காதல் என்பது ஒரு பரிவர்த்தனை
காதல் என்பது
ஒரு பரிதவிப்பு
காதல் என்பது
கனவின் நீட்சி
காதல் என்பது
ஒரு ஆரவாரம்
காதலுக்குக் காயமாற்ற
தெரிவதேயில்லை
அறிவின் பிடி
அகப்படா அன்பின்
பேரிரைச்சல்
சொற்கள் உணரா
உணர்ச்சிக் காவியம்
காதலால் மட்டுமே
காதலிக்க முடியும்
மரணமறியா
மர்மதேசம்..
கடல் பொங்கும்
பௌர்ணமி வெளிச்சம்
கழிவிரக்கம் தேடா
கிறக்கத்து பிதற்றல்
முதல் மகவுப் புன்னகை
யாமத்துப் பெருமௌனம்
புயலாட்டி அமர்ந்த
பேரமைதி
தீரா ஏக்கத்து
பெருமூச்சு
கைவரப் பெற்றால்
குபேரச் செல்வம்
கடந்து வரயியலா
காலப்பெரு வழு
தீரத்தீர சேரும்
சேமப்பெரு நிதி.

- இசைமலர்

Pin It