எதிர்வரும் அண்ணா பிறந்த நாளை முன் னிட்டு முஸ்லிம் சிறைவாசி களை விடுதலை செய்யக்கோரி இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எம்.சையது இக்பால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15ம் தேதி ஆண்டு தோறும் தமிழக சிறை களில் வாடி வரும் நீண்ட கால கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி தமிழக அரசு விடுதலை செய்து வருகிறது.
கடந்த திமுக ஆட்சியில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்த போதிலும் முஸ்லிம் சிறை வாசிகள் விஷயத்தில் பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தமில்லாமலும், சந்தர்ப்ப சூழ்நிலையினாலும் முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
குடும்பத்தில் வருமானத்தை ஈட்டும் குடும்பத் தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டதாலும், சம்பாதிக்கும் பிள்ளைகள் சிறையில் அடைக்கப்பட்டதா லும் முதிய வயதுள்ள பெற்றோர் களும் பெருந் துன்பத்துடன் வாழ்க்கையை நடத்தி வருகின்ற னர். முஸ்லிம்களின் பாதுகாவ லன் என்று பெருமை பாராட்டும் கருணாநிதி முஸ்லிம் சிறைவாசி கள் விஷயத்தில் சிறிய அக்கறை கூட காட்டவில்லை.
மதுரை கவுன்சிலர் லீலாவதியைக் கொன்றவர்கள் திமுகவினர் என்பதற்காக அவர்களை பொது மன்னிப்பில் விடுதலை செய்த கருணாநிதி முஸ்லிம் சிறைவாசி களை விடுதலை செய்யவில்லை.
பேரறிஞர் அண்ணா நூற் றாண்டு தினத்தில் 1405 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அந்தப் பட்டியலில் முஸ்லிம் சிறைவாசிகளின் பெயர்கள் இடம் பெறாமல் தடுக்கப்பட் டது.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் சிறையில் வாடி வருவதால் இவர்கள் குடும் பம் மிகவும் இன்னலுக்கு உள் ளாகி உள்ளது.
இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும், குழந்தைகளும் இவர்களை பொது மன்னிப்பில் விடக் கோரி பலமுறை தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
மாண்புமிகு தமிழக முதல்வர் எதிர் வருகின்ற செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று தாயுள்ளத்துடன் முஸ் லிம் சிறைவாசிகளின் நிலையும், அவர்கள் குடும்பத்தினர் நிலை யையும் கருத்தில் கொண்டு அவர் களுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்கள் விடு தலை பெற ஆவண செய்யுமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் தெரி வித்துள்ளார்.