முந்தின வருசம்
பாண்டிப் பயலும்
பாத்திமாப் புள்ளையும்
ஊரைவிட்டே ஓடிப்போனார்கள்;
அதற்கும் முந்தின வருசம்  
மாயனும் முனியனும் 
வெட்டிக் கொண்டு 
உலகை விட்டே  ஓடிப்போனார்கள்;                  
இந்த வருசம் என்ன நிகழுமோ?                                    
திகிலில்
உறைந்திருக்கிறார்கள்  
ஊர் சனங்களும்
உலகாளும் அம்பிகையும்
அவளது பரிவாரங்களும்.                          

- ஸ்ரீதர்பாரதி

Pin It