kudiarasu kaiyedu1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1949 நவம்பர் முடிய வெளிவந்த ‘குடி அரசு’ வார ஏடு தமிழ்நாட்டின் வரலாற்றுப் போக்கையும் அதனோடு தொடர்புள்ள இந்திய வரலாற்றுப் போக்கையும் சமூகப்புரட்சிப் பார்வையில் புரிந்து கொள்ளவும்; பெரியாரின் பொதுவாழ்வில் நிகழ்ந்த இயங்கியல் மாற்றங்களையும், கொள்கை, வேலைத்திட்ட வளர்ச்சிப் போக்குகளையும் வெளிப்படுத்தவுமான மிகச்சிறந்த ஆவணமாகும்.

சுயமரியாதை இயக்கம் சுடர்விட்டுப் பரவி காட்டாற்று வெள்ளம்போல் சமுதாயக் கசடுகளை அடித்துச் சிதைத்தவாறு முழு வீச்சோடு களமிறங்கியது. 1938 டிசம்பர் இறுதி நாட்களில் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சி என்னும் தென் இந்திய நலஉரிமைச் சங்கத்தின் தலைவராக இந்தி எதிர்ப்புக்காய் சிறைப்பட்டிருந்த நிலையிலேயே பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். முற்று முழுதாக வேறு திசை விலகலின்றி சமுதாய சமத்துவம், பகுத்தறிவுப் பணிகளை மட்டுமே ஆற்றிவந்த அருமையான காலகட்டம் 1925 முதல் 1938 வரையிலான காலமாகும். இந்தக் கால இடைவெளியில் ‘குடி அரசு’ ஏட்டில் வெளி வந்துள்ள பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் தொகுத்து ‘பெரியார் திராவிடர் கழகம்’ பல்வேறு தடைகளை சந்தித்து வெளியிட்டது.

இந்த குடிஅரசு நூற்றாண்டில் தொகுப்பிலுள்ள பதிப்புரை மட்டும் சிறு கையேடாய். ஒவ்வொரு பதிப்புரையிலும் அந்த 6 மாதத்திற்கான குடிஅரசு செய்தி வழிகாட்டலும் முக்கிய கட்டுரைகளின் விளக்கமும் மறுவாசிப்பிற்கு தூண்டுகோலாய் அமையும். குடிஅரசு இதழை மறுவாசிப்பு செய்து இந்த காலச்சூழலோடு பொருத்தி பெரியாரின் கொள்கை முழக்கத்தை மேலும் பரப்புவோம்.

புத்தகம் பெற - ஜிபே - வாட்ஸ் அப் எண் : 94986 56683

dvk bookஎச்சிலில் உருள்வது யாரால்?

அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதத்தின்படி மக்களுக்கு பகுத்தறிவூட்டி மானமும் அறிவும் மிக்க சமுதாயமாய் இந்த திராவிட சமுதாயத்தை உலகிலுள்ள பிற சமுதாயங்களுக்கு ஒப்பாக கொண்டு வர தன் வாழ்நாளெல்லாம் உழைத்த தந்தை பெரியாரின் வழியில் இயங்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் கோரிக்கை மனுவை உள்ளடக்கியதே இந்த சிறு வெளியீடு.

உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் அவர்களின் மூடத்தனமான திர்ப்பை கேள்விக்குள்ளாக்கி உச்சநீதிமன்ற நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்ற கோரிக்கை மனுவும் அதோடு பார்ப்பனர் உண்ட எச்சில் இலையில் உருண்டு புரள்வது புண்ணியம் என்று கட்டமைத்து வைத்திருக்கும் சனாதனத்தை கேள்விக்குள்ளாக்கி மக்களை கண்ணியத்தோடு வாழ வைக்க வேண்டிய முயற்சியின் ஓர் அங்கமே இந்த வெளியீடு.

32 பக்கங்கள், 30 ரூபாய். நிமிர்வோம் வெளியீடு

புத்தகம் பெற ஜி பே - வாட்ஸ் அப் 94986 56683

- பெ.மு. செய்தியாளர்

Pin It