ஏடறி வரலாறு வர்க்கப் போரே
நாடறி உண்மை உரைத்தே நின்றேன்
வர்க்கம் தன்னையும் முடிவு செய்வது
வர்ண முறைமை என்றே உரைத்து
திறனிலாப் பார்ப்பனர் தாழ்நிலைப் பணிகளில்
இறங்கா திருக்கும் மறவற நாட்டில்
சாதியின் படியே பணியில் அமர்த்தும்
நீதியை முதலில் ஒழித்திடு என்றார்

(ஏடறிந்த வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்ட வரலாறு என்ற நாடறிந்த உண்மையைச் சொன்னேன். (இந்தியாவில் அந்த) வர்க்கத்தை முடிவு செய்வதே வருண முறைமை தான் என்று உரைத்து, திறமைக் குறைவான பார்ப்பனர்கள் (அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த) தாழ் நிலைப் பணிகளைச் செய்வதில் இருந்து தப்பி விடும் (அறத்திற்கு எதிரான) மறத்தையே அறமாகக் கொண்ட நாட்டில், சாதியின் அடிப்படையில் பணிகளில் அமர்த்தும் (பொதுப் போட்டி) முறையை ஒழித்திடு என்றார்.)

- இராமியா

Pin It