மனிதர்களின் பிணி தீர்க்கும் உயரிய பணியான மருத்துவத்தை மேற்கொள்ளும் மருத்துவர்களில் பெரும்பாலோர், மருத்துவத்தை பணம் காய்க்கும் மரமாகவே எண்ணுகின்றனர். ஆஸ்பத்திரியில் நுழைவாயி லில் வாங்கும் டோக்கனில் தொடங்கி வெளியேறும் கேட் வரை பாலை கறப்பது போன்று பணத்தை கறப்பதிலேயே குறி யாக உள்ளனர். ஆனாலும் மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடுவதற்கு காரணம், ஏழைகளுக் காக உருவாக்கப்பட்ட அரசு மருத் துவமனையின் செயல்பாடுகள் தான்.

அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலானவைகள் உரிய பரா மரிப்பின்றி, போதிய வசதிகளின்றி இருப்பதோடு மருத்துவர்கள் பற் றாக்குறை மருத்துகள் பற்றாக்குறை யும் உள்ளது. மேலும் அரசு மருத்துவர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருவ தில்லை. சிலர் வந்து வருகை பதி வேட்டில் கையெழுத்து போட்டு விட்டு தந்து சொந்த மருத்துவ மனைக்கு சென்று விடுகிறார்கள். அப்படியே அவர்கள் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்தாலும், அங்கு வரும் நோயா ளிகளிடம் பெயருக்கு ரெண்டு த/அ' மாத்திரை தலையெழுத்து அதுதான் மாத்திரையை தந்து விட்டு, சாயங்காலம் நம்ம மலர் ஆஸ்பத்திரிக்கு வாங்க. நல்லா தரவா செக்கப் பன்னீருவோம்' என்று கஸ்டமர் பிடிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். இன்னும் சிலர் விடுப்பில் சென் றால் அந்த இடத்திற்கு உபரியான மருத்துவர்களும் நியமிக்கப்படுவ தில்லை. இவ்வாறான குளறுபடிக ளால் அரசு மருத்துவமனைக்கு செல்வது வீணானது என்ற எண் ணம் பெரும்பான்மை மக்களிடம் வந்துவிட்டாலும், இன்னும் அரசு மருத்துவமனையை நம்பியுள்ள மக்களுக்கும் பஞ்சமில்லை. அவர்கள் கஷ்டப்பட்டு தொலை தூரத்திலிருந்து வந்து பார்த்தால் இங்கே மருத்துவர் இருக்க மாட் டார். அவர் வருகைக்காக மாப்பி ளையை வரவேற்க மாமியார் ரயில்வே ஸ்டேஷனில் காத்திருப் பதுபோல காத்திருக்க வேண்டும். அப்படியே மருத்துவர் வந்தா லும் கனிவான கவனிப்புகள் குறைவு. கடமைக்கு கவனிக்கும் போக்கே அதிகம். இதெற்கெல் லாம் காரணம் அரசு மருத்துவம னைகள் உரிய முறையில் அரசால் கண்காணிக்கப்படுவதில்லை. இந் நிலையை மாற்ற அதிரடி முன்மாதி ரியை காட்டியுள்ளார் ராமநாதபுரம் கலெக்டர் அருண்ராய்.

"திருப்பாலைக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கலெக்டர் அருண்ராய் ஆய்வு மேற்கொண் டார். அங்கு 60க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக காத்து கொண்டிருந்தனர். அவர்களிடம் கலெக்டர் விசா ரித்தபோது, "டாக்டர் அடிக்கடி வரு வது கிடையாது' என்றனர். உடனடி யாக, வருகைப் பதிவேட்டில் டாக் டர் சுமதிக்கு ஆப்சென்ட்' போட் டார். டாக்டர் மீது ஒழுங்கு நடவ டிக்கை எடுக்க, சுகாதார பணிகள் துணை இயக்குனர் உமா மகேஸ் வரிக்கு உத்தரவிட்டார். தேவிபட்டி னத்தில் பணியாற்றிய டாக்டர் கண்ணனை, திருப்பாலைக்குடிக்கு வரவழைத்து சிகிச்சை மேற் கொள்ள கலெக்டர் நடவடிக்கை எடுத்தார்.

கலெக்டர் அருண்ராயை முன்மாதிரியாக கொண்டு ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் - மருத்துவத்துறை அதிகாரிகளும் அரசு மருத்துவமனைகளில் அதி ரடி சோதனை நடத்த வேண்டும். பணிக்கு வராத அல்லது தாமதமாக வரும் மருத்துவர்கள் - செவிலியர் கள் - பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும். மேலும் மருத்துவமனையை ஆய்வு செய்து தேவைகளை நிறைவேற்ற வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அரசுப்பணியில் இருக்கும் மருத்துவர்கள் தனியாக மருத்துவ மனை நடத்திட தடை விதிக்க வேண்டும். அதிகாரிகளும் சுகாதா ரத்துறை அமைச்சரும் இதை கவனத்தில் கொள்வார்களா?

- தரசை தென்றல்

 சம்ஜவ்தா குண்டுவெடிப்பு: அசீமானந்த் உள்ளிட்ட ஐவர் மீது குற்றப்பத்திரிகை!

சம்ஜவ்தா குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட அசீமானந்தா உள்ளிட்ட ஐவர் மீதான வழக்கு கடந்த நான்கரை ஆண்டு காலமாக விசாரிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த குண்டு வெடிப்பு வழக்கில் இந்துத்துவா சாமியாரான அசீமானந்த் உள்ளிட்ட ஐந்து பேர் மீது தேசிய புல னாய்வு நிறுவனம் குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்துள்ளது.

2007ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. இதில் பாகிஸ் தானியர்கள் உள்ளிட்ட 68 பேர் உயிரிழந்தனர்.

சிபிஐ மற்றும் என்ஐஏ ஆகிய விசாரணை அமைப்புகள் மேற் கொண்ட இவ்விசாரணையில் சுவாமி அசீமானந்தா, சுனில் ஜோஷி, லோகேஷ் சர்மா, சந்தீப் டாங்கே மற்றும் ராமச்சந்திர கலசங்கரா ஆகியோருக்கு எதிராக பஞ்ச்குலாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அபிநவ் பாரத் என்ற பயங்கர வாத அமைப்பில் உறுப்பினராக உள்ள அசீமானந்த் ஹைதராபாதில் மக்கா மசூதி குண்டுவெடிப்பு தொடர்பாக 2010 நவம்பர் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார். ஹைதராபாத் குண்டுவெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Pin It