ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் ரத யாத்திரை நடத்தப் போவதாக அறி வித்துள்ள பாஜக தலைவர் அத்வானிக்கு எதிராக கடும் எதிர்ப்புக் குரல்கள் எழும்பியுள்ளன.
"ஊழல்' பிரச்சினை இந்தியா வில் பெரிதாக வெடித்துள்ள நிலையில் இந்தப் பிரச்சினை யைப் பெரிதாக்கி அரசியல் ஆதாயம் அடைய வேண்டும் என நினைத்த பாஜக அதற்காக எடுத்த முதல் முயற்சியாக லோக் பால் சட்டம் வேண்டும் என்று கூறி அன்னா ஹசாரேவுடன் முதல் உண்ணா விரதப் போராட் டத்தில் கலந்து கொண்ட பாபா ராம்தேவை களமிறக்கியது.
பாஜக தலைவர்களெல்லாம் ராம்தேவின் போராட்டத்தைப் பின்னாலிருந்து இயக்க... சாத்வி ரிதம்பரா போன்ற பாஜகவின் சன்னியாசி பிரிவினர் பகிரங்கமாக மேடையேறி பாபா ராம் தேவை வாழ்த்தினர்.
பாபாவிற்குப் பின் னால் பாஜக இருப் பதை அறிந்து கொண்ட காங்கிரஸ், திக் விஜய் சிங்கை வைத்து பாஜகவை போட்டுத் தாக்கியது. அதோடு நிற்காமல் பாபாவின் அறக் கட்டளைக்கு 5 ஆயிரம் கோடி எப் படி வந்தது என்ற ஆய்வை மேற்கொள் ளப் போவதாக மிரட்டி ராம் தேவை ஒடுக் கியது.
தனது எண்ணம் நிறைவேறாத ஏமாற்றத்தில் இருந்த பாஜக, இரண் டாவது முறையாக அன்னா ஹசாரே நடத்திய உண்ணா விரதப் போராட்டத் திற்கு ஆதரவளித்து மத்திய அரசுக்கு நெருக்கடியை உண் டாக்கியது. இதன் மூலம் தான் ஊழல் கட்சியல்ல என்பதை நாட்டு மக்களின் மனங்களில் பதிய வைக்க அது பெரு முயற்சி எடுத்தது. அதனால் அன்னா ஹசாரேவின் போராட் டத்திற்கு அப்ஜக்ஷன் இல்லாத ஆதரவை வழங்கியது.
இப்பொழுதும் திக் விஜய் சிங் போன்ற காங்கிரஸ் பிரமுகர்கள், பாஜகவின் தூண்டுதலால்தான் அன்னா போராட்டம் நடத்துவ தாக குற்றம் சாட்டினர்.
அன்னா ஹசாரே முன்பு நடத்திய போராட்டத்தின்போது மோடியைப் புகழ்ந்து பேசியதை, அவரது போராட்டத்தில் கலந்து கொண்ட சமூக சேவகர் மேத்தா பட்கர் போன்றவர்கள் கண்டித்த தோடு, இரண்டாவது போராட் டத்திற்கு ஆதரவு வழங்கவில்லை என்பதை கவனித்த அன்னா ஹசாரே இந்த முறை பாஜக, இந்துத்துவாக்கள் விஷயத்தில் அடக்கி வாசித்தார்.
அதே சமயம், அன்னாதான் மக்களால் போற்றப்பட்டாரே தவிர, பாஜகவையோ, அதன் ஊழல் எதிர்ப்புக் கருத்தையோ மக்கள் கண்டு கொள்ளவில்லை. "அன்னா என்றால் இந்தியா, இந் தியா என்றால் அன்னா...' என்று மீடியாக்கள் வேறு பூதகரப்ப டுத்தியதில் அப்செட் டான பாஜக வகையறாக்கள் ஊழல் பிரச்சினை யைத் தாங்களும் கையிலெடுத்தால் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று கருதி ரத யாத்திரை என்ற முடிவுக்கு வந்திருக்கின்றன.
ஏற்கெனவே பாபர் மஸ்ஜித் பிரச்சினையில் அத்வானி மேற் கொண்ட ரத யாத்திரை நாடு முழு வதும் ரத்த ஆறை ஓடச் செய்ததை நினைவு படுத்தி அத்வானி யின் ரத யாத்திரை யால் நாட்டின் அமைதிக்கு பங்கம் ஏற்படும், சட்டம் ஒழுங்கு சீர்கு லையும் என்று பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
லோக்பால் சட்டம் வேண்டும் என்கிற கோரிக்கையை அன்னா ஹசாரேவுடன் சேர்ந்து வலியுறுத்தி வரும் முன்னாள் டெல்லி காவல்துறை அதிகாரியான கிரண் பேடி, “தற்போது தேவை லோக்பால் சட்டம்தான். ரத யாத்திரைகள் அல்ல...'' எனத் தெரிவித்திருக்கிறார்.
முன்னாள் மத்திய சட்டத் துறை அமைச்சரான வீரப்ப மொய்லியோ, “அத்வானி மேற் கொண்ட முதல் ரத யாத்திரைக்கே இன்னும் இந்த நாடு அதற்கான விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவரது கடந்த கால யாத்திரைகளெல்லாம் மத ரீதியான பதட்டங்களை ஏற்படுத்தியுள்ளன. அதன் மூலம் பல உயிர்கள் பலியாகியுள்ளன. இந்நிலையில் இன் னொரு யாத்திரை தேவை தானா?'' எனப் பேசியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தியோ, “அத்வானியின் ரத யாத்திரை ஒரு அரசியல் சவால். அதனை முறியடிக்க அனைவரும் தயாராக வேண்டும்...'' என அத் வானியின் ரத யாத்திரை குறித்து எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்.
இப்படி பல்வேறு மட்டத்திலும் ரத யாத்திரைக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் என்ன செய்யலாம் என பாஜக தலைமை யோசனையில் ஆழ்ந்தி ருக்கிறது.
- ஹிதாயா