மரங்களும் பூக்களும் பூத்துக்குலுங்கிய லீகியுழாங் (Liukuaizhuang) கிராமம், இன்று சீனாவின் “புற்றுநோய்” கிராமம் என்று அழைக்கப்படுகிறது. அந்நகரின் பெரும்பான்மையான மக்கள் புற்றுநோயால் அவதிப்படுவது தான் இதற்குக் காரணம்.

சீனத் தலைநகர் பெய்சிங் நகரிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமம் தொழிற்சாலைகளின் ஆக்கிரமிப்பால் தனது இயற்கை வளங்களை இழந்து நிற்கிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள பல்வேறு தொழிற் சாலைகள் வெளியிடும் கழிவுகளில் கலந்துள்ள பாதரசம், காட்மியம் உள்ளிட்ட கடுமையான வேதிப்பொருட்கள் அம்மக்களை புற்றுநோயாளிகளாகவும், தோல் நோயாளிகளாகவும் மாற்றி வருகின்றது. ஷெங்பா நகரின் நதியில் வாழும் உயிரினங்கள் 24 மணி நேரத்திற்குள் மடிந்து விடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த கிராமம் மட்டுமின்றி, சீனாவின் யானன் மாநிலத்தின் சிங்லாங் (XingLong), கவுடன்டாங் மாநிலத்தின் (Guangdong)  ஷெங்பா கிராமம் என நாடு முழுவதிலும் சற்றொப்ப 400க்கும் மேற்பட்ட கிராமங்கள் இவ்வாறு புற்றுநோய் கிராமங்களாக உள்ளன. 2040இல் சீன மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினர் நகரங்களில் வசிக்கும் நிலை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2007ஆம் ஆண்டு கணக்கெடுப் பின் படி அந்நாட்டு மக்களில் 5இல் ஒருவர் புற்றுநோயால் இறப்பதும் தெரிய வந்துள்ளது.

சீனாவில் மட்டுமின்றி, உலகெங்கும் உலகமய யுகத்தின் ”வளர்ச்சி”யின் பெயரால் தொழிற்சாலை கள் கிராமங்களை அழித்து வரும் நிலையில், மறைமுகமாக உழைக்கும் மக்களை நோயாளி களாக்கும் போக்கும் தொடர்ந்தே வருகின்றது.
Pin It