அவள் ஆடை உலர்த்தும்
அந்தக் கொடிக்கம்பியில்
ஒரு முறையாவது
ஊஞ்சலாடிவிட வேண்டுமென்ற
வேட்கையை தணித்துக் கொண்டது
இரவுக்குறியில் வந்த
முதுவேனில் மேகங்கள்.
வெப்பக் காற்றுதான்
அவள் வியர்வையில் நனைந்த
தாவணியில் நுழைந்து
பருவக்காற்றாகி வெப்பச்சலனமேறி
கொட்டுகிறது
கோடை மழையாய்
இடி மின்னலாய்
கோடையின் காதல் தாண்டவம் காண்.
- சதீஷ் குமரன்