அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சியில் மயங்கி விழுந்த ஒரு பெண் நான்கு ஆண்டுகள் உறக்கத்தில் இருந்திருக்கிறார். 18 வயதான அந்தப் பெண்ணின் மரியா. அமெரிக்காவில் சான் ஜீவான் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

1963 ஆம் ஆண்டு நவம்பர் 22ம் நாள் கென்னடி சுடப்பட்ட செய்தியை வானொலியில் கேட்டு அதிர்ச்சியடைந்து படுத்தவர் எழுந்திருக்கவேயில்லை. 1964ல் பெரிய வெள்ளிக்கிழமையன்று சில விநாடிகள் கண்ணைத் திறந்து ஏதோ முணுமுணுத்தாராம். பின்னர் 1967ல் அக்டோபர் 31ல் தூக்கத்தில் இருந்து எழுந்து சிகிச்சை பெற்றார். 1963 ஆம் ஆண்டு முதல் விழித்தது வரை தூங்கிய காலம் 3 ஆண்டுகள் 11 மாதங்கள் 8 நாட்கள் ஆகும்.

Pin It