(இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது மூண்ட கலவரத்தின் பயங்கரம் இது. மார்கிரேட் புரூக் என்ற பெண்மணி இப்புகைப்படத்தை எடுத்துள்ளார். 'ரோலி புக்ஸ்' வெளியிட இருக்கிற நூலில் இப்படம் இடம் பெற்றுள்ளது)

உயிர்களைக் கொத்தித்
Violenceதின்றது மதவெறி

மனிதர்களின் பிணங்கள் மீதமர்ந்து
வாசிக்கப்படுகின்றன வேதங்கள்

ஒற்றுமை எனும் போலிப்பேச்சின்
உருவம் திரண்டது
பிணக்குவியலாய்

தின்று விளையாடிய தெருவின்
மண்ணிலே
அழுகி நாறின உடல்கள்

தீர்வுகளின் தாகங்களை மறைத்து
மதங்களின் வேட்கையை
தணித்துக் கொண்டனர்
உயிர்களைக் குடித்து

லெபனான், ஈராக், இலங்கை, இந்தியா...
உலகின் எம்மூலையிலும்
மதங்களால் அறுக்கப்படுகின்றன
மனிதச் சங்குகள்

ஒருவழியாய்
எல்லோரும் செத்தபின்னரே
கிடைக்கிறது பேரமைதி


-யாழன் ஆதி
Pin It