இந்திய அரசு இலங்கையின் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து இராசபட்சேயை நீக்க, புதிதாகத் தமிழர்களுக்கு ஆதரவான ஒரு குடியரசுத் தலைவரைப் பதவிக் குக் கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரசுத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறுகிறாரே, அவ்வாறு இந்திய அரசால் செய்ய முடியுமா?

முடியுமா முடியாதா என்பது ஒருபுறம் இருக்கட்டும். இலங்கையின் குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்தியாவின் பங்கு தீர்மானகரமானது என்ற உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார் ஈ.வி.கே .எஸ். இளங்கோவன். 2009 தமிழின அழிப்பிற்குப்பின், இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய இராசபட்சே, “நான் இந்தியாவுக்கானப் போரை நடத்தினேன்” என்றார்.

இந்தியாவும் இலங்கையும் ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கின்றன. இரண்டு நாட்டிலும் உள்ள தமிழர் களை அழித்தும், அடக்கியும், கீழ்ப்படிதலுள்ள - அடிமைகளாக வைத்துக் கொள்ள வேண்டும் என் பதில் இருநாட்டு அரசுகளுக்கும் பொதுத் திட்டம் உள்ளது.

இந்தியா - இலங்கை அரசுகளின் அந்தரங்கம் இளங் கோவனுக்கு முன்பே தெரிந்திருப்பதால் - இப்பொழுது அவர் தமிழ்நாடு காங்கிரசுத் தலைவர் ஆனதும் தமிழர்களைத் தனது பக்கம் திருப்ப - இராசபட்சேயை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். இளங் கோவன் சொல்வதைவிட, காத்மாண்டு சார்க் மாநாட்டு உரையில் நரேந்திர மோடி, இராசபட்சே மீண்டும் வெற்றிப் பெற்றுக் குடியரசுத் தலைவராகிட வாழ்த்துத் தெரிவித்துள்ளதைக் கவனிக்க வேண்டும். இந்தியாவின் பேராளராக உள்ள தலைமை அமைச்சர், இலங்கைக் குடியரசுத் தேர்தலில் ஒளிவு மறைவின்றி ஒரு வேட்பாளர்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது, இந்தியாவும் இலங்கையும் நகமும் சதையுமாக இருப்பதையே காட்டுகிறது.

தமிழ்ப் பேரரசன் இராசேந்திரச் சோழனின் ஆயிரமாவது ஆண்டு முடிசூட்டு விழாவை ஆர்.எஸ். எஸ். அமைப்பு கொண்டாடுவது நல்ல செய்தி தானே?

இதற்குப் பெயர் திருதராட்டிர ஆலிங்கனம். அன்பாகத் தழுவுவதுபோல் எதிரியைத் தழுவி, இறுக்கி எலும்புகளை நொறுங்கச் செய்து கொன்று விடுவ தற்குப் பெயர் திருதராட்டிர ஆலிங்கனம். அதைத்தான் ஆர்.எஸ்.எஸ். செய்கிறது. கஜினி முகமது, கோரி முகமது போன்றவர்களின் படையெடுப்பு நிகழாமல் தடுத்தவன் இராசேந்திரச் சோழன் என்று கூறிப் பாராட்டுகிறது ஆர்.எஸ்.எஸ்.

வடநாட்டு ஆரிய மன்னர்கள் - படையெடுப்பும் தமிழ்நாட்டில் நிகழாமல் தடுத்த பெருமைக்குரிய மரபு, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியப் பாண்டியனி லிருந்து இராசேந்திரச் சோழன் வரை தமிழர்களுக்கு உண்டு. கஜினி முகமது, கோரி முகமது போன்ற மன்னர் களும் தமிழர்களுக்கு அயலார்கள். ஆரிய மன்னர்களும் தமிழர்களுக்கு அயலார்களே.

பார்ப்பனியத்தைக் கடுமையாகச் சாடிய அம்பேத் கரை அரவணைத்து அழிப்பதற்காக அம்பேத்கர் நூற்றாண்டு விழாவை ஆர்.எஸ்.எஸ். கொண்டாடியது. அதுபோல், இப்போது இராசேந்திரச் சோழன் ஆயிர மாவது ஆண்டு முடிசூட்டு விழாவையும் கொண்டாடு கிறது.

இராசேந்திரனும் அவன் முன்னோர்களும் கட்டிய கோயில்களில் இராசேந்திரன் இனத்தைச் சேர்ந்த சாதியினர் அர்ச்சகராகக் கூடாது என்றும், இராசேந் திரச் சோழனின் ஆட்சி மொழியான, தமிழ் வழி பாட்டு மொழியாகக் கூடாது என்றும் ஆரியப் பார்ப் பனர்கள் தடுத்து வைத்துள்ளார்கள். இந்த ஆயிர மாவது ஆண்டு விழாவின் செய்தியாக, அனைத்துக் கோயில்களிலும் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகரா கலாம், தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைமை அறிக்கை வெளியி டுமா?

சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடைசெய்துள்ளதே, இனி அவ்வாறு கணக்கெடுக்கவே முடியாதா?

சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணை யிட்டது. அதை எதிர்த்து நடுவண் அரசு உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அம்முறை யீட்டில, சாதிவாரிக் கணக்கெடுப்பது இந்திய அரசின் கொள்கை அல்ல என்றும் அதற்கான உள்கட்டுமான வசதிகள் இல்லை என்றும் நடுவண் அரசு வாதிட்டது.

நடுவண் அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், அரசின் கொள்கை முடிவில் தலை யிட முடியாது என்று கூறி, சென்னை உயர் நீதிமன்ற ஆணை யைத் தள்ளுபடி செய்தது. நடுவண் அரசு சாதிவாரிக் கணக்கெடுக்க முடிவு செய்தால் எப்போது வேண்டு மானாலும் அதைச் செயல்படுத்தலாம். அதற்கு இந்தத் தீர்ப்பு தடை இல்லை. நடுவண் அரசைத்தான் நாம் வலியுறுத்த வேண்டும்.

அமைதியானவர், அடக்கமானவர், பண்பாளர் என்று அறியப்பட்ட முதலமைச்சர் ஓ. பன்னீர்ச்செல்வம், கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகி யோர் அறிக்கைகளுக்கு விடையளிக்கும் போது, முரட்டுத் தனமான, எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற செயலலிதா பாணியில் அறிக்கை வெளியிடுகிறாரே?

செயலலிதாவுக்கும் ஓ.பன்னீர்ச்செல்வத்திற்கும் அறிக்கைகள் ஒரே இடத்தில்தான் தயாராகின்றன. அடுத்து, எசமானியம்மா ஐயப்படாத வகையில் அறிக்கைகள் இருக்க வேண்டும் என்ற தேவையும் ஓ.பன்னீர்ச்செல்வத்திற்கு இருக்கிறது.

தமிழக அரசியலில் செயலலிதா விரிவுபடுத்தி வளர்த் துள்ள தனிநபர்ப் பகை அரசியல் என்ற கொடிய தொற்று நோய் இன்னும் எத்தனை தலை முறைக்குத் தொடருமோ என்ற அச்சம் தமிழ்ச் சான்றோர்கள் மனத்தில் பெருங்கவலையாய் உள்ளது.

ஸ்டாலின் எடுத்த எடுப்பிலேயே ஜீரோ (0) பன்னீர்ச்செல்வம் என்று பேசியதும் சரியன்று.

Pin It