ம.பி. மாநில அரசு குழந்தைகள் உரிமைகளுக்கான குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழுவின் தலைவராக இருப்பவர். தலைமை பெண் நீதிபதி ஷீலா கண்ணா, ம.பி. மாநிலத்தில் 60 சதவீத குழந்தைகள் ஊட்டச் சத்து குறைந்தவர்கள். இவர்களுக்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய நிலையில் குழந்தைகள் உரிமைகளுக்கான குழுத் தலைவர் அதற்காக கூறியுள்ள பரிந்துரை கடும் எதிர்ப்புக்குள்ளாகியுள்ளது.

 

“ஒவ்வொரு குழந்தைகள் நலன் மய்யத்திலும் ஒரு பார்ப்பன சோதிடரையோ அல்லது அர்ச்சகரையோ நியமிக்க வேண்டும். குழந்தைகளின் சோதிடத்தைப் பார்த்து அந்தக் குழந்தை எதிர்காலத்தில் சிறந்தவர்களாக வரக் கூடிய வாய்ப்புண்டா என்று சோதிடத்தின் அடிப்படையில் அந்தப் பார்ப்பனர் மதிப்பிட nண்டும். அப்படி சிறந்தவர்களாக வருவார்கள் என்று பார்ப்பனர் பரிந்துரைக்கும் குழந்தைக்கு மட்டும் அரசு உரிய சிகிச்சை வழங்கி உதவிட வேண்டும். மற்ற குழந்தைகள் பற்றி கவலைப்படத் தேவையில்லை” என்று கூறியிருக்கிறார். இதற்கு சமுக சேவை அமைப்புகள், மனித உரிமை அமைப்புகளிடமிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. குழந்தைகள் உரிமைகளுக்கான தேசிய ஆணையத் தலைவர் சாந்தா சின்கா, குழந்தைகள் உரிமைக்கான மய்யத்தின் தலைவர் பார்த்தி அலி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

எதிர்ப்புக்குப் பிறகு நீதிபதி, தாம் அப்படி ஏதும் எழுத்து வடிவில் தெரிவிக்கவில்லை என்று மறுத்துள்ளார். குழந்தைகள் உரிமைகள் தொடர்பாக நடந்த விவாதத்தின் போது நீதிபதி ஷீலா கண்ணா, இக்கருத்தை முன் வைத்துள்ளார் என்று குழந்தைகளுக்கான தேசிய மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது. நாட்டின் தலைமை நீதிபதிகளாக இத்தகைய சாதிவெறி மூடநம்பிக்கையுள்ள பார்ப்பனர்கள் இருப்பது வெட்கக் கேடு அல்லவா? இத்தகைய நீதிபதிகளிடமிருந்து கிடைக்கும் தீர்ப்புகள் எத்தகையதாக இருக்கும்?

 

Pin It