"ஆச்சாரியார்"

"மூதறிஞர்"

"சக்கரவர்த்தி"

rajaji 320என்று பார்ப்பன பரிவாரங்களால் பரிவட்டம் சூட்டப்பட்ட இராஜகோபாலாச்சாரியார் 10.12.1878-ல் சேலத்தில் பிறந்து தனது 94ம் வயதில் 25.12.1972ல் சென்னையில் மறைந்தார். தந்தை பெரியார் அவர்களின் அணுக்கத் தொண்டராய் இருந்த போதிலும், வாழ்நாள் முழுதும் தனது இனத்திற்கு நல்ல விசுவாசியாக, சேவகராக வாழ்ந்தார் என்பதையும் தாண்டி பார்ப்பன தர்மத்தைப் பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்றே சொல்ல வேண்டும். அதனால்தான் பெரியாரை தன் அன்பார்ந்த எதிரி என்றார். ஜாதிப்பற்றற்ற ஒரு சீர்திருத்தவாதியைப்போல் காட்டிக் கொள்ள முயற்சித்திருந்தாலும், அவர் வாழ்நாள் முழுதும் ஆற்றிய "திருப்பணிகளை" பட்டியலிட்டாலே அவை அவரின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும்.

மனுதர்மவாதி:

  சுயமரியாதை இயக்கத்தின் ஆரம்ப காலகட்டங்களிலேயே அதன் செயல்பாடுகளைக் கண்டு கொதித்தவர் இராஜாஜி. இந்துமத, வேத, புராண, சாஸ்திரக் குப்பைகளை சுயமரியாதை இயக்கம் கேள்விக்குறியாக்கி, பார்ப்பனர்களின் வர்ண பேத சூழ்ச்சிகளை வீதிக்குக் கொணர்ந்து, அவற்றைத் தீயிட்டுப் பொசுக்கிய நேரத்தில் மனுதர்மத்திற்கு ஆதரவாக வக்காலத்து போட்டவர் இராஜாஜி. "மனுதர்மம் அருமையான நீதியைக் கொண்டது. மனுசாஸ்திரத்தை எதிர்ப்பது தற்கொலைக்குச் சமம்" என்று சொல்லி சுயராஜ்யப் பத்திரிக்கையிலே தொடர் கட்டுரைகளை தீட்டியதோடு, திருவில்லிப்புத்தூரில் நடைபெற்ற காங்கிரஸ் தாலுக்கா மாநாட்டில், சுயமரியாதை இயக்கம் தெய்வங்களையும், அவதாரங்களையும், புண்ணிய ஸ்தலங்களையும், பெரியோர் சாஸ்திரங்களையும் நிந்திப்பதாக குற்றப்பத்திரிக்கை வாசித்து, இவர்களின் ஜாதி துவேஷத்தை ஒழிக்க வேண்டும் என தன் தலைமை உரையில் குறிப்பிட்டவர்.

தீண்டாமையை ஒழிக்க வேண்டி காங்கிரசால் ஒதுக்கப்பட்ட நிதியை தனது பெயரில் வைத்துக்கொண்டு, அதனால் ஒரு காரியமும் செய்யாமல், மற்றவர்களையும் செய்யவிடாமல் தடுத்ததாக குடியரசு பத்திரிக்கை குற்றம் சாட்டியது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி "பிறவியில் ஜாதி வித்தியாசம் பார்க்கக்கூடாது" என இயற்றிய தீர்மானத்தை எதிர்த்து, இராஜினாமா கடிதம் கொடுத்ததோடு தனது நண்பர்களையும் இராஜினாமா கடிதம் கொடுக்க வற்புறுத்தியவர் இராஜாஜி. பால்ய விவாக தடைச்சட்டத்தை பார்ப்பனர்கள் எதிர்த்தபோது, பிராமணர்-பிராமணர் அல்லாதார் சண்டை இல்லாதுபோனால் தென்னாட்டு பிராமணர்கள் அந்தச் சட்டத்தை எதிர்த்திருக்க மாட்டார்கள் என்று வியாக்யானம் புரிந்தவர்.

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் (26.6.1952) கலந்து கொண்டு "அவரவர் குலத்தொழிலை அவரவர் செய்ய வேண்டும். சலவைத் தொழிலாளர்களாகிய நீங்கள், துணியைக் கிழிக்காமல் சலவை செய்வது எப்படி என்பதைத்தான் கற்றுகொள்ள வேண்டும். எல்லோரும் படிக்க ஆரம்பித்தால் இந்தத் தொழிலை வேறு யார்தான் செய்வார்கள்?" என தன் பிறவித் திமிரை வெளிப்படுத்தியவர் இராஜாஜி.

கொலைக்குற்றம்:

  மோட்டார் கார்கள் பயன்படுத்தப்படாத காலம். நாமக்கல்லிற்கு ஒரு வழக்கு தொடர்பாக சென்று குதிரைவண்டியில் சேலம் திரும்பிக் கொண்டிருந்தார் இராஜாஜி. நள்ளிரவு நேரம். வரும் வழியில் சுங்கச்சாவடியில் அவரது வண்டி நிறுத்தப்பட சுங்கப்பணத்தை வசூல் செய்வதற்காக வண்டியின் பின்புறமாக வந்து இராஜாஜியை எழுப்ப முயற்சிக்கிறார் காவல்காரர். நல்ல தூக்கத்தில் இருந்த இராஜாஜி காவல்காரனை வழிப்பறிக் கொள்ளையன் என நினைத்து தன் கைத்துப்பாக்கியால் சுட அவர் அந்த இடத்திலேயே மயங்கி விழுகிறார். பின் அவர் காவற்காரர் என்பதை அறிந்து தனது வண்டியிலேயே ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வழியிலேயே அந்தக் காவற்காரர் இறந்து விடுகிறார். இது தொடர்பாக காவல்துறை இராஜாஜி மீது கொலைக்குற்றம் சுமத்த, வழக்கு நீதிமன்றம் சென்றது. நாமக்கல் மாவட்ட துணை ஆட்சியராகப் பணிபுரிந்த டி.ரங்காச்சாடியாரும், இராஜகோபாலாச்சாரியாரும் நண்பர்கள். நெருங்கிய தொடர்பு உண்டு என்பதால் அவரது தலையீட்டில் தற்காப்பிற்காக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டததாகக் கூறி அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த செய்தி 1949ல் வெளியான அவரது வாழ்க்கை வரலாறு நூலில் இடம்பெற்றுள்ளது. இவர்தான் மூதறிஞர் என்று பாராட்டப்பட்டவர்.

இந்திக்கு ஆதரவு:

 1937ல் சென்னை மாகாண பிரதமராக பதவி வகித்த போது இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி செய்த எந்த மாகாணத்திலும் கொண்டு வரப்படாத இந்தி மொழி கட்டாயப் பாடத்திட்டத்தைக் கொண்டு வந்தவர். 1938ல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தபோது பொப்பிலி அரசரை நீதிக்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக வற்புறுத்திய பெருமான். பொப்பிலி அரசர் விலகுவதன் மூலம் நீதிக்கட்சியையே செயலிழக்கச் செய்துவிடலாம் எனக் கருதி, பதவி விலகவில்லையெனில் ஜமீன்தாரி ஒழிப்பு மசோதாவைப் பயன்படுத்தி உங்கள் ஜமீன் சொத்துக்களை அரசுடமையாக்கி விடுவேன் என்று மிரட்டினார். பொப்பிலிராஜா பதவி விலகியதும் நீதிக்கட்சித் தலைவர்களால் பெல்லாரி சிறையில் அடைபட்டிருந்த பெரியார் நீதிக்கட்சித் தலைவரானதுதான் ஆச்சாரியார் ஆப்பசைத்த குரங்கான கதை.

இந்தி எதிர்ப்புப்போரில் கைதாகி சிறையில் மாண்ட தாளமுத்து குறித்து சட்டமன்றத்தில் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பிய போது "தற்குறி தாளமுத்து தேவையில்லாமல் சிறைபட்டு மாண்டார்" என தன் அதிகார மமதையை வெளிப்படுத்திய சக்கரவர்த்தி !

மொழிவாரி மாநில எதிர்ப்பு:

  மொழிவாரி மாநிலக் கோரிக்கை வலுவடைந்த நேரத்தில் அதை வீழ்த்தும் விதமாக பசல்அலி கமிஷன் பரிந்துரைப்படி இந்தியாவை தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு, மத்தியப்பகுதியாகக் கொண்டு தட்சிணப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், மேற்குப்பிரதேசம், கிழக்குப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் என ஐந்து பிரதேசங்களாகப் பிரிக்கப்போவதாக பிரதமர் நேரு அறிவித்தார். நேருவின் இந்தப் பிரகடனத்தை இராஜாஜி ஆதரித்ததோடு அதற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். சென்னையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் "மொழிவாரி மாநில அரசு கேட்பவர்கள் காட்டுமிராண்டிகள்" எனக் கூச்சலிட்டார். அய்தராபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மகாசபையிலும் இதே கருத்தை வெளியிட்டார்.

1952ல் ஆந்திரம் தனி மாநிலமாக பிரிந்துவிட்ட நிலையில், சென்னை ராஜதான்ய அரசவையை தமிழில் நடத்த வேண்டும் என ஒரு மசோதா மேல்சபையில் கொண்டுவரப்பட்டபோது காங்கிரஸ் ஆதரவுடன் அந்த மசோதாவை எதிர்த்து தோற்கடித்தவர் இராஜாஜி.

சக்கரவர்த்தி திருமகன்:

திராவிடர் இயக்கம் இராமாயணத்துக்கு எதிராக தீவிரப்பிரச்சாரத்தை மேற்கொண்ட போது கல்கி வார இதழில் சக்கரவர்த்தி திருமகன் என தலைப்பிட்டு இராமாயணத்தை கட்டுரை வடிவில் எழுதியவர் இராஜாஜி. மூகாஜி என்ற பெயரில் முரசொலியில் இராஜாஜிக்குப் பதிலடி கொடுத்தார் கலைஞர். டெல்லியில் ராமலீலா என்ற பெயரில் இராவணன் உருவப்பொம்மைகளை எரிப்பது தொடர்ந்தால் தென்னாட்டிலும் இராமனை எரித்து இராவணலீலாக்கள் நடத்தும் காலம் வந்தே தீரும் என அதில் எச்சரித்தார். இது நடந்ததோ 1954ல். சரியாக இருபது வருடங்களுக்குப் பின்னர் டெல்லியில் நடைபெற இருந்த இராமலீலா நிகழ்வில் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் கலந்து கொள்ளவிருந்ததாக அறிவிக்கப்பட்டது. இதைக் கேள்வியுற்ற அன்னை மணியம்மையார் அவர்கள் "டெல்லியில் இராமலீலா நடந்தால் தமிழ்நாட்டில் இராவண லீலாவை நடத்துவோம்" என பிரதமர் இந்திராகாந்தி அவர்களுக்கு ஓலை விடுத்தார். இராமலீலா நடந்தது. இராவணலீலாவும் நடந்தது. அன்னை மணியம்மையார் தலைமையில் திட்டமிட்டபடி சென்னை பெரியார் திடலில் தோழர்களின் உணர்ச்சிப்பிழம்பாய் கூடினர். தமிழக அரசும், காவல்துறை அதிகாரிகளும் இராவணலீலாவைக் கை விடும்படி கேட்டுக் கொண்டதையும் மறுத்து சிங்கமென சிலிர்த்தார் அன்னை மணியம்மையார். இராமன், இலட்சுமணன், சீதை உள்ளிட்ட உருவ பொம்மைகள் தீக்கிரையாக்கி தோழர்கள் கைதாகினர்.

குலக்கல்வித் திட்டம்:

1954ல் தமிழக முதல்வராக பதவி வகித்த இராஜாஜி ஒரு கல்வித்திட்டத்தைக் கொண்டுவந்தார். கிராமப்புற மாணவர்களின் பள்ளிப் படிப்பை மூன்று மணி நேரமாகக் குறைத்து மீதி நேரத்தில் அவரவர் பாரம்பரியத் தொழிலை செய்யலாம் என்றார். ஒடுக்கப்பட்ட மக்களை சவக்குழியில் தள்ளும் இந்தத் திட்டத்தின் சூழ்ச்சியை சரியாகப் புரிந்து கொண்ட பெரியார், ராஜாஜி கொண்டுவந்தது “குலக்கல்வித் திட்டம்” என்று விமர்சித்ததார். 24.1.54 அன்று ஈரோட்டில் “ஆச்சாரியார் கல்வித்திட்ட எதிர்ப்பு ” மாநாட்டை கூட்டினார்.

ஆச்சாரியார் தொடர்ந்து அத்திட்டத்தை கைவிட மறுக்கவே சென்னையில் 31.1.54ல் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை கூட்டி அதில் ஆச்சாரியாருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். “தோழர்களே! இந்தக் கல்வித் திட்டம் எவ்வளவு யோக்கியமற்றது! இந்தப் பார்ப்பனர்கள் நம்மை எவ்வளவு தூரம் கொடுமை படுத்துகிறார்கள். அடக்கி மிதித்து நசுக்குகிறார்கள் என்பதற்கு, இந்தக் கல்வித்திட்டமே போதுமானது என்பது விளங்கும். எவ்வளவு தைரியம்? இந்தக் காலத்தில் இவ்வளவு தைரியமாக நம்மைக் கொடுமைப்படுத்துகிறார்களே! இந்தக் கல்வித் திட்டம் கேடானது; எங்கள் மக்களை நசுக்குவது; நாங்கள் படிக்கக்கூடாது என்பதற்காகக் கொண்டு வரப்படும் அழிவுத் திட்டம் என்று சொன்னால், இவர்கள் இல்லை இதுதான் நல்ல திட்டம். மக்களை கெடுப்பதற்காக இப்படி பேசுகிறார்கள் என்று நமக்கு சொல்லுகிறார்கள். என்ன தைரியம்? எங்கள் நாட்டில் பார்ப்பானுக்குச் சமமாக வாழ எங்களுக்குத் தகுதியில்லை திறமையில்லை என்கிறார்கள். படிக்கவும் வசதி செய்து தரமாட்டேன் என்கிறார்கள். கொஞ்சம் மனிதனாகலாம் என்றாலும் அதற்கும் விடாமல் கல்வித்திட்டம் என்ற பெயரால் அவனவன் சாதித் தொழிலுக்கு போங்கள் என்று அதற்கும் வெடி வைக்கிறார்கள். உள்ளபடி இந்தக் கல்வித்திட்ட எதிர்ப்பு என்பதை ஓர் அரசியல் போராட்டமாகக் கருதி இதை நாங்கள் எதிர்க்கவில்லை. இதைச் சமுதாயப் போராட்டமாக, இனவாழ்வுப் போராட்டமாகக் கருதியே எதிர்க்கிறோம். எங்கள் இனத்துக்கு திராவிட இனத்துக்கு இந்த இனத்தையே தீர்த்துக் கட்டுவதற்காக வைக்கப்படும் பெருத்த வெடிகுண்டு என்று கருதியே இக்கல்வித் திட்டத்தை எதிர்க்கிறோம். இந்த எதிர்ப்பை போராட்டத்தை நாங்கள் எங்களுடைய ஜீவாதாரமான உயிர்நிலைப் போராட் டமாக கருதுகிறோம். ஆச்சாரியார் இந்தத் திட்டத்தை மாற்றவில்லையானால் நிச்சயமாக (அவர் பதவியை விட்டுப் போகிறாரோ இல்லையோ அது வேறு விசயம்) இது அவருடைய இனத்தின் அழிவுக்கே ஒரு காரணமாக இருக்கப் போகிறது.” என்று பெரியார் அறிவுறுத்தினார்.

தோழர்களே! பெட்ரோலும் தீப்பந்தமும் தயாராக இருக்கட்டும். நாள் குறிக்கிறேன் என அக்கிரஹார கூட்டத்திற்கு எச்சரிக்கை விடுத்தார். நாகையிலிருந்து குலக் கல்வித்திட்ட எதிர்ப்புப் படை சென்னையை நோக்கி புறப்பட்டது. பலத்த எதிர்ப்புக்குப் பின்னர் ராஜாஜி ராஜினாமா கடிதம் கொடுத்து ஓடினார். அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.

ராஜாஜி-காமராஜர்-நேரு:

நாகர்கோவில் மக்களவை இடைத்தேர்தலில் காமராஜர் வெற்றி பெற்றபோது அவர் இந்தியாவின் துணைப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என பத்திரிக்கைகள் எழுதின. அதைக்கண்டு பொறுக்க இயலாத இராஜாஜி "டில்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில் ஒரு குமாஸ்தா வேலைக்குத்தான் காமராஜ் லாயக்கே தவிர வேறு எந்த பொறுப்புக்கும் லாயக்கற்றவர்" என தன் காழ்ப்புணர்ச்சியைக் கொட்டினார். காமராஜரின் வளர்ச்சி மீது ஏற்பட்ட வெறுப்பில் காங்கிரஸ் மீதே தன் எதிர்ப்பைக் கக்கிய இராஜாஜியைப் பற்றி

 "இன்று இராஜாஜிக்கு ஏற்பட்டுள்ள அரசியல் ஏமாற்றம்தான் அவரை காங்கிரஸ் எதிரியாக்கியிருக்கிறது. இராஜாஜிக்கு வேதனை தருவது இதுதான். அதாவது நாகரீகமற்ற, படிப்பில்லாத, பட்டிக்காட்டுப் பேர்வழி (illeterate poor) என தாம் கருதிக் கொண்டிருக்கும் ஒருவர், தாம் முன்பு இருந்த இடத்தில் அமர்ந்துகொண்டு நன்றாக நிர்வாகம் நடத்திக் கொண்டு வருகிறாரே? என்ற மனவேதணைதான் ராஜாஜியை வாட்டுகிறது" என காங்கிரஸ் பார்லிமென்ட் கூட்டத்திலேயே தெரிவித்தார் பிரதமர் நேரு! (தினமணி சித்தூர் பதிப்பு: 25.3.1960)

பேராசை:

முதலமைச்சர், ஆளுநர், கவர்னர் ஜெனரல், மத்திய உள்துறை அமைச்சர் என சகல பதவிச்சுகத்தையும் சொட்டச்சொட்ட அனுபவித்த இராஜாஜி தான் நெடுங்காலம் வாழப்போவதாகவும், அக்காலம் முழுவதும் தனக்கு வரவேண்டிய பணி ஓய்வுக்காலத்தொகையை கணக்கிட்டால், தான் வசிக்கும் கிண்டி ராஜ்பவனத்தின் மதிப்பை விடக் கூடுதலாக வரும் என்றும், எனவே அரசு கிண்டி ராஜ்பவன் நிலம் முழுவதும் தனக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால் இந்தக் கோரிக்கையை அரசு நிராகரித்துவிட்டது.

(இந்தச் செய்தி ஆச்சாரியாரின் பென்ஷன் குறித்த தகவல் புத்தகத்தில் கண்டதாகக் கூறப்படுகிறது)

ஆச்சாரியார் பற்றி குடியரசு:

"ஶ்ரீ இராஜகோபாலாச்சாரியார் என்கிற ஓர் அய்யங்கார் பார்ப்பனர், தமிழ்நாடு முழுவதும் பெரிய சீர்திருத்தக்காரர் என்று பெயர் வாங்கியவர். தமிழ் மக்களையெல்லாம் அடியோடு ஏய்த்தவர். தனக்கு சாதி வித்தியாசம் இல்லை என்பதாகச் சொல்லிக் கொண்டும், தன்னிடம் பார்ப்பனத்தன்மை இல்லை என்று சொல்லிக் கொண்டும், பார்ப்பனீயத்தை விட்டு வெகுகாலமாகிற்று என்று சொல்லிக் கொண்டும், சில பார்ப்பனரல்லாத வாலிபர்களை ஏமாற்றிக் கொண்டும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை ஒழித்து, பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதில் இந்தியாவில் உள்ள பார்ப்பனரெல்லோரையும் விட அதிகமான கவலையும், அதற்கேற்ற சூழ்ச்சியும் கொண்டவர்." (குடியரசு 25.3.1928)

- கி.தளபதிராஜ்

Pin It

Act 1

இந்தத் தலைப்பே உங்களுக்குக் கொஞ்சம் அன்னியமாகத்தான் இருக்கும். இன்றைய காலத்தில் நாம் இப்படியான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துவதில்லை. வழக்கொழித்து விட்டோம். நாமே ஒருநாள் வழக்கொழிந்து போகப் போகிறவர்கள்தானே. என்ன ஏதும் காப்பி, டிபன், ஓட்டல் பத்தி சொல்லப் போறீங்களா, இன்னிக்கு ஒன்னு ரெண்டு ஓட்டல்களுக்கு இப்படி பேருங்க இருக்குதே-ன்னு நீங்க யோசிப்பதை நான் தடை செய்கிறேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கூத்தாடிகள், ஒழுக்கம் கெட்டவர்கள், மேனாமினிக்கிகள் என்று தீண்டத்தகாதவர்களாகப் பார்க்கப்பட்ட ஒரு கும்பலுக்கு சமூகத்தின் உயர்ந்த நிலையை ஏற்படுத்திக் கொடுத்ததில் மிக முக்கிய பங்கு வகித்தது சுகுண விலாச சபை.

pammal sambandha mudhaliarகூத்தாடிகள் என்கிற வார்த்தையைக் கண்டதும் நிச்சயம் நீங்கள் முடிவு செய்திருப்பீர்கள், இது கலைத் துறை தொடர்புடையது என்று. கலைத் துறை என்றாலே நமது பொது புத்தியில் பதிந்திருப்பது சினிமா மட்டும்தானே. இது நமது பொது புத்தியின் சாபக்கேடு. அதைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் கவைக்கு உதவாது. மேற்கொண்டுப் பார்ப்போம். சினிமாவிற்கும் முன்னோடியாக இருந்த நாடகக் கலையில் இருந்தவர்களை கூத்தாடிகள், கேடுகெட்டவர்கள், ஸ்திரி லோலன்கள், குடிகாரர்கள் என்று பலப்பட இந்த சமூகப் பழியாக பழிக்க, அவர்களுக்கு கலைஞர்கள் என்கிற சமூகத்தின் சிறப்பான அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்ததில் முன்னோடியாக இருந்தது சுகுண விலாச சபை.

சுகுண என்பது பத்தென்பதாம் நூற்றாண்டில் மிகப் பரவலாக இருந்த வார்த்தை போலும். தமிழின் முதல் நாவலாசிரியராக கருதப்படும் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் இரண்டாம் தமிழ் நாவலின் பெயரில் கூட இந்த சுகுண ஒட்டிக் கொண்டிருக்கும். அந்த நாவலின் பெயர் சுகுண சுந்தரி. உங்கள் காதில் சொப்பன சுந்தரி என்று விழுமானால் சந்தேகமே வேண்டாம், உங்களுக்கு இரண்டாம்தர தமிழ் சினிமா இரசனை என்கிற நோக்காடு பீடித்திருக்கிறது என்பதில். வேதநாயகம் பிள்ளை நவீன தமிழ் நாவல் இலக்கியத்தின் தந்தையா என்பதில் சர்ச்சை இருப்பது வேறு விசயம். அவருடைய ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்கிற நாவலுக்கு முன்பே ஈழத்தின் யாழ்பாணத்தில் இருந்தோ, திரிகோணமலையில் இருந்தோ தமிழின் முதல் நாவல் வந்துவிட்டதாக வரலாற்றுப் பதிவுகள் இருக்கின்றன. சரி தமிழின் முதல் நாவல் குறித்த விசாரணைக் கட்டுரை அல்ல இது என்பதால், நாம் மேற்கொண்டு சொப்பன….மன்னிக்கவும் சுகுண விலாச சபை குறித்துப் பார்ப்போம்.

பம்மல் கே. சம்பந்தம் என்றால், “ஆமா ஆமா தெரியுமே... காமெடி படம்” என்று முந்திரிக்கொட்டைத்தனமாக முந்திக் கொண்டு பரபரப்பதாக இருந்தாலும், சந்தேகமே வேண்டாம் இரண்டாம்தர சினிமா நோய் பீடிக்கப்பட்டிருக்கிறது என்பதில். பம்மல் கே. சம்பந்தம்தான் இந்த சுகுண விலாச சபைக்கு பின்னணியில் உயிர் மூச்சாக இருந்தவர். இன்னும் தெளிவாக இவரை அடையாளப்படுத்துவது என்றால் பம்மல் சம்பந்த முதலியார் என்று சொல்வது தகும். தமிழ் நவீன (அதாகப்பட்டது பத்தொன்பதாம் நூற்றாண்டு) நாடகக் கலையின் தந்தைகளில் ஒருவராக கருதப்படக் கூடியவர்களில் ஒருவர். மற்றொருவர் சங்கரதாஸ சுவாமிகள். சுகுண விலாச சபை என்கிற தமிழின் முதல் (இப்படி அடையாளப்படுத்துவதில் வரலாற்றுப் பிழை ஏற்பட்டுவிடாது என்பது என்னுடைய துணிபு) நவீன நாடகக் குழுவை உருவாக்கி, நாடகக் கலைக்கும், நாடகக் கலைஞர்களுக்கும் சமூகத்தில் ஒரு சிறப்பான இடத்தை உருவாக்கித் தந்தவர் சம்பந்த முதலியார்.

இந்த கட்டுரைத் தொடரில் அவரைக் குறித்து மட்டும் எழுதிச் செல்வதை விட, தமிழ் நாடகக் கலையின் வரலாற்றையும் இடை இடையே சொல்வது பொருத்தமாக இருக்கும் என்பதால், அதையும் செய்யலாம் என்று இருக்கிறேன். இன்றைக்கு தேர்ந்த திரைப்பட இரசனை மற்றும் சினிமா மொழி தெரிந்தவர்கள் தமிழ் திரைப்படங்களை கொஞ்சமும் மதிக்காமல், அசட்டையாக பார்ப்பதைப் போலவே பம்மல் சம்பந்த முதலியாரும் அவருடைய சிறு பிராயம் முதற்கொண்டு தமிழ் நாடகங்களை கீழ்த் தரமானவைகள் என்று நம்பியதுடன், அப்படியே விமர்சனமும் செய்து வந்திருக்கிறார். அப்படியான ஒருவர் எப்படி தமிழின் முதல் நவீன நாடகக் கலைக்கு உதவி செய்த ‘சுகுண விலாச சபை’ என்கிற தமிழ் நாடக சபையை உருவாக்கி இருப்பார் என்பதை அடுத்த தொடரில் தெரிந்து கொள்வோம்……

Act 2

சம்பந்த முதலியார் காலத்தில் (பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலாண்டில்) நாடகம் என்பது பெரும் அளவில் தெருக் கூத்து வடிவிலேயே இருந்திருக்கிறது. படிப்பறிவற்ற சமூகத்தின் பெரும் பகுதி இந்த தெருக் கூத்து நாடக வடிவிற்கு ஆதரவு அளித்திருக்கிறது. கல்வியறிவு பெற்று, சமூகத்தின் மேல்தட்டிற்கு நகர்ந்து விட்டதாகக் கருதிக் கொண்டவர்கள், தெருக் கூத்தை கீழ்த்தரமான கலை வடிவமாகப் பார்த்திருக்கிறார்கள். இந்த மண்ணில் ஆங்கிலேயர்களால், ஆங்கிலேயர்களுக்காக நடத்தப்பட்ட நாடகங்களும், ஆங்கிலேய நாடக இலக்கியமும் கல்வியறிவு பெற்றக் கூட்டத்திற்கு புதுமையான விசயமாகப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஆங்கிலேய நாடகக் கலை வடிவத்தை அடியொற்றி தமிழிலும் நாடகங்களைக் கொண்டுவர பலர் முனைந்து இருக்கிறார்கள். தமிழில் நாடகக் கலை என்று ஒன்று இருந்ததா? இருந்தது என்றால், இவர்கள் ஏன் வேலை மெனக்கெட்டு ஆங்கிலேயே நாடகக் கலை வடிவத்தை தமிழுக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற கேள்வி இயல்பாக எழக் கூடிய ஒன்றுதான்.

அப்படியான கேள்வி உங்களுக்கு எழவில்லை என்றாலும் எனக்கு எழுந்துவிட்டது. அப்புறம் என்ன வரலாற்றின் பக்கங்களை திருப்பிவிட வேண்டியதுதானே. இதோ திருப்பிவிடலாம். சங்க இலக்கியங்களின் முன் கால எல்லையில் உட்கார்ந்திருக்கும் தொல்காப்பியரிடம் இது பற்றி கேட்கலாம் என்று நினைத்து, ஏறத்தாழ பத்தாயிரம் வருடங்கள் பழமையான தொல்காப்பியத்தைப் புரட்டினால் நாடகம் என்கிற சொல் மிகத் தெளிவாக நமக்கு அகப்படுகிறது. நாடகக் கலை வடிவில் கூத்து என்பது மிக முக்கியமாக தொல்காப்பியத்தில் எடுத்துச் சொல்லப்படுகிறது. பல வகை கூத்துக்களின் பெயர்களை தொல்காப்பியர் நமக்குத் தந்தபடி இருக்கிறார்.

வெறிக் கூத்து

குன்றக்குரவை

ஆய்ச்சியர் குரவை

வள்ளிக் கூத்து

கழனிலைக்கூத்து

கருங்கூத்து

ஆமலைக்கூத்து

முன்தேர்க் குரவை

பின்தேர்க் குரவை

காடைக் கூத்து

கழைக் கூத்து

நாம் மேலப் பார்த்த அனைத்து கூத்துக்களும் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு நபர்களால் ஆடப்படுவது. ஆமலைக்கூத்து, பின்தேர்க் குரவை மற்றும் முன்தேர்க் குரவை ஆகிய கூத்துக்கள் போர்க் களத்தில் ஆடப்படும் கூத்துக்கள். ஆமலைக் கூத்து என்பது போரில் எதிரியை பொறிபறக்க பொரட்டியெடுத்த அரசன் தன் வெற்றியைக் கொண்டாடும் விதமாக தன்னுடைய வெற்றித் தேரின் மீது நின்றுகொண்டு போர் வீரர்கள் முன்னிலையில் ஆடும் கூத்து. முன்தேர்க் குரவை என்பது வெற்றி பெற்ற அரசன் தன்னுடைய வெற்றி வீரர்களின் தோளோடு தோள் கோர்த்துக்கொண்டு போர்க் களத்தில் ஆடும் கூத்து. பின்தேர்க் குரவை என்பது வெற்றி பெற்ற அரசன் தன்னுடைய தேரில் போர்க்களத்திலிருந்து வெளியேறும்போது வீரர்கள் தேருக்குப் பின்னால் கூத்தாடியடி வருவது.

இவை போக தொல்காப்பியர் தன்னுடைய காப்பியத்தில் மெய்பாட்டியல் பகுதியில் தொல் தமிழர்களின் நாடகக் கலை தொடர்பான பல விசயங்களைத் தருகிறார். ஆங்கிலேயர்கள் நாடகத்தை விளையாட்டு (play) என்று அடையாளம் காண்பதற்கு முன்பே தொல் தமிழர்கள் அதை விளையாட்டு என்று வகைப்படுத்திவிட்டார்கள். பின்ன தமிழன்னா சும்மாவா? தாரை, தப்பட்டைகளை அடித்து தரணிக்கே நாடகம் என்றால் என்ன என்று இலக்கணம் வகுத்தவன். தொல்காப்பியர் நாடகத்தை விளையாட்டு என்று குறிப்பிடுகிறார். உண்மைதானே. நாடகம் என்பது விளையாட்டு போன்ற நிகழ்த்துக் கலைதானே. விளையாட்டு என்கிற பொருள்தரும் ‘பண்ணை’ என்கிற சொல்லால் நாடகத்தைக் குறிக்கிறார் தொல்காப்பியர்.

அது மாத்திரமல்ல, ஒரு நாடக நடிகன் எத்தனை விதமான உணர்ச்சி பாவங்களை தன்னுடைய நடிப்பில் முகத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்கிற உணர்ச்சிப் பெயர்களின் பட்டியலையும் தருகிறார்.

நகை

அழுகை

இளிவரல்

மருட்கை

அச்சம்

பெருமிதம்

வெகுளி

உவகை

இப்படியான உணர்ச்சிகளை ஒரு நாடக நடிகன் பாவங்களாக தன்னுடைய உடம்பின் மூலமும், முகத்தின் மூலமும் வெளிப்படுத்த வேண்டும் என்கிறார் தொல்காப்பியர். இப்படியான உணர்ச்சி பாவங்களை நடித்துக் காட்டும் கலைஞர்களுக்கு அவர் தரும் பெயர்கள், கூத்தன், பாணன், விறலி, பொருநன் என்பவைகள். இதில் கூத்தன் என்கிற பெயர் சிவக்கடாட்சம் பொருந்தியது. தொல் தமிழன் இயற்கையின் வடிவாக வழிபட்ட சிவனே கூத்தபிரான்தானே.

தரணிக்கே வழிகாட்டும் விதமாக நாடக கலைக்கு இலக்கணம் வகுக்க வேண்டுமானால் தொல் தமிழனிடம் அதற்கான அறிவுப் பெட்டக புத்தகங்கள் இருந்திருக்கும்தானே. இருந்தது. அவைகளின் பெயர்களை தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய உரையாசிரியர்கள் நமக்குத் தருகிறார்கள்.

முறுவல்

சயந்தம்

குண நூல்

செயிற்றியம்

இசை நுணுக்கம்

இந்திர காளியம்

பஞ்ச மரபு

பரதசேனாபதீயம்

மதிவாணனார் நாடகத் தமிழ் நூல்

கூத்த நூல்

செயன்முறை நூல்

நாடகக் கலை குறித்து, நாடகக் கலையின் நுட்பங்கள் குறித்து, நாடகக் கலைஞர்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுப்பது குறித்து பனிரெண்டு நூல்கள் தொல் தமிழர்களிடம் இருந்திருக்கிறது. இவைகள் கணக்கில் வந்தவைகள். கணக்கில் வராதவைகள் குறித்து ஆடல்வல்லானுக்கே வெளிச்சம். இப்படி கணக்கில் வந்த நூல்களும் இன்றைக்கு நம்மிடம் இல்லை என்பது நாம் பெற்றுவந்த துர்பாக்கிய வரம் என்று சொன்னால் அது மிகையாகாது. தொல்காப்பியரை அப்படி கொஞ்சம் உட்காருங்கள் ஐய்யனே என்று சொன்னால் மாட்டேன் என்றா சொல்லப் போகிறார். அதனால் அவரை அப்படி உட்காரச் சொல்லிவிட்டு நாம் மீண்டும் சம்பந்த முதலியாரிடம் வருவோம்.

Act 3

ஐந்திலிருந்து நான்காயிரம் வருடங்களுக்கு முன்பாக நாடகம் என்கிற கலையை பல வடிவங்களிலும், பெயர்களிலும் வளர்த்தெடுத்த நம்மவர்களின் நாடகக் கலை எப்படி சீரழிந்தது என்பது குறித்த ஆராய்ச்சிக் கட்டுரை இதுயில்லை என்பதால், அதைப் பற்றி இங்கே நாம் பேசப் போவதில்லை. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் நம்முடைய நாடகக் கலை தேய்ந்து கட்டெறும்பும் பார்த்து சிரிக்கும் நிலைக்கு போய்விட்டது என்பதே பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதிக் காலங்களில் நமக்குக் கிடைக்கும் எழுத்துத் தரவுகள் தெரிவிக்கின்றன. சாமானிய மக்களின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய தெருக்கூத்து நாடகங்கள் (இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக சமூகத்தை, அதன் பிரச்சனைகளை பிரதிபலிப்பதாகவே நம்முடைய நாடகங்கள் இருந்திருக்கின்றன) முற்றிலும் அன்னியப்பட்டு புராணக் கதைகளையே பெரும்பாலும் தங்களின் பேசு பொருளாக கொண்டிருந்திருக்கின்றன.

பேசு பொருள் என்பதை விட பாடு பொருள் என்று சொல்வது தகும். பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நம் நாடகங்கள் மணிக் கணக்கில் பாடுபவைகளாகவே இருந்திருக்கின்றன. இதே நிலை பல நூற்றாண்டுகளுக்கு முன்பிலிருந்தே தொடர்ந்த ஒன்றாகவும் இருந்திருக்கிறது. கதாபாத்திரங்கள் மணிக் கணக்கில் பாடுவதே நாடகம் என்கிற அபத்தக் கொள்கை அன்றைய நாடகக் கலைகளில் ஒன்றாக இருந்திருக்கிறது. அது மாத்திரமல்ல, ஆளை அடிக்கும் வண்ணப் பூச்சுக்களை முகத்தில் பூசிக்கொள்வது, கதாபாத்திரங்களுக்கு தொடர்பே இல்லாத வகையில் ஆடைகளை உடுத்திக் கொள்வது (உதாரணமாக பிச்சைக்காரனாக இருந்தாலும் அவன் அரச உடையில் இருப்பது), ஆபாசமான அசைவுகளை வெளிப்படுத்துவது என்று பகுத்தறிவு பெற்ற எந்த ஒரு சமூகமும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்திருக்கிறது. இவைகளோடு சேர்த்து சில நாடகக் கலைஞர்களின் வாழ்வியல் ஒழுக்கங்களும் படு மோசமாக இருந்த காரணத்தால் அன்றைய தெருக்கூத்து நாடகக் கலை சமூகத்தால் கீழ்த்தரமானதாக கருதப்பட்டிருக்கிறது. இன்றைக்கும் ஒழுங்கீனமாக இருப்பவர்களைக் குறிக்க ‘குடியும் கூத்துமால்ல இருக்கான்’ என்று அடையாளப்படுத்துவது நமது வழக்கம். இங்கே கூத்து என்கிற வார்த்தை எத்தகைய ஒழுங்கீனங்களைக் குறிக்கிறது என்பதை சொல்லி தெளிய வைக்க வேண்டிய அவசியம் இல்லைதானே.

இப்பொழுதே இந்த நிலை என்றால் சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்பான நிலையை சொல்லியும் புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அன்றைய நிலையில் புதிதாக கல்வியறிவு பெற்றவர்களுக்கு இந்த நிலையானது இன்னும் படுமோசமாக பட்டிருக்கிறது. தமிழ் நாடகங்கள் என்றாலே அவைகள் அபத்தங்களும், ஆபாசங்களும் நிறைந்தவைகள் என்பது அவர்களுக்குள் ஊறிய ஒன்றாகி விட்டிருக்கிறது. போதாக்குறைக்கு அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆங்கிலேய நாடகங்கள் சமூகத்தின் மேல்தட்டு வர்க்கத்தினருக்கும், கல்வியறிவு பெற்ற கூட்டத்திற்கும் ஆங்கிலேயர்களால் நடத்திக் காட்டப்பட, அவைகளின் பண்பட்ட கலைத்தன்மையானது தெருக்கூத்துக்களை மேலும் சறுக்கி விழும்படி செய்து கொண்டிருந்தது. இது கல்வியறிவு பெற்றவர்கள் தெருக்கூத்துக்களை மேலும் சக்கையடியாக விமர்சிக்க வழி செய்தது. இப்படியாக விமர்சித்தவர்களில் ஒருவர் பம்மல் சம்பந்த முதலியார். அவருடைய பள்ளிக் காலத்திலேயே அவருக்கு தெருக்கூத்துக்களின் ஆபாசமானது முகத்தில் அறைவதைப் போல இருந்திருக்கிறது.

பள்ளிப் படிப்பையும் தாண்டிய சம்பந்தம் அவர்களின் வாசிப்பு பழக்கமும், அன்றைய நம் நாடகக் கலையின் அபத்தங்களை அவருக்கு எடுத்துக்காட்ட உதவியாக இருந்திருக்கிறது. பனிரெண்டு, பதிமூன்று வயதுகளிலேயே அவர் பல தலைப்புகளிலான ஆங்கிலம் மற்றும் தமிழ்ப் புத்தகங்களைப் படிக்கும் பழக்கமுடையவராக இருந்திருக்கிறார். இதற்கு முழுக் காரணம் அவருடைய தந்தை பம்மல் விஜயரங்க முதலியார். விஜயரங்க முதலியார் பள்ளி வாத்தியாராக தன் வாழ்க்கையைத் தொடங்கி, அன்றைய மிக உயரிய பதவிகளில் ஒன்றான இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல்ஸ் என்கிற பதவி வரை உயர்ந்தவர். அவர் தன் வாசிப்பிற்காக வீட்டில் சேர்த்து வைத்திருந்த ஆயிரக்கணக்கிலான ஆங்கில மற்றும் தமிழ்ப் புத்தகங்களே சிறுவனாக இருந்த சம்பந்தம் முதலியாரின் வாசிப்புப் பழக்கத்தை தூண்டி விட்டிருக்கிறது. புத்தகங்களை வாங்கி படிப்பது மாத்திரமல்லாமல், விஜயரங்க முதலியார் பல தமிழ் புத்தகங்களை அச்சிட்டு வெளியிடவும் செய்திருக்கிறார். இதன் காரணமாக தமிழகத்தின் எந்த மூலையில் புதிதாக எப்படியான ஒரு தமிழ்ப் புத்தகம் அச்சானாலும் அதன் ஒரு பிரதி இவருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த வகையிலும் நூற்றுக்கணக்கில் பல தமிழ்ப் புத்தகங்களை உடனுக்கு உடன் படிக்கும் வாய்ப்பும் சம்பந்த முதலியாருக்கு அந்த சிறுவயதிலேயே கிடைத்திருக்கிறது.

இந்த சிறுவயது வாசிப்புப் பழக்கமானது அவருக்கு அப்பொழுதே ஆங்கிலத்திலும் தமிழிலும் நல்ல புலமையைக் கொடுத்திருக்கிறது. இதன் காரணமாக சிறுவயதிலேயே கலை நயம் மிக்க விசயங்களில் அவருக்கு ஈடுபாட்டையும் கொண்டுவந்திருக்கிறது. சம்பந்தம் அவர்களின் தந்தை அவர் சிறுபிள்ளையாக இருக்கும்போதே ஆங்கிலேயர்கள் நடத்தும் ஆங்கில நாடகங்களுக்கு அவரை அழைத்துப்போவது வழக்கமாக இருந்திருக்கிறது. ஷேக்ஸ்பியரின் பல ஆங்கில நாடகங்கள் ஆங்கிலேயே நடிகர்களின் நாடகம் வழியாகவே அவருக்கு அறிமுகமாகியிருக்கிறது. வாசிப்பு அனுபவமும் அந்த நாடகங்களின் பண்பட்ட கலை வெளிப்பாட்டுத் தன்மைகளும் சேர்ந்து அவருக்குள் நாடகக் கலையின் மீது ஓர் ஈர்ப்பை உண்டாக்கியிருக்கிறது. இன்றைக்கு எப்படி சினிமா கலையானது சிறுவயதில் பலருக்குள் ஒரு ஈர்ப்பை உண்டாக்குகிறதோ அதேபோன்று சினிமாக் கலை நம் ஊருக்கு வந்திராத அன்றைய காலகட்டங்களில் (ஆங்கிலேய) நாடகக் கலையானது அன்றைய சிறுவர்களிடையே ஈர்ப்பை உண்டாக்கியது.

Act 4

சிறுவயதிலேயே தெருக்கூத்து நாடகங்களை சகட்டு மேனிக்கு விளாசியிருக்கிறார் சம்பந்த முதலியார். தெருக்கூத்து வடிவத்திலிருந்த அபத்த ஆபாச அம்சங்களையே அவர் விமர்சனம் செய்தாரே ஒழிய, தெருக் கூத்து நாடகக் கலையையே அல்ல. நம் நாடகக் கலையில் இருக்கும் அபத்த ஆபாசங்களை ஒழித்துக் கட்டினால் நம் நாடகக் கலையும் அற்புத வடிவம் பெறும் என்பதை அவருக்கு முதன் முதலில் உணர்த்தியது தெலுங்கு நாடகங்களே. அவருடைய பதினெட்டாம் வயதில் (வருடம் 1891) சென்னையிலிருந்த விக்டோரியா பப்ளிக் ஹாலில் கிருஷ்ண மாச்சார்லு என்பவரின் சரச வினோதனி சபா நடத்திய ஐந்து தெலுங்கு நாடகங்களைப் பார்க்கிறார். அந்த நாடகங்களே, உள்ளூர் நாடகங்கள் குறித்த அவருடைய விமர்சனப் பார்வையை முற்றிலும் புரட்டிப் போட்ட நாடகங்கள். நாடகங்களில் தானும் நடிக்க வேண்டும் என்கிற தீரா தாகத்தை அவருக்குள் உண்டாக்கியதும் இந்த நாடகங்களே. கல்வியறிவு பெற்ற மேட்டுக்குடி பிள்ளைகளுக்கு இப்படியான ஆசை என்பது அன்றைய சமூக சூழலில் மிகவும் கீழ்த்தரமாக பார்க்கப்பட்டது. கூத்தாடி என்றாலே கீழ்த்தரமான பழக்கங்களையும் ஒழுக்கங்களையும் உடையவன் என்கிற பொதுப்படையான பச்சைக்குத்தல் சிந்தனை அன்றைக்கு மேலோங்கியிருந்தது.

இந்த சமூக சூழலில்தான் சம்பந்தம் அவர்களுக்கு நாடகக் கலை பித்துப் பிடிக்கிறது. அந்த வருடம் சரச வினோதனி சபா சென்னையில் நடத்திய நாடகங்கள் சம்பந்தம் போன்ற பல படித்த மேட்டுக் குடி இளைஞர்களின் மத்தியில் நாடகக் கலை பித்தை உண்டாக்கி விட்டிருக்கிறது. சரச வினோதனி சபா தொழில் முறையில் நாடகங்களை நடத்தும் நாடகக் கம்பெனி கிடையாது. இது ஒரு அமெச்சூர் நாடகக் கம்பெனி. இதிலிருந்த அனைவரும் அமெச்சூர் நடிகர்கள். சென்னையில் அமெச்சூர் நாடகக் கம்பெனிகள் அதற்கு முன்பு இருந்ததில்லை என்று குறிப்பிடுகிறார் சம்பந்தம். நாடகங்கள் வேடிக்கை வினோத நிகழ்ச்சி போலவே கொத்தவால் சாவடி போன்று மக்கள் பெரும் அளவில் கூடும் இடங்களில் நடத்தப்படும் என்கிறார். அன்றைய சென்னையில் (அதாவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி காலகட்டங்களில்) இரண்டே இரண்டு தொழில் முறை நாடகக் கம்பெனிகளே இருந்திருக்கிறது. ஒன்று சுப்பராயாச்சாரி கம்பெனி; மற்றொன்று கோவிந்தசாமி ராவினுடைய மனமோஹன நாடகக் கம்பெனி. இந்த இரண்டு கம்பெனிகளும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சென்னைக்கு வந்து செங்காங் கடை என்கிற இடத்தில் நாடகம் நடத்துவதற்காக போடப்பட்டிருக்கும் ஓட்டுக் கொட்டகையில் புராணக் கதைகளை நாடகங்களாக நடத்தியிருக்கிறார்கள்.

பல்லாரியில் வழக்குரைஞராக இருந்தவர் கிருஷ்ண மாச்சார்லு. அவரைப் போலவே நாடகக் கலையில் விருப்பமும் ஈடுபாடும் கொண்ட பல படித்தவர்களை சேர்த்துக்கொண்டு அவர் உருவாக்கியதே சரச வினோதனி சபா. கிருஷ்ண மாச்சாருலுவின் சரச வினோதனி சபாவே பம்மல் சம்பந்தம் அவர்களின் சுகுண விலாச சபை உருவாக முதலும் முற்றிலும் உந்துதலுமான காரணம். இதை சம்பந்தம் அவர்களே மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார். அன்றைய சென்னை மாகாணத்தில் (தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் மற்றும் கேரளம்) இருந்த உயர் குடி மற்றும் படித்த சமூகமானது ஆங்கிலேய நாடகங்களைத் தவிர தமிழ் நாடகங்களைப் பார்ப்பதை ஒரு கேவலமான செயலாக கருதியிருக்கிறது. தமிழ் நாடகங்கள், படித்தவர்களால் படித்தவர்களுக்கு நடத்தப்படும் ஒன்று கிடையாது என்பது அன்றைய புரிதல்! இந்தப் புரிதலில் பழம் சட்டிப்பானைகளைப் போட்டு உடைத்தவர் கிருஷ்ண மாச்சார்லு. அவரைப் போல மெத்தப் படித்தவர்களை அமெச்சூர் நடிகர்களாகக் கொண்ட சரச வினோதனி சபா 1891-ல் சென்னையில் நடத்திய ஐந்து தெலுங்கு நாடகங்களும் சென்னையில் பெரும் பரபரப்பையே கிளப்பிவிட்டிருக்கிறது. அதிலும் சென்னையின் படித்த மேட்டுக் குடி சமூகத்தின் மத்தியில்.

ஒரு வக்கீலாவது நாடகம் நடத்தரதாவது என்று பரபரத்தபடியே சென்னையின் படித்த வாசிகள் எல்லாம் விக்டோரியா பப்ளிக் ஹாலில் அலைமோதி அந்த நாடகங்களைப் பார்த்திருக்கிறார்கள். இப்படிப் பார்த்தவர்களில் சம்பந்தம் அவர்களின் சகோதரர்களுள் ஒருவரான ஐயாசாமி முதலியாரும் ஒருவர். இந்த நாடங்களைப் பார்த்து வந்த ஐயாசாமி முதலியார் சம்பந்தம் அவர்களிடம் நாடகங்கள் மிகவும் நன்றாகவும், தரமாகவும் இருப்பதாக சொல்லியிருக்கிறார். அதுவரை உள்ளூர் நாடகங்களை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த சம்பந்தம் அவர்களுக்கு இது என்னடா அதிசயம் என்று தோன்றியிருக்கிறது. வரம் கொடுக்கும் சாமி வீடு தேடி வந்த கதையாக அடுத்த நாள் கிருஷ்ண மாச்சார்லு, சம்பந்தம் அவர்களின் வீட்டிற்கு அவருடைய தந்தையைப் பார்க்க வந்திருக்கிறார், விஜயரங்க முதலியாரை தன்னுடைய நாடகத்தைக் காண சிறப்பு விருந்தினராக அழைக்க. வாய்ப்பாகப் போனது என்று சம்பந்தம் அவர்கள் தந்தையுடன் அடுத்த நாள் சரச வினோதனி சபாவின் நாடகங்களைக் காண விக்டோரியா பப்ளிக் ஹாலுக்கு போயிருக்கிறார், அப்படியென்ன காணா அதிசயத்தை கண்டுவிடப் போகிறோம் என்கிற நினைப்பில். நிற்க இடமில்லாமல் படித்தவர்களின் கூட்டம் குழுமியிருக்கிறது. அந்த நாடகத்தைத் தான் எப்படி திறந்த வாயைப் மூடாமலும், வைத்த கண்ணை எடுக்காமலும் ஐந்து மணி நேரங்களுக்கு சிலை போல் பிரமித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்ததாக சம்பந்தம் அவர்கள் அவர் கைப்படவே எழுதியிருக்கிறார்.

Final Act

சரச வினோதனி சபாவின் நாடகங்களைப் பார்த்துவந்த சம்பந்தம் அவர்களுக்கு அன்று இரவு தூக்கம் கொள்ளவில்லை. தானும் அதுபோல நாடகத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை அவரை பிடித்துக் கொண்டுவிட்டது. ஆசை முடிவாகி தீர்மானமானது அந்த இரவே. சரச வினோதனி சபாவின் ‘சிரகாரி’ நாடகம் சம்பந்தம் அவர்களின் உள்ளத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எந்த அளவிற்கு என்றால், அதே போன்று ஒரு நாடகத்தை எழுதி, தான் அதில் நடிக்க வேண்டும் என்கிற அளவிற்கு. அடுத்த நாளே நாடகக் கதை எழுதும் காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் எழுதுவதற்கு கதைதான் தோன்றவில்லை. இருந்தாலும் நாடகக் கதை எழுதியே ஆகவேண்டும் என்கிற உந்துதலில் சகுந்தலை நாடகத்தை ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்து எழுதத் தொடங்கிவிட்டார். அந்த நாட்களில் அவருடைய சகோதரைத் தேடி வெங்கட கிருஷ்ண நாயுடு என்பவர் வந்திருக்கிறார். இவர் சம்பந்தம் அவர்களுக்கும் நண்பர்தான். சரச வினோதனி சபாவைப் போன்று தமிழில் ஒரு நாடக சபையை உருவாக்க வேண்டும் என்கிற முயற்சியை முன்னெடுக்கும் விசயமாக ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கும் பத்திரிக்கையை சம்பந்தம் அவர்களின் சகோதரர்களிடம் கொடுக்க வந்திருக்கிறார் வெங்கட கிருஷ்ண நாயுடு.

தான் எதைச் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தாரோ அது தானே தன் வீட்டைத் தேடி வருவதை அறிந்த சம்பந்தம் துள்ளிக் குதித்திருக்கிறார். தானும் அந்த கூட்டத்திற்கு வருவதாக சொல்லியிருக்கிறார். சம்பந்தம் தமிழ் நாடகங்களை சகட்டு மேனிக்கு வார்த்தை சாட்டையால் விளாசித் தள்ளுபவர் என்பது வெங்கட கிருஷ்ண நாயுடு அறிந்த சங்கதி. ஆகையால் நீ வந்து எங்களின் முயற்சியை கேலி செய்வதற்கா என்று தயங்கியிருக்கிறார். சரச வினோதனி சபாவின் நாடகங்களைப் பார்த்து தனக்கும் அதுபோன்று ஒரு நாடக சபையை உருவாக்க வேண்டும் என்கிற ஆசை வந்து விட்டதாகவும் சொல்லியிருக்கிறார். இதை நம்ப வெங்கட கிருஷ்ண நாயுடு தயாராக இல்லை. சம்பந்தம் கூட்டத்திற்கு வந்து எதாவது துடுக்குத்தனமாக பேசி முயற்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டால் என்ன செய்வது என்கிற பயம் அவருக்குள். அவருடைய பயத்தைப் போக்க சம்பந்தம் அவர்கள் தான் தமிழ் நாடகம் ஒன்றை நடத்துவதற்காக மொழி பெயர்த்துக் கொண்டிருக்கும் சகுந்தலை நாடகத்தின் கதையை எடுத்துவந்து அவரிடம் காட்டியிருக்கிறார். அதைப் பார்த்த பிறகே வெங்கட கிருஷ்ண நாயுடுவிற்கு நம்பிக்கை வந்திருக்கிறது. சரி நீயும் வரலாம் என்று அழைத்திருக்கிறார்.

அந்தக் கூட்டம் 1891 ஜூன் மாதத்தின் கடைசி வாரத்தில், மண்ணடிக்கு அடுத்த தெருவிலிருந்த ஜாக்கியஸ் பள்ளிக்கூட கட்டிடத்தில் நடந்திருக்கிறது. அந்தக் கூட்டத்தில் முப்பதிலிருந்து நாற்பது நபர்கள் கலந்து கொண்டதாக சம்பந்தம் எழுதுகிறார். சரச வினோதனி சபா போன்று தமிழிலும் படித்தவர்களைக் கொண்டு ஒரு நாடகக் கம்பெனி உருவாக்க வேண்டும் என்று கூட்டத்தில் பேசி முடிவு செய்யப்படுகிறது. அந்த முடிவின் படி நாடக சபையை உருவாக்க விருப்பமும் ஈடுபாடும் உடையவர்கள் சபையின் உறுப்பினர்களாக சேருவதற்கான கையொப்பம் இட்டிருக்கிறார்கள். அதில் முதலாவது கையெழுத்து போட்டவர் ஜெயராம் நாயக்கர். இவர் சம்பந்தம் அவர்களின் நண்பர். இரண்டாவது கையெழுத்து சம்பந்தம் அவர்கள். இவர்களைத் தொடர்ந்து மேலும் ஐந்து நபர்களே உறுப்பினர்களாக சேர்ந்து சபையை உருவாக்க கையெழுத்து  இட்டிருக்கிறார்கள். அவர்கள் ஊ. முத்துகுமாரசாமி செட்டியார், வி. வெங்கடகிருஷ்ண நாயுடு, அ. வெங்கடகிருஷ்ண பிள்ளை, ஜி.இ. சம்பத்து செட்டியார் மற்றும் சுப்பிரமணியப் பிள்ளை.

இந்தக் கூட்டம் முடிந்து 1891 ஜூலை மாதம் முதல் தேதியில் தம்புச் செட்டித் தெருவிலிருந்த ஜெயராம் நாயக்கருடைய வீட்டில் மீண்டும் இந்த ஏழு உறுப்பினர்களும் கூடி மாலை ஆறு மணிக்கு சுகுண விலாச சபையை முறைப்படி அறிவித்து தோற்றுவிக்கிறார்கள். இந்த கூட்டத்திற்கு தலைமை சம்பந்தம் அவர்கள். சுகுண விலாச சபை என்கிற பெயரில் சுகுண என்பதைப் பரிந்துரைத்தவர் ஊ. முத்துகுமாரசாமி செட்டியார். விலாசம் என்கிற வார்த்தை இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தவர் ஜி.இ. சம்பத்து செட்டியார். சுகுண விலாச சபை நாடகக் குழுவின் நிர்வாக சபை உறுப்பினர்களாக தேர்வானவர்கள் முத்துகுமாரசாமி செட்டியார், வெங்கடகிருஷ்ண நாயுடு, வெங்கடகிருஷ்ண பிள்ளை, ஜெயராம் நாயக்கர் மற்றும் பம்மல் சம்பந்தம் முதலியார். பிற்காலத்தில் தமிழகத்தில் உருவான அமெச்சூர் நாடக சபைகளுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்ந்த சுகுண விலாச சபையை உருவாக்கிய இந்த ஏழு பேரும் அப்பொழுது பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள்.

நவீன தமிழ் நாடகக் கலையின் வரலாற்றை எழுத உட்கார்ந்தால் அதில் முதல் மைல்கல்லாக வருவது சுகுண விலாச சபை. தமிழ் நாடகக் கலையின் பிதாமகர் என்று புகழப்படும் அளவிற்கு உயர்ந்தவர், அதை உருவாக்கி அதன் செயல்பாடுகளில் முக்கிய பங்குவகித்த பம்மல் சம்பந்தம் அவர்கள். சுகுண விலாச சபை நடத்திய பிரசித்தி பெற்ற நாடகங்களின் கதைகள் அனைத்தையும் எழுதியவர் சம்பந்தம் அவர்கள். சுகுண விலாச சபையை நடத்திக்கொண்டே பிற்காலத்தில் உயர்நீதிமன்ற வழக்குரைஞராகவும், உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் உயர்ந்தவர் சம்பந்தம் அவர்கள். அன்றைய காலகட்டத்தில் தமிழ் நாடகக் கலையில் சுகுண விலாச சபையின் மூலம் பல புதுமையான மாற்றங்களைக் கொண்டுவந்தவரும் சம்பந்தம் அவர்களே. நாடகக் கலை ஒழுக்கம் கெட்டவர்களுக்கானது என்கிற தமிழ்ச் சமூகத்தின் பிற்போக்குத்தனமான எண்ணத்தை உடைத்தெறிந்தவரும் அவரே. சமூகத்தின் மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றான நீதிபதி பதவி வகித்த ஒருவர் தமிழ் நாடகக் கலையின் முன்னேற்றத்திற்கு உழைத்தது, தமிழ் நாடகக் கலை குறித்த உயர்வான எண்ணத்தை சாமானிய மக்களிடையே கொண்டு செல்வதற்கு பெரிதும் உதவியது.

இருந்தும், எத்தகைய அபத்தங்களை ஒழித்து பண்பட்ட நாடகக் கலையை உருவாக்க சம்பந்தம் அவர்கள் தீர்க்கமாக உழைத்தார்களோ அந்த அபத்தங்கள் அவர் காலத்திலும் (சில சமயங்களில் நண்பர்களின் அழுத்தம் காரணமாக அத்தகைய அபத்தங்களை தானும் மேற்கொள்ள வேண்டியிருந்ததையும் சம்பந்தம் அவர்கள் வெளிப்படையாக எழுதுகிறார்) அவருக்குப் பின்பும் தமிழ் நாடக மேடையை பீடித்திருந்தது என்பதை மறுப்பதற்கு இல்லை. இன்றைய நிலையிலும் அத்தகைய அபத்தங்கள் வேறு உருவங்களில் தொடர்ந்து கொண்டிருப்பதுதான் ஆகச் சிறந்த நகைமுரண்.

- நவீனா அலெக்சாண்டர்

Pin It

ondi veeran

ஒரு குறிப்பிட்ட கதைத் தலைவரைப் பற்றிய கதை பல வரலாற்று நிகழ்ச்சிகளோடு இணைத்துப் பாடலாகக் கூறப்படும்போது அது வரலாற்றுக் கதைப்பாடலாகிறது. அந்த வகையில் கும்பினியரை எதிர்த்துப் போரிட்ட அருந்ததிய இனத்தைச் சேர்ந்த ஒண்டிவீரனின் (ஒண்டி-தெலுங்குச் சொல். ஒற்றை, தனி, தன்னந்தனி என்பது பொருள்)  கதை கும்மி, சிந்து, நாடகம் மற்றும் வில்லுப்பாட்டு வடிவிலும் கிடைத்துள்ளன. ‘பூலித்தேவன் சிந்து’, ‘பூலித்தேவன் கும்மி’ என்னும் நாட்டுப்பாடல்களில் ஒண்டிவீரன் பற்றிய செய்திகள் கிளைக்கதையாக இடம்பெற்றுள்ளன. ஒண்டிவீரன் பற்றி இதுவரை அச்சில் வெளிவராத முழுமையான வரலாற்றுக் கதைப்பாடல் ஒன்றும் வெளிவந்துள்ளது.

ஒண்டிவீரன்  கதைப்பாடல் செய்திகளுக்கும்  ஒண்டிவீரன் பற்றிப் பிற கதைப்பாடல்களில் உள்ள கிளைக்கதைகள் செய்திகளுக்கும் அடிப்படையில் சில நுணுக்கமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நெற்கட்டான் செவ்வயல் பாளையம் என்பது மறவர் (பூலித்தேவன்) பாளையமாக இருந்ததாக எழுதப்பட்ட வரலாறான பூலித்தேவன் கதைப்பாடல் கூறுகிறது. ஆனால்,நெற்கட்டான் செவ்வயல் பகுதியின் உண்மையான நிலவுடமையாளர்களாக ஒண்டிவீரனின் முன்னோர்களும், கால மற்றத்தில் அதே பாளையத்தின் தலைவனாக ஒண்டிவீரனும் திகழ்ந்துள்ளனர். “நெற்கட்டும் செவ்வயல் ஜமீன், அதைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகளில் வாழ்ந்த அந்த மண்ணின் மைந்தர்களான அருந்ததியர்கள், அன்று நிலவுடமையாளர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களில் சிறுநில உடமையாளர்களும், பெருநில உடமையாளர்களும் அடங்குவார்கள்” (எழில். இளங்கோவன், மாவீரர் ஒண்டிவீரன் பகடை: 15) எனும் கருத்து இதை நிரூபிக்கிறது.

இதற்கான கல்வெட்டு, செப்புப் பட்டயங்கள், இலக்கியங்கள், ஓலைச்சுவடி ஆவணங்கள் எதுவும் எழுத்தறிவு மறுக்கப்பட்ட அருந்ததிய மக்களிடம் இல்லாத காரணத்தால் உண்மை வரலாறு திரிக்கப்பட்டுள்ளது. ஆதிக்க சாதியினர் அருந்ததியர் சமூகத்தினரைத் தம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்படி செய்து கொண்ட சதிச் செயலே இது எனலாம். பாளையத் தலைமையை நயவஞ்சகமாகப் பறித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் உண்மையான அருந்ததியப் பாளையத் தலைவனின் வாரிசைப்  பணியாளாக நியமித்து அடிமையாக்கிக் கொண்ட தந்திரமும் ஏற்கனவே எழுதப்பட்ட  பூலித்தேவன் வரலாற்றில் நிகழ்ந்துள்ளது. பூலித்தேவனின் படைத்தளபதி என்று சொல்லப்படும் ஒண்டிவீரன் வரலாறு குறித்தும் இதே பெயரில் தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்து மடிந்த வேறு சில ஒண்டிவீரர்களையும் அறிமுகம் செய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

நெற்கட்டான் செவ்வயல்ஒண்டி வீரன்: 

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவிலிலிருந்து வடமேற்கில் ஏறத்தாழ பத்து கிலோமீட்டர் தொலைவில், வாசுதேவ நல்லூரிலிருந்து கிழக்கில்  ஏறத்தாழ ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள மேடான பூமியும், பெரிய நீர் நிலையும், கண்ணுக்கெட்டும் தொலைவில் ஊரைச் சுற்றி விளைச்சல் நிலங்களும் கொண்ட செழிப்பான பூமி நெற்கட்டான் செவ்வயல்.

18-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் சில பகுதிகளில் அருந்ததியர்கள் ஜமீன்களாக இருந்தனர். இந்த நெற்கட்டான் செவ்வயலும் அருந்ததியர் ஜமீனாக இருந்தது. அந்த ஜமீன் பரம்பரையில் கி.பி.1710-ஆம் ஆண்டு பெத்த வீரன், வீரம்மா ஆகியோருக்கு மகனாக வீரன் பிறந்தார். சிறு வயதிலேயே வாள் வீசவும், கம்பு சுத்தவும், குதிரை சவாரி செய்யவும், பறையடிக்கவும், பாட்டுப்பாடவும், ஒயிலாடவும், தமது குலத்தொழிலான தோல் தொழிலையும் கற்றுத் தேர்ந்தார். தமது ஜமீனில் திசைக் காவல் புரிந்து வந்த சித்திரபுத்திரத் தேவரின் மகனான காத்தப்பத்துரை என்ற பூலித்தேவனைத் தனது உற்ற நண்பனாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். வீரனுக்குத் தமது முறைப்பெண் வீரம்மாவுடன் திருமணமும் நடந்து முடிந்தது.

இந் நிலையில் வீரனது தந்தை மரித்துப்போக, ஜமீன் பொறுப்பை வீரன் ஏற்றுக்கொண்டார். தமது நண்பர் பூலித்தேவனும் உடனிருந்து ஆண்டுவந்தனர். ஜமீன்முறை மாறிப் பாளையமாக மாற்றம் பெற்ற போது ‘வடக்கத்தான் பூலித்தேவன்’ என்ற சிறப்புக்கேற்ப, ஊரின் வடக்குப் பகுதியைத் திசைக்காவல் புரிந்து வந்த பூலித்தேவன், இருளப்பபிள்ளை என்பவரின் சூழ்ச்சியாலும், தமிழகத்தில் நிகழ்ந்து வந்த சாதிய இழிவு நிகழ்வுகளாலும், தமது தேவரின மக்களின் குடிப்பெருக்கத்தாலும் பாளையப் பொறுப்பைத் தாமேற்றார். வீரனும் பூலித்தேவனும் சேர்ந்தே ஆண்டு வந்தனர். வீரன் படைத் தளபதியாகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். பகைவருக்கெதிரான போரைத் தாமே தலைமையேற்று நடத்தி வந்தார்.

இக்கால கட்டத்தில் தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி நடைபெற்றதால் தமிழகத்தை 72 பாளையங்களாகப் பிரித்து ஆண்டனர். அதில் தெலுங்குப் பாளையங்கள் ஐம்பத்தி ஆறாகவும் தமிழ்ப் பாளையங்கள் பதினாறாகவும் இருந்தன.பதினாறு தமிழ்ப் பாளையங்களுக்கும் தலைமையிடமாக நெற்கட்டான் செவ்வயல் திகழ்ந்தது. இந்நிலையில் அரசியல் தந்திரம் கொண்ட ஆங்கிலேயர் ஆற்காடு நவாப்பிற்கு இராணுவ உதவி செய்து அதன் மூலம் பாளையங்களில் வரி வசூலிக்கும் பொறுப்பை ஏற்றனர். ஆங்கிலேயருக்கு ஏன் வரி கொடுக்க வேண்டுமென்று 1755-ஆம் ஆண்டு வீரனும் பூலித்தேவனும் எதிர்த்தனர்.

அந்நியருக்கு வரி கொடுக்க மறுத்ததால்  நெற்கட்டான் செவ்வயல் மீது போர் தொடுக்க ஆங்கிலேயப் படைத் தளபதி ஹெரான் தலைமையில் தென்மலை என்ற பகுதியில் முகாமிட்டனர். அந்த முகாமிற்குள் வீரன் தனி ஆளாகச் சென்று, ஆங்கிலேயரின் சபதத்தை முறியடிக்கும் விதமாகப் பட்டத்து வாள், குதிரை, கொடி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு பீரங்கியை அவர்கள் முகாமை நோக்கித் திருப்பி வைத்துவிட்டு நகராவை முழக்கி நெற்கட்டான் செவ்வயலை நோக்கி விரைந்து வந்தார். ஒண்டியாகச் (தனி ஆளாக) சென்று சவாலை வென்று வந்ததால் ஒண்டிவீரன் எனப் பெயர் பெற்றார். பின்னர், ஒண்டிவீரன் தலைமையில் படைகள் புறப்பட்டுச் சென்று ஹெரான் படையைத் தோற்கடித்தது. பின்னர், 1756 மற்றும் 1757-ஆம் ஆண்டுகளில் மீண்டும் ஒரு போர்க் களத்தை ஒண்டிவீரன் சந்தித்தார்.

அப்போதைய திருநெல்வேலிச் சீமையில் சுதந்திர உணர்வுக்குக் களங்கம் விளைவிப்பதுபோல் எட்டயபுரம் பாளையம் உட்பட  திருநெல்வேலிச் சீமையின் தெற்குப் பாளையங்கள் காணப்பட்டன. அப்பாளையங்கள் மீது போர் தொடுத்து ஒண்டிவீரனும் பூலித்தேவனும் வெற்றி கண்டனர். அங்கு கிடைத்த பெரும் பொருட்களைச் சூறையாடி நெற்கட்டான் செவ்வயயலுக்குக் கொண்டுவந்தனர். இத்தகைய படையெடுப்புகள் மூலம் தமிழ்ப் பாளையங்களின் ஆதரவை வெள்ளையருக்கு எதிராகத் திரட்டினார் ஒண்டிவீரன். இதனை அறிந்து யூசுப்கான் என்ற மருதநாயகம் பெரும்படையுடன் மதுரையிலிருந்து புறப்பட்டு வந்த போது, ஒண்டிவீரனும் பூலித்தேவனும் பெரும்படையுடன் தமது எல்லைக்கு விரைந்தனர். மருதநாயகம் நெல்லைச் சீமைக்கு வராமல் கங்கைகொண்டானில் தங்கினார். அங்கு சென்ற இவர்களது படைகள் கடுமையாக மோதின. அந்த இடமே  இரணகளமானது. முடிவில் யாருக்கும் வெற்றி தோல்வியின்றித் திரும்பிச் சென்றனர். மருதநாயகம் எஞ்சிய படையுடன் நெல்லைக்குச் சென்றார். ஒண்டிவீரன் தமது படைகளைப் பலப்படுத்தினார்.

ஆழ்வார்குறிச்சி அழகப்பன் ஆங்கிலேயருக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் ஒண்டிவீரன் தமது படையுடன் சென்று  அழகப்பனைத் தோற்கடித்து சிறைப்பிடித்து வந்தார். இதையறிந்து மருதநாயகம் ஒண்டிவீரனைத் தாக்க ஆழ்வார்குறிச்சி வந்தபோது ஒண்டிவீரன் தமது தளபதி வெண்ணிக்காலாடி மூலம் தப்பித்துச் செவ்வயல் வந்தார்.

1759-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் நாள் மருதநாயகம் பெரும்படையுடன் சென்று ஊத்துமலை, சுரண்டை ஆகிய பாளையங்களைக் கைப்பற்றினார். அவைகளை அதே ஆண்டு நவம்பர் 6-ஆம் நாள்  பெரும்படையுடன் சென்று மீட்டெடுத்தார் ஒண்டிவீரன். கோபம் கொண்ட மருதநாயகம் தொண்டைமான் படையுடன் சேர்ந்து வாசுதேவநல்லுரைத் தாக்கினார். இருபது நாள் நடைபெற்ற போரில் சுமார் 3000 படைவீரர்களுடன் ஒண்டிவீரனும் பூலித்தேவனும் இரு படைகளாகச் சென்று போரிட்டு வென்றனர். ஒருமுறையாவது வெற்றிபெற எண்ணி 1760-இல் நெற்கட்டான் செவ்வயல் மீது நேரடியாக மருதநாயகம் போர் தொடுத்தார். அதிலும் தோல்வியையே தழுவினார்.

1767-ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் நாள் ஆங்கிலேயப் படைத் தளபதி டொனால்ட் காம்பெல் தலைமையில் வந்த படை நெற்கட்டான் செவ்வயலைத் தாக்கியது. நிலைமையை உணர்ந்த பூலித்தேவன் தலைமறைவானார். ஒண்டிவீரன் போர்க்களத்தில் இருந்தார். இறுதியில் பூலித்தேவன் ஆங்கிலேயருக்குப் பயந்து சங்கரன்கோவில் ஆவுடை நாச்சியார் கோவிலுக்குச் சென்று தலைமறைவானவர் வெளியே வரவே இல்லை. இதன் மர்ம முடிச்சு இன்றுவரை அவிழ்க்கப்படவில்லை.

பூலித்தேவனின் தலைமறைவுக்குப்பின் மீண்டும் ஒண்டிவீரன் பாளையப் பொறுப்பை ஏற்று பூலித்தேவனின் பிள்ளைகளைக் காத்து வந்தார். களக்காடு, கங்கைகொண்டான், திருவில்லிபுத்துர், புதுக்கோட்டை ஆகிய போர்களில் வெற்றிகண்டார். இறுதியாக நடைபெற்ற தென்மலைப்போரில் மாவீரன் ஒண்டிவீரன் போர்க்களத்தில் மரணமடைந்தார்.

நாளடைவில் பல ஊர்களிலிருந்து வந்து குடியேறிய தேவரினத்தோர் நெற்கட்டான் செவ்வயலின் பெரும்பான்மையினராகவும், பூர்வீக மக்களான அருந்ததியரும், பறையரும் பெருமளவில் போர்க்களத்தில் மாண்டுபோனதால் சிறுபான்மையினராகவும், நிலவுடைமை அற்றவர்களாகவும் மாற்றம் பெற்றனர். பின்னர் அவர்கள் பஞ்சம் பிழைக்க மூணாறு, கோவில்பட்டி, தூத்துக்குடி, நெல்லை எனப் பல ஊர்களுக்கும் பிரிந்து சென்றனர். எஞ்சியவர்கள் நெற்கட்டான் செவ்வயல் ஊரின் கிழக்குப் பகுதியில் ‘பச்சேரி’ என்னுமிடத்தில் குடியமர்த்தப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்டனர்.

பூலித்தேவரின் பூர்வீகப் பூமியான கடலாடியில் தேவரினத்தோர் இன்றும் ஒண்டிவீரனைத் தெய்வமாக வணங்கிவருகின்றனர். அருந்ததியர்களும் ஒண்டிவீரனைத் தங்கள் குலதெய்வமாகவும், பசுவந்தனை, குருவிகுளம், பருத்திகுளம் ஆகிய ஊர்களில் சிலையாகவும் வைத்து வணங்கி வருகின்றனர்.

நிலவுடமையாளராகவும், பாளையத் தலைவராகவும், மன்னனாகவும் படைத் தளபதியாகவும் வாழ்ந்த ஒண்டிவீரனைத் தவிர இதே பெயரில் இன்னொருவரும் திருநெல்வேலி மாவட்டம் குருவிகுளத்தில் வாழ்ந்ததாக மக்கள் வழக்காறுகள் தெரிவிக்கின்றன. இவர் ஆதிக்க சாதியினரால் கொலை செய்யப்பட்டு தெய்வமாகியுள்ளார்.

குருவிகுளம் ஒண்டிவீரன்: 

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவிலுள்ள குருவிகுளம் என்ற ஊர். இதே பெயரில் அமைந்த பஞ்சாயத்து ஒன்றியத்தின் தலைமை இடமும் இதுவேயாகும். இவ்வூரிலுள்ள தெலுங்கு பேசும் நாயக்கர் சமூக சமீன்தாரிடத்தில் காவல் பணிபுரிந்து வந்தவர்களில் ஒண்டிவீரனும் ஒருவர். அருந்ததியர் சமூகத்தவரான இவர் முரட்டுக் காளைகளை அடக்கும் ஆற்றல் பெற்றவர். இவரது வீரத்தாலும் அழகாலும் ஈர்க்கப்பட்டு, இவ்வூரில் வாழ்ந்த நாயக்கர் சமூகப் பெண்ணான எர்ரம்மாள் இவரைக் காதலித்தாள். இருவருக்குமிடையேயான காதல் பலருக்கும் தெரிய வந்தது. தம் சாதிப் பெண்ணை அருந்ததிய இளைஞன் ஒருவன் காதலிப்பதைப் பொறுக்க இயலாத நாயக்கர் சமூககத்தினர் அவர்மீது கோபமுற்றனர்.

அவர் வீரன் என்பதாலும், அரண்மனைக் காவலாளி என்பதாலும் நேரடியாக அவருடன் மோத விரும்பாத நாயக்கர் சமூகத்தினர் சூழ்ச்சியால் அவரைக் கொல்ல முடிவு செய்தனர். அதன்படி முரட்டுக்காளை ஒன்றை வாங்கி வந்து அதற்குச் சாராயம் புகட்டி, பின்னர் அதை அடக்கிக் காட்டும்படி ஒண்டிவீரனிடம் கூறினர். மாடு சாராயப் போதையில் இருப்பதை அறியாத ஒண்டிவீரன் மாட்டின் அருகில் சென்ற போது அது ஒண்டிவீரன் மீது பாய்ந்து குத்தியதுடன், அவரது உடலைத் தனது கொம்பில் சுமந்தவாறு ஓடியது. கொம்பினால் குத்தப்பட்ட ஒண்டிவீரன் இறந்த பின்னும் அவரது பிணத்தைச் சுமந்தவாறு ஓடியது மாடு. நீண்ட தூரம் சென்ற பிறகு கொம்பிலிருந்து நழுவிக் கீழே விழுந்த ஒண்டிவீரனின் பிணத்தை எடுத்து அருந்ததியர்கள் எரித்தனர். எரியூட்டிவிட்டுத் திரும்பியவுடன் எர்ரம்மாள் ஈம நெருப்பில் தீப்பாய்ந்து இறந்தாள். இவர்கள் இருவரும் எரியுண்ட இடத்தில் கல் நட்டு அருந்ததியர்கள் வழிபட்டு வந்தனர். பின்னர் இருவருக்கும் சிலை வடித்து வணங்கி வருகின்றனர். ஆண் குழந்தை பிறந்தால்  ஒண்டிவீரன் என்றும் பெண் குழந்தை பிறந்தால் எர்ரம்மாள் என்றும் பெயரிடும் வழக்கமும் உள்ளது. (ஆ.சிவசுப்ரமணியன், 2010. அடித்தள மக்கள் வரலாறு,31-32)

சூரப்பட்டு ஒண்டிவீரன் 

சென்னைக்கு அருகிலுள்ள அம்பத்தூரிலிருந்து புழல் செல்லும் வழியில் நெடுஞ்சாலை ஓரமாக உள்ள சூரப்பட்டு என்னும் கிராமத்தில் ஒண்டிவீரன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தின் மாப்பிள்ளை ஒண்டிவீரன். இவனது பூர்வீக ஊரும் பேரும் தெரியவில்லை. பல ஆண்டுகளுக்கு முன் இந்த ஊரில் ஒரு பெண்ணை மணம் முடித்தான். அவன் மிகவும் பலசாலி. சிலம்பு, கபடி, மல்யுத்தம் எனப் பல வீர விளையாட்டுக்களில் வல்லவன். குடிப்பழக்கம் கொண்ட ஒண்டிவீரன் அடிக்கடி மது அருந்திவிட்டு பக்கத்துக் கிராமங்களில் உள்ள மக்களிடம் வம்புச் சண்டை செய்வது, வழிப்போக்கர்களிடம் வழிப்பறி செய்வது, இரவு நேரங்களில் கிடைகளில் உள்ள ஆடு, மாடுகளை, தானியங்களைக் கொள்ளை அடிப்பது என மக்களுக்குப் பல துன்பங்களைச் செய்து வந்தான். இவனால் சுற்றுவட்டாரக் கிராமங்கள் பல இன்னல்களையும் துன்பங்களையும் சந்தித்து வந்தன.

இவன்மீது பல புகார்களும் வந்ததால் பொறுமை இழந்த இவனது மைத்துனர்கள் இவனை என்ன செய்யலாம் என்று யோசித்தனர். ஒண்டிவீரனின் மனைவியிடம் யோசனை கேட்டனர். அவளும் ஒண்டிவீரன் மீதிருந்த தீராத கோபத்தில் அவனை வெட்டிக் கொன்றுவிடுங்கள் என்று கூற அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சூரப்பட்டு சகோதரர்களும் சதிகாரர்களும் சேர்ந்து ஒண்டிவீரனைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினர். பலசாலியான ஒண்டிவீரனிடம் நேருக்கு நேர் சண்டையிட அஞ்சி வஞ்சகமான முறையில் தீர்த்துக்கட்ட எண்ணினார். ஒருநாள் மாலையில் ஒண்டிவீரனுக்கு அளவுக்கு அதிகமாக மதுவைக் குடிக்கச் செய்து தள்ளாடவிட்டு அவனைத் துண்டு துண்டாக வெட்டிக் கொன்றனர்.

ஒண்டிவீரன் இறந்த நாளிலிருந்து சூரப்பட்டுக் கிராமத்தில் விலங்குகள், ஆடு-மாடுகள் திடீர் திடீரென விழுந்து இறந்தன. மக்கள் மத்தியில் கடுமையான மர்மக் காய்ச்சல் பரவியது. ஊரில் யாருக்கும் குழந்தைகள் எதுவும் பிறப்பதே இல்ல. வெளியூரிலிருந்து கருவுற்ற பெண்கள் இவ்வூர் வந்தால் கூட அவர்களின் கரு கலைந்து விடுகிறது. நிலைமை பல மாதங்களாக நீடித்ததால் ஊர் மக்கள் ஒன்று கூடி  ஒரு சாமியாரை வரவழைத்து பூஜை போட்டுப் பார்த்தனர். ஊரில் நடக்கும் அனைத்துத் தீய சகுனங்களுக்கும் ஒண்டிவீரனே காரணம் என்று சாமியார் சொல்லிச் சென்றார். மறுநாள் ஊர் மக்கள் கனவில் ஒண்டிவீரன் தோன்றி ‘தனக்கு ஒரு பீடம் எழுப்பி வழிபாட்டு வந்தால் அனைவரையும் பாதுகாப்பதுடன் கேட்ட வரங்களையும் செய்து தருவேன் எனக் கூறி’ மறைந்தான்.

அன்றுமுதல் சூரப்பட்டு மக்கள் ஒன்று கூடி ஒரு பீடம் எழுப்பிப் படையல் போட்டு ஒண்டிவீரனை வழிபாட்டு வருகின்றனர். தங்களுக்குப் பிறக்கும் முதல் ஆண் குழந்தைக்கு ஒண்டிவீரன் என்று பெயர் சூட்டி மகிழ்கின்றனர். ஒண்டிவீரனும் அக்கிராம மக்கள் மட்டுமின்றி வெளியூர் மக்கள், வழிப்போக்கர்கள் என அனைத்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதுடன் அவர்களுக்குப் பாதுகாப்பாகவும் இருந்து வருகிறான் ஒண்டிவீரன்.

சூரப்பட்டு ஒண்டிவீரன் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்று கூறப்படுகிறது. வன்னியர், ரெட்டியார் சமுதாயத்தினரும் அம்பத்தூரிலிருந்து புழல் செல்லும் நெடுஞ்சாலை வாகன ஓட்டிகளும் ஒண்டிவீரனை வழிபடுகின்றனர். இக்கோவிலில் ஒண்டிவீரனின் வாகனமாகக் குதிரை உள்ளது. புதன் கிழமைகளில் மட்டும்  ஒண்டிவீரன் கோவிலில் சிறப்புப் பூஜை நடைபெறுகிறது. (தகவலாளி: ஒண்டவீரன் கோவில் பூசாரி, வயது:80,இனம்: வன்னியர், ஊ ர்: சூரப்பட்டு  )  

கடலாடி மங்களம் நொண்டிவீரன்: 

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி மங்களம் கிராமம் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர் 

வீரன். இதே ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்தான் பூலித்தேவன். நெற்கட்டும் செவல் பாளையத்தலைவனாக இருந்த புலித்தேவன், வெள்ளையரை எதிர்த்துப் போராட முடிவு செய்தபோது, போதிய படை வலிமை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார். தனது பாட்டிமார்கள் மூலம் பூர்வீக மண்ணான மங்களம் கிராமத்தின் பூர்வாசிரமத்தைத் தெரிந்து கொண்டார். சங்கரன்கோவிலில் அடிச்சுரங்கப்பாதை அமைத்துத் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதாக வெள்ளையர்களுக்கு ஏய்ப்புக் காட்டிவிட்டு பூர்வீக  ஊரான மங்களம் கிராமத்திற்குப்  புறப்பட்டார் பூலித்தேவன்.  தனது சொந்த மண்ணின் மைந்தர்களிடம் ‘வெள்ளையர்களை எதிர்த்துப் போராட என்னுடன் வருகிறீர்களா! என வேண்டுகோள் விடுக்கிறார்.

இதைக் கேட்ட மாத்திரத்திலேயே மங்களம் கிராமத்து அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த வீரன் இரண்டாயிரம் காலாட்படை வீரர்களுடனும், வென்னிக்காலாடி என்ற வென்னிமலை இரண்டாயிரம் குதிரைப்படை வீரர்களுடனும் பூலித்தேவனுடன் போர்முரசு கொட்டி நெற்கட்டும் செவல் நோக்கிப் புறப்பட்டனர். போன வேகத்திலேயே நடந்த போரில் வீரனும், வென்னிமலையும் புலித்தேவனின் எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுத்து வெள்ளையர்களுடன் போரிட்டதில் வெள்ளையர்படை நாலாபக்கமும் சிதறி ஓடியது. வீரனையும், வென்னிமலையையும் தனது பிரதான படைத்தளபதிகளாக நியமித்துக் கொண்டார் பூலித்தேவர். போர்த்திறம் மிக்க இவர்களை இனி ‘வெல்வது கடினம்’ என்பதை உணர்ந்த வெள்ளையர்கள் அடுத்தகட்டப் போரில் நவீனரகத் துப்பாக்கி மற்றும் பீரங்கி வகைகளுடன் கனராகத் தாக்குதல் தொடுத்தனர். இப்போரில் பூலித்தேவன் படைக்கு இழப்பு அதிகம் ஏற்பட்டது. பிரதான படைத்தளபதிகளுள் ஒருவரான வீரன் போரில் காலை இழந்தான். காலிழந்த நிலையில் வீரன் சொந்த ஊரான மங்களத்திற்கே திரும்பிவிடுகிறார்.

வீரனாக முரசு  கொட்டிப் போருக்குப் போனவர் ஊனத்தோடு ஊர் திரும்பியதால் அப்போதிருந்து வீரன், ‘நொண்டிவீரன்’ என அழைக்கப்பட்டார். எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராமல் தேவர் இனத்தைச் சேர்ந்த பூலித்தேவன் கூப்பிட்டவுடனேயே பிறந்த நாட்டுக்காகப் போர் புரியச் சென்ற அருந்ததிய வீரனுக்கு நன்றிக்கடனாக அவரது இறப்புக்குப் பின் தெய்வமாக நினைத்து வழி பட்டு வருகின்றனர் மங்களம் கிராமத்துத் தேவரின  மக்கள். பின்னாளில் நொண்டிவீரனுக்குக் கோவில் கட்டித் தங்கள் ‘குலசாமியாகவே’ கும்பிட்டு வருகின்றனர்.

அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த நொண்டிவீரனைக் குலசாமியாகக் கும்பிடுவதை மங்களம் கிராமத்து மக்கள் பெருமையாகவே கருதுகின்றனர். ‘அப்ப இருந்து இப்பவரை மங்களம் கிராமத்து ஒட்டுமொத்த மக்களும் நொண்டிவீரன் கோவிலில் போய் நின்னு, ‘கதியைக் கொடுப்பா’ என வேண்டினால் அதற்குரிய பலன் கிடைக்கவே செய்கிறது’ என்ற நம்பிக்கை அக்கிராமத்து மக்களிடம் இன்னும் இருக்கிறது. எங்கள் கிராமத்து மக்கள் இன்னைக்கும் ‘ஒரு வேட்டைக்குப் புறப்படும் போதும் சரி, தேர்தலில் போட்டியிடும் போதும் போதும் சரி, ஒரு வழக்குத் தொடரப் போனாலும் சரி நொண்டிவீரன் கோவிலில் போய் கற்பூரத்தை கொளுத்தி வைத்து மண்ணை எடுத்து நெத்தியிலே பூசிச் சென்றால் வெற்றி நிச்சயம்’ என மங்களம் கிராம மக்கள் நம்புகிறார்கள்.  தெய்வமாகிவிட்ட நொண்டிவீரன் எங்களுக்கு ‘காவல் தெய்வம்’ என்று கூறும் அவ்வூர்ப் பட்டதாரி இளைஞரான ரவிநாயகம்  ‘சாமிக்கும் சாதிக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது’ என்கிறார் மிகுந்த நம்பிக்கையோடு.  (கிஷோர், நக்கீரன்: 29.01.2002)

- முனைவர். ச.சீனிவாசன், தமிழ் இணைப்பேராசிரியர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி(தில்லிப் பல்கலைக்கழகம்), புது தில்லி-110 021

Pin It

“தேயிலைக் காடுகளிலும், மலை முகடுகளிலும் தேயிலைக்கு பசுமையையும், தேனீருக்கு சாயத்தையும் தந்த மக்கள் கொட்டும் பணியிலும், அட்டைக் கடியிலும் அடிமைகளாக, வாய் பேச முடியாத ஊமைகளாக, விடியலுக்கு முன் உழைப்பிற்குச் சென்று, இருள் கவிழ்ந்த பின்னர் வீட்டிற்குத் திரும்புகின்ற இழிந்த நிலையில் ஏமாளிகளாக, இலங்கையின் மலை சூழ்ந்த தேயிலைக் காடுகளில் இந்திய மண்ணின் மைந்தர்கள் ...

காட்டையும் மேட்டையும், சீர்படுத்தி பசுமை பூத்துக் குலுங்கும் சித்திரச் சோலைகளாக இரத்த வியர்வைகளைச் சிந்தி பொன்கொழிக்கும் பூமியாக மாற்றியவர்களின் வாழ்வில் ... ஒளியில் . . . வஞ்சிக்கப்பட்ட நிலையில், திக்கற்றவர்களாக துன்பக்கேணியில் பெரும் துயரத்துடன் வாழ்ந்தார்கள் இந்தியத் தொழிலாளர்கள் ...

இந்த இழிநிலை தொடர்ந்தது ஒராண்டல்ல... ஈராண்டல்ல... நுறு ஆண்டுகளாக, இந்த மக்கள் இங்கு வந்து குடியேறிய நூறாண்டுகளுக்குப் பின்னரே அதாவது 1932 ஆம் ஆண்டிலேதான் பெருந்தோட்டத்துறையில் முதன் முதல் தொழிற்சங்கம் உதயமானது.

              nadesayar  அப்பொழுது இந்த மக்களுக்காக இலங்கைச் சட்டசபையில் ஒரு குரல் ஒலித்தது. அந்த குரலுக்குரியவர் கோ.நடேசய்யர்! மலையக மக்களின் முன்னேற்றத்திற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். இலங்கையில் வாழ்ந்த இந்தியத் தமிழருக்கு மட்டுமின்றி, சமுதாய உணர்வோடு நலிவுற்ற மக்கள் அனைவருக்காகவும் குரல் எழுப்பிய பெருமகன் கோ. நடேசய்யர்!”

                என ‘மலையக மாணிக்கங்கள்’ என்னும் தமது நூலின் என்னுரையில் மலையக இலக்கிய எழுத்தாளர் அந்தனி ஜீவா புகழ்ந்துரைத்துள்ளார்.

                தமிழ்நாட்டில் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் வளவனூரில் கோதண்டராமைய்யர் - பகீரதம்மாள் வாழ்விணையருக்கு 14.01.1887 அன்று மகனாகப் பிறந்தார் கோ. நடேசய்யர்.

                அரசுப்பள்ளியில் சேர்ந்து ஆங்கிலப் பொதுக்;கல்வி கற்றார். பின்னர் தமது படிப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டார். சென்னை அரசாங்கப் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து கைதொழில் பயிற்சி பெற்றார். வியாபாரம் குறித்த கல்வியைக் கற்று அதில் டிப்ளோமா பட்டம் பெற்றார். தஞ்சாவூர் கல்யாணசுந்தர உயர்தரக் கல்வி சாலையில் சில ஆண்டுகள் வியாபாரப் போதனா ஆசிரியராகப் பணியாற்றினார்.

                தமது இளம்வயதிலேயே இன்சூரன்ஸ், ஆயில் இன்ஜின்கள், வங்கிகளும் அவற்றை நிர்வகிக்கும் முறைகளும் ஆகிய மூன்று நூல்களை எழுதி வெளியிட்டார்.

                நடேசய்யர் 1914 ஆம் ஆண்டு ‘வர்த்தக மித்திரன்’ என்ற பெயரில் ஒரு பத்திரிக்கையை ஆரம்பித்தார். தென்னிந்திய வியாபாரிகள் சங்கம், தென்னிந்திய மில்காரர்கள் சங்கம் முதலிய சங்கங்களை ஆரம்பித்தார். தமது நண்பர் ஒருவர் மூலம் இலங்கைத் தீவில் கொழும்பு நகரில் வியாபாரிகள் சங்கத்தின் கிளை ஒன்றை ஆரம்பிக்கச் செய்தார். கொழும்பில் நடைபெற்ற வியாபாரிகள் சங்கத்தின் முதல் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள முதன் முதலாக இலங்கைக்குச் சென்றார்.

                இலங்கையில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் இந்திய தமிழ்த் தொழிலாளர்கள் படும் துன்பங்களை நேரில் கண்டார். மண்ணை கிண்டி, பொன்னை அள்ளி வரலாம் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி வந்தவர்கள் அடிமைகளை விட கேவலமாக நடத்தப்படுவதைக் கண்டார்.

                மலைகள் சூழ்ந்த தேயிலைத் தோட்டங்களிலே சிறைக்கைதிகளை விட மிகவும் கேவலமாக தமிழகத் தொழிலாளர்கள் நடத்தப்பட்டார்கள். அவர்கள் தலைவிதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டார்.

                இலங்கை மலையகத் தோட்டங்களுக்கு வெளியார் யாரும் செல்லமுடியாத சூழ்நிலை, புடவை வியாபாரிகள் மாத்திரம் மலையகத் தோட்டங்களுக்கு செல்வது வழக்கம். நடேசய்யர் புடவை வியாபாரியாக மாறினார். வியாபாரிகளுடன் தோட்டங்களுக்குச் சென்று தொழிலாளர்களைச் சந்தித்தார்.

                இந்திய தொழிலாளர்களை இலங்கைத் தமிழ் மக்கள் தாழ்வுபடுத்துவதையும், சிங்கள மக்கள் வெறுத்தொதுக்குவதையும், அய்ரோப்பிய தோட்டத்துரைமார்கள் இம்மக்களை அடிமை படுத்துவதையும் எதிர்த்து பணியாற்றுவதையே தமது வாழ்வின் நோக்கமாக கொண்டார்.

மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், ’தோட்டத்து மக்கள் ஏழைத் தொழிலாளர்கள், மிகவும் எளிமையானவர்கள், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்கள், தமது எஜமானர்களுக்காக உலகத்தின் எல்லைக்கே செல்ல தயங்காதவர்கள், இலங்கை அரசாங்கத்தின் காருண்யமற்ற, அறிவில்லாத, பிடிவாதம் மிகுந்த, தரமில்லாத செய்கையால் தோட்ட துரைமார்களையே சர்வமும் என்று நம்பி வாழ வேண்டியவர்களானார்கள்.”

‘கூடை தலைமேலே, குடிவாழ்க்கை நடுரோட்டிலே.” என்று லயன்களில் முடங்கி கிடந்தார்கள். ‘கேள்வி கேட்பது எங்களுக்கு உரிய வேலை இல்லை, உழைத்து ஒய்ந்து, மாள்வது என்பதே எங்களின் தொழில்” என்ற நிலையில் வாழ்ந்தவர்கள்.

 ‘கம்பளி மூன்று ரூபாய்,

 கருப்பு கம்பளி மூன்று ரூபாய்,

 வேஷ்டி மூன்று ரூபாய்,

 வெள்ளை வேஷ்டி மூன்று ரூபாய்”

                என்று தங்களின் கணக்கு விபரங்களை, தங்களின் கங்கானிமார்களிடம் கேட்டு பழகியவர்கள். பொய் எது? உண்மை எது? என அறியாமையில் மூழ்கியவர்கள்.

                ‘தனது பற்றுச் சீட்டை வாங்கி கொண்டு, தனது மனைவியைத் தோட்டத்திலேயே விட்டு வருவதை வாழ்க்கை அமைப்பு”என்று ஏற்றுக்கொண்டவர்கள். ‘தோட்டத்திலே கெடுபிடி அதிகமாகின்றது என்ற அச்சத்தில் ஓடிவிடத் துணிகையில் அகப்பட்டு குதிரைகாலில் பிணைக்கப்பட்டு குருதி வெளிவரும் வரையில் தரையில் இழுத்தடிக்கப்படுவதை எதிர்க்கத் துணியாதவர்கள்.”

                ‘தன்னையே சர்வமும் என்று நம்பி வந்த தனது மனைவியை பெண்டாள முனைந்த பெரியகங்காணியையும்;, தோட்டத்துரையையும் தடுத்து நிறுத்த வலுவின்றி பைத்தியக்காரனாகக் கணிக்கப்பட்டு அங்கொடையில் அனுமதிக்கப்படுவதைச் சகித்துக் கொண்டவர்கள்.”

                ‘குடை பிடிக்காதே ! செருப்பு போடாதே !

                வெள்ளை வேஷ்டி கட்டி வெளியில வராதே!

                பத்திரிக்கை படிக்காதே! “ என்ற குரல்களை மாத்திரமே கேட்டுப் பழகியவர்களுக்கு ...      “பாட்டாளித் தோழனே பயப்படாதே, தலை நிமிந்து வெளியில் வா! இந்தா இந்த நோட்டீசைப்படி! கள்ளக் கணக்கெழுத கங்காணிகளுக்கு இடம் கொடாதே! குட்டிச்சாக்கில் சம்பளத்தை எடுக்கும் மட்டித்தனத்தை எட்டி உதை! அரைப்பெயர் போடுவதை எதிர்த்து நில்! பகல் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் லீவு உண்டு, அதைப் பயமின்றிக் கேள்! உன்னை மிரட்டும் வீணருக்குப் பயந்து உரிமையை விட்டுக் கொடுக்காதே!” என்ற நடேசய்யரின் உரிமைக் குரல்கள் புதுத்தெம்பைத் தந்தன. வெள்ளைத் துரைமார்களின், கங்காணிகளின் தடையை மீறி அய்யர் தோட்டத்திற்குச் சென்று தொழிலாளர்களைச் சந்தித்து தொழிற்சங்கத்தில் அவர்களை அணி திரட்டினார்.

                அய்யர் தோட்டத்திற்குள் சென்ற ஒரு மாத காலத்திற்குள் அரைப்பெயர் போடுவது அடியோடு நின்று விட்டது. மற்ற குறைகளும் நீங்க வேண்டுமானால் தொழிலாளர்களுக்குக் கல்வி கொடுக்க வேண்டும். புத்தகங்கள் மூலமும், துண்டுப் பிரசுரங்கள் மூலமும், பிரசங்கங்கள் மூலமும் புத்துணர்ச்சியை உண்டாக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.

                அகில இலங்கை இந்திய தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தின் மூலம் 1931 ஆம் ஆண்டு சகோதரத்துவம், சுய முயற்சி, சிக்கனம் என்ற குணங்களைத் தொழிலாளர்களிடம் பரப்பவும், குடி, சூது, கடன் என்ற பழக்கங்களிலிருந்து அவர்களை விடுவிக்கவும் அய்யர் முயற்சித்தார்.

                தோட்டத் தொழிலாளர்கள் கடன் தொல்லைகளுக்கு ஆளாகாமல் இருப்பதற்கு கூட்டுறவு சங்கங்களும், கடனுதவி சங்கங்களும் ஆரம்பிக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தி, தொழிலாளர்களின் கல்வி அறிவை அபிவிருத்திச் செய்து அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும், அரசியல் நிலையைச் சிறப்பானதாக்கவும், தொழிலாளர் சம்மேளனம் இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டது. தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலும், வயோதிகத் தொழிலாளர்களுக்கு உதவி பணம் பெற்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் முயற்சிகளிலும் சம்மேளனம் கவனம் செலுத்தியது.

தோட்டங்களில் குழுக்களாக அமைந்து இயங்கிய தொழிலாளர்கள் நடேசய்யருடன் தொடர்பு கொண்டவர்கள் என்ற காரணத்தால் பழிவாங்கப்பட்டார்கள். தோட்டங்களுக்குள்ளும், வெளியிலும் கூட்டம் நடத்துவதற்கு மைதானமோ கட்டிடமோ கிடைக்காத விதத்தில் தோட்ட நிர்வாகத்தினரும், நகர முதலாளிகளும் நடேசய்யருக்கு விரோதமாகச் செயற்பட்டனர்.

                நடேசய்யர் தங்கிய சுற்றுப்புறத் தோட்டங்களில் நிர்வாகம் தொழிலாளருக்கு அரிசியை நிறுத்தியது. குடிநீர் விநியோகத்தைக் கூட தடை செய்தது.

                அனுமதியின்றி தொழிற்சங்கவாதிகள் தோட்டங்களுக்குள் போக முடியாது என்றும், அப்படி போவது சட்டத்தை மீறியச் செயலாகும் என்றும் தோட்ட நிர்வாகம் தடை விதித்தது.

                1922 ஆம் ஆண்டு முதல் தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் புகார்களை பெட்டிசன் உருவில் இந்திய ஏஜெண்டுகளுக்கு எழுத வைத்தவர் அய்யராவார். பின்னர் பெட்டிசன்களை தமது சங்கத்துக்கு அனுப்பச் செய்து அதன் மூலம் அவர்களின் சார்பாக பேசும் உரிமையைச் சங்கத்துக்குப் பெற்றவர் நடேசய்யர்.

                தோட்டங்களுக்கு அருகில் உள்ள நகரப்புறத்தில் கூட்டங்கள் நடத்தியும், தோட்டத்துக்குச் சொந்தமில்லாத பொது வழிகளில் தமது காரை நிறுத்தி, காரில் இருந்தபடியே தொழிலாளர்களோடு பேசினார். திறந்த காரை மேடை போல் பாவித்து அதிலிருந்து நடேசய்யரும், அவரது மனைவி மீனாட்சி அம்மையாரும் தொழிலாளர்களிடம் பேசி உணர்வு பெறச் செய்தனர். தொழிலாளர்கள் அவர்களது உரைகளை கேட்டு புத்துணர்வு அடைந்தனர்.

                நடேசய்யர் தொழிற்சங்க கூட்டம் நடத்துவதற்கு இடம் தர மறுத்து கண்டி நகரசபை தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால், நடேசய்யர் அதைக்கண்டு பின்வாங்க வில்லை. அட்டன் நகர், கண்டி முதலிய நகரங்களில் தொழிலாளர்களைத் திரட்டி மாபெரும் கூட்டங்களை நடத்தினார். அக்கூட்டங்களின் மூலம் தொழிலாளர்களின் உரிமைகளை எடுத்துரைத்தார். அட்டன் நகரில் 1931 ஆம் ஆண்டு மே தின கூட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டனர். ‘தொழிலாளர்களின் உரிமைகளும், கடமைகளும்’ என்ற பிரசுரத்தை வெளியிட்டு உரையாற்றினார்.

                ஆங்கில நாகரீகத்தை அறவே வெறுத்து ஒதுக்கினார். கதர் ஆடை அணிந்து கம்பீரமாகத் தோற்றம் அளித்தார். அற்புதமான பேச்சாற்றலாலும், ஆற்றல் மிகுந்த பத்திரிக்கை எழுத்தாலும் மக்களிடம் செல்வாக்கு பெற்றார்.

                தேயிலைத் தோட்டத்து துரைமார்கள் தொழிலாளர்களின் சம்பளத்தை மேலும் குறைத்தனர். அப்போது, தொழிலாளர்களின் சம்பளத்தை மேலும் குறைப்பதற்குத் திட்டமிடுவது, “வெடிமருந்து குவியல் மேலமர்ந்து மொழுவர்த்தியில் சுருட்டுப் பற்றவைப்பது போன்ற செயல்” என்று எச்சரிக்கை செய்தார் நடேசய்யர்.

                ஊமை சனங்களாக, எழும்பி நின்று போராடும் வலுவற்றிருந்த, குடியேற்ற கூலிகளாக நூறு ஆண்டுகளுக்கு மேலாக தாம் தவிப்பதை வெளியில் சொல்லும் விஷயஞானம் இல்லாதவர்களாக, அடிமை நிலையில் உறங்கிக்கிடந்த தோட்டத் தொழிலாளர்களை விழப்படைய வைத்து எழுந்து நிற்;கச் செய்தார் நடேசய்யர். அவரது வழிகாட்டலில் தான் அவர்கள் பேசத் தொடங்கினார்கள்.

                1936 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில் நடேசய்யர் மகத்தான வெற்றி பெற்றார். அப்போது நடைபெற்ற இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில் ‘தோட்டத் தொழிலாளர்களின் சம்பள வெட்டால், தெருவோரங்களில் தோட்டத்தொழிலாளர்கள் பிச்சை எடுப்பதையும், பிணமாய் கிடப்பதையும் எடுத்துக் கூறி ஆட்குறைப்புக்கும், சம்பள வெட்டுக்கும் காரணமானவர்களை தோலுரித்துக் காட்டினார் அய்யர். மக்கள் நடேசய்யரை ஆதரித்து மகத்தான வெற்றி பெறச் செய்தனர்.

                1925 முதல் 1931 வரையிலும் இலங்கை சட்ட நிரூபண சபையிலும், 1936 முதல் 1947 வரையிலும் அரசாங்க சபையிலும் அங்கம் வகித்து இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்காக வாதாடினார் நடேசய்யர்.

                தோட்டத் தொழிலாளர்களிடம் குடிகொண்ட கடன் வழக்கமும், அறியாமையும், குறுகிய பழக்க வழக்கமும், குடிபழக்கமும் திருத்தப்படல் வேண்டும் என்பதற்காக, நடேசய்யர் அவர்களை விஷயஞானம் உடையவர்களாக்க வேண்டும் என்று பாடுபட்டார். நாட்டின் செல்வத்துக்கு உழைத்த தோட்டத்தொழிலாளர்கள் தொழுநோயாளர்களைப் போல பிற சமூகத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தப் பட்டிருந்தனர் என்பதை அறி;ந்தார். அவற்றை அகற்றிட ஆயிரக் கணக்கில் துண்டுபிரசுரங்களை அச்சடித்து தொழிலாளர்களிடம் தாமும் தமது மனைவியும் நேரடியாக விநியோகம் செய்தனர். நோட்டீஸ்களை பெரிய எழுத்துக்களில் அச்சடித்து பொது இடங்களில் ஒட்டினார்கள்.

  இச்சூழலில் தேயிலை விலை குறைந்துவிட்டதை காரணம் காட்டி, தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைக்கப்பட்டதென அவர்களின் சம்பளம் குறைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மாதம் முழுவதும் உழைத்தும் தொழிலாளர்கள் வயிராற உணவு உண்ண முடியாத அவல நிலை ஏற்பட்டது.

                தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் பிச்சையெடுக்கும் நிலைக்குள்ளானார்கள். தோட்டத்து எல்லையிலும், தெருவோரங்களிலும் சிலர் பிணமாகக் கிடந்தனர். இந்த கொடுமைகளுக்கும், சுரண்டலுக்கும் எதிராக தொழிலாளர்களைத் திரட்டிப் போராடினார் நடேசய்யர்!

                தோட்டத்துத் தொழிலாளர்களை சுத்தமாக உடை உடுக்கச் செய்தார், செருப்பு போடும்படி வலியுறுத்தினார், கோட் அணியச் செய்தார், தலைப்பாகை கட்டச் சொன்னார், கையிலே பிரம்பு எடுத்துக் கம்பீரமாக நிமிர்ந்து நடக்கச் சொன்னார் நடேசய்யர்!

                தோட்டத்து முதலாளிகளின் மூலதனம் தோட்டத் தொழிலாளர்களின் கடுமையான உழைப்பினால் பல்கி பெருகியது. உழைத்தவன் பெறுவதோ ஒன்றுமேயில்லை.

                “யாரோ சிலரின்

                மோட்ச வாசமாய்

                ஆச்சுதே இந்த

                அழகிய பூமி

                யாரோ சிலரின்

                சுவர்க்க இன்பமாய்

                ஆச்சுதே என் மக்கள்

                ஆக்கிய பூமி.” – என்று மக்கள் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளை பாடியது போல், இந்தியத் தொழிலாளர்களின் உழைப்பில் பயன்பெற்றவர்கள் தோட்டத்துரைமார்களும், பெரிய கங்காணிகளும் தான் என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டினார்.

                தேயிலை தோட்டங்களில் கங்காணி முறையை ஒழிக்கப் போராடினார் நடேசய்யர். நடேசய்யரின் தொழிற் சஙகப் போராட்டத்தினால் 1927 ஆம் ஆண்டு குறைந்த பட்ச ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டது. உணவு நேரத்தோடு ஒன்பது மணி நேர வேலைக்கு இது வழி செய்தது. தொழில் செய்யுமிடத்திலேயே தொழிலாளியை சாப்பிட வைப்பதற்கும் ஏற்பாடு செய்தது.

                “இலங்கை வாழ் இந்தியர்களை முன்னேற்ற இந்தியாவிலிருந்து ஆட்கள் வரவேண்டும் என்று எண்ணிக் கொண்டு காலந்தள்ளுவது முட்டாள்கள் செய்யும் காரியம். தங்களைத் தாங்களே முன்னேற்றிக்கொள்ள வேண்டும். மரியாதையுடன் தலைநிமிர்ந்து இலங்கை வாழ் இந்தியன் இலங்கையில் நடமாடப் போகிறானா அல்லது ஒடுங்கிய வயிறும், கிழிந்த துணியும், கையில் சட்டியுமாக இலங்கையில் அலையப் போகிறானா என்பது ஒவ்வொரு இந்தியனும் யோசிக்க வேண்டிய விஷயம். பிறர் கொடுத்து வரும் சுதந்திரம் நெடுநாள் நில்லாது. கிடைத்த சந்தர்ப்பங்களை காப்பாற்றி கொள்ளத்தக்க பலமும், தைரியமும் அவர்களுக்கு ஏற்படாது. ஆகவே, இலங்கை வாழ் இந்தியன் ஒவ்வொருவனும் தன்னுடைய சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள முன்வரவேண்டும்” என்று முழங்கினார் நடேசய்யர்.

                மதுக்கடைகள் தோட்டத்துத் தொழிலாளர்களின் வாழ்வைச் சீரழிக்கிறது என்பதை உணர்ந்து, மதுவிலக்கைத் தீவிரமாக செயல்படுத்த வேண்டி போராடினார் நடேசய்யர்.

                மலைநாட்டின் மூலை முடுக்குகள், தோட்டத்து எல்லைகள், பஸ் நிலையங்கள், மக்கள் கூடும் சந்தைகள் முதலிய இடங்களிலெல்லாம் நடேசய்யரும், அவரது மனைவியும் இணைந்து நின்று மக்களிடம் பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

                “சட்டமிருக்குது ஏட்டிலே – நம்மள

   சக்தியிருக்குது கூட்டிலே

                பட்டமிருக்குது வஞ்சத்திலே – வெள்ளைப்

                  பவர் உருக்குது நெஞ்சத்திலே

                வேலையிருக்குது நாட்டிலே – உங்கள்

                  வினையிருக்குது வீட்டிலே ...

                என்று மீனாட்சி அம்மையார் பாடிய தொழிலாளர் சட்டக் கும்மி பாடல் மக்கள் மத்தியில் பிரபலமானது.

                தேசநேசன், தேசபக்தன், தொழிலாளி, தோட்டத் தொழிலாளி, உரிமைப்போர், சுதந்திரப்போர், வீரன், சுதந்திரன் என்று தமிழிலும், சிட்டிசன் (Citizen), பார்வார்டு (Forward), இந்தியன் எஸ்டேட் லேபர் (Indian Estate Labour) என்று ஆங்கிலத்திலும் பத்திரிக்கைகள் நடத்தினார் நடேசய்யர். அப்பத்திரிக்கைகளுக்கு ஆசிரியராகவும் விளங்கினார்.

                “தேசபக்தன் ஒருவருக்கும் விரோதியல்ல. ஆனால் பொய்யனுக்கு விரோதி. அக்கிரமக்காரனுக்கு விரோதி. போலியர்களுக்கு விரோதி. வேஷக்காரனுக்கு விரோதி. தேசபக்தன் உண்மையை நாடி நிற்பான். சாதி மத வித்தியாசம் பாரான். உண்மையான சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் பொது ஜனங்களுக்கு உண்டாக உழைப்பான். பணக்காரர் ஜாதி, ஏழை ஜாதி என்று இப்பொழுது ஏற்படுத்தி வரும் ஜாதியை மனந்தளராது எதிர்ப்பான். தொழிலாளர் சார்பில் அன்பு கொண்டு உழைப்பான்” என்று ‘தேசபக்தன்;’ முதல் இதழில் தமது பத்திரிக்கையின் இலட்சியத்தை வெளியிட்டார் நடேசய்யர்.

                தமிழ் மக்களுக்கு அரசியல் கருத்துக்களைப் பரப்புவதிலும், நாட்டு நடப்புகளை வெளிப்படுத்துவதிலும் நடேசய்யரின் பத்திரிக்கைகள் அளப்பரிய சேவை புரிந்தது.

                “எனக்குச் சட்டசபை பெரிதல்ல, பத்திரிக்கை தான் பெரிது. நான் சட்ட சபைக்குப் போய் செய்யக் கூடிய நன்மையை விட பன்மடங்கு அதிக நன்மை பத்திரிக்கையில் ஏற்படுத்தக் கூடும்” என்று அறிவித்தார் நடேசய்யர்.

                தொழிலாளர்களின் உதவியினால் கொழும்பில் அமைக்கப்பட்ட அச்சுக் கூடத்துக்கு ‘தொழிலாளர் அச்சுக் கூடம்’ என்று பெயர் சூட்டினார். 1929 ஆம் ஆண்டு ‘தேசபக்தன்’ நாளிதழாக வெளிவந்தது. அப்பொது இலங்கையில் வெளிவந்த ஒரே தமிழ் நாளிதழ் என்ற பெருமையைப் பெற்றது.

                நடேசய்யர், ‘பத்திரிகைகளை அச்சில் வார்த்த ஆயுதங்கள்’ என்றார். கூனி குறுகி கிடந்த மக்களை – ஏணிப்படிகளாகப் பிறர் ஏறிமிதிக்கப் பயன்பட்ட மக்களை – நாடி பிடித்;து அழைத்து வர பத்திரிகைகளை பயன்படுத்தினார். தமிழகத்திலிருந்து வெளிவருகின்ற இந்து நாளிதழிலும் நடேசய்யர் கட்டுரைகள் எழுதினார்.

                “ரோட்டிலும், தோட்டங்களிலும் கூலி வேலை செய்கிறவர்களுக்காக அவர் எழுதினார். ரிக்ஷா இழுக்கும் தமிழ்ச் சகோதரர்களும் புரிந்து கொள்ள வேண்டுமென்று எழுதினார். தனது ஆங்கில அறிவையும், மொழிப்புலமையையும் சாமான்யர்களுக்கு விளங்கும் விதத்தில் எழுதினார். அவரது கட்டுரைகள் குண்டுகளைப் போன்றமைந்திருந்தன. அதை அவர் மிகுந்த எச்சரிக்கையோடு பயன்படுத்தினார்."

                நடேசய்யர் எழுதி தமிழுலகுக்கு அளித்துள்ள நூல்கள்: வெற்றியுனதே, நீ மயங்குவதேன், நரேந்திரபதியின் நரக வாழ்க்கை, தொழிலாளர் அந்தரப் பிழைப்பு (நாடகம்), இந்தியா - இலங்கை ஒப்பந்தம், தொழிலாளர் சட்டப் புத்தகம், கதிர் காமம், அழகிய இலங்கை, Planter Raj, The Ceylon- Indian crisis. மேலும், ‘ஒற்றன்’, ‘மூலையில் குந்திய முதியோன்’ அல்லது ‘துப்பறியுந்திறம்’ முதலிய நாவல்களையும் ‘ராமசாமி சேர்வையின் சரிதம்’ எனும் சிறுகதை நூலையும் வெளியிட்டுள்ளார்.

                ‘தொழிலாளர் சட்ட புத்தகம்’ என்னும் நூலின் முகவுரையில், நடேசய்யர். “சட்டம் அமுலில் இருந்தும் பல தொழிலாளர்களுக்கு இதன் நிபந்தனைகள் தெரியாதிருக்கும் காரணத்தால் தங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நன்மைகளைப் பெறாதிருக்கிறார்கள். தொழிலாளர்களை சட்ட நிபுணர்களாக்க வேண்டுமென்பதற்காக இப்புத்தகம் எழுதப்படவில்லை. அயோக்கியர்களிடம் அகப்பட்டுக் கொண்டு அவதிப்படாதிருக்க வேண்டியே இது எழுதப் பெற்றது என்பதை மறக்க வேண்டாம்.”

                அந்நூலில் ‘சகோதரர்களுக்கு ஒரு வார்த்தை’ என்ற தலைப்பில் ...

                “இலங்கைத் தோட்டங்களில் வேலை செய்யத் தொழிலாளர்களாக உங்களை அழைத்து வரத்தலைப்பட்டு 100 வருஷ காலமாகிறது. ஆரம்ப காலத்தில் பாய்க் கப்பலில் வந்து நூறு நூற்றைம்பது மைல் காடு வழியாக பட்டினியாலும் பசியாலும் வாடி உலர்ந்து வந்து, புலிகள் வாழ்ந்த காடுகளை வெட்டித் திருத்தி தோட்டங்களாக்கினீர்கள். அக்காலங்களில் கடன் பட்டும், அடிப்பட்டும், உதைப்பட்டும், ஜெயிலில் அடைப்பட்டும் அந்நியர்களுக்கு உழைத்துக் கொடுத்தீர்;கள். தோட்டக்காரர்கள் லட்சாதிபதி ஆனார்கள். இங்கிலாந்து செழிப்படைந்தது, காடாயிருந்த இலங்கை சிங்கார நாடாயிற்று. பிரிட்டிஷ்காரர்களுக்கு செல்வம் கொடுக்கும் நாடாக இலங்கை ஆயிற்று. ஆயிரக்கணக்கான கார்கள் வரலாயிற்று, இந்நாடே செழித்தது, உங்கள் நிலைமை தான் என்ன? அன்றைக்கும் அடிமை, இன்றைக்கும் அடிமை, தேயிலைத் தூரில் தேங்காய் காய்க்கிறது, மாசி உண்டாகிறது, தங்கக்காசு சம்பளம் என்று அழைத்து வரப்பட்ட உங்கள் முன்னோர்கள் தேயிலைத் தூர்களுக்கும், ரப்பர் மரங்களுக்கும் எருவானதைத் தவிர உங்களுக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்களா? கூலிக்காரன் என்ற பெயர் போய் வி;ட்டதா?

                இந்தியாவிலுள்ள கவர்னர்கள், வைஸ்ராய்கள், வேறு பெரும் உத்தியோகஸ்தர்கள், இங்கிலாந்திலுள்ள காமன்ஸ் சபை அங்கத்தவர்கள், மந்திரிகள் மற்றும் அநேக செல்வாக்குள்ள பிரமுகர்கள் நீங்கள் வேலை செய்யும் தோட்டங்களின் பங்காளிகள், உங்கள் உழைப்பினால் ஏற்படும் லாபத்தைக் கொண்டு அவர்கள் சாப்பிட்டு சுகிர்த்து உலகத்தை ஆளுகிறார்கள். உங்களால் அவர்கள் ராஜபோகம் அனுபவிக்கையில் அவர்களுக்கு ராஜபோகம் கொடுக்கும் நீங்கள் உங்களுக்கு வேண்டிய மனித சுதந்திரத்தையாவது பெற முயற்சிக்க வேண்டாமா? உங்களுக்கு ராஜபோகம் வேண்டாம். மோட்டார் கார்கள் வேண்டாம். மாடமாளிகைகள் வேண்டாம். உல்லாச வாழ்க்கை வேண்டாம். நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்தும் உங்களுக்கு இரண்டு வேலை வயிறு நிறைய சோறாவது கிடைக்க வேண்டாமா? அதற்காகப் பாடுபடுவது குற்றமா? நீங்கள் வேண்டுவது மனிதருக்குள்ள உரிமைதான். மிருகங்களைப் போல் நடத்தப் பெறாமல் மனிதர்களைப் போல் தலை நிமிர்ந்து நடக்க உங்களுக்கு உரிமை வேண்டும். அந்த உரிமையில்லாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? எல்லோரும் ஒன்று கூடுங்கள், ஒற்றுமைபடுங்கள். சங்கங் கூட்டுங்கள். போராடுங்கள்!” என்று தோட்டத் தொழிலாளர்களை உணர்ச்சிப் பெருக்குடன் அறை கூவி அழைத்துள்ளார்.

                இலங்கை களுத்துரைப் பகுதி தேயிலைத் தோட்டம் அருகில் உள்ள கல்லறையில், “உழைத்து மாய்வதே எங்களின் வேலை ஏனென்று கேட்க எங்களுக்கு ஏது உரிமை” என்ற வரிகள் எழுதப்பட்டுள்ளது. அந்தக் கல்லறை வரிகள் எந்தளவு தோட்டத் தொழிலாளர்கள் அடிமையாக நடத்தப்பட்டனர் என்பதை புலப்படுத்துகிறது.

                இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்கு இலங்கையில் குடியுரிமையும், வாக்குரிமையும் வேண்டும் எனப் போராடினார் நடேசய்யர்.

                தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சேமநல நிதி ஏற்படுத்திட வேண்டும். தோட்டத் தொழிலாளர்களுக்கு வேலை செய்த ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு மாத சம்பளத்தை போனசாக வழங்க வேண்டும் என்பதற்காக நடேசய்யர் போராடினார்.

                கல்வி ஒன்றின் மூலமே தோட்டத் தொழிலாளர்களின் அறிவுக்கண்களைத் திறக்க முடியும் என்று முடிவ செய்து, தோட்டங்களில் பாடசாலைகள் ஏற்படுத்திட போராடி வெற்றி கண்டார்.

                நடேசய்யரை இலங்கைவாழ் இந்தியத் தமிழர்கள் தங்களை வழி நடத்தும் காந்தியாக நினைத்தனர். அதனால் ‘காந்தி நடேசய்யர்’ என்று போற்றிப் புகழ்ந்தனர்.

                நடேசய்யரின் மனைவி மீனாட்சி அம்மையாரும் ஓர் இலக்கியப் படைப்பாளியாவார். 1931 ஆம் ஆண்டு இவரது படைப்புகள் ‘இந்தியத் தொழிலாளர் துயரச் சிந்து’ என்ற தலைப்பில் இருபாகங்கள் வெளியிடப்பட்டது. மேலும் 1940 ஆம் ஆண்டு ‘இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை’ என்ற தலைப்பில் அவரது சிறு கவிதை நூல் வெளிவந்தது.

                இலங்கை மலையக தோட்டத் தொழிலாளர்களின் விடுதலைக்காக போராடிய கோ. நடேசய்யர் 07.11.20147 அன்று மாரடைப்பினால் காலமானார்.

“ ஏழைத் தொழிலாளியிடம் இந்திய உணர்வு எழுந்திட, இந்தியனும் ஆங்கிலேயனும் உழைக்க வந்த இடத்தில் ஒரு நிலையினரே என்று கூவிட, இந்தியரின் பங்களிப்பு உடலுழைப்போடு மாத்திரம் அமையக் கூடாது என்று போராட்டம் நடத்திட, நடேசய்யர் காரணகர்த்தாவாக விளங்கியிருக்கிறார். மண்ணுக்குச் சமமாக மலைகளில் முடங்கிக் கிடந்தவர்கள், எண்ணுதற்கேலா இடர்களைத் தாண்டி முன்னுக்கு போவோமென்று முனைந்து எழுந்தமைக்கு அய்யரே வழி வகுத்தார். தஞ்சையில் பிறந்து கனத்தையில் தகனமான நடேசய்யர் பஞ்சையாய் வாழ்ந்து, பாழும் வறுமையில் மாய்ந்த இந்திய மக்களை இலங்கை வாழ் மக்களை ஈடேற்றும் வழிமுறை ஆய்ந்த முதல்வர்.”

                ‘மலையக இலக்கியம்’ என்ற தனித்துவம் மிக்க இலக்கியம் உருவாவதற்குப் பாதை அமைத்துக் கொடுத்தும், அந்தப் பாதையில் நடந்து சென்றும் மலையக ஆக்க இலக்கியத்தின் முதல்வராக திகழ்ந்தார்.

                மலைமுகடுகளிலும், தேயிலைக்காடுகளிலும் தமது வாழ்வை அர்ப்பணித்த மனித ஜீவன்களைப் பற்றி முதன் முதல் குரல் கொடுத்த மனித மாணிக்கமான கோ. நடேசய்யர் என்ற பெயர் ‘மலையகம்’ என்ற சொல் இருக்கும் வரையில் நிலைத்திருக்கும். 

- பி.தயாளன்

Pin It

நாகசேனர், புத்தத் தத்தர், தம்மபாலரைப் போல புத்தகோசரும் சூக்தங்களுக்கும், பிடகங்களுக்கும் தன்னுடைய மாபெரும் விளக்க உரைகளைப் பாலிமொழியில் ஆக்கியளித்துள்ளார். தேரவாதியாக அறியப்படுகிற புத்தகோசர் இந்திய துணைக் கண்டத்துத் தென்பகுதியில் உள்ள சோழநாட்டில் சிறிது காலம் இருந்தவர். இலங்கை என்று சொல்லப்படுகிற ஈழத்து மஹாவீரையிலிருந்து திரும்பிவந்து தனது தாயகமான சோழநாட்டு தலைநகரான உரகுபுரம் என்று சொல்லப்படுகிற உறையூரில் தங்கியிருந்த புத்ததத்தரைச் சந்தித்துவிட்டு ஈழத்து மஹாவீரைக்குச் சென்று அங்கிருந்தபடியே புத்தகோசர் தனது ஆகச் சிறந்த ஆக்கமாகிய விசுத்திமக்காவை (Path of Purification) ஆக்கித் தந்ததாகத் தெரிகிறது. மிகச் சிறந்த உரையாளரான புத்தகோசரின் வாழ்வையும்-பணியையும் அறிவதற்குத் தமிழில் ஒரு கட்டுரையும் எமக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் கோசரின் வாழ்வையும்-பணியையும் அறிமுகம் செய்வதே எமக்குவாய்த்தப் பணியாகிவிட்டது. எனவே புத்தகோசர் குறித்த அறிமுகம் செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

                புத்தகோசரின் வாழ்வும் பணியும் குறித்த இக்கட்டுரை பின் வரும் தலைப்புகளில் அமைக்கப்பட்டுள்ளது.

 • அடிப்படை ஆதாரங்கள்
 • புத்தகோசரின் வாழ்வு
 • பிறப்பிடம் குறித்த கருத்து வேறுபாடுகள்
 • மஹாவஸ்த்தி இரேவதாவிடம் கோசர் தம்மபதம் பயிலுதல்,
 • புத்ததத்தரை சந்தித்துவிட்டு புத்தகோசர் ஈழத்து மஹாவிகாரைக்குச் செல்லுதல்
 • புத்தகோசரின் பணிகள்,
 • புத்தகோசர் எழுதிய உரைகள்
 • விசுத்திமக்காவின் சாராம்சம்
 • விமரிசனங்கள்
 • தொகுப்புரை
 • அடிக்குறிப்புகள்
 • பார்வைநூல்கள்

என்கிற நிலையில் இக்கட்டுரை அமைகிறது.

 

 • 1.     அடிப்படை ஆதாரங்கள்

புத்தகோசர் ஞானிகள் பலரைப் போல தமது வாழ்க்கையை எழுதிவைக்கவில்லை. இதனால் கோசருடைய வாழ்வை அறிவது மிகவும் இடர் நிறைந்ததாகக் காணப்படுகிறது. பொதுவாக பிக்கு மற்றும் பிக்குணிகளின் வாழ்வு இடையறாத பயணத்தினாலானது. புத்தகோசரின் வாழ்வும் இவ்வாறு அமைந்து விட்டதனால் இவருடைய வாழ்வைக் குறித்து முழுமையாக அறிவதற்கில்லை. புத்தகோசர் எழுதிய உரைப்பகுதிகளில் வெளிப்படையாக இவரைப் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும்இவர் குறித்த நம்பகமான தகவல்களை மூன்று ஆவணங்களிலிருந்து பெறமுடிகிறது.புத்தகோசரின் உரைகளில் காணப்படுகிற முகவுரை என்று சொல்லப்படுகிற பாயிரம் பின்னிணைப்பு(short prologues and epilogues)”1” ஈழத்து வரலாற்று நூலான மஹாவம்ச, மிகச் சமீபத்திலறியப்பட்ட புத்தகோசபதி உள்ளிட்டவற்றில் இவர் வாழ்க்கை தொடர்பான தகவல்கள் காணப்படுகின்றன. இவைமட்டுமின்றி கந்தவம்சம், சாசனவம்சம், தீபவம்சம் உள்ளிட்ட நூல்களிலும் இவருடைய வாழ்க்கைக் குறிப்புகள் காணப்படுகின்றன.”3” புத்தகோசரின் சமகாலத்தவராக அறியப்படும் புத்ததத்தரின் அபிதம்ம அவதாரத்திலும், புத்தகோசர் விட்டுச் சென்ற குறைப்பணிகளை நிறைவு செய்தவர் தம்மபாலர் ஆகவே தம்மபாலரின் உரையிலும்”4” மற்றும் 13ஆம் நூற்றாண்டை சார்ந்த தர்மகீர்த்தியின் உரையிலும்”5” புத்தகோசர் வாழ்க்கைக் குறிப்பு கிடைக்கின்றன.

 • 2.    புத்தகோசரின் வாழ்வு

புத்தநெறிக்கான பாலி மொழி உரையாளர்களுள் ஆகச் சிறந்த ஆளுமையான புத்தகோசர் மரபான வைதீக பிராமண குடும்பத்தில் பிறந்தவர். “6” இவருக்கு பெற்றோர் இட்டப் பெயர் கோசர் என்பதாகும். புத்தநெறியை ஏற்றுக் கொண்ட பிறகே இவர் தனது பெயரை புத்தகோசர் என்று மாற்றிக் கொண்டிருக்கவேண்டும். “7” புத்தகோசர் என்ற பெயருக்கான பொருள் புத்தரின் குரல் என்பதாகும். “8”தேரரான இவர் பதாந்தகரிக்கா என்று அறியப்படுகிறார். பதாந்தகரிக்கா என்பதற்கு பயணத்தை மேற்கொள்பவர் என்று பொருள் இருக்கிறது. “9” தென்னிந்தியாவின் அன்றைய சோழநாட்டு பகுதியான காஞ்சிபுரத்தைச் சார்ந்தவர் புத்தகோசர். காஞ்சிபுர நகரத்தில் இவர் பிறக்கவில்லையென்றாலும் இப்பகுதிக்குட்பட்ட ஒரு சிற்றூரில் இவருடைய பெற்றோர் வாழ்ந்தனர். எனவே இவரும் பெற்றோர் வாழ்ந்த சிற்றூரிலே பிறந்து வளர்ந்திருக்கவேண்டும் எனக் கருதவும் இடம் உண்டு. என்றாலும் இவருடைய பிறந்த இடம் குறித்து கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

 

 • 3.    புத்தகோசர் பிறந்த இடம் குறித்த கருத்துவேறுபாடுகள்

புத்தகோசர் தென்னிந்தியாவில் பிறந்தவர் என்றும் வட இந்தியாவிலிருந்த அன்றைய மகத அரசுக்குட்பட்ட புத்தகயாவிற்கு அருகில் பிறந்தவர் என்றும் ஆய்வாளர்கள் நடுவில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. பரமிய மரபு கதையும், மஹாவம்சமும் இவ்விருகருத்து வேறுபாடுகளுக்கு அடிப்படைகளாக அமைகின்றன. மஹாவம்சம் கூறும் கருத்தே பெரும்பாலான ஆய்வாளர்களால் நம்பப்படுகிறது. ஆகவே மஹாவம்சம் கூறும் கருத்துக்களை முதலில் காண்போம். புத்தகோசர் முன்பே குறிப்பிட்டது போல பிராமண குடும்பத்தில் பிறந்தவர். மகத அரசுக்கு உட்பட்ட புத்தகயாவிற்கு அருகில் பிறந்தவர் என்றும் குறிப்பிடுகிறது. இவர் மஹாநாமா அரசரின் ஆட்சிகாலத்தில் ஈழத்து அனுராதபுரத்திற்கு வந்தார் என்றும், மஹிந்தா ஆட்சி காலத்திலும் இருந்தார் என்றும் கூறுகிறது. “Mahavamsa (Turnour), pp. 250-253. Cf Andersen's Pali Reader, pp. 1 13-1 14.

மேலும் ஈழத்து அனுராதபுரத்து மஹாவிகாரையிலிருந்து திரும்பிவந்து புத்தகயாவில் உள்ள போதி மரத்தை பார்த்தார் என்கிற தகவலை மஹாவம்சத்தை மேற்கோள் காட்டி அறிஞர்கள் சுட்டுகின்றனர். எஸ்.பொ. அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு மித்தரன் வெளியீடாக வந்துள்ள மஹாவம்சத்தில் மஹாவீரையிலிருந்த தலைமை ஆச்சாரியர் ஒருவர் புத்தகயாவில் உள்ள போதி மரத்தைச் சென்று பார்த்ததும், பிறகு அங்கிருந்து போதியின் ஒருப் பகுதி ஈழத்து மஹாவீரைக்குக் கொண்டுவரப்பட்டு நிறுவப்படுவதும் குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் புத்தகோசர் போன்றதொரு ஆச்சாரியர்களுடைய பெயர்கள் இந்நூலில் காணப்படவில்லை. சிங்களக் கதையாளர்களால் மறைக்கப்பட்டுள்ள தமிழக தொடர்பு குறித்த தகவல்கள் சில அடிக்குறிப்புகளாக தரப்பட்டுள்ள போதிலும் பாலிமொழி ஆச்சாரியர்களின் வரலாறு குறித்த தகவல் எதுவும் காணப்படவில்லை. சமயப் பகைக்காரணத்தினால் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது எனக் கருத வேண்டியிருக்கிறது.

கோசரின் பிறப்பிடம் குறித்த இன்னொருக் கருத்தாவது தென்னிந்தியாவை சார்ந்தவர் என்பதாகும். பர்மாவின் மரபு கதை ஒன்றை ஆதாரங்காட்டி புத்தகோசர் தென்னிந்தியாவை பிறப்பிடமாக கொண்டவர் என விளக்குகிறார் தம்மானந்தாகோசாம்பி.மஹாவம்சத்தின் முகவுரை கூறும் கருத்துப்படிப் பார்த்தால் புத்தகோசர் சிறிது காலம் மட்டுமே காஞ்சியில் தங்கியிருந்தார் என்று கூறுகிறது. ஆனால் உண்மையில் புத்தகோசர் தென்னிந்தியாவில் பிறந்தார் என்று மேற்கத்திய அறிஞர்களான ஆஸ்கர்வோன்ஹினுபா மற்றும் பால்வாட் (Oskar von Hinüber and Polwatte)ஆகியோர் விளக்குகின்றனர். புத்தகோசர் ஆந்திரப் பகுதியிலிருந்து வந்தவர் என்கிற கருத்தும் உண்டு. இந்தத் தகவலை பிக்குபோதிபாலா தாம் எழுதியுள்ள ஆச்சாரியர் புத்தகோசர் என்கிற ஆங்கிலக் கட்டுரையில் குறிப்பிடுகிறார். காஞ்சிபுரமாவட்டத்தில் உள்ள மோரனசேதகம் என்கிற சிற்றூரில் தமிழ் பேசும் பிராமணக்குடும்பத்தில் புத்தகோசர் பிறந்தார் என்கிற கருத்து சுட்டத்தக்கது. மோரனா என்பதற்கு மயில் முட்டை என்று பெயர் மட்டுமல்லாமல் மயூரப்பட்டிணமான மயிலாடுதுரையில் இருந்தபடியே மனோரதபூரணி என்கிற உரையை ஆக்கினார், அடுத்தநிலையில் இவர் ஆந்திராவை சார்ந்தவர் என்று வைத்துக் கொண்டாலும் அன்றைய ஆந்திராவின் ஒருப் பகுதி தமிழகத்தோடு இருந்தது என்பதாலும், ரேனாட்டுச்சோழர் ஆந்திரப் பகுதியை ஆண்டனர் என்பதாலும் இவர் சோழநாட்டவர் எனலாம். இவர் பர்மாவில் பிறந்தவர் என்கிற கருத்தும் கூறப்படுகிறது.

கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக்குமுன் பர்மாவில் புத்த நெறி பரவியிருக்கவில்லை. மட்டுமல்லாமல் குறிப்பிடத் தக்கவகையில் புத்த அறிஞர் யாரும் தோன்றியிருக்கவில்லை என்கின்ற ஆய்வாளர்களின் கருத்து நோக்கத்தக்கது. கி.பி.2.ஆம்நூற்றாண்டுமுதல் கி.பி.14.ஆம்நூற்றாண்டு வரை தமிழகத்தில் புத்தத்தின் செல்வாக்கு மிகுந்து இருந்தது. அதுவும் குறிப்பாகச் சோழநாட்டை மைய்யமாகக் கொண்டுதான் இருந்தது. மோரனா என்பது தமிழகத்தை சாரந்தது என்பதையும் நினைவில் கொண்டு பார்க்கிறபோது தமிழகத்தில் அன்றைய சோழநாட்டில் பிறந்தார் என்கிற கருத்து மேல்சுட்டிய அறிஞர்களின் கருத்துக்களோடு ஒத்துப் போகிறது. பாலிமொழி புத்த அறிஞர்களை வளர்த்தெடுத்ததில் தமிழகத்திற்கு மட்டும் வரலாற்றில் தனியிடம் உண்டு. குறிப்பாக காஞ்சிபுரத்தில் மட்டும் நாளந்தவுக்கான இருக்கைகள் இருந்தன. புத்த ஆச்சாரியர்களும் மாணவர்களும் காசி நாலாந்தாவிற்கு காஞ்சிபுரத்திலிருந்தே சென்றனர். கவுதமபுத்தருடைய சிந்தனைகள் யாவும் பொருள்முதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்டவை. கி.மு. 6-ஆம் நூற்றாண்டிலேயே தமிழகம் பொருள் முதல்வாத நாத்தீகக் கொள்கைகளை கற்பிக்கும் இடமாக விளங்கியிருக்கிறதை பின்வரும் சக்கரவர்த்திநயனாரின் தகவல் நமக்கு உணர்த்தக் கூடியது. “‘நீலகேசி’ என்ற காவியத்தின் பதிப்புரையில் பேராசிரியர் அ. சக்கரவர்த்தி நயினார் தமிழ்நாட்டில் பூதவாதம் வழக்கில் இருந்ததைக் குறித்து எழுதுகிறார்.

“இராஜகிருகத்தின் அருகில் நாளந்தா என்னும் நகரில் மாதவன் என்னும் ஒரு பிராமணன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு கோஷ்டிலன் என்ற மகனும் சாரி என்ற மகளும் இருந்தனர். கொள்கைக் கற்றுக்கொள்வதற்காகத் தென்னாடு சென்றான். சாரி, தென்னிந்திய பிராமணன் ஒருவனை மணந்துகொண்டாள். அவன் பெயர் திஷியன் .அவனுக்கு ஒரு மகன் பிறந்தான் அவனுக்கு உபதிஷியன் என்று பெயரிட்டார்கள் அவர்களுடைய இளைய மகனுக்கு சாரிபுத்தன் என்று பெயர. அவர்கள் வாழ்ந்த ஊருக்கு பக்கத்து ஊரில் மொக்கல் என்னும் சிறுவன் இருந்தான். இருவரும் அவர்கள் இருவரும் பலத்தத்துவங்களைக் கற்றார்கள் அவற்றுள் ஒன்று பூதவாதம்அவர்கள் இளைஞர்களான பின்னர் புத்தரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரை அடைந்து அவருடைய சங்கத்தில் சேர்ந்தார்கள். “மாமன்னர் அசோகர் காலம் தொட்டே அதாவது கி.மு. 3ம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் புத்தநெறி வளரத் தலைப்பட்டது.

மவுரிய பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு தேரவாத புத்தக் கருத்துக்களும் பாலிமொழியும் பின்னுக்கு தள்ளப்பட்டு இந்திய துணைக் கண்டத்தின் வடக்கத்திய சூழலில் வைதீக சார்புடைய சமஸ்கிருத அறிஞர்களின் மஹாயானம் செல்வாக்குப் பெற்றது. அஸ்வகோசர், நாகார்ஜுனர், திந்நாகர், வசுபந்து போன்றோர் இந்த பின்புலத்தில் வந்தோர் என்பது குறிப்பிடத் தக்கது. இன்னும் சொல்ல போனால் கனீஷ்கர் காலம் தொட்டே மஹாயானம் எழுச்சி கொண்டது. மஹாயான ஆச்சாரியர்கள் அனைவரும் வைதீகசமஸ்கிருத நெறிப்பட்டவர்கள். இவர்களுக்கு அரசர்களின் பேராதரவு தொடர்ந்து கிடைத்துவந்தது. காஞ்சிபுரத்து புத்தகோசரின் சமகால வட இந்திய அரசனான சமுத்திரகுப்தனும் பாலிமொழி அறிஞர்களை ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சங்ககாலம் தொட்டே கி.பி.14-ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் தேரவாத புத்தநெறிக்கும் பாலிமொழிக்கும் ஆதரவு இருந்து வந்திருக்கிறது. அசோகரின் அறவெற்றி பயணத்தின்போது (தர்மவிஜயத்தின்போது) மஹிந்திரரின் புகார் நகரத்தில் ஏழு புத்த விகாரைகள் கட்டுவித்தார். இது சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் இந்திரவிகாரை என்றுச் சுட்டப்படுகின்றன. பழந்தமிழக அரசர்களும் புத்தத் தேரர்களுக்கு விகாரை அமைத்துக் கொடுத்துள்ளனர். பாண்டிய அரசன் ஒருவன் அரிட்டருக்கு ஒரு ஊரை அளித்த செய்தியை அரிட்டாப்பட்டி கல்வெட்டு கூறுகிறது.

சேர அரசன் ஒருவன் வெங்காயபன் என்ற புத்த தேரருக்கு படுக்கை அமைத்து கொடுத்தான். இத்தகவலை அரிச்சலூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது. அதியமானும் திருக்கோவிலூருக்கு அருகில் தேரர் ஒருவருக்கு பள்ளி அமைத்து கொடுத்த செய்தியை ஜம்பைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவற்றைத் தவிர கி.பி.3-ஆம் நூற்றாண்டுமுதல் புத்த அரசர்களே தமிழகத்தில் ஆட்சி செய்துள்ளனர். அசோகவர்மன், குமாரகுப்தன், அச்சுதவிக்கந்தன் போன்றோர் குறிப்பிட தக்கவர்கள். இந்த புத்த அரசர்களை சைவ தமிழர்கள் கலப்பிறர் பல்லவர் என்று ஒதுக்குகின்றனர். வடக்கே தேரவாத புத்த நெறியும் பாலிமொழியும் மதிப்பிழந்த போது தமிழகத்தில் தேரர்கள் குடியேறி விகாரைகள் தோரும் பாலிமொழியைக் கற்பித்தனர். இதனால் பாலிமொழி புத்த அறிஞர்கள் அனைவரும் தமிழகப் பின்புலத்தை கொண்டவர்களாகத் தெரிகிறது. புத்தத் தத்தத்தேரரும்,புத்தகோசரும் அச்சுதவிக்கந்தன் காலத்தில் தமிழகத்திலிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி.3-ஆம் நூற்றாண்டுவாக்கில் இருந்து தேரவாதமும் பாலிமொழியும் தமிழகத்துக்குரிய சொத்தாக மாறிவிட்டது என்று சொல்லுமளவிற்கு தமிழகம் சிறப்புற்றிருந்த்து. தேரவாதம் என்பது திராவிடம் என்பதை குறிக்கிறது என்கிற கருத்தும் உண்டு. இத்தகைய தமிழக சூழலில் பிறந்து வளர்ந்தவர்தான் புத்தகோசர் எனச் சொல்லமுடியும். இத்தகைய சிறப்புவாய்ந்த புத்தத் தமிழக வரலாறு குறித்து இலங்கை உருவாக்கக் கதையான மஹாவம்ச எதுவும் குறிப்பிடவில்லை. சிங்கல இன அரசியலைக் கட்டியெழுப்புவதற்கான வரலாற்றுத் தேவையை நிறைவேற்றும் கதைதான் மஹாவம்சம் என்பதாக இருக்கிறபோது தமிழக புத்த வரலாற்றை மறைப்பதில் வியப்பெதுவும் இல்லை. இதனால் புத்தகோசர் மகத அரசுக்குட்பட்ட பகுதியில் புத்தகயாவிற்கு அருகில் பிறந்தார் என்கிற மஹாவம்சத்தின் கருத்து நம்பகத் தன்மையற்றது. ஒருதலை சார்புடையதாகத் தெரிகிறது.

மஹாவஸ்த்தி இரேவதாவிடம் அபிதம்மம் பயிலுதல்

புத்தகோசர் இளமையிலே வேதங்களின் மீது கேள்விகளை எழுப்பி விவாதங்களை நடத்திவந்தார். கி.பி.4ஆம் நூற்றாண்டுமுதலே புத்த சமயத்தோரின் புனித இடமான புத்தகயா இலங்கையின் கட்டுப்பாட்டில் இருந்தது. கி.பி.5ஆம் நூற்றாண்டில் மஹாவஸ்த்தியாக இரேவதா புத்தகயாவில் இருந்தபோது அந்த விகாரைக்குள் புத்தகோசர் அனுமதிக்கப்பட்டார். ஒருநாள் காலையில் புத்தகோசர் விகாரையில் பதஞ்சலியின் சூத்திரத்தை பாடினார். புத்தகோசரின் பாடலில் சுருதி பிசகுவதை கண்டுகொண்டிருந்த இரேவதாவிடம் புத்தகோசர் என்பாடல் நன்றாக இருக்கிறதா என்று கேட்க, ‘சரியில்லை’ என்று பதில் அளித்தார் இரேவதா. புத்தகோசர் எனக்கு சரியாக கற்றுத் தரமுடியுமா என்று கேட்க இரேவதா கோசரை அன்று முதல் மாணவராக ஏற்றுக் கொண்டு அபிதம்மத்தைக் கற்றுக் கொடுத்து இதன் மூலப் படிகள் எல்லாம் ஈழத்து மஹாவிகாரையில் இருப்பதாக சொல்லி நீ சென்று அவற்றையெல்லாம் தேடி உரையெழுதி புத்த நெறியை அனைவருக்கும் பரப்புவாயாக என்று வாழ்த்துக் கூறி கோசரை இரேவதா ஈழத்திற்கு அனுப்பினார் என்றுக் கூறப்படுகிறது.

புத்ததத்தரை சந்தித்தல்

புத்தகோசரைப் பற்றி அறிவதற்கு தமிழில் காணப்படுகிற மிக முக்கியமான வரலாற்று ஆதாரமாக நமக்கு கிடைப்பது புத்தத்தத்தருடனான சந்திப்பாகும். எனவே புத்தத் தத்தருடனான புத்தகோசர் சந்திப்புக் குறித்து அறிவது மிக இன்றியமையாததாகிறது. புத்தத் தத்தர் ஏனைய பாலி அறிஞர்களைப் போல தமிழகத்தைச் சார்ந்தவர். அச்சுதவிக்கந்தன் என்கிற கலப்பிர அரசன் என்று வைதீகத் தமிழர்களால் குறிப்பிடப்படுகிற புத்தநெறி அரசன் காலத்தில் வாழ்ந்தவர் மட்டும் இல்லை இவ்வரசனின் ஆதரவைப் பெற்றவர். இந்த அரசனின் வேண்டுகோள்படி வின

விநிச்சையம் என்கிற நூலை ஆக்கினார். என்கிற இத்தகவலை கே.கே. பிள்ளை தமிழகவரலாறு மக்களும் பண்பாடும் என்கிற நூலில் குறிப்பிடுகிறார். புத்தத் தத்தர் ஈழத்து மஹாவிகாரையிலிருந்து திரும்பி வந்து தனது தாயகமான சோழநாட்டு நாகப்பட்னத்து மண்டலத்துக்கு நிகமம் உரகுபுரமான உறையூரில் தங்கியிருந்தபோது புத்தகோசரைச் சந்தித்தார். தேரரின் ஈழத்து அனுபவம் குறித்து கேட்டறிந்தார் எனக் கூறப்படுகிறது. புத்தகோசர் புத்தத் தத்தர் சந்திப்பு குறித்து தமிழ் மற்றும் வட இந்திய ஆய்வாளர்கள் இடையில் இருவேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. மேலே காட்டப்பட்டுள்ள கருத்து தமிழ் ஆய்வாளர்களின் தகவல்களிலிருந்து பெறப்பட்டது. புத்த அறிஞர்கள் (budhist scalars 1954. T.n. ramachandhiran) குறித்து எழுதிய ராமசந்திரன் தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் கே.கே. பிள்ளை, பவுத்தமும் தமிழும் மயிலை சீனி. வேங்கடசாமி போன்றோர் கருத்துபடி புத்தகோசரும் புத்தத்தத்தரும் காஞ்சியில் இருந்தவர்கள் புத்தத் தத்தர் ஈழத்து மஹாவிகாரையில் சிறிதுகாலம் இருந்து தம் பணிகளை முடித்துவிட்டுத் தாயகமான சோழநாட்டுக்குத் திரும்பிவந்த பிறகு அவரோடு உரையாடிவிட்டு புத்தகோசர் ஈழத்துக்குச் சென்றார். என்பதை அறியமுடிகிறது.” களப குலத்தைச் சார்ந்த அச்சுதவிக்கிராந்தன் என்றொரு மன்னன் சோழ நாட்டைக் கைப்பற்றி அரசாண்டு வந்தான் என அறிகின்றோம். இவன் காலத்தில் புத்ததத்தர் என்ற பௌத்த அறிஞர் ‘விநய விநிச்சயம்’ என்னும் நூலைத் தாம் எழுதியதாகக் கூறுகின்றார். “கே.கே பிள்ளை (தமிழகவரலாறும் மக்களும் பண்பாடும்)

“பேர்பெற்ற புத்த கோஷர் என்னும் பௌத்த ஆசிரியரும் இவரும் தற்செயலாக ஒருவரை ஒருவர் கண்டு உரையாடியதாகக் கூறப்படுவதாலும், புத்தகோஷர் முதலாவது குமார குப்தன் என்னும் அரசன் காலத்தில் வாழ்ந்திருந்தவராகையாலும், சோழ நாட்டை ஆண்ட அச்சுத நாராயணன், அல்லது அச்சுத விக்கந்தன் என்னும் களபர (களம்ப) அரசனும் மேற்படி குமார குப்தனும் ஒரே காலத்தவராகையாலும், புத்ததத்த தேரரை அச்சுத விக்கந்தன் ஆதரித்தவனாகையாலும், இவர் கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவர். பவுத்தமும் தமிழும் , மயிலை சீனி ‘‘residence: Kanci in southern India.[5] Some scholars thus conclude (among them Oskar von Hinüber and Polwatte Buddhadatta Thera) that Buddhaghosa was actually born in South India and was relocated in later biographies to give him closer ties to the region of the Buddha.[5]

The Buddhaghosuppatti, a later biographical text, is generally regarded by Western scholars as being legend rather than history.[15]” இனி வட இந்திய ஆய்வாளர்களின் கருத்துகளை காண்போம். வட இந்திய ஆய்வாளர்கள் பெரும்பாலோர் மஹாவம்ச கருத்துகளை ஏற்போர் என்பது முன்பே சுட்டப்பட்டுள்ளது. புத்தகோசர் புத்தகயாவிலிருந்து ஈழத்த அனுராதபுரத்து மஹாவீரைக்கு பயணப்பட்டுக் கொண்டிருந்தபோது ஈழத்து மஹாவீரையிலிருந்து புத்தத் தத்தர் திரும்பிவந்து கொண்டிருந்தார். வழியில் ஒருவரையொருவர் பார்த்து பார்த்துப் பேசி கொண்டனர். (தத்தர்) “சகோதரனே எங்கிருந்துவருகிறாய்?” (கோசர்) “புத்தகயாவிலிருந்து வருகிறேன்.” (எங்கே போய் கொண்டிருக்கிறாய்” (கோசர்) “ஈழத்து அனுராதபுறத்து மஹாவீரைக்கு.” (தத்தர்) “எதற்காக செல்கிறாய்?” (கோசர்) புத்த மறை நூல்களுக்கு உரையெழுத போகிறேன்.” (தத்தர்) “நல்லது நானும் அவ்வண்ணமே திரு பணியாற்றிவிட்டு ஈழத்து மஹாவீரையிலிருந்த்தான் வருகிறேன்.” (கோசர்) “அப்படியா எந்த எந்த மறைநூல்களுக்கு நீங்கள் உரை செய்துள்ளீர்கள் அவற்றையெல்லாம் எனக்கு கொடுக்க முடியுமா” (தத்தர்) “ஓ, தாரளமாக” என்று சொல்லி தாம் எழுதிய அபிதம்ம அவதாரத்தை அபிதம்மத்துடனும், வினையவினிச்சையத்தை வினையபிடகத்துடனும் அவ்வற்றிற்குரிய புனித பேழையிலிட்டு கோசரிடம் தத்தர் கொடுத்தார். புத்தகோசர் தத்தரிடம் உரைப் பணிகளை கேட்டுக் கொண்டிருந்த போது த்த்தர் கோசரிடம் தாம் தாம் எழுதிய உரைகளையும் பிடகங்களையும் அவ்வவற்றிற்குரிய பெட்டிகளில் இட்டு கோசரிடம் கொடுத்தார். எழுதும் உரைகளில் ஒவ்வொரு படியை தவராமல் தமிழ் நாட்டிற்கு அனுப்பவேண்டும் என்று கோசரை தத்தர் கேட்டுக் கொண்டார். இருவரும் பேசிக் கொண்டிருந்தபோதே படகு வேகமாக சென்றது. அதாவது கோசர் ஒரு படகில் போகவும் த்த்தர் ஒரு படகில் வரும் படகில் சென்றபடியே இருவரும் பேசிக் கொண்டனர் என்பது போல கருத்து காணப்படுகிறது. இக்கருத்துகளை 2500 years in Buddhism, history of pali litterature, disiples in Buddhism போன்ற நூல்கள் சுட்டுகின்றன. உண்மையில் இதுபோன்ற கதை மிக சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தகோசபதி என்னும் நூலில் காணப்படுகிறது. கிட்டத்தட்ட இதுவும் மஹாவம்சத்தை போன்று சிங்கல கருத்தியலை முன்வைப்பதாக காணப்படுவதை மறப்பதற்கில்லை.

புத்ததத்த தேரர்

‘‘இவர் சோழநாட்டவர் இலங்கையில் அநுராதபுரத்திலிருந்து மகாவிகாரையில் இவர் சிலகாலம் தங்கியிருந்தார். பின்னர், கவீரபட்டினம் (காவிரிபட்டினம்) உரகபுரம் (உரையூர்), பூதமங்களம், காஞ்சிபுரம், முதலான ஊர்களில் வாழ்ந்துவந்தார். பிறந்த சோழ நாட்டினைத் தமது நூல்களில் பாராட்டிக் கூறியிருக்கின்றார்.

துறைமுகப்பட்டினமென்ற, செல்வத்தொகுதியும் மக்கட்கூட்டமும் நெருங்கிய இடமென்றும், அப்பட்டினத்தில் இவர் தங்கியிருந்த பௌத்தப்பள்ளி நெடுஞ்சுவர்களால் சூழப்பட்டுப் பெரியவாயில்களை உடையதென்றும், பள்ளிக்கட்டிடங்கள் பெரியனவாய் வெண்சுதை பூசப்பெற்றுக் கயிலாயம்போல் வெண்ணிறமாக விளங்குமென்றும் அபிதம்மாவதாரம் என்னும் நூலில் இவர் எழுதியிருக்கின்றார்.

காவிரிப்பூம்பட்டினத்துப் பௌத்தப்பள்ளியில் இருந்த போது, தமது மாணவராகிய புத்த சீகா என்பவர் வேண்டுகோளின்படி புத்தவம்சாத்தகாதை என்னும் நூலையும், சுமதி என்பவர் வேண்டுகோளின்படி, அபிதம்மாவதாரம் என்னும் நூலையும் இயற்றினார். சோழநாட்டுப் பூதமங்களம் என்னும் ஊரில் கண்ணதாசர் அல்லது வேணுதாசர் (இவர் வைணவராக இருந்து பின்னர் பௌத்தர் ஆனார் போலும்) என்பவரால் கட்டப்பட்ட பௌத்தபள்ளியில் தங்கியிருந்தபோது, இவர் பினய வினிச்சயம் என்னும் நூலைப் புத்தசீகா என்பவர் வேண்டுகோளின்படி இயற்றினார். அன்றியும், இலங்கையில் வாழ்ந்திருந்த மகாதேரர் சங்கபாலர் என்பவர் வேண்டுகோளின்படி உத்ர வினிச்சயம் என்னும் நூலைனைச் செய்தார். அன்றியும், புத்தவம்சம் என்னும் நூலுக்க மதுராத்த விலாசினி என்னும் உரையையும் ரூபாரூபவிவாகம், ஜினாலங்காரம் என்னும் நூல்களையும் இயற்றியிருக்கின்றார். இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள பௌத்தர்களால் இவர் மிகவும் போற்றப்படுபவர்.

பேர்பெற்ற புத்த கோஷர் என்னும் பௌத்த ஆசிரியரும் இவரும தற்செயலாக ஒருவரை ஒருவர் கண்டு உரையாடியதாக்க் கூறப்படுவதாலும், புத்தகோஷர் முதலாவது குமாரகுப்தன் என்னும் அரசன் காலத்தில் வாழ்ந்திருந்தவராகையாலும், சோழ நாட்டை ஆண்ட அச்சுத நாராயணன், அல்லது அச்சுத விக்கந்தன் என்னும் களபர (களம்ப) அரசனும் மேற்படி குமார குப்தனம் ஒரே காலத்தவராகையாலும், இவர் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவர். (மயிலை சீனி. வேங்கடசாமி – பௌத்தமும் தமிழும்)

புத்தகோசரின் பணிகள்

தமிழகத்திலிருந்து ஈழத்துமஹாவீகாரைக்குச் சென்ற புகழ் மிகு அறிவர் ஆச்சாரிய புத்தகோசர் வாழ்வியல் அனுபவத்தை எழுதுதல், புத்த பாலி அறிவரின் நூல்களுக்கு விளக்க உரைகள் எழுதுதல், பாலிபிடகங்களுக்கான சிங்கள உரைகளை மீண்டும் பாலிக்கு மாற்றி நுண்பொருள்மாலை ஏற்றுதல் என்கிற நிலையில் இவர் தம் பணிகளை அமைத்துக் கொண்டார். புத்த பாலி மொழி அறிவரின் நூல்களுக்கு புத்தகோசர் இயற்றிய உரைகளைப் பற்றி முதலில் குறிப்பிடுவது தேவையாகிறது.

தமிழகத்திலிருந்தபோதும் ஈழத்திலிருந்தபோதும் தமது உரைப்பணியை தொடர்ந்து செய்தார். ஆச்சாரிய புத்தகோசர் நாடகம், கவிதை, பிடகங்கள் என்று பலவற்றிற்கு உரைகளை ஆக்கி அளித்துள்ளார். என்பதை மஹாவம்சம் தெரிவிக்கிறது.பாலி புனித நூல்களுள் ஒன்றான திபிதக்கா மூலமாக 14. நூல்களது பெயர்கள் மட்டுமே தற்போது தெரியவருகின்றன. அவை வருமாறு, வினையபிடகத்திற்கு வினையா என்று பொதுவாகவும் சாமந்தபசதிகா, பாத்திமக்கா, கந்தவித்ரானி, சுத்தப்பிடகத்தில் உள்ள தீகநிகாயத்திற்கு சுமங்கலவிலாசினி, மற்ஜிமநிகாத்திற்கு பாபாசாஸுவதமி, சம்யுக்த்தநிகாயத்திற்கு சரத்தப்பக்கசீனி, அங்குத்தரநிகாயத்திற்கு மனோரதபூரணி, குத்தகநிகாயத்திற்கு குத்தகபதா, பரமார்த்தஜோதிகா, தம்மபததிற்கு தம்மபத அட்கதா, சுத்தநிபாத்திற்கு சுத்தநிபாதஅட்டக்கதா, ஜாதகாவிற்கு ஜாதகாத்தவநாநா, ஜாதகாட்டக்கதா, அபிதம்மாபிடகத்திற்கு தம்மாசங்கானி, அத்தசாலினி, விபங்கா, தாத்துக்கதா, சாமோஹாவினோதனி, பசப்பாகரமாத்தக்கதா, கதாவத்து, எமகம், பத்தானி ஆகிய உரைகளை புத்தகோசர் ஆக்கி அளித்துள்ளார். இந்த தகவலை மஹாவம்சம் 19, 20, 21. ஆகிய அத்தியாயங்களும் திபிதக்கா என்கிற நூலும் நமக்கு தெரியப்படுத்துகின்றன.

புத்தகோசர் முதலில் ஞானோதயம் என்கிற தன் அனுபவ நூலை இயற்றினார். பிறகு அத்தசாலினி என்பதையும் அதனை அடுத்து மஹாவஸ்தி ரேவதாவின் தம்ம போதனைக்கு தம்மசங்கானி என்கிற உரையையும் இயற்றியுள்ளார். இவர் உறையூரிலிருந்தபோது மனோரதபூரணியை எழுதினார். தன் காலம் வரை வாழ்ந்தபுத்த அறவோர் அறிவோர் குறித்தும், புத்தரின் 45. மழைகாலங்கள் குறித்தும் இந்நூலில் கோசர் குறிப்பிடுகிறார்.கவுதம சித்தார்த்தர் 45. மழைகாலங்கள் இந்த பூவுலகில் புத்தராக வாழ்ந்தார என்கிற தகவலைக் கோசரின் இந்நூல் நமக்குத தருகிறது. மழை காலங்களும் தங்கியிருந்த நகரங்களும் வருமாறு, இசிபட்டினம், 2-4. ராசகிருகம், 5. வைசாலி, 6. மான்குல பருவதம், 7. திரிசங்கு சொர்க்கம், 8. பகிச்கலவனம், 9. கோசாம்பி, 10. பரிலேயகா, 11. நளா, 12. வெரன்னியம், 13. கலிய பருவதம், 14. ஸ்ராவஸ்த்தியில் உள்ள ஜதிவனம், 15. கபிலவஸ்த்து, 16. அலாவியா, 17. ராஜகிருகம், 18-19 சாலிய பர்வதம், 20. ராஜகிருகம், 21-40. ஜேதவனம், புப்பராமம்.“ உள்ளிட்ட நகரஙகளில் கவுதமபுத்தர் தங்கி தமது போதனைகளை நிகழ்த்தினார். இந்த தகவலை புத்தகோசர் மனோரதபூரணியில் குறிப்பிடுகிறார். தமிழகத்திலிருந்தபோதுதான் கோசர் இந்நூலை ஆக்கியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rainy Seasons Places
First Rsi-patana
Scond to fourth Rajagrha
Fifth Vaisali

S

Ixth

Mankula-parvata
Seventh Trayastrimsa Heaven
Eighth Bhesakalavana, near
  Sumsumara-giri.
Ninth Kausambi
Tenth Pari leyy aka
Eleventh Nala
Twelfth Veranja
Thirteenth Caliya-parvata
Fourteenth Jetavana in Sravasti
Fifteenth Kapilavastu
Sixteenth Alavi
Seventeenth Rajagrha
Eighteenth & nineteenth .. Caliya-parvata
Twentieth Rajagrha
Twenty-first to forty- Jetavana or Pubbarama in
sixth Sravasti.

ஜாதகஅட்டகதா என்பது இலங்கை உருவாக்கத்திற்கான தொன்மகதைகளைக் கொண்டது. இலங்கை அரசர்களின் முன்னோர்களாக மனுநீதி, சிபி குறித்த தொன்மங்கள் இந்நூலில் விவரிக்கப்படுகின்றனர். தசையிழந்த புறாவுக்கு தன்னையே கொடுத்த செம்பியன் சோழர்களின் முன்னோனாக விவரிக்கும் புறநானூற்றுச் செய்யுளும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது. அட்டக் கதா மஹாநாமா என்பவர் கி.பி.5.ஆம் நூற்றாண்டில் ஈழத்தில் மஹாவிகாரை நிறுவியது முதற்கொண்டு இலங்கை புத்த வரலாற்றை தெறிவிக்கிறது. கி.பி. 2.ஆம் நூற்றாண்டில் கணித்கர் அரசனின் ஆதரவை பெற்ற சமஸ்கிருத ஆச்சாரியர் அஸ்வகோசரின் சுந்தரநந்தன் உள்ளிட்ட காவிய நாடகத்தை புத்தகோசர் தொகுத்து 13. அத்தியாயங்களை பாலியில் ஆக்கியுள்ளார். கி.பி. 7.ஆம் நூற்றாண்டில் இந்நாடக காவியம் மகதியாகிய பாலியிலிருந்து சீனமொழியில் பெயர்த்து எழுதப்பட்டதாக தெரிகிறது. புத்தகோசர் பிராமணக்குடும்பத்தைச் சார்ந்தவர் என்பது இக்கட்டுரையின் முன் பகுதியில் கூறப்பட்டுள்ளது. கோசர் தீகநிகாயத்திற்கு எழுதிய சுமங்கலவிலாசினி என்கிற உரையில் பிராமணர்களின் வேதவேள்வி வழிபாடுகள் போன்ற நடைமுறைகளை விளக்குகிறார். அவற்றின் சாரத்தை சுருக்கமாக காண்போம். இருக், எஸூர், சாம, அதர்வனம் என்று 4. வேதங்கள் பிராமணருக்கு உண்டு. பிரம்மனின் தலையில் பிறந்தவரே பிராமணர். பாதத்தில் பிறந்தவர் சூத்திரர். பிராமணர் யாரும் பிரம்மனை கண்டதில்லை ஆனால் இந்திரன், வருணன், பிரஜாபதி, மாருதி, எமன் உள்ளிட்ட தெய்வங்கள் பிராமணரால் ஆடு, பசு முதலியவற்றைப்பலி கொடுக்கப்பட்டு உதவிக்கு அழைக்கப்படுகின்றன. மனிதர்களைத் தேர்ந்தெடுத்து அரசனைப்போல கவுரவித்து விருந்தளித்து பலி கொடுக்கும் பழக்கத்தையும் குறிப்பிடும் கோசர் இவ்வகையான பழக்கங்கள் யாவும் அகற்றப்பட வேண்டியன.

புத்தரின் கொல்லாமை உள்ளிட்ட கொள்கைகளே சமூகத்தை மாற்றியமைக்கவல்லது. என்று சுமங்கலி விலாசினியில் புத்தகோசர் குறிப்பிடுவதை மாலசரண்லா தனது ‘Life and work In budha ghosha’ என்கிற நூலில் எடுத்துக்காட்டுகிறார். வேதமரபுகளையும் பிற சமூக கிளை மரபுகளையும் நன்கு அறிந்து அவற்றின் மீது கேள்விகளை எழுப்பி விவாதிப்பது புத்தகோசரின் முறை என்கிற ரைஸ்டேவஸ் போன்றோரின் கருத்தும் மனங்கொள்ளதக்கது. பிராமணனரின் இலக்கியங்களான இதிகாசங்களில் உரையாடலுக்கான பண்பில்லை அவை ஒருவகையான சுருதியோடு மீண்டும் மீண்டும் சொல்லப்படுவது இந்த சுருதிநிலைக்கு நிறுக்தம் என்று பெயர் இதற்கு யாஸ்கர் இலக்கணம் எழுதியுள்ளார். என்பதை சுட்டிக்காட்டும் கோசர் புத்தமரபில் உள்ள உரையாடல் முறையை விவரிக்கிறார். ஆச்சாரியர் நாகசேனாவுக்கும் அரசர் மிலிந்தருக்கும் இடையில் நடைபெற்ற கேள்வி பதிலாக அமைந்த உரையாடலை மிலிந்தபன்கா என்கிற நூலிலிருந்து எடுத்துக்காட்டுகிறார். புத்தகோசரின் பபங்கசூடாமணி போன்ற நூல்களில் காணப்படுகிறது. இவற்றிலிருந்து அனைத்து அறிவு மரபுகளையும் புத்தகோசர் அறிந்து கொண்டு புத்தநெறி சொல்லாடல்களைக் கருத்தியல் தளத்திலும் சமூக நடைமுறையிலும் உருவாக்கினார் எனலாம். புத்தநெறி அடிப்படையிலேயே உரையாடல் தன்மையோடுதான் தோன்றி வளர்ந்த்து. சீடர்களும், பொதுமக்களும் கேள்வி கேட்க கவுதமபுத்தர் பதில் அளிக்கும் நிலையை சூக்தங்களும் பிடகங்களும் நமக்கு உணர்த்துகின்றன. நாகசேனாவின் மிலிந்தபங்காவும் புத்தகோசரின் பாபங்கசூடாமணியும் உரையாடல் தன்மையில் அமைவன என்பது குறிப்பிடத்தக்கது. புத்தநெறியோடு தொடர்புடைய உரையாடல் பண்பை பிராமணியம் தனதாக்கிக்கொள்ள பகவத்கீதையையும், பிற உபநிடதங்களையும் உருவாக்கியது. என்பது மனங்கொள்ளத்தக்கது.

விசுத்திமக்கா

 • விசுத்திமக்கா என்பது ஒரு கலைக் களஞ்சியமாகும். புத்தசமயத்தின் அனைத்து சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் தத்துவ விளக்கங்களையும் உள்ளடக்கியது. ஆனால் இதனை உரை என்று கொள்வோரும் உண்டு. இதனை ஆக்கியவர் கி.பி.5.ஆம் நூற்றாண்டை சார்ந்த ஆச்சாரியர் புத்தகோசர். இவர் ஈழத்தில் உள்ள அனுராதபுரத்து மகாவிகாரையில் இருந்தபோது இவர் ஆக்கினார் எனச் சொல்லப்படுகிறது. உபதிசா என்பவரின் விமுக்திமக்கா என்கிற சிங்களமொழிநூல் இதற்கு முதல்நூலாகவும் சொல்லப்படுகிறது. ஆச்சாரியா புத்ததத்தரை தொடர்ந்து ஈழத்து அனுராதபுறத்து மஹாவிகாரைக்கு ஆச்சாரியர் புத்தகோசர் சென்ற நிலையில் அங்கிருந்த ஆச்சாரியர்களும் பிக்குகளும் புத்தகோசரின் அறிவாற்றலைச் சோதிக்கும் நிலையில் சூக்தத்திலிருந்த இரண்டு பாக்களை கோசருக்குக் கொடுத்து உரை எழுத சொன்னபோது இந்த விசுத்திமக்கா என்கிற நந்நெறி விளக்கத்தை ஆக்கினார் எனவும் சொல்லப்படுகிறது. முதல் முறை எழுதப்பட்ட விசுத்தி மக்கா படி காணாமல் போய்விட்டது என்று சிங்களாச்சாரியர்கள் சொல்ல இரண்டாவது முறை கோசர் எழுத அதுவும் காணாமல் பே ய்விட்டது என்று சிங்களவர் சொல்ல மூன்றாவது முறையும் ஒரு எழுத்துக்கூட மாறாமல் கோசர் அப்படியே ஆக்கித்தர மேலும் கோசருடைய ஆற்றலை சோதிக்க அச்சம் கொண்ட சிங்களவர்கள் ஆச்சாரியர் புத்தகோசரின் சிறப்பான நினைவாற்றலுக்கு மதிப்பளித்து ஏற்றுக் கொண்டனர். விசுத்திமக்கா சிங்கள மொழியில் இயற்றப்பட்டது. என்கிற கருத்து தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. இது நம்ப தகுந்ததன்று. ஏனெனில் கி.பி. 12.ஆம் நூற்றாண்டுவரை ஈழத்து அனுராதபுரத்து மஹாவிகாரைக்குச் சென்று கடனாற்றியவர்கள் அனைவரும் மாகதி அல்லது பாலி மொழி ஆச்சாரியர்களே என்பது குறிப்படத்தக்கது. இலங்கையின் வரலாற்றுத் தரவுகளான மஹாவம்சம், சாசனவம்சம், தீபவம்சம், ஜம்புதீபம், அட்டக்கதா, ஜாதக கதா உள்ளிட்டவை மாகதி அல்லது பாலியில் அமைந்திருக்கின்றன. இதனால் விசுத்திமக்காவும் பாலி மொழி நூல் எனக் கொள்ளவேண்டும். இப்படி சொல்வதற்கு ஆதாரங்கள் பல உண்டு என்றாலும் சுருக்கம் கருதி ஒன்றை மட்டும் குறிப்பிடப்படுகிறது. அட்டக்கதா, சாசனவம்சம், கங்கவிதராணி, விசுத்திமக்கா போன்று உரைநூல் பகுதிகளில் மாகதி அல்லது பாலி மொழி இலகணவிதிகள் புத்தகோசரால் விளக்கப்பட்டுள்ளது. மேலும் விசுத்தி மக்காவில் காணப்படுகிற பெரும்பாலான சொற்கள் பாலிமொழி சொற்கள் என்பதுவும் மனங்கொள்ளத்தக்கது. விசுத்திமக்கா இலங்கைக்குரியது மட்டுமல்ல இன்று தெற்காசியாவாக விளங்குகிற அனைத்து நிலப்பரப்புக்கும் உரிய சிந்தனைகளையும் உள்ளடக்கியது இந்நிலையில் இந்நூல் அனைத்து நிலப்பரப்புக்கும் உரியது. கி.பி.505இல் விசுத்திமக்கா பாலியிலிருந்து சீனமொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

The work is entirely lost in Ceylon and it exists only in a Chinese translation dated A.D. 505 by a Cambodian priest named Sanghapala. Mr. Nagai in Section 5 of his article shows how the Chinese text agrees generally with the text of the Visuddhimagga, and further records thus, "the difference in each case can be accounted for in one way or another on the ground of re arrangement, interpolation or curtailment. On the whole, the description of the Chinese is much simpler than that of the Pal” (that of the Pali." (J.l'.T.S., 1017-1919, PP- 69-80.( J See chapters I and II. (2 Buddhism, Primitive and Present, by Coplcston, p. 213. )

இதே சமகாலத்தில் பர்மியமொழியில் விசுத்திமக்கா ஒலிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. மாகதி மொழியின் இலக்கண விதிகளு இதில் காணப்படுவதை ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். கம்போடியாவில் புத்தகோசவிகாரை என்கிற விகாரை காணப்படுகிறது. புத்த நெறியின் அனைத்துத் தத்துவங்களையும் உள்ளடக்கி இறுதியாக தோன்றிய ஆகசிறந்த புத்த புனித ஆக்கம் விசுத்திமக்கா என்றும் மதிப்பிடுகின்றனர். வெவ்வேறு மக்களிடையே தோன்றிய வேறுபட்ட தத்துவங்களை கொண்டிருப்பதனால் பிடகங்களிலிருந்து இது மாறுபட்ட தன்மையை உடையது. தியானம், நற்சிந்தனை, உள்மெய், துன்ப தொடரிலிருந்து விடுதலை அல்லது மன அமைதி போன்றவற்றை விசுத்திமக்கா சாரமாகக் கொண்டுள்ளது. மேலே விவாதிக்கப்பட்டவற்றிலிருந்து இரண்டு கருத்துக்களை பெறமுடிகிறது. ஒன்று விசுத்தி மக்கா மாகதி அல்லது பாலிமொழியில் ஆக்கப்பட்டது. இரண்டு உபதிசா என்கிற சிங்களவரின் விமுக்த்திமக்கா இதற்கு முதல் நூல் அல்ல. விமுக்த்திமக்கா விசுத்தமக்காவுக்கு பிறகு தோன்றியிருக்க வேண்டும். ஏனெனில் கி.பி.5.ஆம் நூற்றாண்டுவாக்கில் சிங்கலமொழி அறிவு மொழியாக வளர்ந்திருக்கவில்லை என்கிற கருத்தும் உண்டு. இனி விசுத்திமக்காவின் உள்ளடக்கம் அமைப்பு குறித்து விளக்குவது இன்றியமையாத்தாகிறது.

விசுத்திமக்காவின் உள்ளடக்கமும் அமைப்பும்

விசுத்திமக்கா என்பதற்கு ‘Path of purification’ என்று ஆங்கிலத்தில் மொழியாக்கப்பட்டுள்ளது. இதனை தமிழில் நன்நெறி, அல்லது நல்வழி என மொழியாக்கலாம். இது பொருள்நிலை நோக்கி செய்யப்பட்டதாகும். சொல்லுரை அல்லது பதவுரையை நோக்குவதும் சிறிது புரிதலை ஏற்படுத்தக்கூடியது என்கிற நிலையில் பார்த்தோமானால் விசுத்திமக்க என்பதை வி+சுத்தி+மக்க என பிரிக்கலாம். மிகச் சிறந்த தூய்மையான வழி என்று பதவுரை கொள்ளமுடியும். எளிமையும் பொருள்நலமும் நோக்கி இதனை நன்நெறி கலைக்களஞ்சியம் அல்லது நல்வழி கலைக்களஞ்சியம் எனச் சுட்டுவது தகும். புத்தகோசர் என்கிற தேரவாதியால் இந்தக் கலைக்கலஞ்யிம் ஆக்கப்பட்டது என்றாலும் தேரவாதம், ஹீன ஏனம், மஹாயேனம், யோகசாரம், அபயகிரி உள்ளிட்ட பல புத்தசமய நெறிகளுக்குமான அதிகாரபூரவமான நம்பகத்தன்மைவாய்ந்த விரிவான தகவல்களைக் கொண்டுள்ளது. விசுத்திமக்காவில் விளக்கப்படுகிற தத்துவங்கள் குறித்த குறிப்புகள் சில புத்தகோசரின் சுமங்கலிவிலாசினியிலும் தரப்பட்டுள்ளது. அவற்றின் பெயர்கள் முதலில் தரப்படுகிறது. சுமங்கலிவிலாசினியில் இயற்கை நெறியான சீலகாதை என்ற ஒரு பகுதி அமைந்துள்ளது. இதில் தூதுதர்மா, காமவிதானி ஆகியவை காணப்படுகிறது. இதில் காரியவிதானி என்ற தலைப்பில் ஜினானி சாமபதி, அபிவினா, பாவனா, காந்தா, தாத்து, இந்திரியானி அரியசங்கானி, பச்சையகாரா, புரந், நையா, மஹா விபாசனானா உள்ளிட்ட தத்துவங்கள் இருப்பதை எடுத்துக்காட்டுகிறார் ஸ்பென்ஸாடி. விசுத்திமக்கா குறிப்பிடத்தக்க பல சிறப்பான தத்துவங்களை விளக்குகிறது என்கிறார் ஜேம்ஸ்கிரே. 15 அத்தியாயங்களை உடைய விசுத்திமக்காவில் முதல் நான்கு அத்தியாயங்கள் குறித்து பின்வரும் கருத்தினை தெரிவிக்கிறார் ஸ்பென்ஸராடி. முதல் அத்தியாயம் பின்பற்றவேண்டிய ஐந்துவகையான சீலங்கள் (ஒழுக்கங்கள்) குறித்து விளக்குகிறது. இரண்டாம் அத்தியாயம் புத்த தம்மத்தை ஏற்றுக் கொண்ட ஆச்சாரியர்களும் துரவிகளும் பின்பற்றவேண்டிய பழக்கவழக்கங்கள் ஆற்றவேண்டிய பதிமூன்று கடமைகள் போன்றவற்றை விவாதிக்கிறது. மூன்றாம் அத்தியாயம் ஜென்குருமார்கள் தியானமுறைகளை எவ்வாறெல்லாம் ஒழுகவேண்டும் என்பது குறித்து விளக்குகிறது. நான்காம் அத்தியாயம் விகாரையில் தங்கியிருக்கும் ஆச்சாரியர்கள் பிக்குகள் செய்யக்கூடாத பதினெட்டு குற்றங்கள் குறித்து விவரிக்கிறது. (Spence Hardy, Manual of Buddhism, p. 531-532.) (James Gray, Buddhaghosuppatti, Introduction, p. 31)

மேலும் திரு வாரன்ஸ் கருத்து படி பார்த்தால் ஐந்தாவது அத்தியாயம் நல்வழி பெறுவதற்கான பத்துப் படிநிலைகளை விளக்குகிறது.

ஆறாவது அத்தியாயம் அசுபா குறித்து பேசுகிறது. சுபா என்பதன் எதிற் சொல்லாகும் அசுபா. அதாவது நீதி அநீதி என்பது போல. இன்னொரு வகையில் சொன்னால் இதனை அநிச்சையம் எனலாம். இதனை புத்த உள்மெய்ப்படி சொன்னால் இயல்பு மாறும் நிலை என்பதாகும். ஏழாம் அத்தியாயம் மூவுலகக் கொள்கை குறித்து விவரிக்கிறது. எட்டாம் அத்தியாயம் அநுசதி குறித்துப் பேசுகிறது. இந்த அநுசதியை சாக்காடு என தமிழாக்கலாம். இதனோடு எட்டுவகையான மூடநம்பிக்கைகள் உள்ளிட்ட பலவற்றை விளக்குகிறது. ஒன்பதாம் அத்தியாயம் பிரம்மவிகாரை என்பதை விளக்குகிறது. களையப்படவேண்டியவை என வகைப்படுத்தப்பட்ட பகை எண்ணங்கள் (enemity)) அல்லது முரண்பாடுகள் குறித்து விவரிக்கிறது. பத்தாம் அத்தியாயம் அருபங்கள் குறித்து விவரிக்கிறது. நம்மிடம் உள்ள நான்கு வகையான அரூபங்கள் அல்லது வடிவிலி பண்புகள் குறித்து விளக்கிக்காட்டுகிறது. பதினொன்றாம் அத்தியாயம் சமாதி குறித்து விவரிக்கிறது. இந்த அத்தியாயத்தில் மகிழ்ச்சி பொருள்கள் (Blessings) ஐந்தினைக் குறித்தும் விளக்கப்படுகிறது. இந்நூல் இன்னும் பல மெய்மைகளை புத்தநெறியாகக் கொண்டு மிகவும் பரந்துப்பட்ட நிலையில் விளக்குகிறது. விசுத்தி மக்காவின் உள்ளடக்கம் குறித்து மிகவும் சுருக்கமாக குறிப்பிடுவது மிகவும் பயன் அளிக்கக்கூடியது.

விசுத்திமக்கா பரந்துவிரிந்த சிந்தனைகளை கொண்டது என்பதை முன்னரே கண்டோம். இது குறித்துப் பொதுவாக சொன்னால் 1. அற ஒழுக்கங்களை பின்பற்றுதல், 2. தியானநிலையை கைக்கொள்ளுதல், 3. ஞானநிலையை அடைதல் என்கிற மூன்று நோக்கங்களை உடையது எனலாம். இவற்றை சீல, சமாதி, பஞ்ஞா என்கிறது இந்நூல். நல்ல ஆசிரியரிடம் சென்று அற ஒழுக்கங்களை பின்பற்றுவதற்கான நெறிமுறைகளை கற்றுக் கொள்ளவேண்டிய வழிமுறைகளை விளக்குகிறது முதல் பகுதி. மனித வாழ்வுக்கு பயனளிக்க்க் கூடிய வகையில் விளங்குவது தியானம் என்கிற நோக்கத்தில் வெவ்வேறு விதங்களில் தியானம் மேற்கொள்வது குறித்து விவரிக்கிறது இரண்டாம் பகுதி. அதாவது மனதை ஒருநிலைப்படுத்தும் வெவ்வேறு படிநிலைகளை விளக்குகிறது இந்தப் பகுதி. மேலும் இதில் 40.மரபுகள் இருப்பதாகவும் சொல்லுகிறது. அறிவுமுறையின் பலதரப்பட்ட வடிவங்களை விரிக்கிறது மூன்றாம் பகுதி. புத்தநெறியின் அடிப்படை மெய்மைகளான நான்கு உளமெய்கள் (Four noble truths) (துக்கம், துக்க காரணி, துக்கநிவாரணம், துக்கநீக்கம்) துக்க நீக்கத்திற்கான எட்டுவழிமுறைகள் நற்சொல் உள்ளிட்ட அட்டாங்கமார்கங்கள், படிச்சமுத்பாதம் என்று சொல்லப்படுகிற பூதசார்பு சமநிலை மெய்மை புத்தநெறிக்கே உரிய விபாசானா என்று சொல்லப்படுகிற அறிதல் உள்ளிட்டவை விளக்கப்படுகிறது. ஐம்பூதங்களின் கூட்டால் உயிர்கள் தோன்றுகின்றன ஐம்பூதங்களின் சமநிலை கெடுகிறபோது உயிர்களும் மறைந்துவிடுகின்றன. எண்ணங்கள் வாயு தாதுக்களோடு கலக்கிறபோதுதான் செய்லகளாகின்றன, இந்த செயல்கள் பலநூறு வண்ணங்களையும் வடிவங்களையும் பெறுகின்றன. இத்தகைய பிரதிசமத்பாதா, விபாசானா என்பன உள்ளிட்ட மெய்மைகள் இப்பகுதியில் காணக் கிடைக்கின்றன. மனிதவாழ்வு ஈடேற்றத்திற்காக ஏழு விசுத்திகளை குறிப்பிடுகிறார் புத்தகோசர். விசுத்தி குறித்த விளக்கங்கள் சிறிது வேண்டப்படுகின்றன. விசுத்தி என்பது மிக தூய்மையான, மிகச் சிறந்த, அதிதூய்மையான நெறி என்பன போன்ற விளக்கங்கள் இக்கட்டரையின் முன் பகுதியில் தரப்பட்டுள்ளது. ஆகவே ஏழு விசுத்திகள் இங்குக் குறிப்பிடப்படுகிறது.

1. சீலவிசுத்தி தூய ஒழுக்கம்,

2. சித்தவிசுத்தி மாசற்றமனம்,

3. திட்டைவிசுத்தி தூய நுன்னோக்கு,

4. கங்கவிதரானி ஐய்யம் தெளிவு,

5. மக்காமக்கா அனாதிசனானாவிசுத்தி நன்மை தீமை பகுத்தறிதல்,

6. பதிபாதாவிசுத்தி

உள்ளிட்டவை விளக்கப்படுவதோடு அடுத்தநிலையில் வேறு ஒன்பது நெறிகளும் எடுத்துக்காட்டப்படுகின்றன. அவை,

1. ஏற்ற இரக்கம் உடைய அறிவு உடையபயனுபாசான ஞானா,

2. மயக்கநிலை அறிவு பங்கானுபாசான ஞானா,

3. தீர்வை நோக்கிய அறிவு பயத்துப்பத்தான ஞானா,

4. வேட்கையுடைய அறிவு அதினா உபசானா ஞானா,

5. மேன்மையான அறிவு நிபிதனுபாசான நானா,

6. விருப்பு வெருப்பற்ற அறிவு முன்சிதுகமயதா ஞானா,

7. பிரதிபலிப்பு அறிவு பதிசங்கானுபாசனா ஞானா,

8. வடிவ சமநிலை குறித்த அறிவு சங்காரூபக ஞானா,

9. நேர்நிலை அறிவு

இத்தகைய கருவிகளின் துணையோடு புத்தம் மனித வாழ்வின் விடுதலைக்கான பல புதிய மெய்மைகளை கண்டு சொல்லியது. புத்தரால் கண்டு சொல்லப்பட்ட விபாசனா, துக்கம், அனாதா, அநிச்சா என்பவையாகும் இவை குறித்த விரிவான தகவல்களை புத்தகோசர் வழங்கியுள்ளார். கட்டுரை சுருக்கம் கருதி விசுத்திமக்கா குறித்த பலவிளக்கங்கள் இங்கு தவிர்க்கப்படுகிறது.

விமரிசனங்கள்

புத்தகோசரின் வாழ்வும் பணியும் குறித்து விமரிசன கருத்துக்கள் பல காணப்படுகின்றன. புத்தகோசரின் பணிகள் குறித்த எதிர்நிலை பார்வை கொண்ட ஓரு விமரிசன கருத்துக்களை மதிப்பீட்டுநிலையில் அணுகுவதன் மூலமே முதலில் கோசருடைய பணிகளை அங்கிகரிப்பதாக அமையக் கூடும் என்பதால் மதிப்பீட்டு விமரிசனம் கைக்கொள்ளப்படுகிறது. திரிபிடகங்களுக்கு பிறகு புத்த சமயத்தின் அனைத்து நெறிகளையும் விளக்குவது புத்தகோசரின் ஆக்கங்கள் மட்டுமே என்பதால் இவருடைய ஆக்கங்கள் மிகவும் உயர்வானவைகளாக மதிக்கப்படுகிறது. புத்தகோசரின் விசுத்திமக்கா மிக உயர்வான பல நெறிகளை மிக நுட்பமாக விளக்குகிறது என்றாலும் இதில் கோசரால் கைக்கொள்ளப்பட்டுள்ள நீண்டநெடிய தொடர்களும், கடுமையான மொழி நடையும் வாசகனைப் புரிதலுக்கு வெளியே நிறுத்திவிடுகிறது. விசுத்திமக்கா நிப்பானம் அடைவதற்கான வழிமுறைகளை வகுத்துக் காட்டுகிறது என்பதைக்கூட திபிதக்க, புத்தகோசபதி போன்ற நூல்களை வைத்துக் கொண்டுதான் அறியமுடிகிறது. காலதேச இடைவெளி காரணமாக விசுத்திமக்கா வாசகனின் புரிதல் எல்லையிலிருந்து நழுவிவிடுகிறது எனலாம். விசுத்திமக் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டுக்குரியது. பதிமூன்றாம் நூற்றாண்டுக்கு பிறகுதான் புத்தகோசபதியும் திபிதக்காவும் எழுதப்பட்டது என்பதை நினைவில் கொள்ளுகிறபோது இந்த கால இடைவெளியில் எவ்வளவோ மொழிமாற்றத்தை மனித சமுதாயம் ஏற்படுத்தியுள்ளது. அடுத்த நிலையில் புத்தகோசரின் பெயர்களில் காணப்படுகிற அனைத்து நூல்களையும் புத்தகோசர் ஒருவராலேயே ஆக்கப்பட்டதா? புத்தகோசர் என்கிற பெயரில் பலர் எழுதி சேர்த்துள்ளனர். என்கிற கருத்தும் ஆய்வுலகில் உண்டு. இது அடிப்படை ஆதாரமற்றது என்பதை மட்டும் நினைவில் கொள்ளவேண்டும். ஆச்சாரியர் புத்தகோசரால் விடுபட்ட பணிகள் சிலவற்றை தம்மபாலர் தொடர்ந்து முடித்துள்ளார் என்பது உண்மை.

நிறைவாக

இக்கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ள கருத்துகள் சில நிறைவாக தொகுத்தளிக்கப்படுகிறது. புத்தகோசர் தமிழகத்தைச் சார்ந்தவர். அவர் பாலியில் விசுத்தி மக்காவை ஆக்கியுள்ளார். இவர் புத்தத்தாச்சாரியரின் ஆக்கங்களை பெற்றுக்கொண்டார் என்றாலும், அதை அப்படியே பின்பற்றவில்லை. புத்த சமயத்தின் அனைத்து நெறிகளையும் தொகுத்தளித்துள்ளார் ஆச்சாரியர் புத்தகோசர் என்பன போன்ற கருத்துக்களைப் பெறமுடிகிறது.

 

Pin It