சிறுவர்கள் வன்முறைகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ‘வீடியோ கேம்ஸ் விளையாடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என அமெரிக்காவின் சமூகவியல் விஞ்ஞானிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

அமெரிக்காவில் 90 சதவீதம் சிறுவர்கள் வீடியோ கேம்ஸ் விளையாடுவதை அன்றாட வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். பல்வேறு வகைகள் வீடியோ கேம்சில் வன்முறை நிறைந்த வீடியோ கேம்ஸ்களை விரும்பித் தேர்ந்தெடுப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய வன்முறைக் காட்சிகளை விளையாட்டுக்களை விரும்பும் குழந்தைகள் பின்னாளில் கிரிமினல்களாக உருவாகும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கிரிமினல் தன்மைக் கூறுகள் மூளையில் இருப்பதால் வன்முறை விளையாட்டுக்களை விரும்புகின்றனரா? அல்லது வன்முறை விளையாட்டுகளினால் கிரிமினல் தன்மையுடையவர்களாக மாறுகின்றனரா..? என்பது குறித்து இன்னும் தீவிர ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என ஜெர்மன் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

18 வயது முதல் 26 வயது வரை உள்ள 13 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் நாள்தோறும் 2 மணி நேரம் வீடியோ கேம்ஸில் வன்முறையைத் தூண்டும் விளையாட்டுகளை விளையாட அனுமதிக்கப்பட்டனர். வன்முறைகளைத் தூண்டும் விளையாட்டுக்களை விளையாடும்போது அவர்கள் மூளையில் ஏற்படும் இயற்பியல் ரசாயன மாற்றங்களை ‘மேக்னட்டிக் ரீசனிங் முறையில் துல்லியமாக ஆராயப்பட்டன. அப்பொழுது வன்முறைக்கான பேட்டர்ன்ஸ் பதிவாகி இருப்பதை மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்நிலை தொடர்ந்தால் பின்னாளில் இவர்கள் கொலையாளிகளாகவும் மாறும் வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வன்முறையாளர்களின் குழந்தைப் பருவம் நன்றாக ஆராயப்பட வேண்டிய காரணியாக உள்ளது. வன்முறைக்கான விபத்துகளை சூழ்நிலையே நிர்ணயிக்கின்றது. எனவே, வன்முறைகளை வளர்க்கும் வீடியோ கேம்ஸ்கள் மீது கவனமாக இருக்க வேண்டும் என அறிவியல் ஆய்வாளர்களும், சமூகவியல் விஞ்ஞானிகளும் கூறுகின்றனர்.

(நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்)

Pin It