• தவறு பா.ஜ.க. மீது இல்லை; சட்டமன்ற உறுப்பினர்களைக் கட்சியில் தக்க வைத்துக் கொள்ளாத நாராயணசாமி மீது தான் குற்றம். - தொலைக்காட்சியில் பா.ஜ.க. விவாதம்

ஆமாம்! வீடு புகுந்து பணம், நகைகளைக் கொள்ளையடித்தவன் மீது குற்றம் அல்ல; அதைப் பாதுகாப்பாக தக்க வைத்துக் கொள்ள முடியாத வீட்டுக்காரர்தான் குற்றவாளி!

• ம.பி. முதல்வர் சவுகான் அரசு விடுதியில் கொசுக்கடிக்கு உள்ளானதால் அதிகாரி பதவி நீக்கம். - செய்தி

கடித்த கொசு வேறு மதத்தைச் சார்ந்த கொசுவாக இருக்கலாம்! பாவம்! அந்த அதிகாரியை விட்டு விடுங்கள்!

• பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றிய கேள்விகளுக்கு பதிலளிப்பது தர்மசங்கடமாக இருக்கிறது. - நிர்மலா சீத்தாராமன்

அதை உங்கள் கட்சி தமிழ்நாட்டு தலைவர்களிடம் விட்டுவிடுங்கள். பெட்ரோல் விலை உயர்வது மோடி ஆட்சியின் பொருளாதார வளர்ச்சியே என்று பதிலடி தருவார்கள்!

• பா.ஜ.க.வில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கோரும் திட்டமில்லை. - பா.ஜ.க. முருகன்

ஆமாம்! இங்கே ஆளுநர் பதவிக்குத்தான் போட்டா போட்டி.

• வீடு இல்லாத அனைவருக்கும் 2 சென்ட் நிலம்; நிலத்தில் வீடும் கட்டித் தரப்படும். - எடப்பாடி அறிவிப்பு

கார் இல்லாத அனைவருக்கும் பெட்ரோலுடன் புத்தம் புதிய கார், டிரைவரை அரசு செலவில் வழங்க அடுத்த அரசாணை தயாராகி வருகிறது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It