வாழ்ந்து மறைந்து மக்கள் மனதில் மறையாது இடம் பிடித்த தலைவர்களின் நினைவைப் போற்றும் வகையில் 51 நினைவகங்கள், 5 நினைவுத் தூண்கள், 3 அரங்கங்கள், ஒரு நினைவுப் பூங்கா மற் றும் புதிதாக கட்டப்பட்டு வரும் 9 நினைவகங்கள் ஆகி யவற்றை பாதுகாத்து, பராம ரித்து வருகின்ற பணியை தமிழக அரசின் செய்தித் துறை செய்து வருகிறது. நினைவகங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற வளாகங்களை தூய் மையாக பராமரிக்க வேண்டும். அவ்வப்போது ஏற்படும் பழுது களை சீரமைக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு உடனடியாக அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நீண்ட கால தேவை கள் குறித்து பட்டியல் மற்றும் மதிப்பீடு தயார் செய்து இம்மாதம் 30ம் தேதிக்குள் அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று அமைச்சர் செந்தமிழன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். புதிய அரசு எதிர் நோக்கியுள்ள எத்த னையோ மக்கள் நலப் பணிகள் இருக்க, நினைவு இல்லங்கள் பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது வேதனைக்குரியதாகும். இன்னும் சொல்லப் போனால் நினைவு இல்லங்கள் வாழ்ந்து மறைந்த தலைவர்களின் நினைவை போற்றும் இடமாக இருக்கிறதா? என்றால் இல்லை. மாறாக காதலர்கள் தன்னிலை மறந்து மோட்ச நிலையில் இருக்கும் இல்லமாகத்தான் காட்சி தருகிறது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் தி.மு.க., ஆட் சிக் காலத்தில் கட்டப்பட்டது. குறள் கல்வெட்டுகள் எல்லாம் எச்சில் துப்பும் இடமாகவும், வள் ளுவர் கோட்டத்தைச் சுற்றி திருக் குறள் மட்டுமல்லாமல், அதற்கு போட்டியாக ஆங்காங்கே காத லர்களின் நவீன கல்வெட்டுக்க ளும் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன. வள்ளுவருக்கு எழுப்பப்பட்ட தேர் காதலர்களின் புகலிடமாக வும், சோம்பேறிகளின் உறைவிட மாகவும் மாறி உள்ளது. வள்ளுவர் கோட்டம் மட்டுமன்றி பெரும்பா லான நினைவு இல்லங்களின் நிலை இதுதான். எனவே மறைந்த அத்தலைவர் களின் நினைவை போற்றுவதற்கு நினைவு இல்லங்கள் வழிமுறை யல்ல. மாறாக அந்த தலைவர்கள் காட்டிய நல்லவைகளை செயல்ப டுத்திக் காட்டுவதுதான் அந்த தலைவர்களை நினைவில் கொள் ளும் முறையாகும். எனவே நினைவு இல்லங்கள் விசயத்தில் கருணாநிதியின் வழிமு றையை ஜெயலலிதா அரசு பின் பற்றுவது சரியன்று. இது ஒருபுற மிருக்க, இப்போது புதிய தலை மைச் செயலகம் செயல்படாத தால் அது மக்கள் பார்வை க்கு அனுமதிக்கப் படுகிறது.

புதிய தலைமை செயல கத்திற்கு உள்ளே ஏகாந்த மாக இருப்பதால், உள்ளே போகிறவர்கள், எங்கு உட் கார்ந்திருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்று யாரும் பார்ப்பதில்லை. மற்ற இடங்களை விட பாதுகாப்பாக இருப்பதால் பலர் ஜோடி, ஜோடியாக வந்து, ஆங்காங்கே உட்கார் ந்து பேசிக் கொண்டிருப் பதை காண முடிகிறது. இதையெல்லாம் பார்க்கும் போது புதிய தலைமைச் செயலகமும் காதலர்கள் ஒதுங்கும் இல்லமாக மாறி விட்டதோ என்ற ஐயம் எழுகிறது. மக்கள் வரிப்பணத்தில் 1200 கோடி கொட்டி உருவாக்கப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தின் விஷயத்தில் அரசு விரைந்து நட வடிக்கை மேற்கொண்டு அதை உரிய முறையில் பயன்படுத்த முன்வர வேண்டும்.

ஜனநாயக சக்திகள் அங்கே தங்களது ஜனநாயகப் போராட்டங்களுக்கு பயன்படுத்தி அனும திக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். இந்த வகைக்கு பயன்பட்டாலும் அதுவும் சரியாக பயன்பாடாகவே இருக்கும்.

Pin It