கூடுதல் கவனம் மின்மினி
நெடிய புல்வெளியில்
புத்தர் மௌனம்.
கூர்வாள் நுனியிலும்
பேசலாம் சமாதானம்
மரணம் வெகுதூரம்.
கேட்டதுண்டா குரல்
மூங்கில் மரக்குயிலின்
உள்மன அழகு.
அகலத் தோரண வாயில்
இறுக்கம் சூழ்ந்திருக்க
ஏது வழி தும்பீ.
அடிக்கடி சோர்வு
அடுத்த முறையேனும்
வானவில் பிடித்தாகணும்.
அந்திப் பூவும் மலர்ந்தாச்சு
பாடாதே சங்கீதம்
சிள்வண்டு இசை சுகம்.
அமைதியின் பொருள்
அறிவாயோ நீ
காற்றில் குருதி வாசம்.
கருக்கல் விடியும் - ஏப்ரல் 2013
புத்தம் 7
- விவரங்கள்
- நா.விச்வநாதன்
- பிரிவு: கருக்கல் விடியும் - ஏப்ரல் 2013
More articles by நா.விச்வநாதன்
- புரிதல் கலை (09 ஏப் 2014)
- எதிர்வினை - கெட்ட வார்த்தை பேணுவோம் (29 ஜன 2013)
- சொற்கள் (29 ஜூன் 2012)
- விடுதலை வழி (23 செப் 2011)
- சொற்கள் (15 ஜூன் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.