தெருவில் உணவு விற்போரும் பதிவு செய்ய வேண்டும்

உணவு பொருட்கள் பாதுகாப்பு புதிய சட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்தவிருக்கிறது.

உணவு பொருட்கள் பாதுகாப்பு குறித்து தற்போது உணவு பாதுபாப்பு மற்றும் தரம் நிலை சட்டம் 2006 உள்ளது. இந்த சட்டத்தை மாற்றும் வகையில், புதிய சட்டம் விரைவில் அமல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயம் ஆணையத் தலைவர் பி.ஐ. சுவராதன் கூறுகையில், புதிய சட்டம் அனைத்து உரிம முறையை ஒருங்கிணைப்பதாக இருக்கும். அதிக ஆபத்து உள்ள இறைச்சி, பால், சமையல் எண்ணெய் போன்ற உணவு பதப்படுத்துதல் குறித்து வகைப்படுத்தப்படும். பல்வேறு மாநிலங்களில் செயல்பாடுகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் பொதுமுறைப்படுத்துதல் முறையில் கொண்டுவரப்படும் என்றார்.

ரயில்வே மற்றும் விமானப்போக்குவரத்தில் விநிநோகிக்கப்படும் உணவு பாதுகாப்பு குறித்த குறிப்பிட்ட நிபந்தனைகள் விதிக்கப்படும். நுகர்வோரின் நலன் கருதி, புதிய கட்டுப்பாடுகளின்படி, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் பல்வேறு உணவு பொருட்களை ஆய்வு செய்து அறிக்கை அணுப்புவார்கள். உணவு பதப்படுத்துதலை கண்காணிக்க தனி உணவு பாதுகா;பபு துறையை உருவாக்க வேண்டும் என, அனைத்து மாநிலங்களிடம் கூறப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய சட்டத்தின்படி தெருவில் விற்போருக்கு லைசென்ஸ் இல்லை. புதிய விதியின்படி அவர்கள் எளிய பதிவு மேற்கொள்ள வேண்டும். அவர்கள் பஞ்சாயத்து, நகராட்சி அளவில் பதிவு செய்து கொள்ளவேண்டும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

பேற்றோரின் கருத்து வேறுபாட்டால் குழந்தை மனநிலை பாதிக்கக் கூடாது

கணவன், மனைவிக்கு இடையேயான கருத்து வேறுபாடு குழந்தையின் மனநிலை பாதிப்படையக் காரணமாக இருக்கக்கூடாது என உயர் நீதிமன்ற நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மதுரை அருகே உள்ள சிறுவாலையைச் சேர்ந்த கே.ஞானசௌந்தரன் தாக்கல் செய்த மனு :

எனக்கும் அப்பன் திருப்பதியைச் சேர்ந்த செல்விக்கும் 1991-ல் திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு 1993-ல் பெண் குழந்தை பிறந்தது. 1999-ல் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டோம்.

செல்வி அவரது சகோதரருக்கு என் மகளைத் திருமணம் செய்து வைக்க முயற்சித்தார். இதில் என் மகளுக்கு விருப்பம் இல்லை. மேலும் அவள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் நல்லமதிப்பெண் பெற்று மேலும் படிக்க ஆர்வமுடன் இருந்தார்.

மதுரையில் உள்ள பள்ளியில் என் மகளின் கல்விச் சான்றிதழ்களைக் கேட்டேன். அவற்றைக் கொடுக்கக்கூடாது என செல்வி பள்ளித் தலைமை ஆசிரியரிடம் கூறிவிட்டார். என் மகள் மேல்படிப்புக்காக டி.சி. மற்றும் பள்ளிச் சான்றிதழை வழங்க தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மனுவை விசாரித்த நீதிபதி கே.என்.பாஷா, பெற்றோரின் தகராறில் குழந்தையின் மனநிலை பாதிக்கப்படுவது மிகவும் வேதனையான விஷயம். மனுதாரரின் மகள் பள்ளி இறுதித்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

உயர்கல்வியிலும் நல்லமதிப்பெண் பெற்றுவிடலாம் என அவர் நம்பிக்கையுடன் உள்ளார். எனவே, இதைக் கருத்தில் கொண்டு, பள்ளி மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை 2 வாரத்தில் மனுதாரருக்கு வழங்கவேண்டும் என பள்ளித் தலைமை ஆசிரியருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Pin It