இந்திய அரசே! இந்திய அரசே!

*             சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை தள்ளுபடி செய் !

*             கூடங்குளம் அணுஉலையை முற்றிலுமாக உடனடியாக மூடு!

தமிழக அரசே! தமிழக அரசே!

*             மாவீரன் இம்மானுவேல் நினைவு நாளில் பரமக்குடியில் பதைக்கப் பதைக்கச் சுட்டுக் கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்டோருக்கு நேர்மையான நீதி வழங்கு

*             உயிரைப் பறிகொடுத்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 இலட்சம் உருபா இழப்பீடு கொடு

என்னும் கோரிக்கைகளை முன்வைத்து, 21-11-2011 திங்கள் காலை 11 மணிக்கு வேலூர் நகரம், திருவண்ணாமலை நகரம், காஞ்சிபுரம் நகரம், காட்டுமன்னார் கோயில் முதலான இடங்களில் அரசு அலுவலகங்களின் முன் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களும், தோழியர்களும் மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். தோழமை அமைப்பினரும் தமிழ் பெருமக்களும் பேராதரவு நல்கும்படி அன்புடன் வேண்டுகின்றோம்.

- மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி