வயலோர நீர்த்தொட்டியின்
நிழலும்
கலங்கிய குளத்து நீரின்
சுவையும்
பாதங்களை கறையாக்கும்
செம்மண் பாதைகளும்
தின்னத் தின்னத் திகட்டாத
பனங்கிழங்கும், பனஞ்சுளையும்
பௌர்ணமி நிலவாய் ஆகிப்போன
கோடை விடுமுறையின்
வெக்கையான பொழுதுகளும்
நட்சத்திரங்கள் வந்து குதித்து
விளையாட ஆசைப்படும்
கண்ணாமூச்சி ஆட்டங்களும்
பத்து பைசா ஆரஞ்சு மிட்டாயின் ருசியில்
பேரின்ப பேரானந்தத்தை
அடைந்துவிடும் ஐம்பொறிகளும்
பணத்தை வைத்து
எவரையும் எடைபோடத் தெரியாத
பளிங்குகளாய் உருளும்
பால்யவெளிப் பயணங்களும்
அனைவரையும் பிள்ளையாராய்
பிடிக்க நினைத்து
குரங்காக்கிய
பள்ளியும், சமூகமும், ஊரும், நாடும்
ஒரு சில பிள்ளையாருக்காக
குரங்கான நாங்களும்....
கருக்கல் விடியும் - மே 2012
பொம்மை செய்யப் பழகும் குயவர்கள்
- விவரங்கள்
- ப.மதியழகன்
- பிரிவு: கருக்கல் விடியும் - மே 2012
More articles by ப.மதியழகன்
- கடவுள் இறந்துவிட்டார் - நீட்சே (05 ஜூலை 2021)
- நான் கடவுளல்ல போராளிகள் கைகளிலிருக்கும் ஆயுதம் – அம்பேத்கர் (29 ஜூன் 2021)
- நானொரு நாத்திகன் – பகத்சிங் (25 ஜூன் 2021)
- தோழர் ஜீவானந்தம் – தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட்களின் பிதாமகன் (10 ஜூன் 2021)
- காரல் மார்க்ஸ் - உலகத்தின் இரண்டாவது சூரியன் (04 ஜூன் 2021)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.