தமிழ்நாட்டு அரசியல் களங்களின் தொகுப்பு:
- பாஜக தூண்ட முயற்சித்த கலவரங்களும்; உறுதுணையாக இருந்த அதிமுகவும்.
- தஞ்சாவூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம்; மதமாற்றம் காரணமல்ல சிபிஅய் அறிக்கை:
- அதே 2022 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் அமைந்துள்ள ஒரு கிறுத்துவ பள்ளியில் பயின்ற மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
- அந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது, “மத மாற்றம் தான் காரணம்” என்று பேசியது போல ஒரு காணொளி தஞ்சாவூர் மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவரால் பகிரப்பட்டது. அந்தக் காணொளியை பாஜக அண்ணாமலை பகிர்ந்து பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். காவல்துறை விசாரணையில் அந்த காணொளி வதந்தி என கண்டறியப்பட்டது. அண்ணாமலை பள்ளி நிர்வாகத்தை குறி வைத்ததற்கான காரணம் பள்ளி நிர்வாகம் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தது.
- தமிழ்நாடு அரசு மிகக் கவனமாக கையாண்டதால் மதக்கலவரம் தடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தை வைத்து, பாஜக-வின் மாணவர் அமைப்பான ABVP சார்பில் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் வீட்டையும் முற்றுகையிட முயன்றனர். .
- பாஜகவினர் இந்த வழக்கை சி.பி.அய் விசாரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். நீதிமன்றம் வழக்கை சி.பி.அய்-வசம் ஒப்படைத்தது. தமிழ்நாடு அரசைக் கண்டித்து சி.பி.அய்-க்கு உத்தரவிட்டவர் சுவாமிநாதன். வழக்கை விசாரித்த சி.பி.அய் “மதமாற்றத்தால் தற்கொலை நடைபெறவில்லை” என்று அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
- மேலும் அந்த பள்ளியில் 2010-ம் ஆண்டு முதல் பயின்ற மாணவர்களின் மாற்றுச் சான்றிதழை சரிபார்த்ததில் மத மாற்றம் நிகழ்ந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று சி.பி.அய் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
- லாவண்யா மட்டுமல்ல அந்தப் பள்ளியில் பயின்ற எவருமே இதுவரை மதமாற்றம் செய்யப்படவில்லை. கிட்டத்தட்ட 160 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் பள்ளி. பாஜக சார்பில் உண்மை அறியும் குழுவும், தேசிய குழந்தைகள் நல ஆணையமும் விசாரணை நடத்த தமிழ்நாட்டிற்கு வந்தன.
- மைக்கேல்பட்டியைச் சேர்ந்த ஊர் மக்கள், “ஒற்றுமையாக இருக்கும் எங்கள் ஊருக்குள் எந்தக் குழுவும் வரக் கூடாது என்றனர்.” என்று பாஜகவை சிறிது கூட கண்டிக்காமல் பாஜகவின் இந்த மதக்கலவரத்திற்கான முயற்சியை அமைதியாக வேடிக்கை பார்த்தது அதிமுக.
- 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை ஒட்டி யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்த அண்ணாமலை, ``தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்தவ மிஷனரி தான் முதலில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த அவதூறு பேச்சுக்கு சமூக ஆர்வலர் பியூஷ் மனூஷ் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கில், நீதிமன்றம் ``அண்ணாமலையின் பேச்சில் மதவெறுப்பு உள்ளது” என்பதை உறுதி செய்தது.
- ``சமுதாயத்தை பிளவுபடுத்த வேண்டும் என்ற உள்நோக்கம் அண்ணாமலைக்கு இருந்துள்ளதற்கு முகாந்திரம் உள்ளது. வன்முறைகள் உருவாகவில்லை என்றாலும் வெறுப்புப் பேச்சு வெறுப்பு பேச்சு தான்” என்று அண்ணாமலைக்கு உயர்நீதிமன்றம் கண்டனத்தையும் தெரிவித்தது.
- அப்போது அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் தான் இருந்தது. அண்ணாமலையின் கருத்து குறித்து எந்த கருத்தையும் அதிமுகவினர் தெரிவிக்கவில்லை.
- இரு மாநிலங்களுக்கு இடையில் கலவரத்தை தூண்ட முயற்சித்தது பாஜக. வடமாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் ஆபத்து என்றும் பீகார் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் ஆபத்தான சூழல் நிலவுகிறது என்றும் புலம்பெயர் தொழிலாளர்களை இங்குள்ள தமிழ்நாட்டு மக்கள் அடிக்கிறார்கள் என்றும், இந்தி பேசியதால் 12 நபர்களை கழுத்தறுத்து கொன்று விட்டார்கள் என்றும் பீகாரைச் சார்ந்த பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் என்பவர் பரப்பினார்.
- இதனால் மிகவும் பதட்டமான சூழல் ஏற்பட்டது, ஆனால் தமிழ்நாடு அரசு உடனடியாக இது போலி செய்தி என்பதை அம்பலப்படுத்தியது. பொய்யான தகவலைப் பகிர்ந்த நபர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு செய்து கைதும் செய்தது.
- வடமாநிலத் தொழிலாளர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பது போலியான செய்தி என்பது தெரிந்தும் அண்ணாமலை, “திமுக நிர்வாகிகளான எம்.பி. தயாநிதி மாறன், அமைச்சர்கள் பொன்முடி, மூர்த்தி ஆகியோர் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கடந்த காலங்களில் பேசியுள்ளனர். அதனால் செய்தி பரவியதும் மக்கள் உண்மை என நம்பியுள்ளனர்” என்று அறிக்கை வெளியிட்டார்.
- வடமாநிலத் தொழிலாளர் பிரச்சனை என்பது திட்டமிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாளில் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்ட நாளில் பொய் செய்தி பரப்பப்பட்டது. 2023 ஆம் ஆண்டு தேஜஸ்வி யாதவ் பீகாரின் துணை முதலமைச்சர், எனவே பீகார் சட்டமன்றத்தில் தேஜஸ்வி யாதவை குறிவைத்து பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூச்சலிட்டனர்.
- போலி செய்தியை பரப்பியது பாஜகவை சேர்ந்த நபர், அது போலியானது என கைது செய்யப்பட்ட பிறகும் பீகார் பாஜகவினர் தேஜஸ்விக்கு எதிராக போராட்டத்தை செய்தனர், தமிழ்நாடு பாஜக திமுகவை குறிவைத்து அறிக்கை வெளியிட்டது. இருமாநிலத்திலும் கலவரத்தை உண்டாக்கி இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிப்பதற்கு பாஜக பயன்படுத்தியது போலி செய்தி.
- இதையும் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து கொண்டு அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது.
- மனோஜ்