உண்மை
ஜெயிக்கும் என்பர்
அதை எப்போதும்
ஜெயிக்க வைக்கவே
வேணும் -
இதற்கான போர்களும்
இருந்ததாகச் சொல்வர்
சொற்களின் ஜாலத்தில்
ஜெயிப்பதே நடைமுறை.
முன்னோர்களின் சொற்கள்
அப்படியொன்றும்
மகத்துவமானவையல்ல -
சப்பையானவை
தட்டையானவை.
கிளிகளிடமிருந்து
வரும் சொற்களின்
மகத்துவம் பெரிது.
உதிர்ந்து விழும்
இலைகளிடம்கூட
சொற்களை உணரலாம்.
மாலை வெயிலில்
இதமாய்த் தகதகக்கும்
சொற்களைச் சேர்த்துக்கொண்டு -
ஆற்றின் சலசலப்பிலும்
அம்மாவின் முகத்திலும்
கண்டெடுத்த சொற்கள்
நிஜமானவை.
உயிரின் நீட்சிக்கு
அடையாளமானவை -
நட்சத்திரங்கள்
சொற்களை உபயோகிப்பதில்லை
நேசம் சொல்ல
சிறு கண்சிமிட்டல்
போதுமானது -
சொற்கள் வண்ணம்
பூசிக்கொண்டால்
அர்த்தமிழந்து
போய்விடுகின்றன.
நிறமற்ற சொற்கள்
கேட்கவே செய்கின்றன
அபூர்வமாகவேணும்.
என் இருப்பும்
இதனோடு சம்பந்தப்பட்டதுதான்.
கருக்கல் விடியும் - மே 2012
சொற்கள்
- விவரங்கள்
- நா.விச்வநாதன்
- பிரிவு: கருக்கல் விடியும் - மே 2012
More articles by நா.விச்வநாதன்
- புரிதல் கலை (09 ஏப் 2014)
- புத்தம் 7 (31 மே 2013)
- எதிர்வினை - கெட்ட வார்த்தை பேணுவோம் (29 ஜன 2013)
- விடுதலை வழி (23 செப் 2011)
- சொற்கள் (15 ஜூன் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.