2009ஆம் ஆண்டு, முள்ளிவாய்க் காலில் இந்திய அரசின் துணையோடு இலட்சக்கணக் கான தமிழ் மக்களைக் கொன்றொழித்த சிங்கள இனவெறி அரசு, அவர்களை மேனிக் பார்ம் என்று பெயரிடப்பட்ட முள்வேலி முகாமில் அடைத்து வைத்தது. வவுனியா மாகாணத்தின் செட்டிக்குளம் பகுதியில் காடுகளை வெட்டி இராணுவத்தால் உருவாக்கப்பட்ட தற்காலிக முகாம் இது!

குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட எவ்வித வசதி களுமின்றி, தற்காலிகக் கூடாரங்களைப் போல் அமைக்கப்பட்டிருந்த அம்முகாம்களில் சற் றொப்ப 3 இலட்சம் தமிழ் மக்கள், போருக்குப் பின் உடனடியாக குடியமர்த்தப்பட்டனர். சிங்கள இராணுவத்தின் முழு கண்காணிப்பின் கீழ் அகதிகளாக அவர்கள் சிறை வைக்கப் பட்டனர் என்பதே உண்மை. உலகின் மிகப் பெரும் அகதிகள் முகாம் இது என அனைத்துலக நாடுகள் இம்முகாமை குறிப்பிட்டன.

இலட்சக்கணக்கான மக்கள் தங்கியிருந்த இம்முகாம், சிங்கள இனவெறி அரசின் போருக்கு மிகமுக்கிய சாட்சியாக விளங்கியது. ஐ.நா. மனித உரிமைகள் அவையில், கடந்த மார்ச் மாதம் சிங்கள அரசுக்கு எதிராக வலுவற்ற ஓர் தீர்மானம் நிறைவேற்றபட்ட நிலையில், அத்தீர்மானத்திற்குப் பின்னரான சிங்கள அரசின் செயல்பாடுகள் குறித்து ஆராய ஐ.நா. மனித உரிமைகள் ஆணை யாளர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு எந்நேர மும் வருகை தரலாம் என்று கூறப்பட்டது.

அதன் முன்னோட்டமாக, அக்டோபர் முதல் வாரத்தில், நவநீதம் பிள்ளை சார்பாக மூவர் குழு ஒன்று இலங்கை சென்று வந்தது. மேலும், வரும் நவம்பர் 1 முதல் 4 வரை, ஐ.நா. மனித உரிமைகள் அவையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்த மீளாய்வுகள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில், சிங்கள அரசு, முகாம்களில் வாழும் தமிழ் மக்களை எப்படியேனும் அங்கி ருந்து அப்புறப்படுத்தி, “நாட்டில் அகதிகளே இல்லை, அனைவரும் தம் சொந்த இடத்திற்குச் சென்று விட்டனர்” என்ற தோற்றத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டது.

“மீள்குடியேற்றம்” என்ற பெயரில் பல கட்ட நாடகங்களை சிங்கள அரசு அரங்கேற்றி வருகிறது. தமிழர்கள் வழிவழியாக வேளாண்மை செய்து வந்த நிலங்கள் சிங்களர் களுக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டதால், காடுகள் நிறைந்த பகுதிகளில் தமிழ் மக்களை அவ்வப்போது கொண்டு சென்று இறக்கிவிட்டு, தற் காலிகக் கூடாரங்கள் அமைத் துக் கொடுப்பது தான் அந்த மீள் குடியேற்றத் திட்டம்.

இதைக் கண்ட தமிழ் மக் கள், நொந்து போய், போரால் சிதைந்து போன தமது சொந்த கிராமங்களுக்கு செல்ல அனு மதி கோரி அவ்வப்போது முகா மில் ஆர்ப்பாட்டங்களில் ஈடு பட்டனர்.அதைத் தொ டர்ந்தே, மக்களை மீண்டும் தங்கள் சொந்த கிராமத்திற்குச் செல்ல அரசு அனுமதித்தது.

சொந்த கிராமங்களுக்குச் சென்ற மக்கள், எஞ்சியிருந்த தம் உடைமைகளை விற்று தம் வாழ்வை ஓட்டி வருகின்றனர். வீடுகள் உள்ளிட்ட அனைத்து சொத்துகளும் அழிக்கப்பட்டு வாழ வழியற்று நின்ற தமிழ் மக்கள் அம்முகாம்களிலேயே தங்கியிருந்தனர்.

இவ்வாறு மேனிக் பார்ம் முகாமில் தங்கியிருந்த, முல்லைத் தீவு மாவட்டத்தின், கேப்பிலாவு பகுதியைச் சேர்ந்த 361 குடும் பங்களின் 1186 பேரை, கடந்த 24.09.2012 அன்று அவசர அவசரமாக மேனிக் பார்ம் முகாமிலிருந்து அப்புறப்படுத் தியது சிங்கள இனவெறி அரசு.

இம்மக்களின் கேப்பிலாவு பகுதி தற்போது சிங்கள விமா னப்படையினரின் வசமுள்ளது. அங்குள்ள வேளாண் நிலப் பரப்புகளில், சிங்கள இராணு வத்தினருக்காக சிங்களர்கள் வேளாண்மை செய்து வருகின்றனர்.

எனவே, வெளியேற்றப்பட்ட மக்களை சீனியாமோட்டை மற்றும் சூரியபுரம் காட்டுப் பகுதிகளில் இறக்கிவிட்டது சிங்கள அரசு. சுடுகாட்டைப் போல் காட்சியளித்த அவ்விடத் தில் மக்களை அவசர அவசர மாக அனுப்பிய சிங்கள அரசு, மேனிக் பார்ம் முகாம் மூடப் பட்டு விட்டதாக உடனேயே அறிவித்தது.

சிங்கள அரசின் இவ்வறி விப்பு எப்போது வரும் என எதிர்பார்த்துக் காத்திருந்ததைப் போல், ஐக்கிய நாடுகள் சபை யின் துணைச் செயலாளர் “சிங் கள அரசின் முக்கியமான சாதனை இது ”என சிங்கள அரசைப் பாராட்டி அறிவிப்பு வெளியிட்டார்.

சீனியாமோட்டை காடு களில் நீர், சுகாதாரம் உள் ளிட்ட எவ்வித வசதிகளுமின்றி தவித்த மக்களை சந்திக்கச் சென்ற யாழ்ப்பாணம் உதயன் நா ளேட்டு செய்தியாளர் இராணு வத்தால் திருப்பி அனுப்பப் பட்டார். அதைத் தொடர்ந்து, தமிழ் அரசியல் தலைவர்கள் அங்கு நேரடியாகச் சென்று, அம்மக்களின் நிலையைப் படம் பிடித்து வெளி உலகிற்கு காட்டினர். அதன்பின், ஐ.நா. துணைச் செயலாளர் அஜெய் சிப்பர் சிங்கள அரசைப் பாராட்டிய தமது அறிவிப்பை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

சிங்கள இராணுவம் ஏற்கெ னவே மேனிக் பார்ம் முகாமின் மூன்றாம் பாதுகாப்பு வலையம் அமைந்திருந்த பகுதியில், சற் றொப்ப 200 ஏக்கர் பகுதிகளை எடுத்துக் கொண்டுவிட்டது. இந்நிலையில், இம்முகாமிலி ருந்து மேலும் நிலத்தைப் பெற இராணுவமும், தொல் பொருள் துறையும் முயற்சிக் கின்றன. மேலும், இதில் பெரும் பகுதியை மனை வணிகத் தொழில் உள்ளிட்ட பல்வேறு வணிக நடவடிக்கைகளுக்கு வழங்கவும் சிங்கள அரசு முடிவு செய் துள்ளது. அதில், பன்னாட்டு நிறுவனங்களோ, அல்லது இந்திய வடநாட்டு பெருநிறு வனங்களோ வருவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன. தமிழ்நாட்டு அரசியல் புள்ளி கள் பினாமிகள் வழியாக ரத்த வாடை வீசும் அந்த நிலத்தைத் தங்கள் மனைத் தொழிலுக்கு வளைத்துப் போட்டாலும் வியப்பதற்கில்லை.

முகாமிலிருந்து வெளியேற் றப்பட்ட தமிழ் மக்கள், தம் சொந்த கிராமங்களில் வாழ வழி யின்றி நிற்கின்றனர். உழைக்கும் ஆண்களை இழந்த குடும்பங் களும், போரில் காயமுற்று உழைக்கும் திறனிழந்த ஆண் களையும் கொண்ட குடும்பங் களும் சொல்லொண்ணாத் துய ரத்தில் தவிக்கின்றன. சிங்கள இராணுவத்தின் முழுமையா னக் கண்காணிப்பின் கீழ், தமிழ்ப் பெண்கள் பணிபுரிந்து வருவதும் கொடுமையான சூழ லாக உள்ளது.

கணவரைத் தேடி இளம் தமிழ்ப்பெண்கள் தம் கைக்குழந் தைகளுடனும் அலைவதைக் காணும்போது, “விதியே விதியே என் செய நினைத்தாய் என் தமிழ்ச்சாதியை” எனக் கேட்க வே தோன்றுகிறது.

எப்படியாவது தம் எஞ்சியி ருக்கும் சொத்துகளை விற்று விட்டு, அப்பணத்தைக் கொ ண்டு ஆஸ்திரேலியா போன்ற அயல்நாட்டுக்குச் சென்றுவிட வேண்டும் என உயிரைப் பணயம் வைத்துக் கடல்வழிப் பயணம் செல்ல திட்டமிடும் தமிழ் குடும்பங்களே அங்கு அதிகம். 2012 சனவரி தொடங்கி, 02.10.2012 அன்று வரை, இதுவரை 2380 பேர் படகுகளில் ஆஸ்திரேலியா நோக்கிச் செல்ல முயற்சித்து பிடிபட்டுள்ளனர் என்ற தகவல் அங்குள்ள நிலை மையை உணர்த்துகின்றது.

பொதுமக்களின நிலை இது வென்றால், முன்னாள் விடு தலைப்புலிகளின் நிலை மிகமிக மோசமாக உள்ளது. சிங்கள உளவுத்துறை பின் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக் கும் நிலையில், முன்னாள் புலிக ளுக்கு உதவிகள் கிடைப் பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள் ளது. சில பகுதிகளில், புலம் பெயர்ந்த தமிழர்கள் முன்னாள் போராளிக் குடும்பங்களைத் தத்தெடுத்து உதவிகள் செய்து வருகின்றனர்.

தமிழர்களின் தாயகப்பகுதி யான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணப் பகுதிகளில், சிங்கள இராணுவத்தின் பேயாட்சியே நடைபெற்று வருகின்றது. வட கிழக்குத் தமிழர் பகுதிகளில் சிங்கள இராணுவம் இன்னமும் அதிகளவில் நிலை கொண் டுள்ளதாகவும், சிங்கள இராணு வத்தின் மொத்தமுள்ள 19 டிவிசன்களில், 16 டிவிசன்கள் வடகிழக்குப் பகுதியில் மட்டுமே குடிகொண்டுள்ளதாகவும், சிங்கள இராணுவத்திற்கு பரப்புரை செய்து வரும் இந்து நா ளேடே குறிப்பிடுகின்றது (காண்க: தி இந்து, 19.09.2012).

போரின் போது உயிருடன் பிடிபட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணிப் போராளிகளின் நிலை இதுவரை என்னவென்றேத் தெரியவில்லை.

தமிழீழத் தாயக மக்களின் துயரங்களை உலகிற்குத் தெரி விக்கும் விதமாக, 22.09.2011 அன்று ஜெனீவாவில் ஐ.நா. மன்றம் முன்பாக, முருகதாசன் திடலில், ஐரோப்பிய வாழ் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ‘எமது நிலம் எமக்கு வேண்டும்’ என்ற தலைப்பில், ‘பொங்குதமிழ் 2012’ ஒன்றுகூடலை எழுச்சியுடன் கடைபிடித்தனர். ஆயிரக்கணக் கான தமிழ்மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இதில் கலந்து கொண்டனர்.

ஆமாம்! தமிழர் நிலம் தமி ழர்க்கு வேண்டும்! அதுதான் துயருக்கு முடிவு கட்டும்.

Pin It