காவிரி சிக்கல் வெறும் நீர்ப் பகிர்வு சிக்கலல்ல, அது ஒரு இனச் சிக்கல் என்பதை கன்னடர்கள் தமிழர்களின் முகத்தில் அறைந்து மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கி றார்கள். காவிரி தொடங்கி அனைத்துச் சிக்கல் களையும் அந்தந்த பகுதி சார்ந்த, பகுதி மக்கள் சார்ந்த கோரிக்கைகளாக மட்டுமே பார்த்து இவற்றுள் இழையோடி நிற்கும் தேசிய இனத் தன்மையை காணத்தவறுவதால் தமிழர்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக இழந்து கொண்டு வருகிறார்கள்.

காவிரியா அது பாசனப் பகுதி உழவர்களின் பிரச்சினை, கச்சத்தீவா அது மீனவர்களின் சிக்கல், முல்லைப் பெரியாறா அது தேனி மாவட்டக் காரர்களின் பாடு, கூடங்குளம் அணு உலையா அது அந்த கடலோர மக்களின் பிரச்சினை, மொழிச் சிக்கலா அது தமிழறிஞர்கள் தொடர்பு டையச் சிக்கல், என்று ஒவ்வொன்றயையும் பகுதி சார்ந்த கோரிக்கைகளாகப் பார்த்து இவற்றின் அடிப்படையாக இருக்கும் இன அரசியலை புரிந்துகொள்ளத் தவறுவதால் உலக அநாதை களின் வரிசையில் தமிழினமும் நிறுத்தப்பட்டு வருகிறது.

 “ஒரு சொட்டுத் தண்ணீரும் தர மாட்டோம்” என்ற ஒற்றை முழக்கத்தின் கீழ் கன்னடர்கள் ஓர்மை பெற்று வருவதை பார்த்தாவது நாம் பாடம் கற்க வேண்டும்.

மதசார்பற்ற அரசியல், இந்துத்துவ அரசியல் என்ற எந்த வடிவத்தில் இந்தியத் தேசியம் பேசினாலும், நாய்ச் சண்டைக்கு நிகரான நாற்காலிச் சண்டையில் இருந்தாலும் சாதி மதம், கலை, என எந்த துறையிலிருந்தாலும் மேற் சொன்ன ஒற்றை முழக்கத்தில் கன்னடர்களாக அவர்கள் ஒரே களத்தில் இயங்குகிறார்கள்.

காவிரித் தீர்ப்பாய இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு, பற்றாக்குறைகால பகிர்வுத் திட்டம், உச்ச நீதி மன்றத்தின் இடைக்கால ஆணை, காவிரி ஆணையத் தலைவர் மன் மோகன் சிங்கின் கட்டைப் பஞ்சாயத்து ஆணை, உச்சநீதி மன்றத்தின் கடும் கண்டனம் ஆகிய எதற்கும் கன்னடர்கள் கட்டுப்படவில்லை.

காவிரி ஆணையம் கூடும் வரை ஒரு வார காலத்திற்கு வினாடிக்கு பத்தாயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் இடைக் கால ஆணைப் பிறப்பித்த போது “உச்சநீதி மன்றம் சொன்ன மரியாதைக்காக மூன்று நாள் கள் திறந்து விட்டுவிட்டு நிறுத்தி விடலாம்” என அரசுக்கு அறிவுரைக் கூறியவர் முன்னாள் பிரதமர் தேவ கௌடா. முதலமைச்சர் கூட் டிய அனைத் துக் கட்சிக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீரும் திறக்கக் கூடாது என மறித்துப் பேசியவர் எதிர்க்கட்சியான காங்கிரசு கட்சியின் சட்ட மன்றக்குழுத் தலைவர் சித்தா ராமையா.

உச்சநீதிமன்றத்தின் கண்டிப் பான ஆணைக்குப் பிறகு காவிரி ஆணையம் கூடிய போது தீர்ப்பாயத்தின் இடைக் காலத் தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய சட்டக் கடமையில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங் அதை சட்டை செய்யாமல், உச்சநீதிமன்றம் சொன்ன இடைக்கால ஏற்பாட்டுக்கும் கீழே வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என சொன்ன போதும் அவர் முகத்தில் அடித்தாற்போல் கர் நாடக முதலமைச்சர் ஷட்டர் வெளிநடப்பு செய்தார்.

என்ன செய்தாயிலும் காவிரி நீர் திறப்பதை தவிர்ப்பது என் பதில் அவரவர்களும் தங்கள் தங்கள் முனைகளில் களம் இறங்கினார்கள்.

முன்னாள் பிரதமர் தேவ கௌடா இன்றைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து “9ஆயிரம் கன அடி ஆணையை” நிறுத்திவைக்கு மாறு வலியுறுத்தினார். வெளி யுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா அமெரிக்கா வில் இருந்தபடியே இதே கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் அனுப்பினார். 9 ஆயிரம் கன அடி அல்ல ஒரு கன அடி தண்ணீரும் வழங்கும் நிலையில் நாங்கள் இல்லை என்பதே இவரது வாதம். இன்னொரு மூத்த அமைச்சர் வீரப்ப மொய்லி பிரதமரை நேரில் சந்தித்து காவிரியில் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை பிரதமர் தன்னுடைய அறிவிப்பை திரும் பப் பெற வேண்டு மென வலியு றுத்தினார். வெங்கையா நாயுடு தலைமையில் கர்நாட கத்தின் பா.ச.க. எம்.பிக்கள் பதினெட்டு பேர் பிரதமரைச் சந்தித்து இதனையே வலியுறுத்தினர்.

உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மீண்டும் மனு போடுவது இந்திய நீர் வளத்துறை அமைச் சரை வலியுறுத்துவது, காவிரிக் கண்காணிப்புக்குழுவை வற்பு றுத்தி வல்லுநர் குழுவை இரண்டு மாநிலங்களுக்கும் பார்வையிட அனுப்புவது என அனைத்து சட்ட வழிகளிலும் தண்ணீர் விடுவதை தள்ளிப் போடுவதற்கு கர்நாடக அரசு முழு முனைப்புடன் செயலில் இறங்கியது.

மறுபுறம் அரசியல் கட்சி கள், கன்னட அமைப்புகள், உழவர் அமைப்புகள், கலைத் துறையினர் என அனைத்துப் பிரிவினரும் தொடர் போராட் டங்களில் இறங்கினர். செப்டம் பர் 30 ஆம் நாளிலிருந்து, மைசூர், மாண்டியா, ஹாசன், சாம்ராஜ் நகர் போன்ற மாவட் டங்களில் இடைவிடாதப் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. அக்டோபர் 5, 6 ஆகிய நாட்களில் அது உயர் நிலையை அடைந்தது.

மாண்டியா மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு விவசா யிகள் சங்கத் தலைவர் மாதே கௌடா தலைமையில் விவசா யிகளும், கன்னட அமைப்பு களும் பெருந்திரள் உண்ணாப் போராட்டம், மாட்டுவண்டி ஊர்வலம், டிராக்டர் மறியல் என பல வடிவங்களில் போரா டினர். பெங்களூரில் ஒக்கலிகா சாதி சங்கத்தினர் மடாதிபதி பாலகங்காதர சாமிகளின் தலை மையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தினர். நடிகர் அம்பரீஷ் தலைமையில் திரைப்படத்துறையினர், எழுத் தாளர்கள், கல்வியாளர்கள், என 3000 பேர் ஊர்வலமாகச் சென்று ஆளுநர் எச்.ஆர். பரத் வாஜை சந்தித்து தமிழகத்திற்கு தண்ணீர் தரக் கூடாது என மனு அளித்தனர்.

கன்னட ரட்சணவேதிகே அமைப்பின்அழைப்பின் பேரில் கர்நாடகமே அசையாமல் நிற்கும் அளவுக்கு அக்டோபர் 6ஆம் நாள் கடை அடைப்பு-பொது வேலை நிறுத்தம் நடந் தது. அது அந்த அமைப்பின் வலுவினால் நடந்ததல்ல. கர் நாடக மாநில அரசும், எதிர்க் கட்சிகளும் அதற்கு உறுதியாக ஆதரவு அளித்ததால்தான் அவ் வளவு முழுமையாக அப் போராட்டம் நடைபெற்றது.

ஆயிரம்தான் இந்தியத் தேசியம் பேசினாலும் அதனை கன்னட இனஉணர்வுக்கு உட் பட்டதாக வைத்துக் கொள்வது கர்நாடக அரசியலின் முதன் மைப் போக்காக உள்ளது. அதனால்தான் உழவர்கள் மட்டுமின்றி சமயத் துறையினர், திரைத் துறையினர், பிற கலைத் துறையினர், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள்,அரசியல் கட்சியினர் என அனைவரும் கன்னடர்களாக எழுந்து நிற் கின்றனர். தமிழினப்பகை என்ற அடித்தளத்தில்தான் இந்த கன்னட ஓர்மை கட்டமைக்கப் பட்டுள்ளதால் காவிரிச் சிக்க லில் அது முழுவீச்சில் வெளிப் படுகிறது.

ஆரிய இனக் கலப்பும், சமஸ் கிருத மொழிக் கலப்பும் தமிழி லிருந்து தனி பிரித்து கன்னட மொழியையும் கன்னட இனத் தையும் உருவாக்கியதால் தமி ழோடும் தமிழர்களோடும் எந்த அளவுக்கு பகையோடு உள் ளதோ அந்த அளவுக்கு அது தமக்கும் நல்லது என ஆரிய இந்தியா கருதுகிறது. எனவே அப்போக்கை ஊக்கு விக்கிறது. இதே வரலாற்றுக் காரணத் தால்தான் கன்னடத் தேசிய இனம் ஆரியத்தைத் தமது பங்காளியாகவும், தமிழினத் தைப் பகையாளியாகவும் பார்க் கிறது. ஆரிய இந்தியா வோடு கன்னடத்துக்கு சிறுசிறு சிணுங் கல்கள் இருக்கலாமே தவிர தீர்க்க முடியாத பகை முரண் பாடுஏதுமில்லை. எனவேதான் அவர்களால் கன்னட தேசி யத்தை உயர்த்திப் பிடித்துக் கொண்டே இந்தியத் தோடு இணைந்து போக முடிகிறது. இந்தியாவின் அணுகு முறையும் அடிப்படையில் அவர்களுக்கு இணக்கமாகவே இருக்கிறது.

எனவேதான் பிரதமரைச் சந்தித்தற்குப் பிறகு-அவர் “9ஆயிரம் கன அடி ஆணையை” மீண்டும் ஆணையத்தைக் கூட் டாமல் மாற்றி அறிவிக்க இய லாது என வெளிப்பார்வைக்கு அறிக்கை விட்டப்பிறகும்- இனி தண்ணீர் திறந்து விடுவது அறவே நிறுத்தப்படுகிறது என கர்நாடக அரசால் அறிவிக்க முடிகிறது. தனது ஆணையை செயல்படுத்துமாறு சட்ட வழிகளில் பிரதமர் வலியுறுத்த மாட்டார் என்ற துணிச்சல் கர்நாடகத்திற்கு இருக்கிறது.

இந்திய அரசின் இந்த நய வஞ்சகப் போக்கு நடுவண் நீர் வளத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் கூற்றிலிருந்து உறுதியாகிறது “காவிரி ஆணை யத்தின் முடிவை இரண்டு மாநி லங்களுமே ஏற்றுக் கொள்ள வில்லை “என்று பன்சால் கூறி னார் ஒரு சொட்டுத் தண்ணீ ரும் தரமாட்டோம் என அடா வடியாக வெளிநடப்பு செய்த கர்நாடகமும், காவிரி கண்காணிப்புக்குழுவின் பற்றாக் குறை கால பகிர்வுத் திட்டப்படி நாள் தோறும் 2டி.எ.சி. தண்ணீர் கேட்டு “9ஆயிரம் கன அடி ஆணையை” ஏற்க மறுத்த தமிழ கமும் பன்சால் பார்வையில் ஒரே தன்மையதாக உள்ளது.

பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையத்தின் கீழ், அதற்கு உதவியாக செயல்படும் அமைப்பே காவிரி கண்காணிப்புக் குழு ஆகும். நீண்ட விவாதத்திற்குப் பிறகு அக்குழு 2003இல் வகுத்தளித்த திட்டமே பற்றாக் குறைக் கால பகிர்வுத் திட்டம் (பீவீstக்ஷீமீss யீஷீக்ஷீனீuறீணீ) இதனை செயல்படுத்த வேண்டியது ஆணையத்தின் கடமை; ஆணையத்தின் தலைவரான பிரதமரின் நீங்காக் கடமை. காவிரி ஆணையக் கூட்டத்தில் இதனை வலியுறுத்தி தான் தமிழக முதலமைச்சர் “9ஆயிரம் கனஅடி “என்ற பிரதமரின் கட் டைப் பஞ்சாயத்தை ஏற்க மறுத்தார்.

சட்ட விரோதமாக நடந்து கொள்ளும் கர்நாடாகவும், சட்டப்படியான கோரிக்கையை வற்புறுத்தும் தமிழ்நாடும் நடு வண் அமைச்சர் பன்சாலுக்கு ஒன்றுதான் என்றால் அவர் கடைந்தெடுத்த நயவஞ்சகர் என்பது வெளிப்படை.
இந்திய அரசு தரும் இந்த துணிச்சல்தான் எந்தத் தயக் கமுமின்றி கன்னடர்களை வெறியாட்டம் போட வைக் கிறது.

 பிரதமர் மன்மோகன் சிங் நடத்திய கட்டைப் பஞ்சா யத்திற்கும் கீழாக விநாடிக்கு 1800 கனஅடி, என்ற இன் னொரு மொட்டைப் பஞ்சாயத் துத் தீர்ப்பை கண்காணிப்புக் குழுவின்இப்போதைய தலைவர் தலைவர் டி.வி. சிங் 11.10.2012 அன்று அறிவித்தார். இதையும் ஏற்க மறுத்து கர்நாடக பிரதி நிதிகள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

வரலாற்று வழிப்பட்ட, சட் டத்தினால் உறுதி செய்யப் பட்ட, காவிரி உரிமையை இழந்து நிற்கும் தமிழ்நாட்டி லோ, நிலைமை இதற்கு நேர் மாறானது. இங்கு காவிரிப் பிரச்சினை ஆட்சியாளர்களுக் கோ முக்கிய எதிர்க்கட்சிக ளுக்கோ ஒரு பிரச்சினையே இல்லை. அதிகம் போனால் இது டெல்டா மாவட்ட விவசாயி களின் பாசனப் பிரச்சினை வறட்சி நிவாரணம் குறித்து பேசி அதை மாற்றிவிடலாம் என்ற தெம்பு கட்சித் தலைவர் களுக்கு உள்ளது.

ஒட்டுமொத்த கர்நாடகமே “காவிரி, காவிரி” என்ற கூச்சலில் இருக்கும் போது தமிழ்நாட்டு பெரிய கட்சிகளிடம் இச்சிக்கல் குறித்து ஒரு முணுமுணுப்புக் கூட இல்லை. கர்நாடகத்தின் முதலமைச்சர், எதிர்க் கட்சி யினர், கர்நாடகத்தின் தில்லி அமைச்சர்கள் என எல்லோ ருமே அமளிதுமளியில் இறங் கிக்கொண்டுள்ள போது தமிழ் நாட்டு முதலமைச்சர் செயல லிதா இது குறித்து ஒரு வார்த்தை பேசவில்லை. உச்சநீதி மன்றத்தில் மனு செய்வதோடு கடமை தீர்ந்தது என காவிரி யைக் கை கழுவி விட்டார். ”காவிரிச் செல்வி”

முதன்மை எதிர்க்கட்சியான தி.மு.க. அதற்கு மேல் இருக் கிறது. கருப்புச் சட்டை அணி வது கழற்றுவது, மனித சங்கிலி அறிவிப்பது திரும்பப் பெறு வது, துண்டறிக்கைக் கொடுப் பதையே போராட்டமாக அறி வித்தது. ஆகிய எதிலுமே பத் தோடு பதினொன்றாகக் கூட காவிரிச் சிக்கல் தி.மு.க. வின் அறிவிப்பில் இடம் பெற வில்லை. அக்கட்சியினர் துண் டறிக்கையில் கடைசி கோரிக் கையாகக் கூட காவிரி இடம் பெறவில்லை. தமிழ் நாட்டின் தில்லி அமைச்சர்கள் யாரும் இது குறித்து அக்கறை காட் டவில்லை.

சட்ட மன்ற எதிர்க் கட்சி யான தே.மு.தி.க வுக்கு கேப்ட னின் பிறந்தநாள் கொண்டாட் டமே இன்னும் முடிவு பெற வில்லை. காவிரிக்காக ஒரு முறைகூட இன்னும் விஜயகாந்த நாக்கைத் துருத்தவில்லை.

உழைப்பவர்களுக்கும், உழவர்களுக்காகவுமே உயிர் தரித்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அண்மை யில் 3நாள் மாநில செயற்குழு வை நடத்தியது. ஒவ்வொரு நாள் கூட்ட முடிவிலும் செய்தியா ளர்களைக் கூட்டி தீர்மானங் களை அறிவித்துக் கொண் டிருந்தது. இக்கூட்டத்தின் முடிவில் ‘ஊர்தி பயணம்’ என்ற மாநிலம், தழுவிய பரப்புரை பயணத்தை அறிவித்துள்ளது. இவை எதிலும் காவிரிப் பிரச் சினை ஓர் மூலையில் கூட இடம் பெறவில்லை.

தமிழகத்தின் உயிர்ப் பிரச்சி னைகளில் ஒன்றான காவிரிச் சிக்கல் குறித்து எதுவும் பேசா விட்டாலும் தங்கள் செல்வாக் கில் சிறுசிதைவும் வந்து விடாது என்ற நம்பிக்கை இருப்பதால் தான் இக்கட்சித் தலைவர்கள் இவ்வளவு அலட்சியமாக காவிரியை எளிதில் புறந்தள்ளு கிறார்கள். அதிகம் போனால் வறட்சி நிவாரணம் கோரி, அல்லது வழங்கி இந்த மக்களை சமாளித்துவிடலாம் என அவர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

காவிரிச் சிக்கலை வெறும் தண்ணீர்ப் பகிர்வு சிக்கலாக பெரும்பாலான தமிழர்கள் பிறழ்ச்சியாகப் புரிந்து கொண் டிருப்பதால்தான் இது நிகழ் கிறது. தொழிலாளர்களின் சம் பளப் பிரச்சினை போல் உழவர் களின் இடுபொருள் கோரிக்கை களில் ஒன்றாக காவிரி நீர்ப் பிரச்சினை புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது. அதற்கேற்ப ஒரு தொழிற்சங்க பாணியில் இது அணுகப்படுகிறது இதனால் தான் தண்ணீர் கேட்பது; கிடைக்காது போனால் நிவா ரணம் கேட்பது என்பதோடு குறுக்கிக் கொள்ளப்படுகிறது. இவ்வாறான ஒரு வகை தொழிற் சங்க அணுகுமுறை நிலவுவ தால்தான் கர்நாடக அணை களில் ஏறத்தாழ 90 விழுக்காடு தண்ணீர் நிரம்பியிருக்கிற போதும் கன்னடன் ஏன் தண்ணீர் விட மறுக்கிறான் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் விழிக்கிறார்கள்.

அணைகள் நிரம்பி வழிந் தாலே தவிர உரிமை என்ற அடிப்படையில் காவிரி நீரை தமிழகத்திற்கு பகிர்ந்தளிக்க கர்நாடகம் மறுப்பதற்கான அடிப்படைக் காரணம் இதை ஒரு இனப்பிரச்சினையாக அவர்கள் கையாள்வதால்தான். கன்னடர் - தமிழர் இனமுரண் பாட்டின் ஒரு கூர்முனையாக காவிரிச்சிக்கல் வரலாறு முழு வதும் நீடித்து வருகிறது. காவி ரிச் சிக்கல் ஒரு இனச்சிக்கல் என்ற பார்வை இருப்ப தால் தான் அனைத்து தரப்பு கன்ன டர்களும் ஒரே குரலில் பேசு கிறார்கள். காவிரிச் சிக்கல் தமிழர்களின் ஒரு தேசிய இனச் சிக்கல் என்பது புரியாத தால் தான் தமிழர்களிடையே இது குறித்து வலுவான பெரு மூச்சுக் கூட எழவில்லை. ஒவ்வொரு கட்டமாக காவிரி உரிமையில் தமிழர்கள் பின்ன டைந்து கொண்டே வருவதற்கு அடிப் படைக் காரணம் இது ஒரு இனச்சிக்கல் என்ற தெளிவு இல்லாததுதான்.

தமிழர்கள் தங்களைத் தற் காத்துக் கொள்ள உள்ள ஒரே வழி தமிழ்த் தேசிய இன அரசி யலே என புரிந்து கொள்ளா தவரை காவிரி உரிமை மட்டு மல்ல தமிழர்களின் தாயக உரி மைகள்உள்ளிட்ட அனைத்து உரிமைகளுமே கைநழுவிப் போய்விடும். ஏற்கெனவே சுட் டிக்காட்டியது போல், கச்சதீவு, முல்லைப் பெரியாறு உள் ளிட்ட ஆற்று நீர் உரிமைகள், அணு உலை, ஈழத் தமிழர் இன அழிப்பு, ஆகிய அனைத்திலும் தமிழர் கள் இழந்துகொண்டே வருவதற்கு அடிப்படைக் காரணம் தமிழ்த் தேசிய அர சியல் இங்கு முதன்மைப் பெறா ததே ஆகும்.

தேசிய இன அரசியல் முன் வைக்கப்படாத சமூகம் வெறும் உதிர்களின் கூட்டமாக ஏதோ ஒரு கோரிக்கையில் எப்போதோ கூடிக் கலையும் கூட்டமாக சீர ழிந்து போகும் அப்படியான சமூகம் தன்னை ஒரு மக்கள் சமூகமாக நிலை நிறுத்திக் கொள்ளவே முடியாது.

நவீன காலத்து ஒரு மக்கள் சமூகம் தன்னை ஒரு தேசிய இனமாக அறுதியிட்டுக் கொள் வதற்கு அங்கு தேசிய இன அரசியல் தலைமையில் வைக்கப் படுவது முன் நிபந்தனையாகும். இதனை செய்வது அரசியல் அமைப்புகளின் முதன்மைக் கடமையாகும்.

ஆனால் அ.இ.அ.தி.மு.க, தி.மு.க., உள்ளிட்ட இங்குள்ள தேர்தல் கட்சிகள் தமிழ்த் தேசிய அரசியலை முதன்மை இடத்தில் வைக்க விரும்புவ தில்லை. ஏனெனில் தமிழ்த் தேசிய இன அரசியல் கன்னட தேசியம் போல இந்தியத்தோடு இணக்கம் காண முடியாதது. தேர்தல் அரசியல் வளையத் திற்குள் அடங்கி நிற்க முடியா தது. எனவே தமிழ்நாட்டுக் கட்சிகள் தமிழர்களை உதிரி களின் கூட்டமாக, பயனாளி களின் தொகுப்பாக, வாக்காளர் களாக இருக்கத்தகுந்த அரசியல் மட்டுமே தெரிந்தவர்களாக வைத்துக்கொள்ளவே விரும்பு கின்றன. எனவே தமிழ்நாட்டு தேர்தல் கட்சிகளிடமிருந்து தமிழ்த் தேசிய அரசியலுக்கான முனைப்பு எழாது.

தேர்தல் அரசியல் இரைச்சல் களுக்கு வெளியேதான் ஆழ மாக, அழுத்தமாக தமிழ்த் தேசிய அரசியல் நிலைகொள்ள முடியும் என்ற உண்மையை தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக இளையோர் புரிந்து கொள்ள வேண்டும்.தேர்தல் களங்களுக்கு அப்பால் நிலை கொள்ளும் தமிழ்த் தேசிய அரசியல் தமிழ்ச் சமூகத்தில் முதன்மைப் பெற் றால் தமிழ்த் தேசிய இனத்தின் அனைத்துத் தளங்களிலும் உள்ள பன்முக ஆற்றல்களை ஒருங்கிணைப்பது எளிதாக நடக்கும். அப்போதுதான் உழ வர்கள், வணிகர்கள், ஒடுக்கப் பட்ட அனைத்துச் சமூகத் தினர், சூழலியல் ஆர்வலர்கள், மரபு சார்ந்த மாற்று அறிவிய லாளர்கள், ஆகிய அனைத்து தரப்பு ஆற்றல்களும் தமிழ்த் தேசிய தற்காப்பு முனைகளில் ஒருங்கிணைக்கப்பட முடியும்.

எனவே தேர்தல் தலைவர் களுக்காக காத்திராமல், தேர்தல் அரசியலுக்குள்ளே மாற்று களைத் தேடாமல் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப் பதில் அறிவும் அர்ப்பணிப்பும் உள்ள தமிழ்நாட்டு இளை யோர் முதன்மைப் பங்காற்ற முன் வரவேண்டும். காவிரி உள் ளிட்ட அனைத்து உரிமை களையும் மீட்க அதுதான் வழி.

Pin It