மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடான ‘தீக்கதிரில்’ (ஆக.13) வெளிவந்த ஆசிரியருக்குக் கடிதம்.

 தமிழக அரசின் நிதி உதவியோடு, திராவிடர் கழகம் தயாரித்த “பெரியார்” திரைப்படம் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி குறித்து ‘விடுதலை’யில் விரிவான செய்தி வெளிவந்துள்ளது. பெரியார் படம் தெலுங்கு மொழியில் வெளிவருவது மகிழ்ச்சிக்குரியது. ஏனைய இந்திய மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு, இந்த படம் வெளியிடப்பட வேண்டும்.

 ஆனால், தெலுங்கில் இந்த படத்திற்கான தலைப்பை, “பெரியார் ராமஸ்வாமி நாயக்கர்” என்று மாற்றி யுள்ளனர். பெரியாரை நாயக்கர் என்ற யாராவது குறிப்பிட்டால், ‘விடுதலை’ கடும் கோபத்தோடு விமர்சிக்கும். அது நியாயமானதே! ஆனால், அந்த இயக்கமே ஆந்திராவில், பெரி யாருக்குப் பின்னால், நாயக்கர் என்று சாதிப் பட்டத்தை ஒட்ட வைத் துள்ளதன் பொருள் என்ன? இதனால் அந்த படம் ஆந்திராவில் நன்றாக ஓடும் என்று நினைக் கிறார்களா? சாதிப் பட்டத்தை தூக்கியெறிந்த, சாதி ஒழிப்பிற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த அந்த மகத்தான தலைவருக்கு இழைக்கப்படும் அநீதி அல்லவா, இது? ‘விடுதலை’ செய்தியில் ஒரு இடத்தில்கூட, தெலுங்கில் என்ன பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால், மேடையில் வைக்கப்பட்டுள்ள பேனரில் தெலுங்கு மொழியில், “பெரியார் ராமஸ்வாமி நாயக்கர்” என்று தெளிவாக எழுதப்பட் டுள்ளது. தமிழர்கள் யாரும் தெலுங்கு மொழியை படிக்க மாட்டார்கள் என்று நினைத்து விட்டார்கள் போலும்! 

ஐதராபாத்தில் பெரியார் சிலை வைக்க வேண்டும் என்று வீரமணி கோரியுள்ளார். அந்த சிலையை தமிழக அரசு செய்து தரும் என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். ஆந்திர அமைச்சர், சிலைக்கான இடம் ஒதுக்கப்படும் என்று ஒப்புதல் அளித்துள்ளார். அந்த பீடத்திலாவது, “ராமஸ்வாமி நாயக்கர்” என்று பொறிக்காமல் விட்டால் சரி.

- க. வரதராஜுலு, லட்சுமிபுரம், தேனி

Pin It