தமிழக விவசாயிகளுக்குத் தொடரும் தொல்லைகள்!

  • காவிரியில் மேகே தாட்டு என்ற இடத்தில் 48 ஆ.மி.க (டி.எம்.சி) (48 ஜ் 100 கோடி கன அடி = 136 கோடி கன மீட்டர் = 136000 கோடி லிட்டர்) கொள்ளளவு கொண்ட இரு அணைகளைக் கட்டி பெங்களூரு, மைசூரு நகரங்களுக்குக் கூட்டுக் குடிநீர் வழங்கப் போவதாக கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் திரு. எம்.பி.பாட்டீல் அண்மையில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கீழ்க்கண்ட கூடுதல் தகவல்களையும் அளித்துள்ளார்.
  • காவிரியில் கர்நாடகாவுக்கு உரிமையான 270 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீரில் இத்திட்டம் நிறைவேற் றப்படும்.
  • தமிழ்நாட்டிற்குக் காவிரித் தீர்ப்பாயத் தீர்ப்புப்படி 192 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீர் குறைவு இல்லாமல் கர்நாடகா வழங்கும்.
  • இத்திட்டம் குடிநீர் வழங்குவதற்குரியது என்பதால் காவிரியில் 1892 / 1924 ஒப்பந்தங்களுக்கும் 2007 காவிரித் தீர்பாயத் தீர்ப்புக்கும் அதன் வழிகாட்டி நெறிகளுக்கும் இவ்விரு அணை கட்டல் எதிரானது அல்ல எனப் புகழ்பெற்ற வழக்குரைஞர் திரு. ஃபாலி எஸ். நாரிமன் கருத்துரைத்திருப்பதாகவும் தெரிவித் துள்ளார்.
  • மேலும் கர்நாடகா அரசு இவற்றின் நீட்சியாக கபினி, ஹாரங்கி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி ஆகிய - அணைகளுக்குக் கீழே 4 தடுப்பணைகள் கட்டி மாநிலப் பாசன வசதியினைப் பெருக்கிடவும் திட்டமிட்டுள்ளது.
  • காவிரி - கர்நாடகா மாநிலத்திற்குள்ளே ஓடும் போது அதைப் பயன்படுத்திட அவர்களுக்கு முழு உரிமை யுள்ளது. எனவே தமிழக அரசோ தமிழ்நாட்டு விவசாயிகளோ இதைத் தடுத்திட முடியாது. இதன் வழியாக மைசூரு, மாண்டியா, ராம்நகர் மாவட்டங் களில் சுமார் 4.50 இலட்சம் ஹெக்டேர் (11.00 இலட்சம் ஏக்கர்) நிலங்களுக்குப் புதிய பாசன வசதி கிடைக்கப் பெறும்.
  • இந்த இரு அணைகள் கட்டுவதற்குத் தேவை யான ஒப்புதலை இந்திய அரசின் நீர்வளத் துறையிடமிருந்தும் தடையில்லாச் சான்றிதழை நடுவண் அரசின் காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் துறையிடமிருந்தும் விரைவில் பெறப்படும்.

கர்நாடகா அரசின் முந்தைய முறைகேடுகள்

இச்சமயத்தில் கர்நாடகா அரசின் கடந்த கால நடவடிக் கைகளை நினைவுகூர்வது மிகமிக அவசியம்.

  • 1974க்குப் பின்னே எந்தக் காலத்திலும் எந்தச் சமயத்திலும் தமிழகத்திற்குரிய காவிரி நீரை தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பில் (25, சூன், 1991) அளிக்கப் பட்ட 205 ஆ.மி.க. தண்ணீரையோ / காவிரித் தீர்ப்பாய இறுதித் தீர்ப்பில் (05.02.2007) வழங்கப்பட்ட 192 ஆ.மி.க. தண்ணீரையோ எந்தக் காலத்திலும் வழங்கியது கிடையாது. ஒப்பந்த விதிகள் / உச்சநீதி மன்ற அறிவு றுத்ல்கள் / காவிரித் தீர்ப்பாயத் தீர்ப்புகள் மற்றும் வழி காட்டி நெறிகள் அனைத்துமே கர்நாடகா அரசுக்கு ஒரு பொருட்டல்ல; அவை மீறப்படுவதற்கே என்ற மனப் பான்மை கர்நாடகா அரசிட மும் அதன் அரசியல்வாதிகளிட மும் ஏன் கர்நாடகா விவசாயி களிடமும் ஊறியுள்ளது என்பது பலமுறை உறுதிப்படுத்தப்பட்டுள் ளது.
  • காவிரி ஆறு கர்நாடகா மாநிலத்தில் ஓடுவதால் - அவர் களின் பயன்பாட்டிற்குப் போக மீதியுள்ள வெள்ள உபரித் தண்ணீர் தான் இதுவரை வடிகாலாக (நிறுத்தி வைத்துக் கொள்ள கட்ட மைப்பு வசதிகள் இல்லாமை யால்) தமிழகத்திற்கு விடப்பட்டுள்ளது. “எங்கள் அணைகள் முழுக் கொள் ளளவை எட்டினால் தான் - உபரி நீர் தமிழ் நாட்டுக்கு; அவை நிரம் பாவிட்டால் ஒரு சொட்டுத் தண் ணீர் கூட தமிழ் நாட்டுக்குத் தர மாட்டோம்” என் பதுதான் அவர் களின் கொள்கை முழுக்கம்.
  • இருந்தாலும் உச்ச நீதிமன் றத்தின் கட்டளைப்படி காவிரி இறுதித் தீர்ப்பை நடுவண் அரசு தனது அரசிதழில் 19.02.2013 அன்று வெளியிட்டப் பிறகு நடுவண் தீர்ப் பாயத்தின் வழிகாட்டி நெறி களின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தையும் (Cauvery Management Board) காவிரி ஒழுங்குமுறைக் குழுவினையும் (Cauvery Regulation Committee) மே மாதம் 19, 2013க்குள் (மூன்று மாதத் திற்குள்) அமைத்திருக்க வேண்டும். எப்போதும் போல நடுவண் அரசு எந்தவித உண்மையான அக்கறையு மின்றி வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் தமிழ் நாட்டின் - விவசாயிகளின் நலன்கள் ஏன் வாழ்வாதாரமே பாதிக்கப்பட் டுள்ளன.
  • உச்ச நீதிமன்றமோ - காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத் திட நடுவண் அரசை வலியுறுத் தாமல் - தன் அதிகார வரம்பை மீறி இடைக்கால ஏற்பாடாக - காலம் கடத்தும் முயற்சியாக - எந்தவித அதிகாரமும் இல்லாத காவிரி மேற்பார்வைக் குழுவினை (Cauvery Supervisiory Committee)) அமைத் துள்ளது. அந்தக் குழுக் கூட்டத்தில் 01.06.2013 மற்றும் 12.06.2013 நாட்களில் கர்நாடகாவின் கபினி மற்றும்கிருஷ்ணராஜசாகர் அணையிலும் குறைந்த அளவு கூடத் தண்ணீர் இல்லாமையால் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடகா அரசு திட்டவட்டமாகத் தெரிவித் தது. அம்மாநில முதலமைச்சர் திரு. சித்தராமையா கர்நாடகவின் அணைகளில் நீர் நிரம்பினால் ஒழிய தமிழ்நாட்டுத் தண்ணீர் திறந்துவிடும் பேச்சுக்கே இட மில்லை என அடாவடியாகப் பேசி னார்.

கர்நாடகாவின் நீண்ட சதித் திட்டம் என்ன?

  • காவிரியில் மேட்டூர் அணைக் குத் தண்ணீர் வரவேண்டுமானால் கபினி அணை திறக்கப்பட வேண் டும். அவ்வாறே கிருஷ்ண ராஜசா கர் நீர்த்தேக்கமும் திறக்கப்பட வேண்டும். ஆனால் 1970 - 1990 ஆண்டுகளில் கர்நாடகா தமிழ் நாட்டிற்குத் தண்ணீர் தரக் கூடாது என்ற நோக்கில் கீழ்க்குறிப்பிடப் படும் திட்டங்களை நிறைவேற்றி யுள்ளது.
  • கபினி அணை (19.520 ஆ.மி.க.), ஹேரங்கி (08.50 ஆ.மி.க.), ஹேமாவதி (37.103 ஆ.மி.க.), யாகாச்சி (03.60 ஆ.மி.க.) மற்றும் சுவர்ணவதி (01.26 ஆ.மி.க.) ஆகிய ஐந்து நீர்த்தேக்கங்களைக் காவிரியி லும் காவிரியின் துணை ஆறுகளி லும் கட்டி ஏறக்குறைய 70 ஆ.மி.க. நீரைப் பிடித்து வைத்துக் கொண் டுள்ளது. இவற்றிற்கு எந்த ஒப்புத லும் இல்லை. திட்டக்குழு நிதியும் ஒதுக்கவில்லை. எனினும் மாநில நிதியிலிருந்து கர்நாடகா சட்டத் திற்குப் புறம்பாக கட்டிப் பயன் படுத்தி வருகிறது.
  • காவிரித் தீர்ப்பாய இடைக் காலத் தீர்ப்பில் கட்டுப்படுத்தி யுள்ள 11.20 இலட்சம் ஏக்கரிலிருந்து 21.71 இலட்சம் ஏக்கருக்குப் பாசன வசதியை அதிகமாக ஏற்படுத்தி யுள்ளது. இதற்குத் தேவைப்படும் நீரளவு 362 ஆ.மி.க. ஆனால் காவி ரியில் கர்நாடகாவுக்கு உரிமையா னது 270 ஆ.மி.க. மட்டுமே 362 ஆ.மி.க.விலிருந்து 408.62 ஆ.மி.க. வரைத் தண்ணீரைத் தேக்கிட மேலும் திட்டங்களைத் தீட்டி வருகிறது.
  • கபினி அணைக்குத் தண் ணீர் வழங்கும் நூகு மற்றும் சாகர தொட்டகரே நீர்த் தேக்கங்களி லிருந்து 28 ஆ.மி.க. தண்ணீரை வேறு ஆற்றுப் படுகைகளுக்குத் திருப்பிவிட நீரேற்றும் இறைப்பி களை அமைத்து செயற்படுத்தி வருகிறது. இதனால் கபினியிலி ருந்து நேரே மேட்டூருக்கு வர வேண்டிய நீரின் அளவு பெரும் அளவு குறைந்துள்ளது. (கபினிக்குக் கீழே நீரோட்டமே இருக்க வாய்ப் பில்லை).
  • இதைப்போலவே ஹேமாவதி அணையிலிருந்து 14 நீரேற்றும் பாசனத் திட்டங்களை நிறைவேற்றி - கூடுதலான நீரை எடுத்து 45,756 ஏக்கர் நிலங்க ளுக்குப் பாசன வசதி செய்துள்ள னர். இதனால் இதன் கீழுள்ள கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத் திற்கு வரவேண்டிய நீரின் அளவும் பெருமளவு குறைந்துள்ளது.
  • ஹேரங்கி அணையிலி ருந்து கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு 1,70,020 ஏக்கர் அளவுக்கு பாசன வசதி செய்துள்ளது. எனவே இந்த அணையிலிருந்தும் கிருஷ் ணராஜசாகர் நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வரவும் வாய்ப்பில்லை.
  • இவற்றைத்தவிர மைசூர் பாசனப்பகுதியில், கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு மேலே காவிரி ஓடி வரும் வழியில் உள்ள 25000 ஏரிகள் / கண்மாய்களுக்குத் தேவையான நீரையும் - காவிரி நீரைக் கொண்டே நிரப்பி - கிருஷ்ண ராஜசாகருக்கு வரும் தண்ணீரை யும் தடுத்துள்ளது.
  • இவற்றிற்கும் மேலாக - பெங்களூர் மற்றும் பெருநகரங்க ளுக்குத் தேவைப்படும் குடிநீரை - 30 டி.எம்.சி. அளவுக்கு அதிகரித்து காவிரி நீரையே கர்நாடக அரசு பயன்படுத்துகிறது.

எனவே இத்தகைய மறைமுக மான திட்டங்களால் கபினி அணைக்கும் கிருஷ்ணராஜசாகர் நீர்த்தேக்கத்திற்கும் போதிய நீர்வர விடாமல் தடுத்துவிடு சட்டவிரோத மாக நடுவர் மன்றத் தீர்ப்புக்கு மாறாகப் பயன்படுத்திக் கொண்டு இந்த அணைகளில் திறந்துவிடப் போதிய நீர் இல்லை எனக் கர்நாடகம் கபட நாடகமாடிக் கொண்டுள்ளது. இதைத் தமிழக அரசு புரிந்து கொண்டு - ஏற்ற நடவடிக்கைகளை எடுக்கும் என்று நம்பலாமா?

இவற்றுள் முக்கியமாக 1970 - 1980 ஆண்டுகளில் கர்நாடகா அரசு

  • தமிழக அரசின் இசைவு இன்றி
  • இந்திய அரசின் நீர்வளத் துறை / நடுவண் நீர்வள ஆணையம் ஆகியவற்றின் அனுமதி இன்றி
  • இந்திய அரசின் காடுகள் மற்றும் சுற்றுச் சூழல் துறையின் தடையில்லாச் சான்று பெறாமல்
  • இந்திய அரசின் திட்டக் குழுவின் அனுமதியின்றி
  • காவிரி ஆற்றின் 1892 / 1924 ஒப்பந்த விதிகளுக்கு எதிராக கர்நாடகம் மாநில நிதியிலிருந்து மேலே தெரிவித்த அணைகளைக் கட்டியும் திட்டங்களை நிறை வேற்றியும் உள்ளது.
  • இன்று வரை இந்த அணைக்கட்டுகள் இந்திய அரசால் முறைப்படுத்தப்படாத முறை கேடுக ளாகவே தொடர்கின்றன. இவற் றிற்காக இந்திய அரசு கர்நாடகத் தைக் கண்டித்து எந்தத் தாக்கீதும் அனுப்பவில்லை என்பதும் - உடந் தையாக இருந்து அமைதி யான பார்வையாளராக இருந்து உடந்தை யாகச் செயல்பட்டுள்ளது. இது இந்திய அரசியல் சட்டப் பிரிவு 355க்கு முற்றிலும் எதிரானது.

மேலும் காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பில் - கர்நாடகா அரசு தனது பாசனப் பகுதிகளின் பரப்பை 11.20 இலட்சம் ஏக்கர் களுக்கு மேல் எக்காரணத்தைக் கொண்டும் விரிவாக்கம் செய்யக் கூடாது என்ற அறிவுறுத்தல் முழுவதுமாக மீறப்பட்டிருக்கிறது / இந்த முறைகேட்டை இந்திய அரசின் நீர்வளத்துறையும் காவிரித் தீர்ப்பாயமும் கண்டுகொள்ளவே இல்லை.

இவ்வாறான கடந்த கால சட்டவிரோத வெற்றிகளின் அடிப் படையில்தான் - இந்திய அரசு தடுக்காது, தமிழக அரசும் எதுவும் செய்து விட முடியாது - என்ற துணிச்சலில் தடாலடி அரசியல் அடிப்படையில் - எவ்வளவு முறை யற்றதாகவும் ஒப்பந்தத்தை மீறிய தாக இருந்தாலும் 48 ஆ,மி.க. கொள்ளளவில் இரண்டு அணை களை மேகே தாட்டுவில் கட்டிட கர்நாடகா அரசு தீவிரமாக முனைந்துள்ளது. இச் சதித்திட் டத்தை புரிந்து கொண்டு இப்போ தாவது தமிழக அரசு ஒரு சிறிதும் காலம் தாழ்த்தாது விரைந்து தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கிட வேண்டும் என்பது தமிழக மக் களின் கோரிக்கையாகும்.

காவிரி நீர் ஒப்பந்தங்கள் / உச்சநீதிமன்ற / காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புகள் தெரிவிப் பவை எவை?

காவிரித் தீர்ப்பாயத்தின் இறு தித் தீர்ப்பு (05.02.2007) காவி ரியின் கீழ்ப்படுகையிலுள்ள தமிழ் நாட் டிற்குரிய காவிரி நீரைத் தடையில் லாமல் வழங்குவதற்கு எதிரான எந்தச் செயலையும் கர்நாடக அரசு செய்யக் கூடாது என ஆணை யிட்டுள்ளது.

காவிரித் தீர்ப்பாயத்தின் இறு தித் தீர்ப்பு - (05.02.2007) பத்தி 32. அவரவர்க்கு ஒதுக்கப் பட்ட பங்குத் தண்ணீர் தடுக்கப் படாமல் கிடைத்திட, மேல் மர புரிமை உள்ள மாநிலம் கீழ் மரபுரிமை மாநிலத்திற்கு அட்டவ ணைப்படி தரவேண்டிய தண்ணீ ருக்குப் பாதிப்பு வரும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்து கிறோம்.

Para 32. For ensuring uninterrupted delivery of allocated shares to the parties concerned, “we hereby direct that no upper riparian state shall take any action so as to affect the scheduled deliveries of water to the lower riparian state.”

தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு இவ்வாறிருக்க உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ஃபாலி நாரிமன் எப்படி இவற்றையெல்லாம் மீறி கர்நாடகா புதிய அணைகள் கட்டலாம் எனக் கருத்துரைத்தார் என்பது கர்நாட காவுக்கே வெளிச்சம்? (பணம் பத்தும் செய்யும் போல) என்று நொந்து கொள்ளுவதைத் தவிர வேறு என்ன செய்வது?

உடனடித் தேவை காவிரி மேலாண்மை வாரியம்

கர்நாடகா அரசின் கடந்த கால சதித்திட்டங்களையும் தில்லு முல்லுகளையும் அடா வடித்தன மான அழிச்சாட்டியங்களையும் நன்றாக அறிந்த காவிரித் தீர்ப் பாயம், தன் தீர்ப்பின் முக்கிய பகுதியாக - காவிரி நீரை முறையாகப் பகிர்ந்தளிக்க மேலாண்மை செய்திட நாளும் கண்காணித்திட காவிரி மேலாண்மை வாரியத்தை (Cauvery Management Board)) கண்டிப்பாக அமைத்திட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

“பத்தி 14. பக்ரா - பியாஸ் மேலாண்மை வாரியம் இருப்பது போல் இதற்கு காவிரி மேலாண்மை வாரியம் நடுவண் அரசால் அமைக்கப்பட வேண்டும். எங்கள் கருத்தில், பொருத்தமான பொறியமைவு அமைக்கப்படுவது எல்லாவற்றையும் விட முகாமை யானதாகும். என்ன வகைப் பொறி யமைவு நிறுவப்பட்டாலும் தீர்ப் பாயத்தின் முடிவுகளைச் செயல் படுத்தும் முழு அதிகாரம் அதற்கு இருக்க வேண்டும். இல்லை எனில், எங்கள் தீர்ப்புரை வெறும் துண்டுக் காகிதமாகத்தான் இருக்கும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்.”

காவிரி மேலாண்மை வாரியத் தையும் காவிரி ஒழுங்குமுறைக் குழுவையும் மேலும் காலந் தாழ்த் தாது அமைத்திட வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்திய அரசுக்கு உள்ளது. ஊருக்கும் உலகத்திற்கும் உபதேசம் செய்யும் திரு. நரேந்திர மோடியின் அரசு உடனடியாகத் தம் பொறுப்பினைத் தட்டிக் கழிக்காமல் வேண்டு மென்றே மாற்றாந்தாய் மனப் பான்மையோடு காலந்தாழ்த்தாமல் செயல்பட வேண்டும். கர்நாடகா அரசு கட்டுப்படாமல் நடக்குமா னால் அரசியல் சட்டப்பிரிவு 355இன் படி கர்நாடகா அரசுக்குத் தாக்கீது அனுப்பிடத் தயங்கக் கூடாது. இது ஒன்றுதான் கர்நா டகா அரசுக்குப் போடப்படும் மூக் கணாங்கயிறாக இருக்கும்.

தமிழ்நாடு அரசாங்கம் / தமிழக மக்கள் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக் கைகள்.

கர்நாடக அரசு - 2007ஆம் ஆண்டிலிருந்து திட்டமிட்டு 2012இல் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் 25 நீர்வளத்துறை அதிகாரிகள் 56 இடங்களில் ஆய்வு செய்து 30 இடங்களில் அணைகள் கட்டலாம் என்று கர்நாடகா அரசுக்கு அறிக்கை அளித்திருக்கும் போது, தமிழக அரசுக்கு இவை யெல்லாம் எப்படித் தெரியாமல் போனது? நம்முடைய நுண்ண றிவுப் பரிவு ((Intelligence & CID) என்னதான் செய்து கொண்டுள்ளது? கர்நாடகாவின் காவிரி நீர்ப்பாசன மேம்பாட்டுக் கழகம் (Karnataka Cauvery Irrigation Development Corporation)) இதற்காக உல களாவிய ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியுள்ளது. கர்நாடகப் பாசனத் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் பகிரங்கமாக நாள் குறித்து அறி வித்த பிறகுதான் தமிழக அரசும் தமிழகக் கட்சிகளும் எதிர் வினை யாற்றத் தொடங்கியுள்ளன.

  • தமிழ்நாடு அரசின் முதலவர் இந்தியத் தலைமையமைச் சருக்குக் கடிதம் எழுதுவதோடு நில்லாது - தொடர்புடைய தமிழக அமைச்சர்கள் புதுடில்லி சென்று (தமிழகப் பாராளுமன்ற உறுப்பினர் களையும் உடன் கூட்டிக் கொண்டு போய்) - தலைமை அமைச்சர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் காடுகள் & சுற்றுச் சூழல் அமைச்சர் ஆகியோரை நேரிடை யாகச் சந்தித்து - கர்நாடகாவின் 2 அணைகள் கட்டும் திட்டத்தை நிறுத்திட வேண்டும்.
  • தமிழ்நாட்டு நாடாளு மன்ற உறுப்பினர்கள் (கட்சி வேறு பாடின்றி தமிழக நலனில் அக்கறை இருக்குமானால்) புது டில்லியில் அடிக்கடி முகாமிட்டு மத்திய அரசுக்குத் தொடர்ந்து வலி யுறுத்தி நெருக்கடி தர வேண்டும். குடியரசுத் தலைவரையும் சந்தித்து முறையிட வேண்டும்.
  • தமிழக அரசும் - நீர்ப்பா சனம் தொடர்புடைய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும், தமிழக அரசின் ஆலோசகரையும் மற்றும் தமிழகப் பொதுப்பணித்துறைத் தலைமைப் பொறியாளர்களுடன் புதுடில்லியில் முகாமிட்டு - நீர்வளத்துறை, மத்திய நீர்வள ஆணையம் மற்றும் காடு கள் & சுற்றுச் சூழல்துறை அதிகாரி களைத் தொடர்ந்து சந்தித்து விளக்கி நெருக்கடி தர உடன் ஏற்பாடு செய்திட வேண்டும்.
  • தமிழகத்தில் அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர் களும் (தங்களின் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு) உரத்த குரலில் காவிரிப் பாசனப் பகுதிகளைப் பாது காக்கும் வகையில் ஒருமித்து அறிக் கைகள் விடவேண்டும்; தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். தமிழகத் தைச் சார்ந்த பாரதிய ஜனதாவின் தலைவர் திருமதி. தமிழிசை சவுந்தர ராஜனுக்கும் மத்திய இணைய மைச்சர் திரு. பொன். இராதா கிருஷ்ணன் அவர்களுக்கும் விரைந்து மேல்மட்ட நடவடிக்கை களை எடுத்திட வேண் டிய பெரும் பொறுப்பு இருக்கிறது என்பது இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது.
  • தமிழக விவசாயிகள் சங்கப் பொறுப்பாளர்கள் அனைவரும் குறிப்பாக காவிரிப்பாசன விவசா யிகள் சங்கத்தினர் தங்களின் அரசி யல் பக்திப்பரவசத்தையும் வெறுப் பை யும் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு - ஒருங்கிணைந்து தொடர்ந்து செயல்பட வேண்டும். இது விவசா யிகளின் வாழ்வுச்சிக்கல் என்பதை அவர்கள் அனைவரும் உணர்ந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
  • தமிழ்நாட்டின் நலனில் உண்மையாகவே அக்கறைகொண்ட சமுதாய இயக்கங்களும் அமைப்பு களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உரத்த குரலில் பரப் புரை செய்திட வேண்டும்.
  • எல்லாவற்றையும் விடத் தமிழ் நாட்டிலுள்ள நாளிதழ்கள் / கால முறை இதழ்கள், தொலைக் காட்சிகள் / மின் ஊடகங்கள் இந்தச் சிக்கலிலாவது உண்மையாக அக்கறை கொண்டு (ஒப்புக்கென்று இல்லாமல்) தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்று நீரிலுள்ள, உரிமையை நிலைநாட்டிட கர்நாடகா அரசைக் கண்டித்து ஆக்கப்பூர்வமான பரப் புரை செய்திட வேண்டு மென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இதன் தொடர்பாக தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறி யாளர் சங்கம் - முல்லை பெரியாறு அணை, மீத்தேன் எடுப்பு எதிர்ப்பு போன்றவற்றில் பரப்புரை செய்த தைப் போலவே - தமிழ் நாட்டின் நலனைப் பாதுகாத்திட உரிமை யினைநிலை நாட்டிடத் தொடர்ந்து பரப்புரை செய்திட தம்மை ஈடுபடுத் திக் கொண்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Pin It