Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

பெரியார் முழக்கம்

பெரியார் இயக்கத்துடனான தோழமையை முடிவு செய்ய வேண்டியது, இஸ்லாமியர் அமைப்புகள்தான் - இதுவே கழகத்தின் நிலைப்பாடு என்று சென்னையில் பாரூக் படத்திறப்பு நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தார்.

இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் இறை மறுப்பாளராக இருந்த ஒரே காரணத்துக்காக படுகொலை செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் மனித நேயப் போராளி பாரூக் படுகொலைக்கு கண்டனக் கூட்டம் கருத்தரங்கமாக சென்னையில் மார்ச் 26 மாலை இராயப்பேட்டை இலாயிட்ஸ் சாலையில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் கழக சார்பில் நிகழ்ந்தது. ‘பாரூக் படுகொலையும் நமது நிலையும்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகரன், ‘சேவ் தமிழ்’ செந்தில், திருமுருகன் காந்தி (மே 17), வழக்கறிஞர் திருமூர்த்தி, இஸ்லாமியராக பிறந்தாலும், இஸ்லாமிய மதக் கருத்தியலை மறுக்கும் தோழர்கள் நடத்தும் நாத்திகர் பண்பாட்டுக் கழகம் சார்பில் அலாவுதின் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  கழகத் தோழர்கள் கவிஞர்கள் இரவி பாரதி, இராமசாமி வீரவணக்கக் கவிதைகளை வாசித்தனர்.

ராஜீ, சங்கீதா என்ற இளம் தோழர்கள், மேடையில்  தங்களை திராவிடர் விடுதலைக் கழகத்தில் பலத்த கரவொலிகளுக்கிடையே உறுப் பினர்களாக இணைத்துக் கொண்டனர். பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள் சார்ந்த தோழர்களும், இருபால் கருஞ்சட்டைத் தோழர்களுமாக அரங்கம் நிரம்பி வழிந்தது.  படுகொலை செய்யப்பட்ட பாரூக்கின் படத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். பாரூக்கின் குடும்பத்துக்கு தோழர்கள் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் ரூ.56,500 நிதி வழங்கினர்.

இறை மறுப்பாளராகவும், மத மறுப் பாளராகவும் வாழ்ந்து இலட்சியத்துக்கு உயிரை விலையாகக் கொடுத்த பாரூக்கிற்கு உரிய மரியாதை செலுத்தும் நோக்கில் பெரியாரின் கடவுள் - மத மறுப்புக் கொள்கைகளை விளக்கி பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். பெரியார் அனைத்து மதங்களையும் எதிர்த்தவர். இந்து மதம் - ஜாதியையும் ‘சூத்திரர்’ என்ற இழிவையும் சுமத்துவதால் சமுதாய விடுதலை நோக்கில், இந்து மத பார்ப்பனிய எதிர்ப்புக்கு முன்னுரிமை தந்தார். அதனால் ஏனைய மதங்களை அவர் ஆதரித்த வரில்லை என்று கூறிய விடுதலை இராசேந்திரன், பெரியாரின் கீழ்க்கண்ட கருத்தையும் சுட்டிக்காட்டினார்.

“எனக்கு மோட்சத்திலோ பாவ மன்னிப்பிலோ கடவுள் ஆட்சியிலோ சிறிதும் நம்பிக்கைக் கிடையாது. ஆத்மா என்பதோ ஜீவன் என்பதோ ஒன்று இருப்பதாக நான் நம்புபவனே அல்லன். அது விஷயத்தில் எல்லா மதங்களும் ஒன்றுபோல்தான் இருக் கின்றன. உலகிலுள்ள சகல மதங்களுக்கும் ஒரு சர்வ சக்தி யுள்ள கடவுளும் மோட்சமும் நரகமும் ஜீவனும் உண்டு. அவற்றில் ஒன்று பெரியது, மற்றது சிறியது என்று சொல் வதற்கில்லை. ஒரு மதமும் வேண்டாம் என்பதுதான் சரியான பேச்சும் திட்டமும் ஆகும். எனக்கு மதத்திலும் தெய்வ பக்தியிலும் தியானத் திலும் நம்பிக்கையில்லை.

சாதி, மதம், தெய்வம், தியானம் என்கின்ற நான்கு தத்துவங்களும் அழிந்தாக வேண்டும். அவை அழியாமல் மனித சமுதாயத்திற்குச் சாந்தி யும் திருப்தியும் சுகமும் கிடையா.

அந்த நிலை அடைந்து ஆக வேண்டும். அதுவே எனது கொள்கை.

மதம் மக்களுக்கு அபின் (மது) என்றார் ஒரு பெரியார். ஆனால் நான் மதம் மக்களுக்கு விஷம் என்கிறேன். மதக்காரனுக்கு சுயமரியாதையும் சுய அறிவும் இல்லை. மனிதனின் முற் போக்கையும் ஒற்றுமையையும் தடுப்பது மதம் - மனிதனுக்கு மற்ற சீவன்களைவிட அதிக புத்தி இருந்தும் ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு அடிமை யாய் இருக்கக் காரணம் மதம்.

ஆகையால் நான் எந்த மதத் திற்கும் விரோதிதான். மதங்கள் இந்த நாட்டிலிருந்து விரட்டப் பட வேண்டும். அவைகள் ஒழிய, ஒழிக்கப்பட வேண்டும் என் கின்ற கருத்துடையவன் நான்.

நான் சமுதாய சமத்துவத் திற்குப் பாடுபடுகின்ற ஒரு தொண்டானாவேன்.”

இதுவே பெரியாரின் கருத்து என சுட்டிக்காட்டினார்.

farook periyar 600கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில், “பாரூக் கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து, நாங்கள் கோவைக்கு விரைந்தோம். மருத்துவமனை யில் அவரது உடல் இருந்தபோது சுமார் 400 பேர் கூடி விட்டார்கள். அதில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை சுமார் 40 பேர் தான். மற்றவர்கள்இஸ்லாமியர் அல்லாத தோழர்கள் தான். கொலை செய்யப்பட்டது ஒரு இஸ்லாமியராக இருந்தும்கூட வழக்கம்போல் இதுபோன்ற நிகழ்வுகளில் பெரும் திரளாகக் கூடும் இஸ்லாமியர்கள் வரவில்லை.  

இறை மறுப்பாளர் என்பதற்காக அங்கே வருவதைக்கூட தமது சமூகம் விரும்பாது என்ற எண்ண ஓட்டத்தைத் தவிர வேறு காரணம் ஏதும் இருக்கும் என்று நான் கருதவில்லை. உண்மையிலேயே இஸ்லாமிய சமூகத்தின் இந்தப் புறக்கணிப்பு எங்களுக்கு கவலையையும் அதிர்ச்சியையும் தந்தது. மற்றொரு செய்தியையும் நான் பதிவு செய்தாக வேண்டும். பாரூக் உடலை முதலில் “நீங்களே உங்கள் கழக சார்பில் மதச் சடங்குகளின்றி அடக்கம் செய்து கொள்ளுங்கள்” என்று  அவரது தந்தை என்னிடம் கூறினார்.

பிறகு பிற்பகல் 3 மணியளவில் “நாங்களே எங்கள் மத முறைப்படி அடக்கம் செய்து விடுகிறோம்” என்று கூறி விட்டார். அவருக்கு எங்கிருந்தோ அழுத்தங்கள் வந்திருக் கின்றன என்பதை நாங்கள் புரிந்து கொண்டு, உங்கள் விருப்பப்படியே செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டோம். மதமறுப்பு கொள்கை பேசியதற்காகவே உயிர்ப்பலியான தோழரின் உடல் அடக்கம் மதச் சடங்குகளோடுதான் நடந்தது. மற்றொரு கருத்தையும் நான் பதிவு செய்திட விரும்புகிறேன். பாரூக் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு, அவரது மனைவி மற்றும் தாயாருக்கு ஆறுதல் கூறுவதாக - இஸ்லாமிய பெண்கள் குழுவாக வந்தனர். அவர்கள் பாரூக் துணைவியாரிடம், “பாரூக் நபிகளையே எதிர்த்து வந்திருக்கிறார். இன்னும் ஒரு மாதத்தில் நபிகள் கருத்துகளை எதிர்த்து நூல் வெளியிட இருந்ததாக சொல் கிறார்களே, ஒரு இஸ்லாமியராக இருந்து கொண்டு - இப்படி எல்லாம், இறைவனை யும், தூதுவரையும் எதிர்க்கலாமா?” என்று கேட்டிருக்கிறார்கள்.

ஆக பாரூக் கொலை செய்யப்பட்டதில் நியாயம் இருக்கிறது என்ற கருத்துரு வாக்கம் அங்கு அவருக்கு எதிராக அந்தப் பகுதியில் திட்டமிட்டு நடத்தப்பட்டு வந்திருக்கிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம். பாரூக்கின் துணைவி யாரும் அவரது தாயாரும் ஒரே ஒரு கேள்வியைத்தான் அவர்களிடம் கேட்டிருக்கிறார்கள். “பாரூக் இறை மறுப்பு பேசியது - குற்றம் என்றால், அதற்கான அல்லா தண்டனையை தரட்டும், இவர்கள் அவரை ஏன் கொலை செய்ய வேண்டும்?” என்ற கேள்வியைத்தான் கேட்டிருக் கிறார்கள். எங்களுடைய பெரியார் இயக்க மேடைகளில் எப்போதுமே இஸ்லாமிய கருத்து சுதந்திரத்தை அங்கீகரித்தே வந்திருக்கிறோம்.

எங்கள் மேடையில் பேசும் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள்கூட “ஏக இறைவன் சாந்தியும் சமாதானமும் உங்களுக்கு அருள் வானாக” என்று எங்களுக்கும் சேர்த்து ஏக இறைவனை வணங்கித்தான் பேச்சைத் தொடங்குவார்கள். பெரியார் இயக்கக் கூட்டங்கள் நடக்கும் இடத்தின் அருகே மசூதியிலிருந்து தொழுகைக்கான அறிவிப்பு வரும்போது அந்த நிமிடங்களில் எங்கள் உரையை நிறுத்திக் கொண்டு விடுவோம். இஸ்லாமிய மதத்துக்கான கருத்துரிமையை நாங்கள் அங்கீகரித்தே வருகிறோம். ஆனால் அதே கருத்துரிமை - தோழர் பாரூக்கிற்கு மறுக்கப்பட்டு அதற்காக அவரது உயிரை விலையாகக் கொடுத்திருக்கிறார். இப்போதும் கூறு கிறோம். இஸ்லாமிய தோழர்கள் எங்கள் உறவுகள் தான்.

ஆனால், இத்தகைய இஸ்லாமிய அடிப்படை வாதங்கள் தலை தூக்கும்போது அதற்கான எதிர்ப்புகள் இஸ்லாமிய சமூகத்தினரிட மிருந்து வரவேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம். நட்புக்கரம் இந்தச் சூழலில் அவர்களிட மிருந்து நீட்டப்பட வேண்டும் என்றே நாங்கள் எதிர்பார்க் கிறோம். பெயரளவுக்கு கண்டன அறிக்கைகளோடு நிறுத்திக் கொண்டு விட்டார்கள். அதிலும் சில அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கக்கூட தயாராக இல்லை. இனி எங்களுடையதான தோழமையை முடிவு செய்ய வேண்டியது இஸ்லாமிய அமைப்புகள்தான்” என்று கொளத்தூர் மணி கழகத்தின் நிலைப் பாட்டை தெளிவாக விளக்கினார். 

தொடர்ந்து பெரியார் ‘இன இழிவு ஒழிய வேண்டும்’ என்ற ஒரே காரணத்துக் காகத்தான் இஸ்லாமிய மதத்தில் சேரலாம் என்று கூறினாரே தவிர, இஸ்லாமிய மதக்கோட்பாடுகளை ஆதரித்து அல்ல. நபிகள் நாயகம் விழா இஸ்லாமியர்கள் நிகழ்ச்சிகளிலேயே பெரியார் இஸ்லாமிய மதத்தின் மீதான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். அப்படி பெரியார் பேசிய பல்வேறு கருத்துகளை அவரது உரையிலிருந்து அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்துக் காட்டினார். சென்னை மாவட்ட கழகத் தலைவர் வேழவேந்தன் நன்றி கூற 9 மணியளவில் நிகழ்வு நிறைவடைந்தது.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

+1 #1 செ.நடேசன் 2017-03-31 04:08
மதம் மக்களுக்கு அபின் (மது) என்றார் ஒரு பெரியார். ஆனால் நான் மதம் மக்களுக்கு விஷம் என்கிறேன். மதக்காரனுக்கு சுயமரியாதையும் சுய அறிவும் இல்லை. மனிதனின் முற் போக்கையும் ஒற்றுமையையும் தடுப்பது மதம் - மனிதனுக்கு மற்ற சீவன்களைவிட அதிக புத்தி இருந்தும் ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு அடிமை யாய் இருக்கக் காரணம் மதம்.என்னும் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் கருத்துக்களை வரவேற்கிறேன் - செ. நடேசன்
Report to administrator
0 #2 முஹம்மத் அலி ஜின்னா 2017-04-05 17:36
https://upload.wikimedia.org/wikipedia/commons/2/2c/Periyar_with_Jinnah_and_Ambedkar.JPG

1940 - ஜின்னா, பெரியார், அம்பேத்கர், அண்ணா: சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு:

1940ல் பாப்பாரத் தேவ்டியாமுண்டை பாரத்மாதாவை உதைக்க ஜின்னா சாஹெப், வாப்பா பெரியார், அத்திம்பேர் அம்பேத்கர், அறிஞர் அண்ணா ஆகியோர் ஜின்னா சாஹேபின் பாம்பே ஹவுஸ் பங்களாவில் ஒன்று கூடி ஆலோசனை செய்தனர். இவர்கள் எந்த மொழியில் பேசினர் என பலருக்கு வியப்பாக இருக்கும். 1947 வரை இந்தியாவின் ஆட்சி மொழி உருது என்பது பலருக்கு தெரியாது. ஹிந்தி எனும் மொழியே இந்தியாவின் பாடத்திட்டத்தில ் அன்று கிடையாது.

வாஜ்பாய், அத்வானி, சவர்க்கார், கோகலே, பெரியார், அம்பேத்கர், அண்ணா, பாரதியார் ஆகிய அனைவருக்கும் உருது மொழி நன்றாக எழுதப்படிக்க பேசத் தெரியும்.

"சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா" என 1906ல் அல்லாமா இக்பால் உருது மொழியில் எழுதிய கவிதையைத்தான் தமிழில் பாரதியார் "பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு" என காப்பியடித்தார்.
--------------------------------------

இந்த நான்கு ஒப்பற்ற ஜிஹாதிக்கள் என்ன பேசினர் என்பதை பார்ப்போம்:

வாப்பா பெரியார்: ஜின்னா சாஹெப், பார்ப்பனீயத்தை எப்படி ஒழிப்பது?

ஜின்னா சாஹெப்: பாக்கிஸ்தானும் திராவிட நாடும் உருவானால், பார்ப்பனீயம் ஒழிந்துவிடும்.

வாப்பா பெரியார்: திராவிட நாட்டை உருவாக்க இங்கிலாந்து மஹாராணியின் ஆதரவு தேவை. நீங்கள் இங்கிலாந்து அரசியின் குடும்ப வக்கீலாக இருப்பதால், உங்களால் இந்த விஷயத்தை அவரிடம் எடுத்து சொல்ல முடியும். எங்களுக்கு உங்களுடைய உதவி தேவை...

ஜின்னா சாஹெப்: நிச்சயமாக.... ஆனால் என்னுடைய முதல் இலக்கு பாக்கிஸ்தான். 5 வருடங்களில் இன்ஷா அல்லாஹ் பாக்கிஸ்தான் உருவாகிவிடும். அதற்குப்பிறகு, நீங்கள் அனைவரும் தாராளமாக பாக்கிஸ்தானுக்க ு வாருங்கள். அங்கே அமர்ந்து திராவிட நாட்டின் சட்ட சாசனத்தை வடிவமைப்போம். உங்கள் அனைவரையும் இங்கிலாந்து அரசியிடம் அழைத்து சென்று அவருடைய ஒப்புதலை வாங்கி தருகிறேன்...

அத்திம்பேர் அம்பேத்கர்: திராவிட நாடு என்றால் தென்னிந்தியா... நான் வட நாட்டுக்காரன்.. . நீங்கள் இருவரும் உங்கள் நாட்டை உருவாக்கி சென்று விட்டால், வடநாட்டு தலித்துக்களுக்க ு விடிவுகாலம் எப்போது?. நாங்கள் எங்கே போவது?

ஜின்னா சாஹெப்: அம்பேதகர்ஜி, அது பெரிய பிரச்னையல்ல... நீங்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக ஹிந்துமத ஜாதி சாக்கடையை விட்டு வெளியேறி கிருத்துவத்துக் கு செல்லுங்கள். தலித்துக்கள் ஒட்டு மொத்தமாக அல்லேலூயா போட்டால், உங்களை சந்திக்க இங்கிலாந்து அரசி ஓடோடி வருவார். உங்களுக்கு ஜீஸஸ்தான் தருவார்..

அறிஞர் அண்ணா: அட்டகாசமான ஐடியா...

கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதிக்கலாம்..
கறந்தபால் முலைப்புகலாம்..
கடைந்த வெண்ணை மோர்புகலாம்..
சீதைக்கு ராமன் சித்தப்பனாகலாம்..
காஞ்சியிலே காமகோடி சூத்திரனாகலாம்..
பாப்பாத்திக்கு திராவிடன் பாதபூசை செய்யலாம்...

ஆனால், பார்ப்பன வர்ணதர்ம சாக்கடைக்குள் சுகம் கண்டுவிட்ட அம்பேத்கர், அதிலிருந்து எந்த ஜென்மத்திலும் வெளியேற மாட்டார்.… ஒரு நாள் அவாளுக்கு அத்திம்பேராவார் ....

வாப்பா பெரியார்: சரி.. ஜின்னா சாஹெப்... நீங்கள் பாக்கிஸ்தானை உருவாக்குங்கள். ... பாக்கிஸ்தானில் பிரியாணி சாப்பிட்டு பாப்பானின் சிண்டை அறுக்க நாங்கள் காத்திருக்கிறோம ்... வாழ்த்துக்கள்..

ஆனால், அல்லாஹ்வின் நாட்டம் வேறாக இருந்தது. 1948ல் ஜின்னா சாஹெப் இறந்து விட்டார். ஒரு ஐந்து வருடம் ஜின்னா சாஹெப் உயிரோடு இருந்திருந்தால் , பாப்பானுக்கு வாப்பா பெரியார் சுன்னத் செய்திருப்பார்.
Report to administrator
0 #3 முஹம்மத் அலி ஜின்னா 2017-04-06 10:10
// பெரியார் ‘இன இழிவு ஒழிய வேண்டும்’ என்ற ஒரே காரணத்துக் காகத்தான் இஸ்லாமிய மதத்தில் சேரலாம் என்று கூறினாரே தவிர, இஸ்லாமிய மதக்கோட்பாடுகளை ஆதரித்து அல்ல //
-------------------------

ரகசிய முஸ்லிம் வாப்பா பெரியார்:

1. திருக்குரான் அடிப்படையில் சாகும் வரை சிலைவணக்கத்தை எதிர்த்தார் பெரியார். பிள்ளையார் சிலையை செருப்பால் அடித்து நடுத்தெருவில் போட்டு சுக்கு நூறாக உடைத்தார்.

2. பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு, பாப்பானை அடி என போதித்தார்.

3. பாப்பானின் பூணூலை அறுத்தார்.

4. திருக்குரான் அடிப்படையில் தத்தெடுப்பு எனும் பொய்யான உறவை முறித்து, மணியம்மை அம்மையாரை திருமணம் செய்து மணைவியாக உலகுக்கு அறிவித்தார் பெரியார்

5. "ஹிந்து கடவுள்களில் அனவருமே காமுகராகவும், அயோக்கியராகவுமே இருக்கின்றனர். ஏன் ஒருவன் கூட யோக்கியன் இல்லை?. இந்த விஷயத்தில், உருவமற்ற இஸ்லாமியரின் கடவுள் தவறை போதிப்பதில்லை. அவர்களுடைய வேதம் நீதியை போதிக்கிறது. எனக்கு அந்த கடவுளோடு எந்த பிரச்னையுமில்லை " என பலமுறை குடியரசில் எழுதியும் மேடையில் பேசியுமிருக்கிற ார் வாப்பா பெரியார்.

6. தனது வாழ்நாளில் ஒருமுறை கூட அல்லாஹ்வையோ, திருக்குரானையோ, நபிகள் நாயத்தையோ இழிவாக பேசவில்லை. அல்லாஹ் இல்லை என ஒரு முறை கூட சொல்லவில்லை.

7. “இன இழிவு நீங்க, ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு” என பலமுறை குடியரசில் எழுதியுள்ளார். மேடைகளில் பேசியுள்ளார். பெரியாரின் பேச்சை கேட்டு திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பல கிராமங்கள் இஸ்லாத்தை தழுவின.

8. திருக்குரானால் தடுக்கப்பட்ட மது, பன்றி இறைச்சி ஆகியவற்றை கையால் தொடக்கூட இல்லை. முஸ்லிம் வீடுகளிலும் கடைகளிலும் சமைக்கப்பட்ட ஹலால் அசைவ உணவையே விரும்பி உண்டார். வட்டி வியாபாரத்தை எதிர்த்தார்.

வாப்பா பெரியார் ஒரு ரகசிய முஸ்லிம் எனும் கருத்து இஸ்லாமியரிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. "பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா எதிர்த்தாரா" எனும் அப்துல்லாஹ் பெரியார்தாசனின் ஆவனப்படத்தில் பல இஸ்லாமிய தலைவர்கள், குறிப்பாக வெல்பேர் பார்ட்டி தலைவர், இதே கருத்தை பிரதிபலித்துள்ளார்.

பார்ப்பனீயத்தை அழிக்க வந்த சூப்பர் பவர் இஸ்லாம். பார்ப்பனீயத்தை ஒழிக்க வாப்பா பெரியார் தனது வாழ்நாள் முழுதும் அரும்பாடு பட்டார். இப்பொழுது சொல்லுங்கள் ... தந்தை பெரியார் ஒரு ரகசிய முஸ்லிம் என்பதை உங்களால் மறுக்கமுடியுமா? .
Report to administrator
0 #4 முஹம்மத் அலி ஜின்னா 2017-04-06 10:13
ஜாதி கலப்பு, ஜாதி மறுப்பு… காக்கை குருவி எங்கள் ஜாதி:

பெரியாரின் சிந்தனைகளால் கவரப்பட்டு ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட ஒருவர், ஒரு பெரிய பெரியாரிஸ்ட்டை சந்தித்து தனது பிரச்னைக்கு வழி கேட்கிறார்...

ஜாதி மறுப்புக்காரர்: அய்யா, நானும் என் மணைவியும் ஜாதி மறுப்பு திருமணம் செய்துள்ளோம்...

பெரியாரிஸ்ட்: சரி... வாழ்த்துக்கள்..

ஜாதி மறுப்புக்காரர்: ஆனா ஒரு பிரச்ன இருக்குங்க.. திருமண சான்றிதழ் வாங்க கோர்ட்டுக்கு போனா, ரெண்டு பேரோட ஜாதி சான்றிதழையும் கொண்டு வர சொல்றாங்க...

பெரியாரிஸ்ட்: சரி...

ஜாதி மறுப்புக்காரர்: நாங்க ஜாதிய விட்டு வெளியேறிட்டோம், ,, எங்கள்ட்ட ஜாதி இல்லனு சொன்னேங்க...

பெரியாரிஸ்ட்: சரி...

ஜாதி மறுப்புக்காரர்: அப்படின்னா, ஜாதியற்றவர்'னு கலெக்டர்கிட்ட போய் சான்றிதழ் வாங்கிட்டு வா'னு கோர்ட்ல சொன்னாங்க...

பெரியாரிஸ்ட்: சரி...

ஜாதி மறுப்புக்காரர்: கலெக்டர்கிட்ட போனா, ஜாதியற்றவர்'னு சான்றிதழ் தர எனக்கு சட்டப்படி அதிகாரமில்லை.. முதலமைச்சர சந்திச்சு பேசுங்க'னு சொன்னாருங்க..

பெரியாரிஸ்ட்: சரி...

ஜாதி மறுப்புக்காரர்: முதலமைச்சர்கிட் ட போனா, ஜாதியற்றவர்'னு ஒரு இந்திய குடிமகனுக்கு சான்றிதழ் தர எனக்கு சட்டப்படி அதிகாரமில்லை.. ஜனாதிபதிய சந்திச்சு பேசுங்க'னு சொன்னாங்க..

பெரியாரிஸ்ட்: சரி...

ஜாதி மறுப்புக்காரர்: ஜனாதிபதிகிட்ட போனா, "ஒன்னோட மதமென்ன"னு கேட்டாருங்க... எனக்கு மதமுமில்ல ஜாதியுமில்ல'னு சொன்னேங்க..

பெரியாரிஸ்ட்: சரி...

ஜாதி மறுப்புக்காரர்: ஜாதியும் மதமுமற்றவன், இந்திய சட்டசாசனப்படி இந்திய குடிமகனல்ல... இந்திய குடிமகனுக்குத்த ான் நான் சான்றிதழ் தரமுடியும்.... மத்தவங்களுக்கு தர சட்டப்படி எனக்கு அதிகாரமில்லை'னு சொன்னாருங்க..

பெரியாரிஸ்ட்: சரி...

ஜாதி மறுப்புக்காரர்: இப்ப என்னங்க பண்றது?

பெரியாரிஸ்ட்: பேசாம ரெண்டு பேரும் இஸ்லாத்த தழுவிடுங்க... வேற வழியே கிடையாது.. அதனாலத்தான் “இன இழிவு நீங்க, ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு” என தந்தை பெரியார் அறிவித்தார்.. புரிஞ்சுச்சா..
Report to administrator
0 #5 முஹம்மத் அலி ஜின்னா 2017-04-06 10:20
நாத்திகனாகிவிட் டால் ஹிந்து மதத்தை விட்டு வெளியேறமுடியுமா?:

ஹிந்து என்பது ஒரு பெரிய மாட்டுப்பண்ணை. அதில் ஜாதி என்பது மாட்டின் சொந்தக்காரன் அந்த மாடுகளின் மீது சூடான முத்திரை தகடால் போடும் அடையாளம். இதுதான் வர்ணதர்மம்.

“நான் நாத்திகன், ஹிந்து இல்லை ஹிந்து இல்லை” என எவ்வளவு கதறினாலும், எந்த ஜென்மத்திலும் உனது முதுகில் குத்தப்பட்ட ஜாதி முத்திரையை உன்னால் அழிக்கவே முடியாது. அந்த முத்திரையை அழிக்க, ஹிந்து மதத்தை ஒழிக்க வந்த ஒரே சூப்பர் பவர் இஸ்லாம். 1400 வருடங்களாக பார்ப்பனீயத்தை கதிகலங்க வைக்கிறது.

தன்னை நாத்திகர் என சொல்லிக்கொள்ளும ் ஹிந்துக்களிடம் நான் கேட்பது:

1. உங்கள் ஜாதியென்ன?.
2. கீழ்ச்சாதி நாத்திகரும் மேல்ஜாதி நாத்திகரும் சரிசமமா?.
3. நாத்திகராகிவிட் டால், ஜாதிகள் ஒழிந்து நாத்திகருக்குள் சமநீதி, சமத்துவம், சகோதரத்துவம் வந்துவிடுமா?.
4. ஒரு தலித் நாத்திகர், வன்னிய நாத்திகர் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்தால், அவனது குடிசையை கொளுத்துவாரா அல்லது தண்டவாளத்தில் ரெண்டு துண்டாய் வெட்டியெறிவாரா?.
5. ஒரு தலித் நாத்திகர், தேவர் நாத்திகர் வீட்டில் போய் பெண்கேட்டால் பெண்கொடுப்பாரா அல்லது அவனது வாயில் பீயை திணிப்பாரா?
6. நீங்கள் உண்மையான பெரியாரிஸ்ட் என்றால், பெரியார் செய்தது போல் பிள்ளையார் சிலையை செருப்பால் அடிப்பீரா, காலால் எட்டி உதைப்பீரா, சுக்குநூறாக போட்டு உடைப்பீரா, கீதையை நடுத்தெருவில் போட்டு கொளுத்துவீரா?
------------------------

கடவுள் இல்லையென சொன்னாலும், அல்லாஹ்வையோ முஹம்மது நபிகளையோ ஒரு முறைகூட பெரியார் இழிவாக பேசியதில்லை. ஜாதி ஒழிய நாத்திகனாக மாறு என ஒரு முறை கூட சொல்லவில்லை. மாறாக ஜாதியை ஒழிக்க இஸ்லாத்தை தழுவு என பலமுறை கூறியுள்ளார்.
---------------------

ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். “இஸ்லாத்துக்கு சர்ட்டிபிக்கேட் தர தந்தை பெரியார் தேவையில்லை. எந்த தோலான் துருத்தியானும் தேவையில்லை. அல்லாஹ்வின் சத்திய வேதம் திருக்குரானும் அண்ணல் நபி(ஸல்) வாழ்ந்துகாட்டிய வழிமுறையும்தான் எங்களுக்கு வழிகாட்டி. அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற போராடும் ஒவ்வொரு மனிதனும் எங்களுடைய தோழர். அந்த வகையில், பார்ப்பனீயத்தை அடக்கிய தந்தை பெரியாரும், பார்ப்பன பயங்கரவாதத்தை தோலுரித்த ப்ராஹ்மண சகோதரர் கர்கரேயும் இஸ்லாமியரின் தோழர்களே”.

மற்றபடி பெரியாரை வைத்து பிழைப்பு நடத்தும் அவசியமோ தேவையோ முசல்மானுக்கு கிடையாது. சகோதரர் அப்துல்லாஹ் பெரியார்தாசன் சொன்னது போல் "எங்களுக்கு பெரியவனுக்கெல்ல ாம் பெரியவன் அல்லாஹ்வின் துணை இருக்கிறது”. அதுபோதும். அல்லாஹு அக்பர்.
Report to administrator
0 #6 முஹம்மத் அலி ஜின்னா 2017-04-06 10:23
// இனி எங்களுடையதான தோழமையை முடிவு செய்ய வேண்டியது இஸ்லாமிய அமைப்புகள்தான் //
-------------

ஹிந்துமதத்தில் நாத்திகனாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம். தண்டவாளத்தில் வெட்டியெறியப்பட ்ட தலித்தும் நாத்திகன், அவனை வெட்டியெறிந்த அய்யாவும் நாத்திகன். தலித் வாயில் பீ திணிப்பவனும் நாத்திகன், பீ திணிக்கப்பட்ட தலித்தும் நாத்திகன். அதைப்பார்த்து சிரிக்கும் போலீஸ்காரனும் நாத்திகன்.

திருப்பதி கோயில் உண்டியலில் 10 லட்சம் போடுவான், 1 கோடி ரூபாய்க்கு வரிவிலக்கு வாங்குவான். அவனும் நாத்திகன்.

நான் கல்லூரியில் படிக்கும் போது, எனது நாத்திக நன்பன் தினந்தோறும் கோயிலுக்கு செல்வான். ஏனடா கோயிலுக்கு செல்கிறாயென கேட்டால் “பெண்களை சைட் அடிக்கப் போறேன்” என்பான்.
-----

இறைவனை வணங்காத நாத்திகர்கள் கூட ஜாதியென்று வந்துவிட்டால் வரிந்து கட்டிக்கொண்டு கோதாவில் இறங்குகிறார்கள் . ஜாதியை விட்டு வெளியேறுவதற்கு இஸ்லாத்தை தவிர வேறு எதாவது மார்க்கத்தை. மனித இனத்தால் சிந்திக்க முடியுமா?. 1400 வருடங்களாக சிந்தித்தவரெல்ல ாம் இஸ்லாத்துக்கு வந்துவிட்டனர் அல்லது படுதோல்வியடைந்த ு போய் சேர்ந்துவிட்டனர ் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
Report to administrator

Add comment


Security code
Refresh