மீஅழுத்தத்தைக் குறைக்க
மாறுதலுக்காக
மாறுவேடப் போட்டி
கடவுள்களுக்கிடையே...

மயிலிறகைச் சூடி
புல்லாங்குழலை வாசித்தவாறு
ஆடுகளை மேய்க்கிறார் இயேசு
சிலுவையும் முட் கிரீடமும்
சுமந்தவாறு கிருஷ்ணன்
நவீன ஆடையணிந்து
நடையிடுகிறார் மகாவீரர்
அரச கோலத்தில்
மிளிர்கிறார் புத்தர்
பர்தா அணிந்து
பசுவிற்கு
தீவனம் தருகிறார்
மேரி மாதா...
கைதட்டி ஆரவாரம்
செய்கிறார்கள்
பார்வையாளராக
அமர்ந்திருக்கும் பிற கடவுள்கள்

அதே கணம்...
உயர்நீதிமன்றத்தில்
வழக்கு தாக்கல்
அக்பர் சீதா பெயரிட்ட
சிங்கங்களை
ஒரே கூண்டில் அடைக்க
கண்டனம் தெரிவித்து

- பா.சிவகுமார்

Pin It