குரல் வழியே எனை நிரப்பும்
சிறு வெயில் நீ
நின் காதல் எண்ணித் தவித்திருக்கும்
பெரும் மழை நான்

உள்ளம் பூத்த நெல்மணிக்கு
உக்கிரத் தூது இந்த நெல்லிக்கனி
அன்பைக் கோர்க்கும் மின்மினிக்கு
ஆதி ஆப்பிள் இந்த பிள்ளைமுனி

உன் உறவில் தானே இவன் பூந்தோட்டம்
உன் சிறகில் தானே இவன் தேரோட்டம்
கன்னம் பூத்த கனவே
நீ கண்ணன் இவனின் அவளே

இதயம் பேசும் இசையின் வடிவம்
உனை இசைத்துப் பேசும் எந்தன் கடிதம்
ஊதா நிறம் உன்னை வரையும்
அதில் சிறகு பூட்டி என் எண்ணம் கரையும்

என்னை நிகழ்த்தும் சிருங்காரம் நீ
புன்னை வனத்துப் புகழாரம் நீ
நீ இன்றி நான் ஏது பெண்ணே
என் வனமெல்லாம் நின் காந்தள் கண்ணே

- கவிஜி

Pin It