பாஜகவும், ஜனதா தளமும் இணைந்த கூட்டணி பீஹாரை ஆட்சி செய்து வருகிறது. இந்தக் கூட்டணி ஆட்சிப் பீடம் ஏறியதைத் தொடர்ரந்து ஆர்.எஸ். எஸ்.ஸின் செயல் திட்டங் கள் மெல்ல மெல்ல பீஹா ரில் அமல்படுத்தத் தொடங் கியுள்ளன.

அதிகாரமிக்க அரசாங்கப் பத விகளில் ஆர்எஸ்எஸ் சிந்தனை கொண்டவர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். பாஜக ஆட்சியைப் பிடிக்கும் மாநிலங்களிலெல்லாம் ஆர்எஸ்எஸ் செய்யும் முதல் வேலை இது. இதனையடுத்து தான் முஸ்லிம்களின் பொருளா தாரத்தை சீர்குலைக்கும் இனக் கலவரங்கள், குண்டு வெடிப்பை நடத்திவிட்டு முஸ்லிம்கள் மேல் பழியைப் போட்டு, இதுவரை முஸ்லிம்களைச் சகோதர வாஞ் சையோடு நோக்கி வந்த பெரும் பான்மை இந்து மக்கள் மத்தியில் வெறுப்பை விதைப்பது போன்ற ஏனைய செயல்திட்டங்களை ஆர்எஸ்எஸ் செயற்படுத்தும்.

அந்த வகையில் பீஹாரில் ஆரம்பகட்டமாக காவி சிந்தனை கொண்ட அதிகாரிகளை முக்கிய பதவிகளில் அமர்த்திவிட்டு வகுப் புப் பதட்டத்தை உருவாக்கும் வேலைகளில் ஆர்எஸ்எஸ் ஈடு பட்டு வருவதாக பீஹார் முஸ்லி ம்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

“பீஹார் அரசாங்கம் சிறு பான்மை மக்களின் முன்னேற்றத் திற்கு நலத்திட்டங்களைச் செய்து வருவதாகச் சொல்கிறது. ஆனால் எந்தத் திட்டமும் முஸ் லிம்களுக்கு அமல்படுத்தப்பட வில்லை. இந்த அரசில் பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸýம்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது'' என்கிறார் உருது பத்திரிகை ஒன்றில் பணி யாற்றி வரும் அஸôர் அஹ்மது.

பீஹாரில் லாலு பிரசாத் யாதவ் ஆட்சி இருந்தவரை முஸ் லிம்களுக்கு அவர் அரசியல் ரீதி யான ஆதரவு சக்தியாக இருந் தார். அவரது ஆட்சியில் முஸ்லிம் நலன்களுக்கான திட்டங்கள் பெரிய அளவில் செயல்படுத்தப் படவில்லை என்றாலும், முஸ் லிம்களுக்கு எதிரான நிலைப் பாட்டில் லாலு இருந்ததில்லை.

அத்வானியின் ரத யாத்திரை பீஹாருக்குள் நுழைந்தால் "தடி' கொண்டு தடுத்து நிறுத்துவேன் என்று கூறி ரத யாத்திரையை பீஹாருக்குள் அனுமதிக்காமல் கலவரம் ஏற்படுவதை தடுத்து முஸ்லிம்களின் பொருளாதாரம் காக்கப்பட காரணமாக இருந்த வர் லாலு பிரசாத் யாதவ் என் கின்றனர் பீஹார் முஸ்லிம்கள்.

லாலுவின் முஸ்லிம் ஆதரவு அரசியலும், பாஜகவை முழு பலத் தோடு லாலு எதிர்த்து வந்ததும் பாஜகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியதால் நிதிஷ் குமா ரோடு குறைந்த சீட்டுகள் என்றா லும் பரவாயில்லை என்று ஒப்புக் கொண்டு கூட்டணி வைத்து ஆட் சியிலும் பங்கு பெற்றிருக்கிறது பாஜக.

ஆட்சியதிகாரம் முழுமையாக கைக்கு வராத நிலையிலேயே பாசிச திட்டங்களை நிறைவேற்றி வரும் பாஜக, மெஜாரிட்டியோடு ஆட்சியமைத்தால் ஊடகங்க ளின் தலைப்புச் செய்திகளில் பீஹார் கலவரச் செய்திகளே இடம் பெறும். பீஹாரை குஜ ராத்தாக மாற்றும்வரை ஓய மாட்டார்கள். அதற்கு பின் பீஹார் முஸ்லிம்கள் அஸ்ஸôம் முஸ்லிம்களைப்போல் அரசியல் விழிப்புணர்வு பெற்று அடுத்த தேர்தலில் பாஜகவுக்கு ஆப்பு வைக்க வேண்டும்.

- ஃபைஸல்

வஹாதத்தே இஸ்லாமி அமைப்பினர் கைது! - அத்தாவுர் ரஹ்மான் வஜ்தி கண்டனம்

உத்திரப்பிரதேச மாநிலம் சஹா ரன்பூர் என்ற இடத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரு கின்றது வஹாதத்தே இஸ்லாமி என்கிற சமுதாய அமைப்பு. வட இந்தியாவில் நீண்ட காலமாக மக்கள் நலச் சேவைகளைச் செய்து வரும் இவ்வமைப்பு தமிழ கத்திலும் உறுப்பினர்க ளைக் கொண்டுள்ளது.

மதுரை தெற்கு மாரட் வீதியில் இதன் மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பைச் சேர்ந்த சுமார் இருபது பேர் கடந்த 5ம் தேதி இயக் கப் பணிகளின் நிமித்தமாக கேர ளாவிற்கு சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய கேரள போலீ ஸôர் கொல்லங்கோடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று 20 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை என்றபெயரில் துன்புறுத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தைக் கண்டித்து வஹாதத்தே இஸ்லாமியின் தேசி யத் தலைவர் அதாவுர் ரஹ்மான் வஜ்தி கீழ்க்கண்டவாறு கண்டன அறிக்கையை வெளியிட்டுள் ளார்.

வஹாதத்தே இஸ்லாமியின் தமிழக உறுப்பினர்களை சட்ட விரோதமாக தடுத்து விசாரணை என்ற பெயரில் கேரள போலீஸ் துன்புறுத்தியிருப்பது அதிர்ச்சிய ளிக்கிறது.

சட்டத்திற்குப் புறம்பாக அல் லாமல் தாம் விரும்பும் எந்த அமைப்புடனும் சேர்ந்திருப்ப தும், அவ்வமைப்புக்காக செயல்படுவதும் ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. முஸ்லிம் இளைஞர்கள் மீது தடை செய் யப்பட்ட சிமியுடன் தொடர்பி ருப்பதாகக் கூறி மிகவும் இகழத் தக்க அடக்குமுறையான நடவ டிக்கைகளை கட்டவிழ்த்து விடும் போக்கு கேரளாவிலும், பிற மாநிலங்களிலும் தொடர் கதை யாக நிகழ்ந்து வருகிறது.

இது மாதிரி செயல்கள் தொடர்ந்து நிகழ்வதை கேரளா வும், பிற மாநிலங்களும் உடனடி யாக நிறுத்திக் கொள்ள வேண் டும்.

கேரளாவில் கடந்த முறை ஆட்சியில் இருந்த எல்.டி.எஃப் அரசின் வழக்கமாகவே இது இருந்து வந்தது எனவும், ஆனால் தற்போது முஸ்லிம் லீக் கட்சி யின் கூட்டணியுடன் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துள்ள யு.டி. எஃப் அரசும் உண்மைகளையும், ஆதாரங்களையும் கவனிக்காமல் இதை ஒரு வழிமுறையாகப் பின் பற்றி இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

எவ்வித ஆதாரங்களும் இன்றி அநியாயமாக இந்த இளைஞர் களை - அவர்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து சட்ட விரோதமாக காவலில் பிடித்து வைக்கும் நடிவடிக்கைகளை இனியும் தொடராமல் சம்பந்தப் பட்ட காவல்துறை அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு சட்ட விரோதமாக பிடித்து வைத்திருந்தது வஹ் தத்தே இஸ்லாமியின் ஆயிரக்க ணக்கான ஆதரவாளர்களை மட்டுமல்லாது ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி கவலை அடையச் செய்திருக்கிறது.

இம்மாதிரி நடவடிக்கைகளை யும், துன்புறுத்தல்களையும் முஸ் லிம் அமைப்புகளின் தலைமை கள் உரிய முறையில் கவனித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் முஸ்லிம் அமைப்பு களை ஒன்றன்பின் ஒன்றாக குறி வைத்து தாக்குவதற்கும் அவற் றின் நம்பகத்தன்மையை உருக் குளைப்பதற்கும் சம்பந்தப்பட்ட வர்களுக்கு அது இடமளித்து விடும்.

வஹ்தத்தே இஸ்லாமி அமைப்பானது ஒரு வெளிப்படையான மதிப்பிற்குரிய அமைப்பு. மக்கள் நலச் சேவைகளையும் ஆக்கப் பூர்வமான செயல்பாடுகளையும் செய்து வருவதில் இதற்கு ஒரு நீண்ட கால வரலாறு உண்டு.

மேலும் மிகப் பெரிய பொதுக் கூட்டங்களையும், நிகழ்ச்சிகளையும் நாட்டின் சிறிய, பெரிய நகரங்கள் எங்கும் இவ்வமைப்பு நடத்தி வந்திருக்கிறது. இவ்வளவு உண்மையான விஷயங்கள் இருந்தும் அதிகாரத்திலும் நிர்வாகத்திலும் வெவ்வேறு துறைகளில் பணியாற்றி வரும் தீய எண்ணம் கொண்ட சிலரது தொடர்ச்சியான சதிவேலைதான் தடை செய்யப்பட்ட சிமி அமைப்புடன் வஹ்தத்தே இஸ்லாமிக்கு தொடர்பு உண்டு என பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாகும்.

இது சம்பந்தமான விஷயத் தில் தமது அமைப்பின் நிலை குறித்து தெளிவுபடுத்த டெல்லி உயர் நீதிமன்றத்தில் உறுதிமொ ழிப் பத்திரம் தாக்கல் செய்திருக் கிறோம்.

கேரள போலீஸôர் இந்த மன ரீதியான கொடுமைகள் மற்றும் தொல்லைகள் நடவடிக்கையை நீட்டிக்கும் வண்ணமாக, பாதிக் கப்பட்ட (இப்போது விடுவிக்கப் பட்ட) நபர்களை தொலைதூர ஊர்களுக்கு குழுக்களாக வந்து செல்லுமாறு கூறியுள்ளனர் என்பதாக எங்களுக்கு செய்தி எட்டியுள்ளது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் அத்தாவுர் ரஹ்மான் வஜ்தி.

Pin It