(அமுதனும் அல்லியும் கல்லூரி வளாகத்திற்குள் சந்தித்துக் கொள்கின்றனர். இன்னும் வகுப்புகள் தொடங்கவில்லை.)

அமுதன் : தமிழீழம் அமைய மீண்டும் ‘டெசோ’ இயக்கம் நடத்தப் போறதா அறிவித்தாரே கருணாநிதி, நடத்துவாரா?

அல்லி : அதுதா உறுதி ஆயிட்டதே... ஆனா? அதுக்கு வேற பேருதான் வைக்கணும்.

அமுதன் : தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பின் ஆங்கிலச் சுருக்கந்தானே ‘டெசோ’ அதுக்கு என்ன வேறு பேரு வெக்கணுங்கிற அல்லி?

அல்லி : ஆமாம் அமுதா, டெசோ 1983ல் கருணாநிதி தலைமையில் கி.வீரமணி, க.அன்பழகன், பழ. நெடுமாறன் இவங்கல்லாம் சேர்ந்து உருவாக்கினாங்க. அப்புறம் ‘டெசோ’ இனி இயங்காது என்று கருணாநிதி யாரையும் கேட்காமலேயே தன்னிச்சையா அறிவிச்சாரு.

அமுதன் : அப்படியா அல்லி? இது ரெண்டாவது நாடகமா?

அல்லி : ஆமாம், அமுதா! இப்போ மீண்டும் ‘டெசோ’ன்னு அறிவிக்கிறாரே அது வெறும் பேருக்குத்தான். ‘டெசோ’ என்பதற்குப் பதிலா ‘சோனியா காங்கிரஸ் ஆதரவாளர் கூட்டமைப்பு’ன்னுதான் அதற்குப் பெயர் வைக்கணும்.. என்ன புரியுதா அமுதா? எல்லா கனிமொழியைக் காப்பாத்த அதுக்குக் காங்கிரசைத் தாங்கிப் பிடிக்கத்தா இந்த நாடகமும்.

அமுதன் :அப்போ ‘டெசோ’ இப்போ ‘சோக்சோ’ ஷிஷீஸீவீணீ சிஷீஸீரீக்ஷீமீss ஷிuஜீஜீஷீக்ஷீtமீக்ஷீs ளிக்ஷீரீணீஸீவீsணீtவீஷீஸீ ,ஷிளிசிஷிளி அப்படிங்கிறியா அல்லி?

அல்லி : பின்னே ,வேறென்ன அமுதா?...

அமுதன் : நீ சும்மா இரு அல்லி! கருணாநிதியின் நிறைவேறாத கனவு என்னான்னு தெரியுமா உனக்கு?

அல்லி : இம்.. சொல்லு... கேட்டுக்கிறேன்.

அமுதன் : ‘தமிழீழம்தான்’அது மட்டுமா,அவருடைய மிச்சமிருக்கிற காலத்திலே தமிழீழம் அமையப் போராடப் போறேங்கிறாரு,அதுக்காக உசிரை விடப் போறேங்கிறாரு

அல்லி : அது சரி... நல்லாப் போராடட்டும்! இன்னொன்னையும் சொல்லி இருக்கிறாரு தெரிஞ்சுக்கோ!

அமுதன் : என்ன அல்லி?

அல்லி : தமிழீழம் அமையாததற்கான காரணங்களை இப்போ சொல்லி புதுசா குழப்பங்களை ஏற்படுத்த நான் விரும்பலேங்கறாரு !

அமுதன் : ஆமா... ஆமா, ஏற்கனவே என்ன காரணம் சொன்னாரு ?

அல்லி: தமிழீழ விடுதலைப் புலிக சகோதர யுத்தம் நடத்தியதாலேதான் தமிழீழம் அமையல்லைன்னு சொன்னாரு. போராட ஒரு வலுவான போராளிகள் கூட்டம் இருந்தப்ப ‘தமிழீழம் சாத்தியம் இல்லை’ன்னாரு.ஒரு பக்க‘தமிழீழம்’ அடைந்தா மகிழ்வேன்னாரு. ஆனா மறு பக்க தமிழீழம் அமையக் குரல் கொடுத்தவங்களெ தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலெ சிறையிலே அடைச்சாரு..

அமுதன் : இப்படிக் குழப்பிக் குழப்பிப் பேசுறவரு 50 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வரோம்கிறாரே, அல்லி!

அல்லி : அதுல அரைநாள் உண்ணாவிரதம் நடத்தினாரே அதையும் சேர்த்துத்தானே அமுதா?

அமுதன் : இதோ பாரு அல்லி ஈழத் தமிழர் போராட்டத்துக்கு அவருடைய ஆதரவு இருந்ததா, இல்லையா அதைச் சொல்லு!

அல்லி : இல்லை என்பதுதான் வரலாற்றுண்மை, அமுதா! 30.04.1973இல் செய்தியாளர்களுக்கு நேர்காணல் கொடுக்கிறாரு. அதுல ‘ இலங்கைத் தமிழர்களின் போராட்டத்துக்கு உங்களின் தார்மீக ஆதரவு உண்டா?’ன்னு செய்தியாளர்கள் கேட்டப்ப, ‘போராட்டத்துக்கு ஆதரவு இல்லை’ன்னு உறுதியா சொன்னவருதான் இந்தக் கருணாநிதி மறந்திடாதே. அது மட்டுமா ? சிங்கள இனவெறி அரசுக்கு ஈழப் போராட்ட இயக்கத் தளபதிகளைக் காட்டிக் கொடுத்தவரும் இவருதா. தெரியுமா தெரியாதா?

அமுதன் : யாரைக் காட்டிக் கொடுத்தாரு?

அல்லி : ‘டெசோ’ இயக்கத் தலைவர்களிலே ஒருவரான ‘குட்டிமணியை’ வெடி மருந்துகளைக் கடத்தினார்னு கைது செய்து தமிழ்நாட்டுச் சிறையில் அடைச்சாரு அப்போ முதல்வரா இருந்த கருணாநிதி. சிங்கள அரசாங்கம் ‘குட்டிமணி’யை ஒப்படைக்கச் சொல்லி கேட்டபோது அதற்கான உத்தரவைப் போட்டவருதா இந்தக் கருணாநிதி. இவருதா சிங்களவங்கிட்டே குட்டிமணியை ஒப்படைச்சாரு அந்தக் குட்டிமணி கண்களைத்தா 1983 இலே சிங்களச் சிறையிலே கொடூரமா பிடுங்கிப் படுகொலை செய்தானுக சிங்கள வெறியனுக!

அமுதன் : அய்யோ, அப்படியா செய்தாரு? அதா எல்லாரும் கருணாநிதியைக் கபட நாடகப் பேர்வலீங்கறாங்களா? சரிதான் போ... நானுங்கூட ஆகா ஈழத்துக்காக இவரு உசிரை விடப் போறாரு... போராடப் போறாருன்னு உருகித்தான் போனேன் போ! .

அல்லி : அமுதா இவரு மத்திய அரசுக்குக் கோரிக்கைதான் வைப்பாரு! எதையும் தீர்மானமா நின்னு கேட்கமாட்டாரு, அமைச்சர் பதவியையைத் தவிர! இப்போ தனி ஈழம் அமையத் தீர்மானமும் போடப் போறதா இல்லைன்னுட்டாரு. அப்பறம் ஏ இந்த மாநாடுன்னு தெரியலை அமுதா.

அமுதன் : நா நினைக்கிறே அல்லி! காங்கிரசு தமிழ்நாட்டுல போனியாகாத கட்சியா போயிட்டிருக்கு. அதனால ஈழப் போராட்டம்னு சொன்னா காங்கிரசுக் கூட்டணிய விட்டு ஒதுங்கிப் போயிரும். நாம எழந்த ஈழத் தமிழர் ஆதரவ திரும்பப் பெற்று வருகிற நாடாளுமன்றத் தேர்தல்ல வெற்றி பெறலான்னு கருணாநிதி ‘டெசோ’வை எடுத்திருப் பாரோ?

அல்லி : அப்படியும் இருக்கலாம். தேர்தல்ல முள்ளிவாய்க்கால் படுகொலை அதுக்குத் துணைபோன ’ஐக்கிய முற்போக்குக் கூட்டணி’, அதில் அங்கம் வகித்த ‘திமுக’ இதெல்லாம் தமிழீழ விடுதலை உணர்வாளர் மத்தியில பேசப்படும் சேதிதான். ஆனா, தேர்தலப்போ தமிழீழ ஆதரவும் எதிர்ப்பும் கலந்துதானே கூட்டணியே அமைக் கிறாங்க. அது எப்படி உத்தியா இருக்கும்னு தெரியல அமுதா...

அமுதன் : ஈழத் தமிழர் படுகொலைக்குப் பெரிய துணையா நின்ன காங்கிரசையும் சோனியாவையும் ஒதுக்கி ஓரங்கட்ட இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தலாம்னு கருணாநிதி நெனைப்பாருன்னு சொல்றேன் அல்லி!

அல்லி : ஆனா கதை இப்போ வேற மாதிரில்ல போவுது அமுதா...!

அமுதன் : என்ன அல்லி!

அல்லி : இந்திய உள்துறை அமைச்சகத்தின் மே 14ம் தேதி அறிக்கையை நீ பார்க்கிலீயா? அதிலே தமிழர்களுக்காகத் தனிநாடு கேட்டுப் போராடும் எல்.டி.டியும் அதன் செயல்பாடுகளும் இந்தியாவிலே தாக்கத்தை ஏற்படுத்திச் சட்டத்துக்குப் புறம்பான செயல்களுக்கு வழி வகுத்து ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்ததுன்னு எச்சரிக்கை செய்து விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீடிச்சு இருக்கிறாங்க. இதுக்குப் பொறகு சிதம்பரம் கருணாநிதியைச் சந்திச்சிருக்கிறாரு. அதுக்கப்புறம் கருணாநிதி தனி ஈழக் கோரிக்கையை இப்போ மாநாட்டிலே எழுப்பப் போறதில்லைன்னு தெளிவா அறிவிச்சுட்டாரு. டெசோ மாநாட்டு நிலமை இப்போ இதுதா அமுதா...

அமுதன் : அடைஞ்சா திராவிடநாடு இல்லைன்னா சுடுகாடுன்னு மொழங்கிட்டு அப்புறமா கொள்கையைக் குழி தோண்டிப் புதச்சாங்களே, அந்தக் கதைதா இப்பவும்..

அல்லி : கருணாநிதி மீண்டும் என்ன சொல்றாரு தெரியுமா அமுதா?

அமுதன் : என்ன சொல்றாரு, அல்லி!

அல்லி : தனி ஈழக் கோரிக்கையை மாநாட்டிலே எழுப்ப மாட்டம்னு சொன்னவரு ரண்டுநாக் கழிச்சு, தி.மு.கவின் குறிக்கோள் தனித் தமிழ் ஈழந்தான்னு சொல்றாரு அமுதா!

அமுதன் : மாறி மாறிப் பேசறதையே குறிக்கோளாக் கொண்டவருதான் இந்தக் கருணாநிதி. இவரு தனித் தமிழ் ஈழம் மலர மாநாடு நடத்தித் தீர்மானம் போட்டுப் போராடி ஈழத்தைப் பெற்றுக் கொடுத்திட்டாலும்.. இனியெலா இந்த வசனத்தை நம்ப யாரும் தயாரா இல்லே.

அல்லி : ஒரு வேளை தன் பேரன்களைச் சினிமா எடுக்கச் சொல்லி அதிலே, ‘என் உயிர் பிரிவதற்குள் தமிழீழத்தைப் பார்த்து விட வேண்டும்’ என்று வசனம் எழுத ஒத்திகை பார்க்கிறாரோ என்னவோ!

அமுதன் : ஓ..அப்படியும் இருக்கலாம்.தமிழீழம்னு பேரு வெச்சு திரைக்கதை வசனம் எழுதி அதக் கட்டாயம பாக்கச் சொல்லி கழகக் கண்மணிகளுக்குக் கட்டளை போட்டாலும் போடுவாரு.கட்டளை இல்லீன்னா அவுங்களும் பார்க்க மாட்டாங்க

அல்லி: அமுதன், படத்தைப் பார்த்தாத்தான் கழகத்துல பதவின்னா கட்டளை?

(கல்லூரி மணி ஒலிக்க இருவரும் சிரித்துக் கொண்டே வகுப்புக்குச் சென்றனர்).

Pin It