அதிகாரப்பூர்வமற்ற முறைகளில் ஆசிரமங்களும், ஆயுர்வேத மருத்துவ சாலைகளும், யோகா பீடமும் அமைத்துக் கொண்டவர்தான் ஊழலுக்கு எதிராக சத்தியாகிரகம் இருப்பதாக சொல்லும் பாபா ராம்தேவ். யோகா பயிற்சியை ஒரு தொழில் சாம்ராஜ்யமாக்கிய பாபாராம்தேவின் ஆண்டு வருமானம் ரூ.1000 கோடியாகும். யோகா பயிற்சி மட்டுமல்லா மல் ஆயுர்வேத மருந்து விற்பனையும் ராம்தேவுக்கு உண்டு. பணம் பெருகும் போது இந்தியாவுக்கு வெளியே அந்நிய நாட்டிலும் இடம் வாங்கினார். ஸ்காட்லாந்தில் ஒரு தீவே இவர் சொந்தமாக வாங்கிக் கொண்டார். ஒன்றேகால் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள கம்ப்ராய் தீவை 14 கோடி ரூபாய் விலையில் வாங்கினார்.

அண்மையில், இமாச்சல் பிரதேசத் தில் உள்ள ஸோலன் மாவட்டத்தில் 30 ஏக்கர் நிலத்தை 17 லட்சம் ரூபாய்க்கு அந்த மாநிலடத்தின் பா.ஜ.க. அரசு ராம்தேவுக்கு வழங்கியது சர்ச்சைக் குள்ளானது.

அரியானாவிலும் இவர் இடம் வாங்குவதற்கான முயற்சி இருந்ததாக வும் செய்தி உண்டு.யோகா பயிற்சிக்கு மிகவும் முன் வரிசையில் இருப்பவர் களிடமிருந்து 50 ஆயிரம் ரூபாயும், அடுத்து பின் வரிசையில் உள்ளவர் களிடமிருந்து 25 ஆயிரம் ரூபாயும், அதற்கடுத்து பின்னால் இருப்பவர் களிடமிருந்து 1000 ரூபாயும், பல கூட்டங்களிலும் இவர் வாங்குவாராம்.

அரியானாவில் உள்ள மகேந்தகட் மாவட்டத்தைச் சேர்ந்த அலி சையத்பூர்கிராமத்தில் 1965 இல் ராமகிருஷ்ண யாதவ் என்கிற பாபா ராம்தேவ் பிறந்தார்.

ஆரம்ப கல்விக்குப் பிறகு சமஸ் கிருதமும் யோகா பயிற்சியும் கற்றார். ஆச்சாரியா பல்தேவிடமிருந்து சந் யாசம் பெற்றார். ஜிண்டு மாவட்டத்தில் உள்ள கல்பகுருவின் கீழ் யோகா பயிற்சியை முழுமைப்படுத்தினார். 2003 இல் ஆச்சாரியா பால கிருஷ்ண னுடன் திவ்யயோக மந்திர் டிரஸ்ட் ஆரம்பித்தவுடன் அவருக்கு உயர்வு ஆரம்பமானது.

2006 இல் அரித்துவாரில் பதஞ்ஜலி யோகபீடம் ஆரம்பித்தார். அரித்து வாரிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரம் வரை அவரது நிறுவனம் வியாபித் திருக்கிறது. குடியரசு தலைவராக இருந்த பைரோன்சிங் ஷெகாவத்து தான் இந்த நிறுவனத்தை துவக்கி வைத்தார். யோகா பயிற்சி மட்டு மல்லாமல் ஆயுர் வேத மருந்துகளும் இங்கு வழங்குவார்.

ராம்தேவ்க்கு ஆயுர்வேதத்திற்கான பயிற்சி எப்படிக் கிடைத்தது என்ற கேள்விக்கு பதில் இல்லை. மருந்து விற்பனை மூலமாக ரூ.300 கோடி ராம்தேவுக்கு ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கிறது. ஆயுர்வேத மருந்தில் மிருகங்களின் எலும்புகளைக் கலந்து விற்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தாகாரத் தக்க சான்றுகளுடன் இந்தக் குற்றச் சாட்டை எழுப்பியிருந்தார். அதன் பேரில் தில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ஏகேஜி பவன் உள்பட தாக்கப்பட்டது.

சுகாதார நிலையம் நடத்திய பரி சோதனையில் மிருகங்களின் அம்சங்கள் மருந்தில் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. (ஏற்கனவே ‘புரட்சிப் பெரியார் முழக்கம் இது பற்றி ஒரு கட்டுரை வெளியிட் டுள்ளது)

பதஞ்ஜலி யோகபீடம் ஆரம்பித்த கட்டத்திலேயே தொழில் பிரச்னை களும் ஆரம்பமாயின. ஆயுர்வேத மருந்து தயாரிக்கிற தொழிற்சாலையின் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்கப்படவில்லை. தொழி லாளர்கள் 10-12 மணி நேரம் வேலை வாங்கப்பட்டனர். அதனால் அந்த நிறுவனத்திற்கு முன்னால் போராட்டமும் நடத்தப்பட்டது. போராட்டம் நடத்திய 113 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். தொழிலாளர் பாதுகாப்பு நிதி எதுவும் சட்டப்படி வழங்கப்படவில்லை.

பணம் கொழுக்கும்போது கூடவே அதிகாரமும் தேவைப்படுகிறது. தொடர்ந்து அரசியல் கட்சியை உருவாக்கவும் முயற்சி ஆரம்பமானது.

ஏப்ரல் மாதம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் வைத்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துடன் சேர்ந்தே சத்தியாகிரகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கோவிந்தாச்சாரியாத்தான் ராம்தேவின் அரசியல் ஆலோசகர்.

நன்றி: ‘தீக்கதிர்’

Pin It