முச்சந்திகளில், பூங்காக்களில், உணவகங்களில் முத்தம் பரிமாறிக் கொள்ளத் தடை கூடாது என்று கூறுவோரின் கருத்து “ஆணும் பெண்ணும் அன்பைப் பரிமாறிக் கொள்ள முத்தம் கொடுத்துக் கொள்வது அநாகரிகமல்ல, அதைத் தடுப்பதுதான் அநாகரிகம்” என்பதாகும்.

முத்தங்கள் பல வகைப்படுகின்றன. பெரியவர்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கும் முத்தம், முதியவர்கள் இளையவர்களுக்குக் கொடுக்கும் முத்தம் ஒருவகை. இவை கன்னத்தில் கொடுக்கப்படும் முத்தங்கள். இவை, அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தக் கொடுக்கப் படும் முத்தங்கள். இவற்றில் முத்தம் கொடுக்கப்படுமே தவிர, பரிமாறிக் கொள்ளப்படுவதில்லை. இவ்வகை முத்தங்களைப் பலர் அறியத் கொடுப்பதில் யாருக்கும் எதிர்ப்பில்லை.

பருவமடைந்த இளம் ஆணும் பெண்ணும் பலர் முன்னிலையில் பொது இடங்களில் பரிமாறிக் கொள் ளும் முத்தங்கள் பற்றித்தான் எதிர்ப்புகள் வரு கின்றன. இவ்விளைஞர்கள் இருவகைகளில் முத்தங்களைப் பரிமாறிக் கொள்கின்றனர். ஒரு வகை கன்னத்தில் முத்தம் கொடுப்பது, மறுவகை வாய் வைத்து உறிஞ்சிக் கொள்வது! பொது இடங்களில் இவர்கள் கட்டித் தழுவிக் கொண்டு பின்னிப் பிணைந்து உறிஞ்சும் முத்தம் கொடுத்துக் கொள்கின்றனர்.

பருவமடைந்த ஆணும் பெண்ணும் கட்டித் தழுவி வாய் வைத்து உறிஞ்சிக் கொள்ளும் முத்தங்களைச் சாலைகளில், சோலைகளில், கடைவீதிகளில் என்று எங்கு பார்த்தாலும் பரிமாறிக் கொள்வது ஐரோப்பிய நாடுகளில் மிக இயல்பாக நடக்கிறது. அதுபோல் நம் நாட்டில் பொது இடங்களில் முத்தம் கொடுத்துக் கொண்டால் அது நாகரிக வளர்ச்சியையும், தங்கு தடை யின்றி அன்பை வெளிப்படுத்தும் மன முதிர்ச்சியையும் தானே காட்டும் என்பது முத்தவாதிகளின் கருத்து.

கேரளத்தின் கோழிக்கோட்டில் ஒரு விடுதியில் இளம் ஆண்களும் பெண்களும் ஆடிப்பாடி முத்தம் கொடுத்துக் கொண்டாடிய போது இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்று அந்த இளைஞர்களைத் தாக்கியுள்ளார்கள். இந்துப் பண்பாடு கெட்டுப் போகிறது என்பது அவர்களின் வாதம். இவர் களைத் தாக்கிய இந்துத்துவா வாதிகளின் வன்செயல் கண்டிக் கத்தக்கது.

இந்தத் தாக்குதலின் எதிர் வினையாகத் திருவனந்தபுரம், கொல்கத்தா, பெங்களூர் போன்ற நகரங்களில் இளம் ஆண்களும் பெண்களும் பொது இடங்களில் முத்தம் கொடுக்கும் போராட்டம் நடத்தினர். முத்தப் போராட்டத்தை எதிர்த்து மதவாத அமைப்பினர் மரபுக்காப்புப் போராட்டம் நடத்தி னர்.

முச்சந்தி முத்தப் போராட் டத்தை ஆதரித்து ஆங்கில ஏடுக ளில் கட்டுரைகள் தொடர்கின்றன. அக்கட்டுரைகளில் வைக்கப்படும் அடிப்படையான வாதம் “அன்பை, பாசத்தை பகிரங்கமாகத் தெரிவிக்க முத்தம் கொடுப்பது ஒரு முறை; அதைத் தடுப்பது பிற்போக்குத் தனம்; தடுப்பவர்கள் பண்பாட்டுக் காவலர்கள் (Cultural Police), ஒழுக் கக் காவலர்கள் (Moral Police), பழமைவாதிகள்” என்று சாடுகின்ற னர்.

அன்பைத்தெரிவித்துக் கொள்ள சொற்கள் மட்டுமே போதாது. உடல் அளவில் தொட்டுக் கொள் ளுதல், கைகொடுத்துக் கொள்ளு தல், தழுவிக் கொள்ளுதல் என்ற முறைகள் இருக்கின்றன. ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் இவ்வாறான உடல் அளவிலான தொடு உணர்ச்சியைப் பரிமாறிக் கொள்வதில் இப்போது சிக்கல் இல்லை. ஆணும் பெண்ணும் இந்தத் தொடு உணர்ச்சியை (ஸ்பரிச உணர்ச்சியை)ப் பரிமாறிக் கொள்ளும் போதுதான் சிக்கல் எழுகிறது.

அதிலும் திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் பொது இடங் களில் தழுவிக் கொள்ளும் போது, இந்தச் சிக்கல் பெரிதாகப் பார்க்கப் படுகிறது. அதிலும் பொது இடங் களில் கட்டித் தழுவி வாய் வைத்து உறிஞ்சிக் கொள்ளும் போது- அதற்கான எதிர்ப்பு அதிகமாகிறது.

பருவமடைந்து, திருமணம் ஆகாத ஆண் பெண் இளைஞர்கள் பொது இடங்களில் கட்டித் தழுவிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டுக் கொள்வதும் வாய் வைத்து உறிஞ்சிக் கொள்வதும், பாலியல் உணர்வுகளுக்கு அப்பாற் பட்ட, வெறும் அன்புப் பரிமாற்றம் மட்டும்தானா என்பது விடை காணப்பட வேண்டிய வினாவா கும்! பாலியல் உணர்வற்ற - வெறும் அன்பைக் காட்டுவதற்காக எனில், கை குலுக்கிக் கொண்டு அன்பான சொற்களைப் பரிமாறிக் கொள்வ தோடு நிறுத்திக் கொள்ள முடியா தா? இந்த அளவோடு நின்றால் அந்த அன்பு முழுமையடையாதா?

அன்பைப் பரிமாறிக் கொள் வதற்கான உச்ச அளவான செயல் பாடு முத்தம் கொடுத்துக் கொள் வதுதான் எனில், பருவமடைந்த ஆண் நண்பர்கள் தங்களுக் கிடையே கன்னத்தில் முத்தம் கொடுத்துக் கொள்வதுமில்லை; வாய் வைத்து உறிஞ்சிக் கொள்வது மில்லை. ஆணும் ஆணும் அவ்வாறு செய்து கொண்டால் அது ஓரினச் சேர்க்கையின் ஒரு பகுதியாகும். அதே போல் பருவமடைந்த தோழிகள் தங்களுக்கிடையே வாய் வைத்து உறிஞ்சி அன்பை வெளிப் படுத்திக் கொள்வதில்லை. அவ் வாறு அவர்கள் செய்து கொண் டால் அதுவும் ஓரினச் சேர்க்கை யாகும். ஓரினச் சேர்க்கை என்பது ஆண்களிடமிருந்தாலும், பெண் களிடமிருந்தாலும் அது உடலுறவு வகை சார்ந்ததே!

பருவமடைந்த ஆணும் பெண் ணும் முத்தம் கொடுத்துக் கொள் வது பாலுறவு உணர்ச்சி வெளிப் பாட்டின் ஒரு பகுதிதான்!

பாலுறவு உணர்ச்சி என்பது பருவமடைந்த ஆணிடமும் பெண் ணிடமும் பசியைப் போல், கனன்று கொண்டிருக்கும், நெருப்பைப்போல் எப்போதும் தகித்துக் கொண்டி ருக்கும், பதுங்கிக் கொண்டிருக்கும். ஆனால் விலங்குகளுக்கு அப்படி யில்லை. பெண் விலங்கின் பாலுறுப் பில் பாலுறவுக்கான நீர்ப் பொருளோ அதுசார்ந்த மணமோ வராத நிலையில் அப்பெண் விலங்கை ஆண் விலங்கு வல்லுறவு கொள்ளாது. பால் உணர்ச்சி மற்றும் பாலுறவு ஆகியவற்றைப் பொறுத்தவரை, மனிதர்களைவிட விலங்குகள் பண்பானவை! பாலுற வுப் பண்பாளர்களில் நாயும் அடங் கும்! அவை பகிரங்கமாகப் பாலுறவு கொள்வது மட்டுமே நமக்கு அசிங்கமாகத் தெரியும், அவற்றுக்கு ஆடையும் இல்லை; அந்தரங்கமும் இல்லை. கற்பழிப்புகளும் இல்லை.

மனிதர்களின் அறிவு வளர்ச்சி யும் மன வளர்ச்சியும் பல நாகரி கங்களைப் படைத்தன. பக்க விளை வாகப் பல அநாகரிகங் களையும் கட்டற்ற நுகர்வு வெறி யையும் உருவாக்கின. மனத்தால் கற்பனை செய்து இன்பம் அனு பவிக்கும் முறை விலங்குகளுக்கு இல்லை என்று கருதப்படுகிறது. மனிதர் களுக்கு கற்பனை இன்பங்களும் துன்பங்களும் ஏராளம்!

மனிதர்களின் கற்பனைக் காம இன்பத்தைத் தூண்டும் விளம் பரங்கள், ஏடுகள், ஊடகங்கள், திரைப்படங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், கலை நிகழ்வுகள், சொற் பொழிவுகள், உரையாடல்கள், எழுத்துகள் எங்கும் நிறைந்திருக் கின்றன.

மனிதர்களுக்குக் காம உணர்வு உடலால் மட்டும் வருவதன்று; மனத்தாலும் வருகிறது. உள் தூண் டல், வெளித்தூண்டல் இரண்டி னாலும் காமஉணர்வு உருவாகிறது. இருபத்து நான்கு மணி நேரமும் காம உணர்வு ஏற்படுவதற் கான உள்தூண்டலும் வெளித் தூண்ட லும் மனிதர்களுக்கு இருக்கின்றன. இந்தக் கொடுமை விலங்குகளுக்கு இல்லை. ஏனெனில் விலங்கு களுக்கு மனவளர்ச்சி இல்லை.

மனிதர்கள் மனத்தைக் கட்டுப் படுத்தி வாழ வேண்டிய தேவை இருக்கிறது! ஓர் ஆணோ, ஒரு பெண்ணோ தன் மனத்தைக் கட்டுப்படுத்தி வாழாவிட்டால் அதனால் அந்த நபருக்கு மட்டு மின்றி சமுகத்திற்கும் துன்பம் நேர் கிறது.

வயிற்றுப்பசிக்கு மூன்று வேளை சாப்பிடுவது போல் காமப் பசிக்குத் தீனி போட்டுக் கொண்டே இருக்க முடியாது; அவ்வாறு அடிக் கடி காமத்தீனி தேடுவதும் போடு வதும் உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை பயக்காது.

பொதுவாகவே நம் சமூக அமைப்பில் உள்ள வறுமை - சமூகத் தடுப்புச் சுவர்களாக இருக்கின்ற சாதி - மதப் பிரிவினைகள் போன்ற வற்றால் காமப் பசிக்கு உரியவாறு உணவளிக்கும் வாய்ப்புகள் மிகவும் தாமதமாகின்றன.

இப்படிப்பட்ட சமூகச் சூழலில் - 24 மணி நேரமும் உள் தூண் டலும், வெளித்தூண்டலும் உள்ள காமம் சார்ந்த உணர்வில் பருவ மடைந்த ஆணும் பெண்ணும் பொது இடங்களில் வாய் உறிஞ்சி முத்தம் கொடுத்துக் கொள்வது அவ்விருவரிடையே என்ன உணர் வைத் தூண்டும்? அவ்விருவரும் முத்தத்தில் மூழ்கிக் கிடப்பதைப் பார்க்கும் மற்றவர்களின் மனத்தில் என்ன உணர்வு தூண்டப்படும்? மனத்தில் கற்பனை செய்து இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவிக்கும் மனிதர்கள் மனத்தில் - பிறர் அனுபவிக்கும் இன்பமும் துன்பமும் அதே உணர்வுக்கான தூண்டுதலை உண்டாக்கும்.

எனவே அன்பை வெளிப் படுத்துவதற்காக என்று பருவ மடைந்த ஆண் பெண் இடையே தொடங்கும் முத்தம் பாலுணர்ச்சி யில் கொண்டு போய்விடும், பாலு றவில் கொண்டு போய்விடும்.

மேலை நாடுகளில் குறிப்பாக இலண்டனிலும் பாரிசிலும் நான் பார்த்த முத்தக் காட்சிகளைச் சொல்ல வேண்டும். இலண்டன் தேம்ஸ் ஆற்றுப் பாலத்தில் ((Tower Bridge)) ஒவ்வொரு உள் வளை விலும் இளம் ஆண் - பெண் இணை யர் வாய் வைத்து உறிஞ்சும் முத்தம் கொடுத்துக் கொண்டே தழுவிக் கொண்டிருப்பர். ஒரு தடவை அல்ல இரு தடவை அல்ல, மீண் டும் மீண்டும் பல தடவை! அவர்கள் அன்பைப் பரிமாறிக் கொள்வ தற்காக முத்தம் கொடுக்கவில்லை. காமப் பசியைத் தீர்க்க உடலுறவின் ஒரு பகுதியாக முத்த முயக்கத்தில் ஈடுபடுகின்றார்கள். அந்நாட்டில் அதைக் குற்றமாக யாரும் கருது வதில்லை.

அந்நாட்டில் 14 அகவை ஆனவுடன் உடலுறவு கொள்கிறார்கள். பள்ளிக்குச் செல்லும் மகளுக்கு உணவுப் பையில், கருத்தடை மாத்திரைகள் மற்றும் கருத்தடைப் பொருள்களை வைத்து தாயார் அனுப்புகிறார். திருமணத்திற்கு முன் பாலுறவு இருந்தால் தான் தங்கள் பிள்ளைகளுக்கு ஆண் தன்மை பெண் தன்மை இருப்பதாகவும் அவ்வாறான உறவு இல்லையேல் பிள்ளைகளின் ஆண் தன்மை, பெண் தன்மை பற்றி ஐயுற்றுக் கவலைப்படும் நிலையிலும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

இவ்வாறான கட்டற்ற பாலுறவால் அங்கு நிலைமை என்ன வாயிற்று? பல்கலைக்கழகப் படிப்பிற்குச் செல்லும் மாணவர் விகிதம் குறைந்துள்ளது. அறிவுக் கூர்மை மிக்கவர்கள் அங்கு இருக்கிறார்கள். அவர்கள் எண்ணிக்கை குறைவு. பெரும்பாலோர் பள்ளிப் படிப்போடு நின்று விடுகிறார்கள். உயர் தொழில்நுட்பத்தைக் கையாளும் அளவிற்கு அந்நாடுகளில் ஆட்கள் கிடைப்பதில்லை. எனவே இந்தியா போன்ற வெளிநாடுகளிலிருந்து உயர் தொழில்நுட்பப் பணிகளுக்கு ஆட்களை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்து கொள்கின்றன. அந்நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கிறது என்பது இன்னொரு பக்க அவலம்.

பன்னாட்டுத் தொழில் நிறுவ னங்களாக இருப்பதால் அவற்றிற்கு ஆட்கள் நிறையத் தேவை என்ற காரணம் இருக்கிறது. அதே வேளை அந்த மேலை நாடுகளில் பள்ளிக் கல்வி கற்போரின் விகிதத்திற்குப் பொருத்தமாக உயர்கல்வியும் பல்கலைக் கழகக் கல்வியும் கற்கச் செல்வோர் விகிதம், பாராட்டத் தக்க அளவில் இல்லை. அதற்குக் காரணம் இளமையில் பாலுறவு நாட்டமும் - அதைக் கட்டுப்படுத் தாமல் பாலுறவில் ஈடுபடுவதும் பழக்கமானபின் உயர்ந்த நோக்கங் களில் அவர்கள் மனம் ஈடுபடுவ தில்லை.

பாரிசில் ஈபிள் கோபுரத்தின் அருகில் சைன் ஆற்றுக் கரையோ ரப் புல் வெளியில் நான் பார்த்த காட்சி மிகவும் அருவருப்பானது. நான்கு வயது மதிக்கத்தக்க சிறுவன் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கி றான். ஓர் ஆணும் பெண்ணும் கட்டிப் புரண்டு வாயுறிஞ்சும் முத்தத்தில் ஈடுபட்டுக் கிடந்தனர். அருகில் அந்தச் சிறுவன் சோகம் நிறைந்த முகத்துடன்! அவன் அவர்கள் இருவரின் பிள்ளையா அல்லது அவர்களில் ஒருவர் பிள்ளையா என்று தெரியவில்லை.

இருவரும் கட்டிப் புரண்டு காம சூத்திரத்தின் ஒரு பகுதியை அரங் கேற்றிக் கொண்டிருந்த போது அவ்வழி போனவர்கள் யாரும் அவர்களை வேடிக்கை பார்க்க வில்லை. அதனாலேயே அவர்கள் யாரும் இக்காட்சியைப் பொருட் படுத்த வில்லை என்று கருத முடியாது. சிலர் மனத்தில் காம உணர்வு தூண்டப்பட்டிருக்கும். வேறு சிலர் மனத்தில் அருவருப்பு உண்டாகி இருக்கும். இவ்விரு உணர்வுகளில் எது தூண்டப் பட்டிருந்தாலும் நாகரிகச் சமூகத் திற்கு உகந்தது அன்று.

தனி நபரின் தனிமை (Privacy) காக்கப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும் என்ற கருத்து சரியா னதே; ஆனால் தனிநபர் அந்தரங் கத்திற்கு மிகை முகாமை (முக்கியத் துவம்) தரும் பலர், அந்தரங்கத் தழுவல்களைப் பகிரங்கப்படுத்து வதையும் அவர்களின் உரிமை என்கின்றனர். இங்கே அந்தரங்கம் சந்தைவெளிக் கண்காட்சி நிகழ் வாக்கப்படுவது ஏன்? எனது ஆண்மையை, எனது பெண்மையை அதன் வீரியத்தைப் பாருங்கள் மானிடரே என்று சவால் விடுவ தாக இருக்குமோ? என்னையும் ஒரு பெண் நேசிக்கிறாள், என்னையும் ஓர் ஆண் நேசிக்கிறான், நான் ஒன்றும் சோடை போன சரக்கல்ல என்று சமூகத்திற்குக் காட்டிக் கொள்வதற்காக - பகிரங்க உடல் தழுவல்களில் ஈடுபடுவார்களோ? அல்லது அந்தரங்க இடம் கிடைக் காமல் பொது இடத்தையே பயன் படுத்திக் கொண்டு அதற்கான பொது உரிமை கோருகிறார்களோ?

ஐரோப்பாவிலும் வட அமெரிக் காவிலும் கட்டற்ற பாலுறவு நுகர்வு - அம்மக்களின் மிகை நுகர்வுப் பண்பாட்டினால் உருவானவை. இதன் வளர்ச்சி எங்கே போய் நிற்கிறதென்றால், திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது, அவ்வாறு வாழும் போது குழந்தை பெற்றுக் கொள்வது, பின்னர் பிரிந்து விடுவது. அதன் பிறகு வேறொரு ஆண், வேறொரு பெண் தேடுவது. இவ்வாறான “சேர்ந்து வாழ்தலில்” பாதிக்கப்படுபவர் யார்? பெண்தான். அந்தக் குழந்தையைச் சுமப்பவள் - காப்பவள் அவளே!

குடும்ப உறவு சிதைந்து, உதிரி மனிதர்களாகி விடுகிறார்கள். இந்த உதிரித் தன்மைதான் பன்னாட்டுக் கொள்ளை நிறுவனங்களுக்கு, பெரும் முதலாளியத்திற்கு உகந்தது. ஒவ்வொரு தனி நபரும் மிகை நுகர்வு கொள்வது உறுதியாகும். இதனால் பொருள் வாங்குதல் அதிகமாகும். அதே வேளை கூட்டு ஆற்றல் உருவாகாது. சமூக நோக்கம் முதன்மை பெறாது. தம்தம் நுகர்வு வாழ்க்கை பாதிக்கப் படாமல் இருந்தால் போதும் என்று கருதுவார்கள். கொள்ளைப் பொரு ளியலுக்கும் ஆதிக்க அரசியலுக்கும் எதிராக மக்கள் ஆற்றல் எழுச்சி கொள்ளாது.

வட அமெரிக்கா வலிய வம்பி ழுத்து எத்தனை நாடுகளில் போர் புரிந்தாலும் - அமெரிக்க முதலாளிய நிறுவனங்களின் இலாப வேட் டைக்கேற்ற பொருளாதாரக் கொள்கையை செயல்படுத்த ஒவ் வொரு நாட்டிலும் அமெரிக்க சி.ஐ.ஏ. நடத்திய சதிவேலைகள் எத்தனை தடவை அம்பலப்பட் டாலும் அமெரிக்க மக்களில் மிகப் பெரும்பாலோர் அதைக் கண்டிக்க மாட்டார்கள். அவையெல்லாம் அமெரிக்கப் பெருமிதங்கள் என்ற உளவியல் அவர்களிடம் உருவாகி யுள்ளது.

மிகைப் பொருள் குவிப்பும் மிகை நுகர்வும் இரட்டைப் பிறவி கள். மிகைப் பொருள் குவிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் குடி மக்கள் படைதான் மிகை நுகர்வு வெறியர்கள். மிகைப் பொருள் குவிப்புப் பேராசை என்பது ஒரு வகை மனநோய்; அதே போல் மிகை நுகர்வும் ஒரு மன நோய்! எடுத்துக்காட்டாக தங்கள் பிள்ளைகளும் தங்களின் வருங்காலத் தலைமுறையினரும் பாதிக்கபடு வார்களே என்ற கவலை, மீத்தேன் திட்டத்தைக் கொண்டு வரும் பெரும் குழும நிறுவனங்களுக்கும் இருக்காது, அவற்றிற்குக் கதவு திறந்துவிடும் அரசியல் தலைவர் களுக்கும் இருக்காது, அவற்றை ஆதரிக்கும் நுகர்வு மையப் பொரு ளியல்வாதிகளுக்கும் இருக்காது. நுகர்வு மையப் பொருளியலை முதன்மைப்படுத்தும் இயக்கங்களுக்கும் இருக்காது.

இப்படிப்பட்டவர்கள் நெறி நீக்கிகள் (De Moralist) ஆவர்; வரம் பற்ற நுகர்வுவாதிகள் ஆவர். சமூக மக்களுக்கு எந்த நெறிமுறையும் தேவையில்லை, நெறிமுறைகள் மனித உரிமைகளுக்கு விலங்குகள் என்பர். பண்பாட்டுக் கூறுகளில் எந்தக் கட்டுப்பாட்டையும் ஏற்க முடியாதென்பர்.

உடைக் கட்டுப்பாடு பற்றிப் பேசினால் உடனே நெறி நீக்கிகள், ஆடை நீக்கிகளாக மாறி ஆவேசப் படுகின்றனர். பெண்கள் புடைவை தான் அணிய வேண்டும், ஆண்கள் வேட்டிதான் கட்ட வேண்டும் என்பது பழைமை வாதம்; அக்கருத்தை ஏற்க வேண்டியதில்லை. முழுக்கால் சட்டை; சுடிதார் போன்றவற்றை அவர்கள் அணி வதில் தவறில்லை. அதே வேளை ஆணும் பெண்ணும் எந்த ஒழுங்கு மின்றி, அரை அம்மண ஆடை அணிந்து திரிவோம்; அதுவே எங்கள் பண்பாட்டுச் சுதந்திரம் எனில் அந்த அலங்கோலத்தை, உயர் நெறிகளை இலக்காகக் கொண்ட சமூகம் ஏற்க முடியாது.

ஒரு காலத்தில் ஆடைகள், உடலைப் போர்த்திக் கொள்வதற்காக இருந்திருக்கலாம். அதில் நாகரிக வடிவமைப்புகள் வந்தன. எத்தனை நாகரிக வளர்ச்சி வந்தாலும் பாலுறுப்புகள் மறைக்கப்பட வேண்டியவை என்ற பண்பு வரம்பு இருக்கிறது. பாலுறுப்புகளை அரை குறையாக வெளிக்காட்டிக் கொள் ளும் தேவை என்ன வந்தது? அழகியல் என்பார்கள்!

பெண்ணின் அம்மணம் கூட ஆணுக்கு அழகாகத்தான் இருக்கும். ஆணின் அம்மணம் கூட பெண் ணுக்கு அழகாகத்தான் இருக்கும். ஆணும் பெண்ணும் அம்மணமாகத் திரிந்தால் என்ன? அந்த அம்மணம் அருவருப்பாகிவிடும். அம்மண மாகத் திரிந்த மனிதர்கள் அருவருப் படைந்துதான் ஆடைகளால் மறைத்துக் கொண்டார்கள். பின் னர் அந்த ஆடைகள் மானம் கெடாமல் மறைத்துக் கொள்ள என்று மதிக்கப்பட்டன. குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சம்ஸ் தானத்தில் இருந்த பொழுது ஒரு காலத்தில் தமிழ்ப் பெண்களில், ஒரு சில வகுப்பார் மாராப்புப் போட்டு மார்பை மறைத்துக் கொள்ளக் கூடாது - இரவிக்கை அணியக் கூடாது என்று நம்பூத்திரி - நாயர் ஆதிக்கக் கும்பல் அட்டூழியம் புரிந்தது. மேல் சாதியினருக்குச் சம மாக நம் மக்கள் ஆடை அணிந்து கொள்ளக் கூடாது என்பதே இத்தடையின் கரு. அந்த இழி நிலையை எதிர்த்து தோள்சீலைப் போராட்டம் நடத்தி இரவிக்கை அணியும் உரிமைப் பெற்றனர் தமிழ்ப் பெண்கள். இப்பொழுது புறப்பட்டுள்ள நெறி நீக்கிகள் - இரவிக்கையை நீக்குவது பெண் ணுரிமை என்று கூறுகின்றனர்.

கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு கழிவறைகளில் மலம் கழிப்பார்களா? மாட்டார்கள். அது அருவருப்பு. மறைவாக நிகழ்த்த வேண்டிய சில செயல்முறைகள் மனிதர்களுக்கு இருக்கின்றன. மறைக்க வேண்டிய உறுப்புகள் மனிதர்களுக்கு இருக்கின்றன.

முச்சந்திகளில்முத்தம் கொடுத்து நுகர்வு வேட்கையைத் தீர்த்துக் கொள்வதில் பெண் விடுதலையும் இல்லை; பண்பாட்டு விடுதலையும் இல்லை. பண்பாட்டு நீக்கமும் கட்டற்ற நுகர்வு வேட்கையும் தாம் இருக்கின்றன. இந்த நெறி நீக்கிகள், மிகவும் தன்னல உளவியல் பெற்றி ருப்பார்கள். பெண் விடுதலை, சமூக நீதி போன்ற போராட்டங்களுக்கு வரமாட்டார்கள்.அதிகம் போனால் உரிமை, சுதந்திரம் என்ற பெயரால் தங்களது பாலியல் மிகை நுகர்வுப் போராட்டத்திற்கு மட்டுமே வருவார்கள்.

மிகை நுகர்வில் நாட்டம் சென்றால் மனித ஆளுமை வள ராது மனிதர்களின் மன அமைதி கெடும். எதன் மீது மிகைப் பற்று வைக்காமல் இருக்கின்றோமோ, அதனால் வரும் துன்பம் மக்களுக்கு இல்லை என்றார் திருவள்ளுவர் பெருந்தகை.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன். - 341

ஆரியப் பார்ப்பனிய சனாதன உள்ளடக்கம் கொண்ட இந்துத் துவா வாதிகளும், பெண்ணுரிமை மறுக்கும் இஸ்லாமிய மதப் பழை மைவாதிகளும் இந்த முச்சந்தி முத்தப் பண்புக்கேட்டை எதிர்க் கும் நோக்கத்திற்கும் நாம் எதிர்க் கும் நோக்கத்திற்கும் வேறுபாடு உள்ளது. பெண் விடுதலை, சமூக நீதி, சமூக மாற்றம், தமிழ்த் தேசியம் போன்றவற்றில் அக்கறையும் அவற்றிற்கான இயக்கச் செயல் பாடுகளும் கொண்டுள்ள அமைப்புகள், தனி நபர்கள் இந்த முச்சந்தி முத்தப் போராட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.

Pin It