மாவட்ட கழக கூட்டங்களில் முடிவு
சாதி - தீண்டாமை ஒழிப்புக் கிளர்ச்சிக்கு தயாராவோம்!


கழகத் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் பங்கேற்கும் மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை திருப்பூர், கோவை, சென்னை, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றது. கழகத் தோழர்கள் செயல்பாடுகள், கழக வளர்ச்சிக்கான திட்டம் ஆகியவை ஒவ்வொரு மாவட்ட கலந்துரை யாடல் கூட்டங்களிலும் விரிவாக பேசப்படுகிறது.

கலந்துரையாடல் கூட்டங்களில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசும்போது -

1999 ஆம் ஆண்டு சாதி பெயரை சொல்லி திட்டியதாக தொடரப்பட்ட வழக்கின் மேல் முறையீடு, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டு, தற்போது 19.3.2011 அன்று வழங்ப்பட்ட தீர்ப்பில், “தமிழ்நாட்டில் பரவலாக இரட்டைக் குவளை இருப்பதாக கேள்விபட்டு நீதிமன்றம் அதிர்ச்சி அடைகிறது. இதை வேடிக்கைப் பார்த்துக் கெண்டு நீதிமன்றம் அமைதியாக இருந்துவிட முடியாது. மாவட்ட ஆட்சித் தலைவர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தீண்டாமை இருப்பது தெரிந்த பின்னாலும் நடவடிக்கை எடுக்காவிட்டால், இவர்களை பணி இடை நீக்கம் செய்ய வேண்டும். இவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும். துறைசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு வழி காட்டுகிறது” என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வழங்கிய தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார்.

எனவே தோழர்கள் விரைவாக, தற்போது நிலவும் தீண்டாமை கொடுமைகளான, இரட்டை சுடுகாடு, இரட்டை குவளை பற்றிய பட்டியலை மீண்டும் ஒருமுறை மிகச் சரியாக துல்லியமாக கணக்கெடுத்து அதை மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தீண்டாமை ஒழிப்புப் பிரிவு (சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு), மனித உரிமை ஆணையம், எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் ஆகியோருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கழகத் தலைவர் பேசி வருகிறார்.

சென்னையில்

தென் சென்னை வடசென்னை மாவட்டக் கழக கலந்துரையாடல்கூட்டம் ஏப்.23 ஆம் தேதி பகல் 12 மணியளவில் பெரம்பூரில் உள்ள கல்கி இரங்க நாதன், மான்ட்ஃபோடு உயர்நிலைப் பள்ளியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கழகத் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், பொதுச் செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் குமாரதேவன், தென் சென்னை மாவட்ட தலைவர் தபசி குமரன், செயலாளர் உமாபதி, வடசென்னை மாவட்டத் தலைவர் கேசவன், செயலாளர் அன்பு, மாவட்டக் கழக பொறுப்பாளர்கள், கழகச்செயல் வீரர்கள் கழக வளர்ச்சி எதிர்கால திட்டங்கள் பற்றி கருத்துகளை முன் வைத்துப் பேசினர்.

கலந்துரையாடல் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு மறைந்த கழகப் பிரச்சாரகர் கீசகன் மருமகன், மேடவாக்கம்  இரவிக்குமார், மந்திரமா? தந்திரமா நிகழ்ச்சி நடத்தினார். தொடர்ந்து மதிய உணவுக்குப் பிறகு மாவட்ட கலந்துரையாடல் தொடங்கி, 3.30 மணி வரை நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அன்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

ஈரோடு

24.4.2011 ஞாயிறு அன்று காலை 11 மணிக்கு ஈரோடு ஹோட்டல் அபிநயா ரீஜென்சி அரங்கில் ஈரோடு மாவட்ட கலந்துரையாடல் கூட்டம், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடை பெற்றது. பொதுச் செயலாளர் கோவை கு. இராம கிருட்டிணன் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் நாத்திகஜோதி வரவேற்றுப் பேசினார். மாவட்ட செயலாளர் இராம. இளங்கோவன், தலைமை கழக ஆலோசனைக் குழு உறுப்பினர் இரத்தினசாமி, மாவட்ட துணைத் தலைவர் கோபி. வேலுச்சாமி, அமைப்பாளர் குமரகுரு, இளை ஞரணி தலைவர் இராசேந்திரன், செயலாளர் அர்ச்சுணன், ஈரோடு நகரத் தலைவர் நாகப்பன், சுப்ரமணி, கோபி நகர அமைப்பாளர் குணசேகரன், வழக்கறிஞர் செகதீசன், கோபி செயராமன், ஆசை தம்பி, நிவாஸ், ஆசிரியர்கள் சுந்தரம், சிவக்குமார், சுரேஷ், காசிப்பாளையம் சுப்ரமணியம், சிவா, மோகன்தாஸ், ஆனந்தராஜ், விசு. பழனிச்சாமி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட கழகம் சார்பாக பிரச்சார வாகனம் வாங்குவது, பெரியார் முழக்கம் சந்தா வசூலிப்பது, அலைபேசியில்  குறுந்தகவல் செய்தி பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம், தோழர்களின் வீடு களுக்கு சென்று சந்திப்பது, மாவட்ட கலந்துரை யாடல் கூட்டங்களை சுழற்சி முறையில் அனைத்து கிளைகளிலும் நடத்துவது ஆகியவை பற்றி கருத்து தெரிவித்த தோழர்கள், கொள்கை அறிக்கை மற்றும் பாடல் ஒலிப் பேழைகளை (சி.டி.) தலைமை கழகம் வெளியிட வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்தனர். கழக செயல் பாடுகளைப் பார்த்து, ஆசிரியர் பணி புரியும் மூன்று தோழர்கள் தாமாக முன்வந்து கழகத்தில் இணைத்து கொள்வததாக அறிவித்தனர். மாவட்ட கழகம் சார்பாக வாழ்த்து தெரிவித்து வரவேற்கப் பட்டது.

திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்)

24.2.2011 ஞாயிறு அன்று மாலை 4 மணிக்கு திருச்செங்கோடு மருத்துவர் பழ. பாலகிருட்டிணன் இல்லத்தில் நாமக்கல் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சாமிநாதன் வரவேற்றுப் பேசினார். முன்னிலை வகித்த பொதுச் செயலாளர் கோவை இராம கிருட்டிணன் கலந்துரையாடல் கூட்டங்களின் நோக்கங்களை விளக்கிப் பேசினார். இம்மாவட் டத்தில் தலைமைப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும், முதல் கலந்துரையாடல் கூட்டம் என்பதால் பல புதிய தோழர்களும், கழக ஆதர வாளர்களும், மாற்று அமைப்பைச் சார்ந்தவர்களும் கலந்து கெண்டனர். பெரியார் கொள்கைகளை பின்பற்ற வேண்டிய அவசியம். பெரியார் திராவிடர் கழகத்தின் நோக்கம், மாற்று அமைப்புகளுக்கும், கழகத்திற்கும் உள்ள வேறுபாடு ஆகியவைகளைப் பற்றி கழகத் தலைவர் விரிவாகப் பேசினார். மருத்துவர் பழ. பாலகிருட்டிணன், ஈரோடு இரத்தினசாமி, நாமக்கல் மாவட்டத் தலைவர் தி.க. கைலாசம் ஆகியோரும் உரையாற்றினர்.

பெரியார் கொள்கைகளை நாடக வடிவில் பரப்பி வந்த தோழர் திருப்பதி, திராவிடர் கழகத் தலைமையின் கொள்கை முரண்பாட்டால், பல ஆண்டுகளாக அமைப்பில் இருந்து விலகி இருந்ததாகவும், தற்போது கழகத்தில் இணைந்து கலை வடிவில் பெரியாரியலை கொண்டு செல்ல தயாராக இருப்பதாகவும் அறிவித்தார்.

கழகத் தோழியர் கலா, சிவக்குமார், வைரவேல், சதீஷ், குமாரபாளையம் மாதுராஜ், மோகன், திராவிட மணி, பூபதி, சீனிவாசன்,செல்வம், ஞானசேகரன், தண்டபாணி, காந்தி உட்பட தோழர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி: கோகுல கண்ணன்

Pin It