அமெரிக்கரின் ஆயுத விற்பனைச் சந்தைகளான வளரும் ஏழை நாடுகளும், வளர்ந்த நாடுகளும் எதிரிலுள்ள பேராபத்தை உணர வேண்டும்.
முதலாம் உலகப் போர் 1914-1918இல் நடை பெற்றது.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு அடிமைப்பட் டிருந்த இந்தியர்கள் போர் நடக்கிற நாடுகளுக்குப் போய்ப் போரிட்டு மாண்டார்கள்; இந்திய மக்கள் வெள்ளையர்கள் கேட்ட எல்லா உதவிகளையும் செய்ய நேர்ந்தது.
அந்தப் போரினால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டு வதற்கு முன்னர், 1939-1945இல், இரண்டாம் உலகப் போர் வெடித்தது.
1. “யூதர்கள் செர்மானியரைச் சுரண்டுகிறார்கள். அவர்களை அழித்து ஒழிக்க செர்மானியர்கள் போரிட வேண்டும்.”
2. “உலகத்திலேயே செர்மானியர்கள் தான் தூய ஆரிய இரத்தம் உள்ளவர்கள். செர்மானியர்கள் உலகத்தை ஆளப் பிறந்தவர்கள்” என ஆணவத் தோடு முழங்கினான், அடால்ஃப் இட்லர்.
இரஷ்ய நாட்டில், 1917இல் சோசலிசப் புரட்சி வெற்றி பெற்று, 1924க்குள் வி.இ. லெனின் அவர்களால், தேச உடைமைகள் சமூக உடைமைகளாக ஆக்கப்பட்டன; தனியார் நில உடைமைகளும், மத நிறுவனங்களின் உடைமைகளும் சமூக உடைமைகளாக ஆக்கப்பட்டன.
1924இல் லெனின் மறைந்தார்.
1924இல் தொடங்கி 1936க்குள் அனைவர்க்கும் இலவசக் கல்வி தரப்பட ஜோசஃப் ஸ்டாலின் வழி வகுத்தார். அவரவர் தாய்மொழியில் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது.
உழைப்புக்கு ஏற்ற ஊதியம், அடிப்படைத் தேவைக்கு ஏற்ற வசதிகள் எல்லோருக்கும் கிடைக்க வழிகாணப்பட்டது.
இன்னொரு பக்கம் - அமெரிக்கா, முதலாளித்துவத் துக்கும், தனி உடைமையாளர்கள் பாதுகாப்புக்கும் வழிவகுத்தது.
ஆங்கிலேய ஏகாதிபத்தியம், உலகத்தின் மூன்றில் ஒரு பங்கு பரப்பிலுள்ள கண்டங்களையும் நாடுகளை யும் தன் ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டு, எல்லா நாடுகளையும் சுரண்டி பிரிட்டிஷ் குடிமக்களை வளமான வாழ்க்கை உள்ளவர்களாக ஆக்கிட எல்லாம் செய்தது.
இந்தியத் துணைக்கண்டம், ஆப்பிரிக்கக் கண்டம், ஆஸ்திரேலியக் கண்டம் எல்லாம் பிரிட்டிஷாரின் ஆட்சி ஆதிக்கத்தின்கீழ் அடிமை நாடுகள் ஆக்கப்பட்டன.
இவ்வளவு ஆதிக்கங்களையும் எதிர்த்து நின்றான் அடால்ஃப் இட்லர். 1941இல் இங்கிலாந்து செர்மானிய ரால் ஆக்கிரமிக்கப்படும் சூழல் உருவாகியது.
சோவியத்து நாட்டைக் கைப்பற்ற 1941இல் எத் தனித்த இட்லர், மளமளவென முன்னேறி, லெனின் கிராடைக் கைப்பற்ற அவன் திட்டமிட்டான்.
மூன்று பெரிய ஆதிக்க நாடுகளாக விளங்கிய அமெரிக்கா, பிரிட்டன், சோவியத்து இரஷ்யா இவை கூட்டணி அமைத்து எதிர்த்தாலன்றி, இட்லரின் முன் னேற்றத்தைத் தடுக்க முடியாது என்கிற அச்சம் ஊட்டும் நிலை தோன்றியது.
அப்போதுதான் சோவியத்துத் தலைவர் ஜோசஃப் ஸ்டாலின், பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் ஆகியோர் ஓரிடத்தில் கூடி, இட்லரைத் தோற்கடிக்க வியூகம் வகுத்தனர். அவ்வியூகம் வெற்றி பெற்றது.
ஆனாலும் 1953இல் சோவியத்து அதிபர் ஸ்டாலின் மறைந்த பிறகு, 35 ஆண்டுகளில், சோவியத்து சோசலிச அமைப்பு நிலை குலைந்தது.
மேலே சொன்ன முத்தரப்பு நாடுகளின் ஒரு ஒப்பந்தப்படி, பிரிட்டன் தன் ஆதிக்கத்திலிருந்த எல்லாக் குடியேற்ற நாடுகளுக்கும் அரசியல் விடுதலை தர நேர்ந்தது.
இந்தியா 1946 ஆகத்து 15இல் பிரிட்டிஷாரிட மிருந்து விடுதலை பெற்றது. பிரிட்டிஷார், வேண்டுமென்றே இந்தியா - பாக்கித்தான் எல்லைக்கோடு, இந்தியா-காஷ்மீர் எல்லைக்கோடு இவற்றை உறுதிப்படுத்தாமலே வெளியேறினர்.
விடுதலை பெற்ற இந்தியாவில் 68 ஆண்டுகளுக்குப் பிறகும் எல்லோருக்கும் ஒத்த கல்வி, எல்லோருக்கும் நல்ல குடிநீர், எல்லோருக்கும் அடிப்படை மருத்துவம், எல்லோருக்கும் குறைந்த அளவு வாழ்க்கைக்கான வசதிகள் இவற்றைச் செய்வதற்கான எதை யும் செய்யவில்லை.
மக்கள் தொகை 15 விழுக்காடாக உள்ள மேல்சாதிக் காரர்களும், 10 விழுக்காடாக உள்ள பெருநில உடை மைக்காரர்களும், 2 விழுக்காடு பேராக உள்ள பெருந் தொழிலதிபர்களும் இந்தியாவிலுள்ள 105 கோடி கீழ்ச்சாதி வேளாண் மக்களை அடக்கி ஒடுக்கிச் சுரண்டி - அவர்களும், உயர் அதிகார வகுப்பினரும், படைத் துறையினரும், உயர் நீதித் துறையினரும் மக்களின் வரிப்பணத்தில் உயர் வாழ்வு பெற்றவர்களாக இருக்க வழிவகுத்துக் கொண்டனர்.
இன்று இந்திய அரசு நிருவாகப் பணிகளில் 50 இலட்சம் பேர் உள்ளனர்; ஓய்வூதியப் பணியினர் 60 இலட்சம் பேர் உள்ளனர். மாநிலங்களின் அரசு நிருவாகப் பணிகளில் ஒரு கோடிப் பேரும், மாநில ஓய்வூதியர்கள் ஒரு கோடிப் பேரும் உள்ளனர்.
இவர்களுக்குச் சமமான எண்ணிக்கையில் 113 இலட்சம் பேர் படைத்துறையில் பணிபுரிகின்றனர். இவர்களுள் ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பாதுகாப்புக்கு மட்டும் 7 முதல் 8 இலட்சம் போர் வீரர்கள் பயன் படுகின்றனர். மேலே கண்ட இவர்கள் குறைந்த அளவு வாழ்க் கை வசதி பெற்றவர்கள்.
இந்த ஈனநிலைக்கு என்ன காரணம்?
1965 இந்தியா - பாக்கித்தான் போருக்குப் பிறகு, இந்தியாவுக்கான வரவு-செலவில், குறிப்பிட்ட பகுதி இராணுவச் செலவுக்கும், ஆயுதங்கள் உற்பத்திக்கும் அயல்நாடுகளிலிருந்து ஆயுதங்களும், வானூர்திகளும், போர்க் கப்பல்களும் வாங்குவதற்கும் - கடந்த 50 ஆண்டுகளாக, இந்திய உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பின் (GDP) கணிசமான பகுதி செலவிடப்படுகிறது.
இது, வளர்ந்த பணக்கார நாடுகளைப் பின்பற்றி யே செய்யப்படுகிறது. அந்த நாடுகள் தம் மக்களுக்குக் கல்வி, வைத்தியம், வேளாண்மைக்குப் பெரிய நிதி உதவி இவற்றைப் போதிய அளவில் செய்துவிட்டு, உலக இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க வேண்டியும்; தம் ஆயுத உற்பத்தி நுட்பம், திறமை இவற்றைக் கொண்டு ஆயுதங்களை அதிக அளவில் உற்பத்தி செய்து வளரும் ஏழை நாடுகளுக்கு விற்றுப் பணம் சம்பாதிக்கவும்; ஆயுதங்களைக் கொண்டு - மத ஆதிக்கம், பொருளாதார ஆதிக்கம் இவற்றை நிலை நாட்டிக் கொள்ள வளரும் நாடுகள் தங்களிடையே போரிட்டுக் கொண்டு பாழாகவும் - இருந்த இடத்தில் இருந்து கொண்டே, அமெரிக்கர் வழி செய்கிறார்கள்.
இதை, கடந்த பல பத்தாண்டுகளாக அமெரிக்கா செய்கிறது.
அமெரிக்காவில் எந்தக் கட்சி - எந்த இனத்து அதிபர் ஆட்சிக்கு வந்தாலும் - உலக ஏழை நாடுகளிடம் ஆயு தங்களை விற்று, அவர்களைக் கடன்காரர்களாகவும், சுய உற்பத்தித் திறன் பெறாதவர்களாகவும் வைப்பதில் தவறுவதே இல்லை.
இன்று, அமெரிக்கா என்ன செய்கிறது?
2014இல்,
1. அமெரிக்கா செய்த பாதுகாப்புக்கான (இராணுவத்துக்குரிய) செலவு 609.9 மில்லியன் டாலர்
2. சீனா 216.4 மில்லியன் டாலர்
3. இரஷ்யா 84.5 மில்லியன் டாலர்
4. சவுதி அரேபியா 80.8 மில்லியன் டாலர்
5. பிரான்சு 62.3 மில்லியன் டாலர்
6. பிரிட்டன் 60.5 மில்லியன் டாலர்
7. இந்தியா 50.0 மில்லியன் டாலர்
8. செர்மனி 46.5 மில்லியன் டாலர்
9. சப்பான் 45.8 மில்லியன் டாலர்
10. தென்கொரியா 36.7 மில்லியன் டாலர்
உலகத்தில் உள்ள 220 நாடுகளில், மேலே கண்ட 10 நாடுகள் மட்டுமே இராணுவத்துக்காக அதிகம் செலவு செய்யும் நாடுகள்.
அமெரிக்காவிலுள்ள இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி மற்றும் ஆயுத விற்பனை செய்வோர் எந்தப் பெரிய அளவில் விற்பனை செய்கிறார்கள், தெரியுமா?
உலகில் 140 நாடுகளின் தேசிய உள்நாட்டு உற் பத்தி மதிப்பு (GDP))த் தொகை எவ்வளவு இருக்குமோ, அந்த அளவுக்கு அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்கள் ஆயுதங்களை விற்கிறார்கள்.
அமெரிக்காவில் உள்ள லாக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin) என்கிற ஒரு ஆயுத வியாபாரக் குழுமத்தார் மட்டும் - மேலே கண்ட 10 நாடுகளில் அமெரிக்கா தவிர்த்த மீதி, 9 நாடுகளின் இராணுவச் செலவும் தவிர்த்து - மீதியுள்ள நாடுகளின் இராணுவச் செலவு எவ்வளவு ஆகுமோ, அவ்வளவு தொகைக்கு ஆயுதங்களை விற்கிறார்கள்.
அமெரிக்காவில் உள்ள 43 ஆயுத விற்பனைக் குழுமத்தார் மட்டும் - ஆயுத விற்பனையில் முதலாவ தான 100 இடத்தைப் பிடித்துள்ள குழுமங்களைக் காட்டிலும் - அதிக மதிப்புள்ள ஆயுத விற்பனையைப் பிடித்துள்ளன. (“Times of India”, 30.3.2016, Chennai)).
இதன் பொருள் என்ன? உலக நாடுகளில் எங்கும் அமைதி நிலவக்கூடாது.