிய விதத்தில் இதுகுறித்த ஆதங்கமும், கவலையும், இந்த நிலையை மாற்ற ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உந்துதலும் இல்லையென்றால் அதை எப்படிப் புரிந்து கொள்வது?

இவை அனைத்திற்கும் மேலாக ‘நீங்கள் அனைவரும், உங்களது தனி விஷயங்களில் பெரும்பான்மை நேரத்தை செலவிட்டுவிட்டு பொது விஷயங்களை பகுதி நேரமாக பார்க்கக் கூடியவர்கள்; ஆனால் நாங்களா உங்களப் போலின்றி முழு நேரமும் பொதுவிஷயங்களில் எங்களது கவனம் முழுவதையும் செலுத்துவதற்காகவே உள்ளவர்கள்’ என்றிருக்க வேண்டியவர்களான ரசியல்வாதிகள் மற்றும் அரசியல் அமைப்புகள் இதனை ஏறெடுத்துப் பார்க்கவில்லை என்றால் அதனை எப்படி ஜீரணிப்பது?

ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்குப் படுவது அமைப்புகளுக்குப் படவில்லை

ஆசிரியர்களும், ஆசிரியர் மைப்புகளும் இது கல்லூரியில் இரு குழுக்களுக்கு இடையில் நிகழும் சண்டை, எனவே ங்குள்ளவர்கள் இதில் ஈடுபட்டு ஒரு முடிவுக்கு வரட்டும். தன் பின்னர் தேவைப்பட்டால் நமது மாநில மத்திய அமைப்புகள் தலையிடலாம் என்ற பாணியில் செயலிழந்தல்ல, செயல் குறைந்து நிற்பதே நமது கண்களில் பளிச்செனப்படுகிறது.

உண்மையிலேயே இரு குழுக்களுக்கு இடையிலான பிரச்னை இது என்றால் ஊரறிந்த கல்விமான்களும், ஓய்வுபெற்ற பேராசிரியர்களும் இதில் தலையிட்டுச் செயலாற்றி வருவதன் தேவையென்ன? கல்லூரி முதல்வருக்கு ஆதரவாக அவர்கள் நிற்பதால் எந்தபுது மகுடம் அவர்களது தலையை இனிமேல் லங்கரிக்கப்போகிறது? இதை ஆசிரியர் மைப்புகள் எண்ணிப்பார்க்க வேண்டாமா? ஓய்வு பெற்ற ஆசிரியர்களும், கல்விமான்களும் குழுச்சண்டைகளில் பங்கேற்க வேண்டிய அவசியம் என்ன? கல்வியையும், கல்விநிலையங்களயும் ச்சுறுத்திக் கொண்டிருக்கும் வியாபார மயம் இதில் சம்பந்தப்பட்டு, அது கல்விக்கெதிரான மிகப் பெரிய பாயத்தை முன்னிறுத்தியுள்ளதால் தானே அவர்கள் தலையிடுகிறார்கள். அவர்களுக்கிருக்கும் தொலைநோக்குப் பார்வை ஆசிரியர் மைப்புகளுக்கு இருக்க வேண்டாமா?

மாணவப் பருவமும் அதன் மகத்துவமும்

உலகம் முழுவதுமே கல்லூரிப்படிப்பு என்ற அளவிற்கு வந்துவிட்ட மாணவர் சமூகத்திற்கென்று ஒரு தனித்தன்மை உண்டு. ஒரு மனிதன் அவன் சிறுவனாய் இருக்கும்போது இவன் இன்னும் நிறைய வளர வேண்டியவன். அவனுக்கு வாழ்க்கை குறித்த அறிவும், அனுபவமும் போதாது. எனவே அவன் சமூக நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டியதில்லை என்ற கருத்து முன் வைக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதைப் போல் ஒரு நடுவயதில் இருக்கக்கூடிய ஒருவருக்கு குடும்பத்தளகளும், சுமைகளும் அவரை எதுவும் செய்ய முடியாமல் இழுத்துப்பிடித்து கட்டுப்படுத்தி விடுகின்றன. அதைப்போல் பொருளாதாரம் போன்ற பல்வேறு நிர்ப்பந்த நிலைகளால் றிவுபெற முடியாதவர்களுக்கும் பல தடைகள் சமூக நிகழ்வுகளில் பங்கேற்கும் போது உள்ளன. இவனுக்கு என்ன தெரியும் ஏதோ விண்ணிற்கும், மண்ணிற்கும் எகிறிக்குதிக்கிறான் என்ற எண்ணப் போக்கு கல்வி மறுக்கப்பட்டவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது தவிர்க்கமுடியாமல் பலரின் மனதில் உதயமாகவே செய்கிறது.

ஆனால் இத்தகைய கட்டுப்பாடுகள், வரம்புகள் எதுவும் இல்லாமல், நீதிக்காகவும் நியாயத்திற்காகவும் தலைநிமிர்ந்து றிவாயுதம் தரித்த வீரமும், வயதும் வாலிபமும் தந்த மனோதிடமும் குன்றாத நிலையில் ஒரு மனிதன் போராட முடிவது அவனது இந்த மாணவப் பருவத்தில்தான். ஒரு சரியான, அதுவும் அவன் சார்ந்த விஷயத்தைத் தெரிந்து கொண்டவன் கருத்து ரீதியாக தன் முழுப்பரிமாணத்தையும் உணர்ந்து கொள்ள முடிந்தவன் என்ற நிலையில் உள்ளவன் அவ்விஷயத்தில் செயலற்றிருப்பது உண்மையில் ஒருவகை முடங்கிப்போனதனமே.

சமூக விழிப்புணர்வும், தன் அவிளவான இயக்கங்களும் மங்கிப் போனதால் ஆளும் வர்க்கமும், தன் நலனுக்காக பாடுபடும் அரசு எந்திரமும் மக்களுக்கு மிகக் குறைந்த செலவில் கல்வி புகட்டவேண்டியது சமூக கடமை என்ற கருத்தை துடைத்தெறிந்து இன்று கல்வியை ஒரு தொழிலாக, கல்வி நிலையங்களை இலாப நோக்குடன் தொழில் நடத்தும் நிறுவனங்களாக ஆக்கிவிட்டன.

இந்த நிலையில் பெற்றோர் விற்காததை விற்றும், தங்களது தவிர்க்கவே முடியாத டிப்படைச் செலவினங்களக்கூட தவிர்த்தும் தங்களது பிள்ளைகளப் பெரும்பணம் செலவழித்து பொறுப்புணர்வோடு படிக்க வைக்கிறார்கள். அவ்வாறு செய்வதில் வேறொரு எதிர்மறை சூழ்நிலையும் தற்போது தோன்றிவளர்ந்து வருகிறது. அதாவது அவர்கள் தங்களது பிள்ளைகள் பாடப்புத்தகங்களை நெட்டுருப்போடும் கருவிகளாக இருந்து இன்றுள்ள சூழ்நிலையில் கிடைக்க வாய்ப்பிருக்கும் ஓரளவு நல்ல சம்பளம் தரும் வேலைகளை பெற மட்டும் முயலவேண்டும்; வேறெதிலும் அவர்களது கவனம் செல்லக்கூடாது என்று எண்ணுகிறார்கள். பணச் செலவு என்ற கடிவாளம் மாணவர்கள் என்ற குதிரைகளை அவர்கள் சார்ந்துள்ள கல்வித்துறையின் வலங்களக்கூட பார்க்கவொண்ணாத அவர்களாக ஆக்கியுள்ளது.

மாணவர்களிடையே மங்கிவரும் சமூக சிரத்தை

இதுபோன்ற போக்குகளின் விளவாக சமூகசிரத்தை மாணவர்களிடம் மங்கிப் போயுள்ளது. ஓரளவு கல்லூரிகளுக்குள் பேரவைத் தேர்தல்களை மையமாக வைத்து இருந்த மாணவர் இயக்கப் போக்குகளும் அவ்வப்போது அதில் தலைகாட்டும் வன்முறை போன்ற அம்சங்கள் காரணங்களாகக் காட்டப்பட்டு அரசாலும் கல்லூரி நிர்வாகங்களாலும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு விட்டன. பல கல்வி நிறுவனங்களில் மாணவர் தலைவர்கள் கல்லூரி நிர்வாகங்களால் பொறுக்கி எடுத்து நியமிக்கப்படுகின்றனர். இந்தப் போக்கும் மாணவர் இயக்கத்தில் ஒரு மந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் மத்தியில் எந்த விஷயத்தில் மந்த நிலை இருந்தாலும் கல்வி விஷயத்தில், அதாவது கல்வியுடன் நேரடி தொடர்பற்றவர்கள் கல்வி நிலையங்களக் கையகப்படுத்த முயலும் போது கூட மந்த நிலை இருப்பது எப்படி சரியானதாக இருக்கும்? எத்தனையோ நிகரற்ற கல்விமான்கள் நடைபயின்ற, சமூகத்திற்கு எத்தனையோ பயன்மிக்க செயல்களை ஆற்றியவர்கள் உலவிய அந்த வளாகமே கட்டுக்குத்தகைக்கு விடப்படும் அவல நிலைக்கு ஆளாகியுள்ளது கூட அந்த மந்த நிலையைப் போக்கவில்லை என்றால் அது நம்மிடமுள்ள உயிரோட்டத்தையே படிப்படியாகப் போக்கிவிடும் அல்லவா?

அதைப் போல் 2.08.2008 அன்று பேராசிரியர் வின்பிரட் அவர்களின் தலைமையில் மதுரை மேலமாசி வீதி வடக்குமாசிவீதி சந்திப்பில் நடைபெற்ற உண்ணாவிரத நிகழ்ச்சியின் போது பெரிய அரசியல் கட்சிகள் என்று றியப்பட்ட அரசியல் கட்சிகளின் பங்கேற்பு இல்லாத நிலையே நிலவியது. ஜனதா தளத்தைச் சேர்ந்த திரு.ஜான் மோசஸ் அவர்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு. சொக்கலிங்கம் அவர்களும் மட்டுமே அரசியல் கட்சிகளிலிருந்து கலந்துகொண்டனர். குறிப்பாக இடதுசாரி கட்சிகள் அதில் பங்கேற்காத வருந்தத்தக்க காட்சியே பங்கேற்றோர் மற்றும் பார்த்தோரின் கண்களை உறுத்தியது.

வாக்கு வங்கி அரசியல் இவ்விஷயத்தில் ஒரு மாரீசமானே

அதாவது இப்போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக நிற்பவர் ஒரு மதத்தின் தலைவர்தாவது திருமண்டிலப் பேராயர், எனவே அவரை எதிர்த்த போராட்டத்தில் நாம் கலந்து கொண்டால் கிறித்தவ சிறுபான்மை மக்களை அவர் நமக்கெதிராகத் திருப்பிவிட்டாலும் விட்டுவிடுவார்; அதனால் அச்சிறுபான்மை மக்களின் வாக்குகளை வரவிருக்கும் தேர்தல்களில் நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும் ஏற்படும் என்பது ஒருவேள இவர்களின் பாராமுகப் போக்கிற்கான காரணமாக இருக்கலாம்.

முதற்கண் அப்படிப்பட்ட கண்ணோட்டத்தின் அடிப்படையில் செயல்படுவது கோட்பாடற்ற செயல் மட்டுமல்ல; அப்பட்டமான சந்தர்ப்பவாதச் செயலும்கூட. ஆனால் தையும் தாண்டி நாம் பார்க்க வேண்டிய வேறொரு விஷயமும் உள்ளது. இந்த விஷயத்தில் பரந்துபட்ட சி.எஸ்.ஐ கிறித்தவ மக்களின் உண்மையான மனநிலையும் கூடப் பெரிதும் பேராயருக்கு எதிராக உள்ளதே தவிர ஆதரவாக இல்லை என்பதே அது. இவரை எதிர்த்தால் பதவி உயர்வு போன்ற சலுகைகளை மறுத்து விடுவாரோ அல்லது தூரம் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்துவிடுவாரோ என்ற அச்சத்தில் மதத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இவருக்கு ஆதரவாக இவரது நிர்ப்பந்தத்தின் பேரில் சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டுகிறார்கள். ஆனால் அவர்களிலும் மிகப் பெரும்பாலோர் அடிப்படையான மத உணர்வுக்குப் புறம்பான இவரது செயல்களால் மனம் புழுங்கிக் கொண்டேயுள்ளனர். எனவே அவர்களின் பார்வையில்கூட இவ்விஷயக்கத்தில் கலந்து கொள்ளாத அரசியல் மைப்புகளச் சேர்ந்தவர்கள் சரியானவர்களாகப் படமாட்டார்கள் என்பதே உண்மை.

மகத்தான இயக்கங்கள் கல்வியைக் காப்பாற்ற முடியும்

இவ்விஷயத்தில் அரசு நிர்வாகம் நீதிமன்றங்கள் போன்றவற்றை நம்பியே தற்போது ஆசிரியர் பெருமக்களும், கல்விமான்களும் பெரும்பாலும் செயல்பட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் இவை தற்காலிக நிவாரணத்தைத் தர முடியுமே தவிர முறையான எந்த நியாயத்தையும் வழங்க முடியாது. ஏனெனில் நமது மைப்பில் நியாயமானவை யெல்லாம் சட்டப்பூர்வமானவையில்லை. அதைப்போல் சட்டப்பூர்வமானவையெல்லாம் நியாயமானவையும் இல்லை. எனவே இதில் முறையான தீர்வைத்தரவல்லது மாணவர்மக்கள் இயக்கங்கள.

கல்விமான்கள், அவர்களின் அமைப்புகள், மாணவர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் உண்மையாகவே சமூக நலனுக்காக இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் உட்பட்ட பொது அமைப்புகள் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட மாபெரும் மக்கள் இயக்கமே கல்வியின் சுயேச்சைத் தன்மையையும், கல்விமான்களை கல்வி நிறுவனங்களை நிர்வகிக்க வேண்டும், மதம் கல்வியிலிருந்து முற்றாகப் பிரிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைகளில் நடைபெறும் அமெரிக்கன் கல்லூரிப் போராட்டத்தை வழிநடத்தி முறையான தீர்விற்கு அதனை இட்டுச் செல்லமுடியும். மக்கள் இயக்கங்கள் மூலமாக மலர்ந்ததே கல்வி. அதனை மக்கள் இயக்கம்தான் காப்பாற்ற முடியும். இதில் உரிய பங்காற்றாது படித்தவர்கள் கூட தன்னலவாதப் போக்கில் செயல்பட்டு ஒன்றும் செய்யாதிருந்தால் அவர்களப் பார்த்து நாம் வருத்தத்துடன் சொல்லக் கடமைப்பட்டுள்ளாம். ‘வரலாறு உங்களை மன்னிக்காது’, என்று.

வாசகர் கருத்துக்கள்
Jeevitha
2009-01-26 01:07:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Madurai American College is a great educational institute, now a time Bishup is going in wrong way

Pin It