Mayotte island 6002014 மார்ச் 15 அன்று, பிரான்சு நாட்டு நீதிமன்றம், ஆப்ரிக்க நாடான ருவாண்டாவில் இனப்படு கொலையில் ஈடுபட்டதாக குற்றம் மெய்பிக்கப்பட்ட பஸ்கல் சிம்பிக்வங்க (Pascal Simbikangwa) என்ற இராணுவ அதிகாரிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பிரஞ்சு ஊடகங்கள் அதை முக்கியச் செய்தியாக வெளியிட்டன.

1994ஆம் ஆண்டு ருவாண்டாவில் ஹூட்டு இன வெறியர்களும் ருவாண்டா இராணுவத்தில் இருந்த ஹுட்டு இனவெறியர்களும் இணைந்து நடத்திய இனப்படுகொலையில், சற்றொப்ப 8 இலட்சம் டுட்சி இனமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்படு கொலைகள் நடைபெற்ற போது ருவாண்டா இராணு வத்தின் உளவுத்துறை முன்னணி அதிகாரியாகவும், ருவாண்டா அதிபரின் முன்னணி பாதுகாவலராகவும் பணியாற்றியவரே பஸ்கல் என்பவர் ஆவார்.

அவர், இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றம் நிகழ்த்தியவர் என குற்றம் சாட்டப்பட்டு, 2008 ஆம் ஆண்டு கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப் பட்டதும் தலைமறைவானார்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள மயோட்டே(Mayotte) தீவில் வேறொரு பெயரில் வாழ்ந்து வந்த இவரை, பிரான்சு அரசு கைது செய்து, அவர் மீது பிரான்சு நாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து விசாரணை நடத்தியது.

இவ்விசாரணையின் போது, டுட்சி இனமக்களுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபடு மாறு தூண்டிய ருவாண்டாவின் ஹூட்டு ரேடியோ விற்கு பல முக்கிய உதவிகளைச் செய்தவர் இவர் என்பதும், டுட்சி இனமக்களைக் கொல்ல பல ஹூட்டு இனவெறியர்களுக்கு ஆயுத உதவிகளையும் இவர் செய்தார் என்பதும் மெய்பிக்கப்பட்டது.

தற்போது, 54 அகவையான அந்த இராணுவ அதி காரிக்குத்தான் கடந்த மார்ச் 15 அன்று, பிரான்சு நீதி மன்றம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது. ருவாண்டா இனப்படுகொலையாளியை கைது செய்து தண்டனை வாங்கித் தரும் அளவிற்கு, பிரான்சு நாட்டு அரசு இனப்படுகொலைக்கு எதிரான சனநாயகவாதி போல வேடமிடுகிறது. ஆனால், இதன் பின்னணியில் உள்ள வல்லரசுகளின் சதி அரசியல் மிகக்கொடூரமானது!

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று உதவி செய்து 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழீழ மக்களை, இந்திய - சிங்களக் கூட்டுப் படைகள் இனப்படுகொலை செய்த போது, ஐ.நா.வும் வடஅமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் எப்படி வாய்மூடி நின்று வேடிக்கை பார்த்தனவோ, அதேதான் ருவாண்டாவிலும் நடைபெற்றது.

1994ஆம் ஆண்டு ருவாண்டாவில் டுட்சி மக்களுக்கு எதிரான கொடூரமான இனப்படுகொலை நடைபெற்ற போது, ஐ.நா.வும் ஏனைய ஐரோப்பிய மற்றும் மேற்குலக முதலாளிய நாடுகளும் இவ்வாறு தான் “செயல் பட்டன’’.

Pascal-Simbikangwa 35018 - 19ஆம் நூற்றாண்டுகளில் இயற்கை வளங்கள் நிறைந்த ஆப்ரிக்க கண்டத்து நாடுகளை, பிரிட்டன், - பிரான்சு, பெல்ஜியம்,- ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப் பிய நாடுகள், தங்களுடைய நேரடி காலனிகளாக்கின. காலப்போக்கில் ஆப்ரிக்க மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வும், விடுதலை வேட்கையும் அந்நாடுகளுக்கு “விடுதலை’’ அளிக்கும்படி இந்நாடுகளுக்குக் கட்டளையிட்டன.

இதன் விளைவாக, ”விடுதலை” அளிக்கப்பட்ட பிறகும், அந்நாடுகளில் உள்ள இயற்கை வளங்களைத் தொடர்ந்து தங்கள் சுரண்டலுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு இன்றும் ஆப்ரிக்க நாடுகளில், ஐரோப்பிய நாடுகளும் வடஅமெரிக்கா உள்ளிட்ட முதலாளிய நாடுகளும் பல்வேறு சிக்கல் களில் தலையிட்டு ‘பஞ்சாயத்து’ செய்து வருகின்றன.

ஐரோப்பிய நாடுகள் பலவும் ஆப்ரிக்காவில் அவ்வாறு ஆதிக்கம் செலுத்துவதைக் கண்ட வட அமெரிக்க வல்லரசு தானும் அவ்வாறே ஆப்ரிக்க நாடுகளைப் ‘பங்கு’ போட்டுக் கொள்ள வேண்டு மென இன்னொரு பக்கத்தில் சதி செய்து கொண்டிருந்தது. ஏகாதி பத்தியங்களின் இந்த சுரண்டல் வெறி, இன்றைக்கும் ஆப்ரிக்க கண் டத்தில் அரசியல் நிலையற்ற தன் மையை ஏற்படுத்தி வைத்துள்ளது.

அவ்வாறு, பெல்ஜியத்தின் கால னியாகவே ருவாண்டா இருந்தது. அதில், ஹூட்டு பெரும்பான்மை யின மக்களும், டுட்சி சிறுபான் மையின மக்களும் சற்றொப்ப ஒரே மொழி பேசுகின்றவர்களாகவே இருந்தனர். எனினும், டுட்சி இனத் தவர்கள் ருவாண்டா மட்டு மின்றி அருகாமையிலிருந்த பெருண்டி உள்ளிட்ட சில நாடுகளில் பெரும் பான்மை இனத்தவர்களாகவும் இருந்தனர்.

பெல்ஜியக் காலனியாதிக்கவாதி கள், இம்மக்களின் சில உடலியல் வேறுபாட்டை வைத்து உயரமாக இருப்பவர்களை டுட்சி என்றும் குள்ளமாக மெலிந்து இருப்பவர் களை ஹூட்டு என்றும் பிரித்து அடையாள அட்டை வழங்கினர். மேலும், டுட்சி மக்களுக்கு மட்டும் பல சலுகைகள் அளித்து, அவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தினர்.

இதற்கு முன்பே பல டுட்சி இனத்தவர்கள் சமூகத்தில் மேல் நிலையில் இருந்ததும், அரசுப் பணி களில் அதிகளவில் இடம் பெற்றிருந்ததும் பெரும்பான்மை ஹூட்டுகளுக்கு ஆத்திரமூட்டியது. இதுவே பின்னர், டுட்சி இனத்தவர் மீதான தீராத இனவெறியாக உருவெடுத் தது. பெல்ஜியம், பிரான்சு உள்ளிட்ட ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளைப் போலவே, ருவாண் டாவில் தானும் ஆதிக்கம் செலுத்த வேண்டுமென விரும்பியது வட அமெரிக்க வல்லரசு.

டுட்சி இனமக்கள் மீதான் தொடர்ச்சியான இனப்படு கொலைக்கு எதிராக ருவாண்டா தேசப்பற்றாளர் படை (Rwandan Patriotic Force) என்ற டுட்சி இன இராணுவ அமைப்பு உருவான போது, அதற்கு வட அமெரிக்கா ஆதரவளித்தது. பிரான்சு அரசோ, ஹூட்டு இராணுவக்குழுக்களுக்கு பயிற்சி அளித்தது. 1994ஆம் ஆண்டு ஹுட்டு இனத்தைச் சேர்ந்த ருவாண்டா அதிபர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு, டுட்சி இன மக்களுக்கு எதிரான பெரும் கலவரத்தைத் தொடங்கி வைத்தது. ஐ.நா.வும் வல்லரசு நாடுகளும் வேடிக்கைப் பார்க்க, 8 இலட்சம் டுட்சி மக்கள் கொல்லப் பட்டனர்.

முடிவில், வட அமெரிக்க ஆதரவு டுட்சி இராணுவப்படை அரசைக் கைப்பற்றி, இன்றுவரை நடத்தி வருகிறது. டுட்சி ஆட்சியாளர்களுக்கு அஞ்சி, இனப்படு கொலை செய்த பல ஹூட்டு இன வெறியர்கள் அருகாமையிலிருந்த காங்கோ நாட்டிலும், பிரான்சு உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளி லும் தஞ்சம் புகுந்தனர்.

இலட்சக் கணக்கான ஹுட்டு மக்கள், காங் கோவில் அகதிகளாக குடிபெயர்ந்தனர். அங்கு புதிதாக ஹுட்டு இனத்தவரைப் பாதுகாக்கும் இராணுவக்குழு ஒன்று உருவாகி, அவ்வப்போது ருவாண்டா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

1994ஆம் ஆண்டு இனப்படு கொலைக்குப் பின்னர், ஐ.நா.வும் பிரான்சு - வட அமெரிக்கா உள்ளிட்ட முதலாளிய நாடுகளும் ருவாண்டாவின் இனப்படு கொலையில் முன்னணிப் பாத்திரம் வகித்திருக்கின்றன என அந்நாடு களில் இயங்கும் பல மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டின. இதனால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, ருவாண்டாவின் ஹூட்டு இன ஆட்சியாளர்கள் மீது அனைத்துலக பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அவர்களில் பலர் தண்டிக்கப்பட்டனர்.

தற்போது பிரான்சில் நடைபெற்ற விசாரணை என்பது, தன் மீது படிந்துள்ள கறையை நீக்கிக் கொள்ள பிரான்சு அரசு முன்னெடுத்த முயற்சியே ஆகும். ருவாண்டா இனப்படுகொலைக் குற்றவாளிகள் பலருக்கு முதலில் அடைக்கலம் அளித்த நாடு பிரான்சே ஆகும். அவ்வாறு அடைக்கலம் புகுந்தவர் கள் மீது 1995ஆம் ஆண்டிலிருந்து சற்றொப்ப 20 வழக்குகள் பிரான் சில் பதிவாகின. ஆனால், பிரான்சு அரசு அது குறித்து விசாரிக்க வில்லை.

பின்னர், ஐ.நா. அமைப்பு ருவாண்டா இனப்படு கொலை களை விசாரிக்க தனியான பன்னாட்டு நீதிமன்றத்தை அமைத்தது. 2004ஆம் ஆண்டு ஐரோப்பிய மனித உரிமை அமைப்பு பிரான்சு அரசின் போக்குக்கு கண்டனம் தெரிவித்தது.

இதன் விளைவாகவே, 2012ஆம் ஆண்டு ருவாண்டா படுகொலைகள் குறித்து விசாரிக்க தனிக்குழு ஒன்றை ஏற்படுத்தியது பிரான்சு நாடு. அதில், ருவாண்டா இனப்படுகொலை தொடர்பான 27 வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அதில், முதல் வழக்கில் தான் தற் போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இனப்படுகொலைகளாகட்டும், மனித குலத்திற்கு எதிரான குற்றங் களாகட்டும் ஏகாதிபத்திய நாடு களைப் பொறுத்தவரை, இதன் கோர விளைவுகளால் பாதிக்கப்பட்ட மக்களைவிட, அந்தந்த நாடுகளில் காணப்படும் வளங்களைப் பொறுத்தே அதன் முடிவுகள் அமையும். இது ருவாண்டாவில் தொடங்கி, தமிழீழம் வரை நீளு கின்றது.

இதனை முறியடித்து முன்னேற, ஏகாதிபத்தியங்களுக்கு மாற்றான பன்னாட்டு உலக ஒழுங்கமைவு தேவை. விடுதலை பெற்ற தேசிய இன அரசுகளின் பன்னாட்டு ஒழுங்கமைவே அது!

Pin It