1961 ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த யூரிககாரின் ‘மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மனிதன்’ என்ற பெருமையை பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக பெண் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப சோவியத் முடிவு செய்தது. இந்த அறிவிப்பை கேட்டதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. இறுதிக்கட்டமாக நான்கு பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். மிகக்கடினமான பயிற்சிகளுக்குப் பிறகு 25 வயதான வாலெண்டினா திரஸ்கோவா தேர்வு செய்யப்பட்டார்.
‘வோஸ்டாக்-6’ என்ற விண்கலம் வாலண்டினாவை ஏற்றிக்கொண்டு 1963 ஜூலை 16 ம் தேதி வானத்தை நோக்கிப் புறப்பட்டது. பூமிப்பந்தை சுற்றி 48 முறை அதாவது 70 மணிநேரம் 50 நிமிடம் விண்வெளியில் வலம் வந்தார் வாலெண்டினா. விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி என்ற பட்டத்தையும், அதிக நேரம் விண்வெளியில் தங்கி இருந்த விண்வெளி வீரர் என்ற பட்டத்தையும் பெற்றார் வாலெண்டினா.
ஜூன் 19 ம் தேதி விண்கலம் பூமிநோக்கி பாய்ந்து வந்தபோது தரையிரங்கும் முன்பே பாராசூட்டில் இருந்து குதித்து பாதுகாப்பாக இறங்கினார் வாலெண்டினா. ‘ஹீரோ ஆஃப் சோவியத் யூனியன்’ என்ற மெடலுடன் ‘லெனின் விருது’ மற்றும் பல விருதுகள் குவிந்தன. இந்த வெற்றி அத்தனையையும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அர்ப்பணித்தார் வாலெண்டினா.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- குடியுரிமை சட்டத் திருத்த மசோதா - அஸ்ஸாம் போராட்டத்தை ஏன் ஆதரிக்கக் கூடாது?
- ஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்
- இந்திய ஒன்றிய அரசுத் துறை வெளியிடும் பொருளாதார வளர்ச்சிக் கதையுடன் முரண்
- பாலாற்றில் தடுப்பணைகள்: வித்தூன்றியவர் அரங்க. சானகிராமன்
- மக்களைச் சுரண்டும் வரி, வரி & கட்டணம், கட்டணம்
- மக்களே போல்வர் கயவர்!
- கருப்பு உடை விழிக்கட்டும்! காவி உடை கிழியட்டும்!
- பல்லாவரத்துப் பண்டிதர்
- பிச்சுவய்யர் ஹோட்டல் பிரியாணி!
- குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்?
- விவரங்கள்
- எழுத்தாளர்: நளன்
- பிரிவு: உலகம்
முதல் விண்வெளி வீராங்கனை
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.